Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ? தெற்கே தீர்மானிக்க வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ?

தெற்கே தீர்மானிக்க வேண்டும் `

இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்துத் தீர்மானிப் பதற்காக, அது தொடர்பாக சர்வஜனவாக் கெடுப்பு ஒன்று நடத்தினால் என்ன என்பது பற்றி அரசுத்தலைமை ஆராய்ந்து வருவதாக ஒருபுறத் தில் செய்தி வெளியாக

மறுபுறத்தில், ""யுத்த நிறுத்த உடன்பாட் டைப் பேணுவதற்கு அரசு விரும்பாவிட்டால், அமைதிப் பேச்சுக்களை மீள ஆரம்பிக்க வாய்ப்பே யில்லை. அதேவேளை மோசமான போரும் வெடிக் கும்.'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பா ளர் சு. ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார் என்ற தகவலும் வெளியாகியிருக் கின்றது.

""யுத்த நிறுத்த உடன்பாட்டின் அடிப்படை யில் இனிமேல் நாங்கள் பேச்சைத் தொடரலாம் என்று நான் நம்பவில்லை'' என அரசின் சமா தானச் செயலகப் பணிப்பாளர் நாயகமும், இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கொஹன தெரிவித்தார் என்று செய்திகள் வெளியான பின்னணியிலேயே, யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவது குறித்த அரசின் உத்தேசம் பற்றிய செய்தி யும் கசிய விடப்பட்டிருக்கின்றது.

இத்தகவல்களின் பின்புலத்தில் அமைந்திருக் கக்கூடிய இரண்டு விடயங்களை இலகுவாகவே ஊகித்துக் கொள்ள முடியும்.

ஒன்று யுத்தத் தீவிரத்தில் செயற்படும் மஹிந் தரின் அரசு முழு யுத்தத்துக்குத் தயாராகிவிட்டது. அதனால் யுத்த நிறுத்தமும் அதற்கு கசக்கத் தொடங்கிவிட்டது. இப்போது அதிலிருந்து முழு அளவில் வெளியே வருவதற்கான சர்வ தேச சமூகத்தைத் திருப்திப்படுத்தக் கூடியதான வலுவான காரணத்தை அது தேடுகின்றது. எமது நாட்டு மக்களின் விருப்பப்படியே ஆணைப்படியே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முறித்து, அதி லிருந்து வெளியே வந்தோம் என்று கூறுவதன் மூலம் சர்வ தேசக் கண்டனங்கள், அழுத்தங்களிலிருந்து தம்மையும் தமது அரசையும் விடுவித்துக் கொண்டு, முழு யுத்தத்துக்குச் செல்லலாம் என மஹிந்தரின் அரசுத் தலைமை கணக்குப் போடு கின்றது போலும். அதற்கான ஆரம்பக் காய் நகர்த்தலாகவே இச்செய்தி கசிய விடப்பட்டிருக்கின் றது.

அடுத்தது "சார்க்' உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்தரும் அவரது அணியினரும் புதுடில்லி புறப்பட்டுச் செல்ல விருக்கையில், அவரது அரசின் ஊது குழலாக இருக்கும் அரசு சார்பு ஞாயிறு வார இதழில் உத் தேச சர்வஜன வாக்கெடுப்புத் திட்டம் பற்றிய தகவல் முற்பக்கப் பிரதான தலைப் புச் செய்தியா கப் பிரசுரிக்கப்பட்டு, அத்தகவல் கசிய விடப்பட்டி ருக்கின்றது.

அரசின் தீர்மானத்தை முடிவை திட்ட வட்டமாக அறிவித்து, அதன் பின்னர் சர்வதேச சமூகத்தின் கடும் எதிர்ப்பு அத்திட்டத்துக்கு எதி ராகக் கிளம்பி, அதன் காரணமாக அதனை இடை நடுவில் கைவிடுவதை விடுத்து, ஓர் ஊகச் செய்தி யாக அத்தகவலைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டு, அது தொடர்பாகப் புதுடில்லி அரசு அதிகாரிகளின் பிரதிபலிப்புகளை புதுடில்லியில் அவதான மாகப் பெற்றுக்கொண்ட அந்த உத்தேசத்திட் டம் குறித்து இறுதி முடிவெடுக்கலாம் என்பது ஜனா திபதி மஹிந்தர் வகுத்த தந்திரோபாயமாக இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அதனால்தான் புதுடில்லிக்கு மஹிந்தரின் அணி புறப்படவிருக்கையில் இச் செய்தி அரசு சார்பு ஊடகம் ஊடாக அவிழ்த்து விடப்பட்டிருக் கின்றது. செய்தி வெளியான நேரமும், முறையும் இந்த நோக்கத்தை உறுதிப்படுத்துகின்றன.

அமைதிப் பேச்சு நடத்துவதானால் அதற்கான சூழ்நிலை களத்தில் பேணப்படவேண்டும். அதற்கு யுத்த நிறுத்த உடன்பாடு முழு அளவில் நூறு சதவீதம் நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் இதுவே இந்த யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து தமிழர் தரப்பின் ஏகோபித்த ஏக நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

ஆனால் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு பதவி யேற்றதிலிருந்து, இந்த அடிப்படை நிலைமை புறக் கணிக்கப்பட்டு, அதற்கு மாறான செயற்பாடு களே தென்னிலங்கையால் முன்னெடுக்கப்படு கின்றன.

எனவே யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர வேண்டுமா, இல்லையா என்பது குறித்துத் தமிழ் மக்களின் கருத்தை, சர்வஜன வாக்கெடுப்பு நடத் தித்தான் இனிமேல் அறிய வேண்டும் என்பதல்ல. அவர்களின் முடிவும் தீர்மானமும் வெளிப்படை யானவை; மாற்றமில்லாதவை.

அமைதி வழியில் சமாதான முறையில் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனத் தென்னிலங்கை கருதுமானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் முற்றும் முழுதாக வார்த்தைக்கு வார்த்தை சொல்லி லும் செயலிலும் நடைமுறைப்படுத்தப்படவேண் டும். அமைதி முயற்சிகளில் இதய சுத்தியுடன் அரசுத் தலைமை ஈடுபட வேண்டும்.

அப்படி அமைதி வழித் தீர்வில் தென்னிலங் கைக்கு நாட்டமில்லை எனின், யுத்த நிறுத்த உடன் பாட்டின் அமுலாக்கம் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

இதுவே தமிழர் தரப்பின் ஒரே நிலைப்பாடு.

ஆகவே யுத்த நிறுத்த உடன்பாடு தேவையா, அது தொடரப்படவேண்டுமா என்பதையெல் லாம் தீர்மானிக்க வேண்டியது கொழும்புதான்; தென்னிலங்கைதான்.

தென்னிலங்கை அரசுத் தலைவர் என்ற முறையில் இவ்விடயத்தில் எவ்வாறு முடிவெடுப் பது என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர் ஜனா திபதி மஹிந்தரே. தாமே முடிவு செய்வதா, தமது மக்களிடம் தாம் கேட்டு விசாரித்து கருத்து அறிந்து தெளிந்து கொள்வதா, தெரிந்து கொள்வதா என் பதை அவரே தீர்மானிக்க வேண்டும்.

தமிழர் தாயகத்துக்கு இதில் முடிவு செய்ய எதுவுமே இல்லை.

உதயன்

யுத்த நிறுத்தத்தைத் தொடர்வதா ?

தெற்கே தீர்மானிக்க வேண்டும் என்று கேள்வி கேட்கப்பட்டு, விடையும் கொடுக்கப்பட்டுள்ளது...

ஆனால், ஜனாதிபதி தேர்தலில் மகிந்துவை வெற்றிபெறச் செய்ததன் மூலம் தெற்கு முடிவு எடுக்க வேண்டிய ஆணையை ஏற்கனவே மகிந்துவின் கையில் ஒப்படைத்துவிட்டது.

எனவே, யுத்தமா அல்லது சமாதானமா என்பதை மகிந்துவே தீர்மானிக்க வேண்டும்...

இதன்படி, சமாதானம் என்ற போர்வையினுள் செய்யும் யுத்தம் என்ற முடிவை மகிந்துவும் எடுத்து நீண்டகாலம் ஆகிவிட்டது.

டேய் மன்டையில ஒன்டும் இல்லத மடையா மகிந்த லூசா..யுத்தத தொடங்கீடு இப்ப வாக்கெடுப்பு நடதுரியா?

யாருகு அல்வா கொடுகிரெ? அதுகல இவலவுகு எமாத கூடாது..பாவம்டா சிங்கல சனம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.