Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன்

Featured Replies

பிளவடையாத நாட்டுக்குள் தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம் - சம்பந்தன்

 

 
 

ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக பிளவடையாத நாட்டிற்குள் நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விஜய் கோகலேவிடம் எடுத்துரைத்துள்ளார்.

sampanthan_2.jpg

 

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை  கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்ட விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் சம்பந்தன் தெரிவத்துள்ளதாவது,

புதிய அரசியல் யாப்பானது மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்படவேண்டும். அத்துடன் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியமாகும்.

மேலும் பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம். நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினுடாகவே ஒரு தீர்வினை காண முடியும். 

இந் நிலையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில் மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து  தாமே நிர்ணயித்து  முடிவெடுக்கும் வகையில் அமைவதன் அவசியத்தினையும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களையும் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

இலங்கையில் விசேடமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும்  அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்திய வெளியுறவுச் செயலாளருடனா இந்த சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன். செல்வம் அடைக்கலநாதன் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளரோடு இலங்கைக்கான இந்திய தூதுவர் தரஞ்சித் சிங், இந்திய தூதரகத்தின் பிரதானிகளும் கலந்துகொண்டனர்.

http://www.virakesari.lk/article/36544

  • தொடங்கியவர்

மாகாண சபைத் தேர்தலுக்கு முன் புதிய அரசியலமைப்பு – இந்தியாவிடம் வலியுறுத்திய சம்பந்தன்

 

sampanthan-vijay-gokhale-300x200.jpgமாகாண சபைத் தேர்தல்களுக்கு முன்னதாக, புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு இந்தியாவின் ஆதரவு தேவை என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேயிடம், வலியுறுத்தியுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலே, நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்தப்புத் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“புதிய அரசியலமைப்பு மாகாணசபை தேர்தல்களுக்கு முன்பாக நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றமையினால் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு  நிறைவேற்றப்படுவது மிகவும் அவசியம்.

sampanthan-vijay-gokhale.jpg

பிரிக்க முடியாத இலங்கை நாட்டிற்குள்ளேயே நாம் தீர்வொன்றினை எதிர்பார்க்கிறோம்.

நாட்டில் நீண்டகால நிலவி வரும் தேசியப் பிரச்சினைக்கு புதிய அரசியலமைப்பின் ஊடாகவே ஒரு தீர்வைக் காண முடியும்.

புதிய அரசியலமைப்பு மக்கள் தமது நாளாந்த விடயங்கள் குறித்து  தாமே நிர்ணயித்து  முடிவெடுக்கும் வகையில் அமைவது அவசியம். சிறிலங்கா – இந்திய ஒப்பந்தத்தில் உள்ளடங்கிய விடயங்களும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

சிறிலங்காவில் குறிப்பாக, வடக்கு- கிழக்கு மாகாணங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதனை இந்திய அரசாங்கம் ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பதனூடாக வெளிநாட்டு முதலீடுகளினால் எமது மக்களின் பொருளாதாரம் மேம்படும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலரிடம் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.” என்று கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/07/14/news/31877

 

 

 

தீர்­வைப் பெறு­வ­தற்கு இந்­தியா உதவ வேண்டும்: வெளியு­றவு செய­லா­ள­ரிடம் சம்­பந்தன் வலி­யு­றுத்தல்

 

(ஆர்.யசி ) 

அரசியல் அமைப்பு விவகாரத்தில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வெற்றிகொள்ள அரசாங்கத்துக்கு உரிய காரணிகளை எடுத்துக் கூறுவோம்

தமிழ் மக்­களின் நீண்­ட­கால அர­சி யல் பிரச்­சி­னைக்கு தீர்வைப் ­பெற்­ றுக் ­கொ­டுக்க இந்­தியா முன்­னிற்க வேண்டும். தீர்­வுக்­கான புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் பணி­களில் அரசாங்கம் கொடுத்த வாக்­கு­று­தி­ களை நிறை­வேற்ற அர­சுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் விஜய் கேசவ் கோக்­லே­யிடம் எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

 இந்­தி­யாவில் உள்ள இலங்கை அக­தி­களை பாது­காப்­பாக இலங்­கைக்கு அனுப்பி வைக்­கவும் அவர்­க­ளுக்­கான வாழ்­வா­தார அடிப்­படை  உத­வி­களை செய்து கொடுக்­கவும் இந்­திய அர­சாங்கம்  தயா­ராக உள்­ளது. இதற்கு இலங்கை அர­சாங்கம் அனு­மதி வழங்க வேண்டும் எனவும் இந்­திய வெளி­யு­றவு செய­லாளர் குறிப்­பிட்­டுள்ளார்.  

புதி­தாக பதவி ஏற்­றுள்ள இந்­திய வெளி­யு­றவு செய­லாளர் விஜய் கோக்லே இரண்டு நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்டு முதல் தட­வை­யாக இலங்­கைக்கு வந்­துள்ள நிலையில் நேற்று அரச தலை­வர்­களை சந்­தித்­த­துடன் பிற்­பகல் மூன்று மணி­ய­ளவில் எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார். இந்த சந்­திப்பு சுமார் ஒரு மணி­நேரம் நடை­பெற்­றது. பல முக்­கிய விட­யங்கள் குறித்து எதிர்க்­கட்சி தலைவர் சம்­பந்­தனும் இந்­திய வெளி­யு­றவு செய­லா­ளரும் கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். சந்­திப்பில் கலந்­து­கொண்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஊடகப் பேச்­சாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் இது குறித்து கேச­ரிக்கு கூறு­கையில்,

இந்­திய வெளி­யு­றவு செய­லா­ள­ருடன் இடம்­பெற்ற இந்த சந்­திப்பின் போது பிர­தா­ன­மாக இன்று தமிழ் மக்­களின் பிர­தான நோக்­க­மாக உள்ள அர­சியல் தீர்­வுகள் குறித்து கலந்­து­ரை­யா­டினோம். இதன்­போது, நீண்­ட­கால அர­சியல் பிரச்­சி­னைகள் மற்றும் தமிழ் மக்­களின் உரி­மை­களை வெற்­றி­கொள்ளும் வகையில் எமக்­கான அர­சியல் தீர்வு ஒன்­றி­னையே நாம் எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம். யுத்தம் முடி­வுக்கு வந்த பின்­னரும் எமது மக்­க­ளுக்­கான முழு­மை­யான தீர்­வுகள் எவையும் கிடைக்­க­வில்லை. எனினும் இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் பணிகள் குறித்த நகர்­வு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது.

அதனை நாம் வர­வேற்­கின்றோம். இலங்கை இந்­திய ஒப்­பந்­தத்தின் பின்னர் தமிழர் தரப்­புக்கு கிடைக்க வேண்­டிய நிறை­வான அதி­கார பகிர்வு உட­ன­டி­யாக கிடைக்க வேண்டும். அந்த எதிர்­பார்ப்பு எமக்கு உள்­ளது. அதேபோல் நிறை­வான அதி­கார பர­வ­லாக்­கலை தாம் முன்­னெ­டுப்­ப­தாக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ பல சந்­தர்ப்­பங்­களில் இந்­தி­யா­வுக்கு வாக்­கு­றுதி கொடுத்­துள்ளார். எனினும் அவ­ரது ஆட்சிக் காலத்தில் கொடுத்த வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

இந்த அர­சாங்கம் உரு­வாக்­கப்­பட்ட நிலையில் நாமும் அதில் முக்­கிய பங்­க­ளிப்பை வழங்­கிய நபர்கள் என்ற வகையில் இந்த அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை கையாள வேண்டும். கொடுத்த வாக்­கு­று­தி­களை இந்த ஆட்­சியில் நிறை­வேற்ற நல்ல வாய்ப்­புகள் உள்­ளன. ஆகவே இப்­போது தீர்­வுகள் குறித்து சிந்­திக்க கிடைத்­துள்ள வாய்ப்­புக்­களை தவ­ற­வி­டக்­கூ­டாது. அர­சாங்கம் கட­மை­யினை உணர்ந்து வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­தியா பிர­யோ­கிக்க வேண்டும். பிர­தான எதிர்க்­கட்­சி­யான நாம் தீர்வு விட­யத்தில் அர­சாங்­கத்தின் நகர்­வு­க­ளுக்கு பூரண ஒத்­து­ழைப்­பு­களை வழங்கி வரு­வ­துடன் எமது பக்­கத்தில் எந்தக் குறை­பா­டு­களும் இல்­லாத வகையில் சிந்­தித்து செயற்­பட்டு வரு­கின்றோம். ஆகவே அர­சாங்­கமே தமது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற வேண்டும். எஞ்­சி­யுள்ள காலத்­தினுள் புதிய அர­சியல் அமைப்பு ஒன்­றினை உரு­வாக்க வேண்டும். அதற்­கான அழுத்­தங்­களை இந்­திய அரசு இலங்­கைக்கு பிர­யோக்­கிக்க வேண்டும் என்­பதே எமது எதிர்­பார்ப்பு என்­பதை வலி­யு­றுத்­தினோம்.

மேலும் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திகள் குறித்து இந்­தியா அதிக அக்­கறை கொள்ள வேண்டும். யுத்­தத்­திற்குப் பின்னர் எமது வடக்கு கிழக்கு மக்கள் பொரு­ளா­தார ரீதி­யிலும் வாழ்­வா­தார ரீதி­யிலும் பாரிய இன்­னல்­களை எதிர்­கொண்டு வரு­கின்ற நிலையில் வடக்கு கிழக்கு பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை கையாள இந்­திய அர­சாங்­கத்தின் முழு­மை­யான ஒத்­து­ழைப்­புகள் வேண்டும். ஆகவே இந்­திய முத­லீட்­டா­ளர்கள் நேர­டி­யாக வடக்கு கிழக்கில் முத­லீ­டு­களை செய்து அதன் மூல­மாக எமது பிர­தே­சங்­களை கட்­டி­யெ­ழுப்ப பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை இந்­தியா வழங்க வேண்டும் என்­பதை கேட்­டுக்­கொண்டோம். அத்­துடன் இந்­தி­யாவில் உள்ள இலங்கை அக­திகள் குறித்தும் வின­வினோம். இன்றும் இந்­தி­யாவில் இருந்து பட­குகள் மூல­மாக ஆபத்­தான பய­ணங்­களை மேற்­கொண்டு இலங்கை வரும் அக­தி­களை பாது­காப்­பான முறையில் அனுப்­பி­வைக்க இந்­தியா நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்டும் எனவும் நாம் வலி­யு­றுத்­தினோம்.

அக­திகள் விட­யத்தில் கருத்­துக்­களை முன்­வைத்த இந்­திய வெளி­யு­றவு செயலர் கூறு­கையில்:-

இந்­தி­யாவில் இருந்து மீண்டும் இலங்­கைக்கு திரும்ப விரும்பும் அக­தி­களின் பெயர் பட்­டி­யலை நாம் ஏற்­க­னவே இலங்கை அர­சாங்­கத்­திற்கு அனுப்பி வைத்­துள்ளோம். அவர்கள் இலங்­கைக்கு மீண்டும் வர விரும்­பு­கின்­றனர் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யுள்ளோம். நாம் இலங்கை அர­சாங்­கத்­திற்கு அனுப்­பிய கடி­தத்­திற்கு இலங்கை அர­சாங்கம் இன்னும் பதில் கூறா­துள்­ளது. இலங்கை அர­சாங்கம் பதில் கூறும் பட்­சத்தில் அவர்­களை பாது­காப்­பாக எமது செலவில் இலங்­கைக்கு அனுப்பி வைக்­கவும் இங்கு அவர்கள் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள சகல உத­வி­க­ளையும் வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும் இந்திய அரசாங்கம் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.

அதேபோல் அரசியல் அமைப்பு விவகாரத்தில் தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இங்கு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை வெற்றிகொள்ள அரசாங்கத்துக்கு உரிய காரணிகளை எடுத்துக் கூறுவதாகவும், வடக்கு கிழக்கின் அபிவிருத்தியில் இந்திய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடுகளை முன்னெடுக்க தாம் நிச்சயமாக நடவடிக்கைகளை எடுப்பதாகவும் எமக்கு அவர் வாக்குறுதிகளை வழங்கினார் என்று தெரிவித்தார்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-14#page-1

 

 

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.