Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

Featured Replies

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை- விமல்

 

 

வடக்கில் 35 இராணுவமுகாம்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார்

இலங்கை பாராளுமன்றத்தில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

எமக்கு தெரிந்த உண்மையான தகவல்களுக்கு அமைய இப்போது வரையில் வடக்கில் 39 இராணுவ முகாம்களை  நீக்க நடவடிக்கை எடுக்கபடுகின்றது

 வடக்கு கிழக்கில் மொத்தமாக 100 இராணுவ  முகாம்களை அகற்ற நடவடிக்கைகளை எடுக்கப்படுகின்றது. 

இராணுவத்தில் இருக்கும் 25 வீத படையணியினரை நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

இந்த நடவடிகைகள் மூலமாக இராணுவத்தை பலவீனபடுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. 

weerawansa.jpg

இதனை அரசியல் காரணியாக கருதக்கூடாது. இராணுவத்தின் உள்ளேயே பலவீனமாதும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் மூலமாக தேசிய பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளும். ஆகவே உரிய அமைச்சர்கள் உடனடியாக இந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/36817

 

 

 

வடக்கில் முகாம்களை ஒருபோதும் நீக்க மாட்டோம் - விஜயவர்தன

 

 
 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கில் இராணுவ முகாம்களை நீக்கக் கோரி அரசாங்கமோ பாதுகாப்பு அமைச்சோ எந்த கட்டளையும் பிறப்பிக்கவில்லை. வடக்கின் முகாம்கள் ஒருபோதும் நீக்கப்படப் போவதுமில்லை. அதேபோல் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

ruwan__wijeyawarthana.jpg

இராணுவ படையணி குறிப்புகள் உள்ளிட்ட நிருவாக தீர்மானங்களை இராணுவமே முன்னெடுக்கின்றது, இதில் எந்தவித அரசியல் தலையீடுகள் இல்லை. இதனை தெளிவு படுத்தியே இராணுவத் தளபதி பாதுகாப்பு அமைச்சிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

இந்த நடவடிக்கைகள் மூலமாக தேசிய பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை. தேசிய பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என இராணுவத் தளபது தெரிவித்துள்ளார். 

யுத்தத்தின் பின்னர் சில படையணிகள் தனியாக இயங்குவது அவசியம் இல்லை என சுட்டிக்கட்டியுள்ள இராணுவம் அவ்வாறான படையணிகள் , குறைந்த படைகளை கொண்ட அணிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு அணியாக மாற்றியமைக்கும் நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படுகின்றது. அதை விடுத்து படையணியை இராணுவத்தில் இருந்து நீக்குவது நிக்கம் அல்ல. அவ்வாறு நீக்கப்படப்போவதும் இல்லை. இராணுவத்தின் எண்ணிக்கை அவ்வாறே இருக்கும். 

அதேபோல் வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படுவதாக இராணுவம் கூறவில்லை. அரசாங்கமாக நாமும் அவ்வாறன எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. எமக்கு எந்தத் தேவையும் இல்லாது நாம் இராணுவத்தை கட்டுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றார். 

http://www.virakesari.lk/article/36816

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.