Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீர்வு காணப்படுமா?

Featured Replies

தீர்வு காணப்படுமா?

 

நாயாற்று கட­லோ­ரத்தில் வன்­மு­றை­ வெடித்து வடிந்­துள்ள போதிலும், தென்­னி­லங்கை மீன­வர்­க­ளுக்கும் முல்­லைத்­தீவு மீன­வர்­க­ளுக்குமிடையில் எழுந்­துள்ள முரண்­பாடு சுமு­க­மாகத் தீர்க்­கப்­பட்­டி­ருக்­கின்­றது எனக் கூறமுடி­யாது. அங்கு ஏற்­ப­டுத்­தப்­பட்ட வன்­முறை கவ­லைக்­கு­ரி­யது. கடும் கண்­ட­னத்­துக்கும் உரி­யது.

யுத்­தத்தின் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் இனங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வுடன் கூடிய நல்­லு­ற­வையும், ஐக்­கி­யத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­ப­டு­கின்ற நல்­லி­ணக்க முயற்­சி­க­ளுக்கு விடுக்­கப்­பட்­டுள்ள மோச­மான சவால் என்­பதில் எந்­த­வித சந்­தே­கமும் இல்லை.

கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்ற மீன­வர்கள், அந்தத் தொழி­லுக்­கென அர­சினால் வகுத்­தொ­துக்­கப்­பட்ட நிய­தி­க­ளுக்கு அமை­வாகச் செயற்­பட வேண்டும். அதன் ஊடாக அந்தத் தொழி­லுக்­கு­ரிய சட்­டத்­தையும் ஒழுங்­கையும் மதித்துச் செயற்­பட வேண்டும். இந்த நிலைப்­பாட்டை அங்கு நிகழ்ந்த வன்­முறை தகர்த்­தி­ருக்­கின்­றது. இதனால், கடற்­றொழில் முறை­மைக்கு அர­சாங்கம் வகுத்­துள்ள சட்ட நெறி­மு­றைகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. எட்டி உதைத்­ததுபோல உதா­சீனம் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன.

ஆனால், 'பெரும்­பான்மை இனத்தைச் சேர்ந்த மீன­வர்கள் சிறு­பான்மை இன மீன­வர்­களின் உடமை­க­ளுக்கும் வாழ்­வா­தா­ரத்­திற்கும் பாதிப்பை ஏற்­ப­டுத்தியிருக்­கின்­றார்கள். அது உண்­மைதான். இது தொழில் ரீதி­யான ஒரு போட்டி நட­வ­டிக்­கையே தவிர, வேறு ஒன்­று­மில்லை. அதற்கு வேறு அர்த்தம் கற்­பிக்க முயல்­வது அபத்­த­மா­னது. இந்தச் சம்­ப­வத்தில் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளுக்கு உரிய நட்­ட­யீட்டைக் கொடுத்­து­விட்டால் முடிந்து போய்­வி­டும்­தானே' என்ற மேம்­போக்­கான ஓர் அணு­கு­மு­றையில் அரச தரப்­பி­னரும் பேரி­ன­வாத சிந்­தனை கொண்ட அதி­கா­ரி­களும் இந்த விட­யத்தில் நடந்துகொள்­வ­தற்கு முற்­பட்­டி­ருந்­தமை சந்­தே­கத்­திற்கு அப்­பாற்­பட்ட முறையில் வெளி­யா­கி­யி­ருந்­தது.

இருப்­பினும் நாயாற்றுப் பிர­தேச தமிழ் மீன­வர்­களின் 8 வாடிகள் எரிக்­கப்­ப­ட்ட­தனால், அவர்­க­ளு­டைய மீன்­பிடி உப­க­ர­ணங்­க­ளுக்கு 35 லட்சம் ரூபா நட்டம் ஒரே இரவில் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இது சாதா­ர­ண­மா­ன­தல்ல.இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் இன ரீதி­யான மோதல்­க­ளுக்குத் தூப­மி­டத்­தக்க வகையில் அது நடந்­தே­றி­யி­ருந்­தது. - நடத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்த சம்­ப­வத்தை, வெறு­மனே வெளி­மா­வட்ட மீன­வர்கள், உள்ளூர் மீன­வர்­களின் உடமை­க­ளுக்கு தற்­செ­ய­லாக சேதம் விளை­வித்­தார்கள் என மேலோட்­ட­மான, திடீ­ரென நிகழ்ந்த வன்­முறை சார்ந்த சம்­பவம் என்ற வரை­ய­றைக்குள் மாத்­திரம் மட்­டுப்­ப­டுத்­தி­விட முடி­யாது. இது ஓர் இன வன்­மு­றையின் குறி­யீடு. சிறு­பான்மை இனத்­த­வ­ரா­கிய தமிழ் மீன­வர்­களின் வாழ்­வா­தா­ரத்தில், அவர்­க­ளு­டைய பொரு­ளா­தாரத்தின் மீது தொடுக்­கப்­பட்ட ஒரு மோச­மான தாக்­குதல் நட­வ­டிக்கை. அவர்கள் மீது பேரி­ன­வாதப் போக்­குடன் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள ஓர் அடக்­கு­முறைச் செயற்­பாடு. வர­லாற்று ரீதி­யான ஓர் இனத்­த­வரின் பிர­தே­சத்­திற்குள் அத்­து­மீறி புகுந்து அங்கு அடா­வ­டித்­தனம் புரிந்­தது என்­பது, அர­சாங்­கத்தின் தொழில் ரீதி­யான நெறி முறை­களை அப்­பட்­ட­மாக உதா­சீனம் செய்த நட­வ­டிக்­கை­யு­மாகும்.

இந்த வன்­மு­றையின் மூலம் நாட்டின் சட்­ட­வி­திகள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. தேசிய அள­வி­லான மனி­தா­பி­மா­னமும் மீறப்­பட்­டி­ருக்­கின்­றது. ஏனெனில் முல்­லைத்­தீவில் அத்­து­மீறிப் பிர­வே­சித்து கடற்­றொழில் செய்­கின்ற தென்­ப­கு­தியைச் சேர்ந்த சிங்­கள மீன­வர்கள் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அல்ல. யுத்தச் சூழலில் சிக்கி, பாது­காப்­புக்கு ஏற்­பட்ட அச்­சு­றுத்தல் கார­ண­மாக பல வரு­டங்­க­ளாக இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளு­மல்ல. அவர்கள் எல்லா வச­தி­க­ளையும் கொண்­டி­ருப்­ப­வர்கள். அது மட்­டு­மல்­லாமல், பெரும்­பான்மை இனத்­தவர் என்ற ரீதியில் அர­சாங்­கத்தின் ஆத­ர­வையும் செல்­வாக்­கையும் பெற்­றி­ருப்­ப­வர்கள்.

ஆனால் நாயாறு பிர­தேச மீன­வர்கள், யுத்த மோதல்­களைக் காரணம் காட்டி, அங்­கி­ருந்து பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­ட­தனால் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளாவர். அவர்கள் தாங்­க­ளாக விரும்பி, தமது வர­லாற்று ரீதி­யான வாழ்­வி­டங்­களைக் கைவிட்டு வெளி­யேறிச் செல்­ல­வில்லை. பாது­காப்­புக்­காக இடம்­பெ­யர்ந்­தி­ருந்த போதிலும், இடம்­பெயர் வாழ்க்­கை­யின்­போது பாது­காப்­பாக வாழ­வு­மில்லை.

தேச­பக்­தி­யு­மில்லை

மனி­தா­பி­மா­ன­மு­மில்லை

அவர்கள் தாம் வாழ்ந்த ஊரையும், உறை­வி­டங்­க­ளையும், உட­மை­க­ளையும் மட்டும் இழக்­க­வில்லை. யுத்தச் சூழ­லின்­போது, அவர்கள் உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் அவ­யவங்­களின் இழப்­புக்கும் ஆளா­கி­யி­ருந்­தார்கள். அத்­தி­யா­வ­சிய அடிப்­படைத் தேவை­க­ளைக்­கூட பூர்த்தி செய்துகொள்ள முடி­யாமல் அவல வாழ்க்­கை­யையே வாழ்ந்­தனர். அவர்கள் தமது சுய கௌர­வத்­தையும், சுயமரி­யா­தை­யையும் இழந்­த­வர்­க­ளாக நாடோ­டி­க­ளிலும் பார்க்க மோச­மான ஒரு நிலை­மைக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். ஒவ்­வொரு நிமி­டமும் உயி­ரச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளா­கி­யி­ருந்த அவர்கள் பல இடங்­க­ளுக்கும் தொடர்ச்­சி­யாக இடம்­பெ­யர்ந்து, இடம்­பெ­யர்ந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­காலில் ஓர் ஊழிக்­கா­லத்தை எதிர்­கொண்டு மர­ணத்தின் வாசல்­வரை சென்று திரும்­பி­யி­ருக்­கின்­றார்கள்.

இவ்­வாறு பாதிக்­கப்­பட்­ட­வர்கள் மீதே அடா­வ­டித்­த­ன­மாக, திட்­ட­மிட்ட வகை­யி­லான வன்­முறை பிர­யோ­கிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. நாயாறு மீன­வர்கள் மாத்­தி­ர­மல்ல. யுத்தம் கார­ண­மாக வட­கி­ழக்குப் பிர­தேச மக்கள் அனை­வ­ருமே மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். இது உல­க­றிந்த இர­க­சியம். அதனை மறைக்­கவோ மறுக்­கவோ முடி­யாது.

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர், இடம்­பெ­யர்ந்த மக்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட்டு, யுத்த மோதல்கள் இடம்­பெற்ற பிர­தே­சங்கள் மீள்­கட்­டி­ய­மைக்­கப்­பட்­டன. பல்­வேறு உட்­கட்­ட­மைப்புப் பணிகள் அங்கு மேற்­கொள்­ளப்­பட்­டன. முக்­கி­ய­மாக யுத்த காலத்தில் நாட்டின் ஏனைய பகு­தி­களிலிருந்து தரை­வழித்தொடர்பும், போக்­கு­வ­ரத்து இணைப்பும் அற்ற நிலையில் வடக்கும் கிழக்கும் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்­தன. நாட­ளா­விய ரீதியில் அரசு கோலோச்­சிய போதிலும், தேசிய பாது­காப்புப் படைக்­கட்­ட­மைப்புப் பொறி முறையின் கீழ், அந்தப் பிர­தே­சங்­களில் ஓர் இரா­ணுவ ஆட்­சியே நடத்­தப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் நலன்­களில் பெய­ர­ள­வி­லான அக்­க­றையும் கரி­ச­னை­யுமே காட்­டப்­பட்­டது. நாட்டின் சக இன குடி­மக்கள் என்ற உண்­மை­யான தேசிய பய­பக்­தி­யுடன், யுத்­தத்­தினால் சீர­ழிந்த அவர்­க­ளு­டைய வாழ்க்­கையை மறு­சீ­ர­மைப்­ப­தற்­கான மனி­தா­பி­மான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த அந்தப் பிர­தே­சத்தில் உள்­ளகப் போக்­கு­வ­ரத்­துக்கும், வெளி­யி­டங்­களுக்­கான போக்­கு­வ­ரத்­துக்கும் உரிய கட்­ட­மைப்பு முற்­றாக சீர்­கு­லைந்­தி­ருந்­தன. மறு­சீ­ர­மைப்புப் பணி­க­ளின்­போது, அந்தப் பிர­தே­சத்து மக்­களின் போக்­கு­வ­ரத்துத் தேவை கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. மாறாக நாட்டின் ஏனைய பகு­தி­களிலிருந்து துண்­டிக்­கப்­பட்ட அந்தப் பிர­தே­சத்தில் யுத்த காலத்­தின்­போது படை­யினர் என்ன செய்­தார்கள், எவ்­வாறு அவர்கள் யுத்­தத்தை வெற்­றி­கொண்­டார்கள் என்­பதை, பெரும்­பான்மை இன மக்­க­ளுக்கு, பரந்த அளவில் வெளிப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய போக்­கு­வ­ரத்­துக்­கான வலை­ய­மைப்பே கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது.

வடக்கு– கிழக்கு மாகா­ணங்­களின் முக்­கிய நக­ரங்­க­ளுக்கும், நாட்டின் பிர­தான போக்­கு­வ­ரத்து வலை­ய­மைப்­புக்குமிடை­யி­லான மார்க்­கங்கள் - வீதிகள் முழு­மை­யாக சீர­மைக்­கப்­பட்­டன. அவற்றின் ஊடாக இந்த மீள்­கு­டி­யேற்றப் பிர­தே­சத்து மக்கள் வெளி­யு­லகத் தொடர்­பு­களை மேற்­கொண்டு நன்மை பெற வேண்டும் என்­பதைவிட, பெரும்­பான்மை இன மக்கள் இந்தப் பகு­தி­களின் மூலை முடுக்­குகள் அனைத்­தையும் சென்று பார்­வை­யிட வேண்டும். யுத்­தத்தை வெற்­றி­கொண்ட படை­யி­ன­ரு­டைய செயற்­பா­டு­களை வெற்றிச் சாகஸ நிகழ்­வு­க­ளாக, நிதர்­ச­ன­மாகக் கண்­ட­றிய வேண்டும் என்ற வகையில் இரா­ணுவ மய­மான ஒரு சூழலில் அந்த மக்கள் ஊக்­கு­விக்­கப்­பட்­டார்கள். பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளு­டைய பிர­தே­சத்தில் என்ன நடந்­தது என்று பல இடங்­க­ளுக்கும் சுதந்­தி­ர­மாகச் சென்று பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

நோக்கம் என்ன?

மறு­பக்­கத்தில், மீள்­கட்­ட­மைப்புப் பணி­களில், பாதிக்­கப்­பட்ட பிர­தே­சங்­களைச் சேர்ந்த மக்­களின் நேர­டி­யான பங்­க­ளிப்பும், அதன் ஊடான பயன்­களை அனு­ப­விக்­கின்ற வாய்ப்பும் மறுக்­கப்­பட்­டி­ருந்­தன. உட்­கட்­ட­மைப்புப் பணி­களில் தென்­ப­கு­தி­களைச் சேர்ந்த ஒப்­பந்­தக்­கா­ரர்­க­ளுக்கே இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. அந்தப் பணி­களில் சாதா­ரண கூலித் தொழில்­க­ளுக்­கு­ரிய தொழி­லா­ளர்­களும் தென்­ப­கு­தியிலிருந்தே கொண்டு வரப்­பட்­டி­ருந்­தார்கள். உள்ளூர் தொழி­லா­ளர்கள் காலந்­தாழ்த்­தியே உள்­வாங்­கப்­பட்­டார்கள்.

அதே­போன்று குறிப்­பாக முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் மீன்­பிடி தொழி­லிலும், விவ­சா­யத்­திலும் பாதிக்கப்­பட்ட உள்ளூர் மக்­க­ளை­விட தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கே முத­லிடம் வழங்­கப்­பட்­டது. இதன் கார­ண­மாக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அந்த மாவட்­டத்து மக்கள் தமது வாழ்­வா­தார கட்­ட­மைப்­புக்­களை நிர்­மா­ணித்துக் கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை.

நாயாறு, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய், தென்­ன­ம­ர­வடி போன்ற கிரா­மங்­களைச் சேர்ந்த மக்கள் வர­லாற்று ரீதி­யான உரித்து கொண்ட கடற்­ப­ரப்பில் சுதந்­தி­ர­மாகத் தொழில் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. கைவிட்டுச் சென்ற விவ­சாய நிலங்­க­ளுக்கு அவர்கள் சுதந்­தி­ர­மா­கவும் உரித்­தோடும் திரும்பிச் சென்று மீண்டும் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை. அந்தத் தொழி­லி­டங்­களில் தென்­னி­லங்­கையைச் சேர்ந்­த­வர்கள் ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தார்கள். அவர்­க­ளுக்கே முன்­னு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இத்­த­கைய ஒரு பின்­பு­லத்­தில்தான் நாயாற்றில் தமிழ் மீன­வர்­க­ளு­டைய 8 வாடிகள் எரி­யூட்­டப்­பட்­டன. அங்­கி­ருந்த தொழில் உப­க­ர­ணங்கள் நாச­மாக்­கப்­பட்­டன. இரவு நேரம் அந்த வாடி­களின் உரி­மை­ய­ாளர்­க­ளான தமிழ் மீன­வர்கள் தமது குடும்­பங்­க­ளுடன் தங்­கி­யி­ருந்­த­போதே அவற்­றுக்குத் தீயி­டப்­பட்­டது. இரவு சுமார் பத்­தரை பதி­னொரு மணி­ய­ளவில் இந்த வாடி­க­ளுக்குத் தீமூட்­டி­யதன் மூலம், அந்த வாடி­களை மட்­டு­மல்ல, அதிலிருந்­த­வர்­க­ளுக்கும் உயிர்ச்­சேதம் விளை­விக்­கின்ற திட்­ட­மிட்ட நோக்­கத்­து­ட­னேயே, விஷ­மிகள் செயற்­பட்­டி­ருந்­தார்கள் என்­பது வெளிப்­பட்­டி­ருக்­கின்­றது.

சுருக்கு வலைகள் பயன்­ப­டுத்த முடி­யாது, வெளிச்சம் பாய்ச்சி மீன்­பிடிக்கக்கூடாது, வெடி­பொ­ருட்கள் பயன்­ப­டுத்தக் கூடாது, கடற்­ப­ரப்பின் தூரப் பிர­மா­ணங்­களின் அடிப்­ப­டையில் சாதா­ரண படகு, இயந்­திரப் படகு மற்றும் சிறிய, பெரிய அள­வி­லான பட­குகள் பயன்­ப­டுத்­தப்­பட வேண்டும். கரை­வலை தொழில் பாது­காக்­கப்­பட்டு, அதற்­கு­ரிய நெறி­மு­றை­களைப் பின்­பற்றி மீன­வர்கள் நடந்து கொள்ள வேண்டும். மீன்­பி­டிப்­ப­தற்­கென கரை­யோ­ரங்­களில் இடங்கள் 'பாடு' முறையில் ஒதுக்­கப்­பட்­டி­ருப்­ப­தற்­கேற்ற ஒழுங்­கு­களைக் கடைப்­பி­டிக்க வேண்டும் என்று பல­வா­றாக கடற்­றொ­ழி­லுக்­கு­ரிய நடை­மு­றைகள் தொடர்பில் கடற்­றொழில் அமைச்­சினால் நிய­தி­களும், சட்ட விதி­மு­றை­களும் வகுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அவற்றை அந்த அமைச்சின் கீழ் செயற்­ப­டு­கின்ற கடற்­றொழில் திணைக்­கள அதி­காரிகள் பல்­வேறு நிலை­களிலிருந்து கண்­கா­ணித்துப் பரா­ம­ரிப்­ப­திலும், அவற்­றுக்­கு­ரிய பணி­க­ளையும் மேற்­கொள்­வார்கள். இந்தக் கட்­ட­மைப்­புக்­க­ளையும், கடற்­றொழில் நிய­மங்கள் சட்­டங்­க­ளையும் மீறிச் செயற்­பட்ட தென்­னி­லங்கை மீன­வர்­களின் செயற்­பா­டு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­துத்தான் முல்­லைத்­தீவு மீன­வர்கள் போராட்டம் நடத்­தி­னார்கள். அர­சாங்­கத்தின் சட்­ட­விதி முறைகள் மீறப்­ப­டு­கின்­றன. அதனால் தாங்கள் மோச­மாகப் பாதிக்­கப்­ப­டு­கின்றோம் என்பதைச் சுட்­டிக்­காட்டி அந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண வேண்டும் என்­ப­தற்­கா­கவே அந்தப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. மொத்­தத்தில், சட்ட விதிகள் மீறப்­ப­டு­கின்­றன. சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டுங்கள். அரச சட்ட ஒழுங்­கு­களின் ஊடாக தமக்கு உரித்­தான கடற்­றொழில் வாய்ப்பை அனு­ப­விப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும் என்­பதே அந்தப் போராட்­டத்தில் அவர்கள் முன்­வைத்த கோரிக்­கை­யாகும்.

இது­கு­றித்து கடற்­றொழில் அமைச்சர் விஜி­த­முனி சொய்சா ஞாயி­றன்று முல்­லைத்­தீ­வுக்குச் சென்று போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைச் சந்­தித்து பிரச்­சி­னை­க­ளையும் நிலை­மை­க­ளையும் கேட்­ட­றிந்தார். சட்­ட­வி­ரோதச் செயற்­பா­டுகள் தடுத்து நிறுத்­தப்­பட வேண்டும் என்­பதை அவர் வலி­யு­றுத்திச் சென்­ற­தை­ய­டுத்து, மறுநாள் திங்­கட்­கி­ழமை இரவு நாயாற்று மீன­வர்­களின் வாடிகள் தீயி­டப்­பட்­டன. சட்­ட­வி­ரோத கடற்­றொழில் செயற்­பா­டுகள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­காக முன்­ன­ணியிலிருந்து செயற்­பட்­ட­வர்­களை இலக்கு வைத்தே இந்த நாச­காரச் செயல் அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது.

நாயாறு, கொக்­கிளாய், கொக்­குத்­தொ­டுவாய் பிர­தே­சங்­களில் தென்­னி­லங்கை மீன­வ­ர்­களின் அத்­து­மீ­றல்­களும், சட்­ட­வி­ரோத மீன்­பிடி நட­வ­டிக்­கை­களும் முக்­கிய பிரச்­சி­னை­யாக, இந்தப் பிர­தே­சங்­களில் மீள்­கு­டி­யேற்றம் ஆரம்­பிக்­கப்­பட்ட நாளிலிருந்தே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

     நிரந்­தரத்தீர்வு அவ­சியம்

பருவப்பெயர்ச்சிக் காற்றின் கார­ண­மாக முல்­லைத்­தீவு பகு­திக்கு நீர்­கொ­ழும்பு மீன­வர்கள் பரு­வ­கால கடற்­றொ­ழி­லுக்­காக வந்து தொழில் செய்­து­விட்டு திரும்பிச் செல்­வது வழமை. யுத்தம் கார­ண­மாக முல்­லைத்­தீவு மக்கள் முழு­மை­யாக இடம்­பெ­யர்ந்­தி­ருந்­த­போது, இந்­தப்­பி­ர­தே­சங்கள் படை­யி­ன­ரு­டைய முழு­மை­யான ஆளு­கைக்குள் இருந்தபோது, அங்­கி­ருந்த கடல் வளத்தை தென்­ப­குதி மீன­வர்கள் அனு­ப­விப்­ப­தற்குப் படை­யினர் உத­வி­யி­ருந்­தார்கள். அந்தப் பின்­ன­ணியில் உள்ளூர் மீன­வர்கள் மீள்­கு­டி­ய­மர்ந்த பின்­னரும், தென்­னி­லங்கை மீன­வர்கள் அந்தத் தொழில்­வாய்ப்பை நிரந்­த­ர­மாக அனு­ப­விப்­ப­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

படிப்­ப­டி­யாக இந்­தப்­பி­ர­தே­சத்தில் வந்­தி­ருந்து தொழில் செய்த தென்­னி­லங்கை மீன­வர்கள், அங்­கேயே வாடி­க­ளையும் குடில்­க­ளையும் அமைத்து, நிரந்­த­ர­மாக வாழ்க்­கையை அமைத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தார்கள். இந்த முயற்­சியில் 400 தொடக்கம் 500 வரை­யி­லான சிங்­கள மீனவக்குடும்­பங்கள் முழு­மை­யாக ஈடு­பட்­டி­ருந்­தன. அவர்­க­ளுக்­கு­ரிய பாது­காப்­பையும், ஏனைய உத­வி­க­ளையும் அந்தப் பகுதியில் நிரந்தரமாக நிலைகொண்டுள்ள படையினர் வழங்கி வந்தார்கள். இதனை எதிர்த்து குரல் கொடுத்த தமிழ் மீனவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டார்கள். அச்சுறுத்தப்பட்டார்கள்

இதனால் மீள்குடியேறிய மீனவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகியது. அவர்களுடைய 'மீள்குடியேற்ற வாழ்வாதார முயற்சிகள்' பெரும் இடையூறுகளுக்கு ஆளாகி, மோசமான பாதிப்புக்குள்ளாகியது. இது முறையற்றதொரு செயலாக இருந்த போதிலும், கடற்றொழில் நியமங்களையும், நியதிகளையும் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டிய கடற்றொழில் அமைச்சும், மீள்குடியேற்ற நடவடிக்கைகளை முழு அளவில் ஊக்குவித்ததாகக் கூறுகின்ற அரசாங்கமும் கண்டுகொள்ளவே இல்லை.

இதனால் நிலைமைகள் தீவிரமடைந்து, உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் விளைவிக்கத்தக்க வகையிலான தீவைப்பு வன்முறை வரையில் நிலைமை மோசமடைந்தது. இந்த வன்முறையில் ஈடுபட்டிருந்தவர்களை உள்ளடக்கிய தென்னிலங்கை மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தாலும், அந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு எட்டப்பட்டுவிட்டது என்று கூறுவதற்கில்லை.

யாழ். மாவட்டத்தில் வடமராட்சி கிழக்கிலும் அத்துமீறிப் பிரவேசித்து தங்கியிருந்து, சட்ட விதிகளை மீறி கடலட்டை பிடிப்பதில் தென்னிலங்கை மீனவர்கள் ஈடுபட்டிருப்பதனால், பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் அங்கேயும் நியாயம் கேட்டு போராடியவர்களின் படகுகள் தீயிடப்பட்டு வன்முறை கட்டவிழ்ந்திருந்தது. அந்தப் பிரச்சினை இன்னும் எரிந்து கொண்டிருக்கின்றது. நீறு பூத்த நெருப்பாக இருந்து நிலைமைகள் மிகவும் மோசமடைவதைத் தடுப்பதற்கு உரியவர்கள் விரைந்து தீர்க்கமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

உண்மையில் சட்டம் ஒழுங்குடன் தொடர்புடைய இந்த மீனவர்களின் பிரச்சினைக்கு, சட்டத்தையும் ஒழுங்கையும் சீராக நிலைநாட்டுவதன் மூலம் தீர்வு காணமுடியும் என்பதில் சந்தேகமில்லை. அதனை அரசு செய்யுமா? 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-08-18#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.