Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரந்­திக்கு வந்த அதிர்ஷ்டம்?

Featured Replies

சிரந்­திக்கு வந்த அதிர்ஷ்டம்?

Page-01-cityPage1Image0009-e7fe67a5be3f396540f446e378a0cfe931677d9b.jpg

 

எம்.சி.நஜி­முதீன்

2020 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தரப்பில் கள­மி­றங்­க­வுள்ள வேட்­பாளர் குறித்து மீண்டும் கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் முரண்­பாடு வலுத்து வரு­வ­தாக அறிய

முடி­கி­றது. முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­கு­வ­தற்கு அண்­மையில் மறை­முக இணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட்ட போதும், அதற்­கெ­தி­ராக சில உறுப்­பி­னர்கள் போர்க்­கொடி தூக்­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் பாரியார் சிராந்தி ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­குது தொடர்பில் கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் கூட்டு எதிர்க்­கட்­சியை மையப்­ப­டுத்­திய தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ஜனா­தி­பதி தேர்­தலில் மீண்டும் போட்­டி­யிட முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் கூட்டு எதிர்க்­கட்சி சார்பில் போட்­டி­யி­ட­வுள்ள அபேட்­சகர் குறித்து பல சுற்றுப் பேச்­சு­வார்த்­தைகள் இடம்­பெற்று வந்­தன. அதன்­போது முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் சபா­நா­யகர் ஷமல் ராஜ­பக்ஷ குறித்து அவ­தானம் செலுத்­தப்­பட்­டது.

எனினும் அம்­மூ­வரில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவை கள­மி­றக்­கு­வது வெற்­றியை உறு­தி­செய்யும் என கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் பர­வ­லாக பேசப்­பட்டு வந்­தது. எனினும் அதற்கு கூட்டு எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார உள்­ளிட்ட தரப்­பினர் எதிர்ப்­பினைத் தெரி­வித்­தனர்.

இருந்­த­போ­திலும் நீண்ட சுற்றுப் பேச்­சு­வார்த்­தையின் பின்னர் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்­கு­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலை­வர்கள் மத்­தியில் மறை­முக இணக்­கப்­பாடு ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து போத்­தா­பய ராஜ­பக்ஷ நேரடி அர­சியல் வேலைத்­திட்­டங்­களில் பிர­வே­சித்தார்.

இந்­நி­லையில் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமா­ர­வெல்­கம உள்­ளிட்ட தரப்­பினர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விற்கு எதி­ராக கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­துள்­ள­துடன் ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அவர் தகு­தி­யற்­றவர் எனவும் தெரி­வித்­துள்­ளனர்.

ஆகவே ஜனா­தி­பதி வேட்­பாளர் சம்­பந்­த­மாக கூட்டு எதிர்க்­கட்­சிக்குள் எழுந்­துள்ள சிக்கல் கார­ண­மாக அந்த எதிர்க்­கட்­சி­யா­னது, ஒன்­றி­ணைந்த பொது­ஜன முன்­ன­ணி­யாக (எகா­பத்த பொது­ஜன பெர­முன) செயற்­ப­டு­வது குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. இக்­கூட்­ட­ணியில் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவும் ஒரு கட்­சி­யாக அங்கம் வகிக்­க­வுள்­ளது.

இதே­வேளை ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் எழுந்­துள்ள சிக்கல் கார­ண­மாக, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவை மீண்டும் கள­மி­றக்­கு­வ­தற்­கான சட்ட ஏற்­பா­டுகள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு சட்­டத்தில் இட­மி­ருப்­ப­தா­கவும் அதனை தற்­போது வெளிப்­ப­டுத்­தப்­போ­வ­தில்லை எனவும் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு சட்டம் அனுமதிக்காது போகும் பட்சத்தில் அவரது பாரியார் சிராந்தி ராஜபக் ஷவை தேர்தலில் களமிறக்குவது சம்பந்தமாக கூட்டு எதிர்க்கட்சிக்குள் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2018-07-15#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.