Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாத்தீனிய ஒழிப்பில் வலி கிழக்கு பிரதேச சபையும் யாழ். பல்கலையும் இணைவு

Featured Replies

பாத்தீனிய ஒழிப்பில் வலி கிழக்கு பிரதேச சபையும் யாழ். பல்கலையும் இணைவு

 

 
 

வலிகாமம் கிழக்கு பிரதேசத்தில் பாத்தீனிய ஒழிப்பு முயற்சிகளுக்காக பிரதேச சபையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் இணைந்து செயலாற்ற ஆரம்பித்துள்ளன. 

20180806_095856.jpg

இதன் முயற்கட்ட முயற்சியாக இன்று  புத்தூர் நிலாவரைப் பகுதியிலுள்ள ஏராளமான பாத்தினியச் செடிகள் பக்குவமாக அகற்றப்பட்டு அழிக்கப்பட்டன. 

20180806_100124.jpg

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் எல்லைக்குள் பெரும்பாலான பொது இடங்களில் பாத்தீனிய செடியின் பரம்பல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையில் இதனை அகற்றுவதற்கான முயற்சியாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மாணவர் சமூகத்தின் உதவியினை அச் சமூகத்தின் பெரும் பொருளாளரும் விரிவுரையாளருமான பிரதிபராஜா ஊடாக நாடியிருந்தார். 

20180806_103433.jpg

இந் நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் எல்லைக்குள் இருக்கின்ற பாத்தீனிய ஒழிப்பினை மேற்கொள்வதற்கு மாணவர்களும் விருப்பம் தெரிவித்தியருந்தனர். இதன் பின்னர் உரிய முறைப்படி பீடாதிபதிகள், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோரின் வரவேற்புடனேயே இச் செயற்றிட்டத்தில் மாணவர்கள் பங்கெடுத்துள்ளனர். 

20180806_103954.jpg

இச் செயற்றிட்டத்தினை எதிர்காலத்தில் தொடாந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளையும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளரும் யாழ்பல்கலைக்கழக திட்டமிடல் சமூகமும் முன்னெடுக்கவுள்ளன.

38634458_698037690547232_604494948307723

இன்று நடைபெற்ற பாத்தீனிய ஒழிப்பில் சுமார் 86 பல்கலைக்கழக மாணவ மாணவியரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச சபையின் அதிகாரிகள், பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பித்தக்கது.  

38637498_552663718470205_894210902537011

http://www.virakesari.lk/article/37952

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.