Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு வாபஸ்! | Tamil Page

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசுக்கட்சிக்கு எதிரான வழக்கு வாபஸ்! | Tamil Page

தமிழரசுக்கட்சியில் இருந்தும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் தன்னை விலக்கி கொண்டமைக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கை, தி.பிரகாஷ் இன்று வாபஸ் பெற்றுக்கொண்டார்.

சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் பதவிக்கு கட்சி கட்டுப்பாட்டை மீறி தி.பிரகாஷ் போட்டியிட்டிருந்தார். தவிசாளர் பதவிக்காக எந்த எல்லை வரையும் செல்வேன் என அவர் காண்பித்தது கூட்டமைப்பிற்குள் அதிரச்சியையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததற்கு மறுநாள் யாழ் நகரிலுள்ள சிங்கள பெண் பாலியல் தொழிலாளி ஒருவரை மருதனார்மடத்திலிருந்த விடுதிக்கு அழைத்து வந்து, அவருக்கு பேசிய தொகை பணத்தை கொடுக்காததால் விவகாரம் பொலிஸ் வரை சென்றிருந்தது. இந்த நடவடிக்கைகளால் அவர் மீது பலத்த அதிருப்தியேற்பட்டிருந்தது.

இதையடுத்து பிரகாஷை கட்சியை விட்டும், உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கும் கடிதத்தை கட்சி செயலாளர் அனுப்பியிருந்தார்.

இதையடுத்து, முதலமைச்சர் அணியில் இணைய பிரகாஷ் முயன்றபோதும், அவரது ஒழுக்கமின்மையை காரணம் காட்டி முதலமைச்சர் அந்த பேச்சை ஆரம்பத்திலேயே நிராகரித்திருந்தார்.

புதிய எல்லை மீள் நிர்ணயத்தில் காங்கேசன்துறை தொகுதிக்குள் ஏழாலை, சுன்னாகம் போன்ற பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை தொகுதி மாவை சேனாதிராசாவினுடையது. பிரகாஷ் ஏழாலையை சேர்ந்தவர். தனது தொகுதிக்குள் அதிருப்தியாளர்களை வளர்க்ககூடாதென மாவை விரும்பியதால், பிரகாசுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியிருந்தனர்.

இது குறித்து தமிழ்பக்கம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தது மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் இருவரும் பிரகாஷை அழைத்து பேசியுள்ளனர். அவரை கட்சியை விட்டு நீக்கும் முடிவை மாற்றிக் கொள்வதாகவும், இன்னொரு தேர்தலில் சந்தர்ப்பம் தருவதாகவும் வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற அவர் முடிவு செய்திருந்ததை தமிழ்பக்கம் முன்னரே தகவல் வெளியிட்டிருந்தது.

இன்றையதினம் இந்த வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இன்று, வழக்கை வாபஸ் பெறுவதாக பிரகாஷ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.