Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் சுற்றுலா தின நிகழ்வுகள் ஆரம்பம்!!

Featured Replies

வடக்கில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மந்தகதியில் இடம்பெறுவது வேதனையளிக்கிறது - விக்கி

 

 
 

இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத் தேடித் தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அடைந்துள்ளபோதும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்தி செயற்பாடுகள் மந்த கதியிலே உள்ளன என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண முதலமைச்சரின் வழிகாட்டலின் கீழ் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையும், வடக்கு மாகாண சுற்றுலா பணியகமும் மற்றும் யாழ் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் உலக சுற்றுலாத் தினம் - 2018 இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

viki.jpg

வட பகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்பட்டுள்ளபோதும் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளரச்சியானது மிகவும் மந்தமான கதியில் நகர்வது வருத்தத்திற்குரியது.

நீண்டகால யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு மேம்பாடு, போக்குவரத்துக்கான தெருப் பாதைகளின் புனரமைப்பு, புகையிரத சேவையின் மீள் அறிமுகம் ஆகிய செயற்பாடுகளின் மூலம் சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

இந் நிலையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் அனுபவங்களைப் பெற்றுள்ள முதலீட்டாளர்களை இப் பகுதிக்கு வரவழைத்து சுற்றுலாத் துறையில் முதலீடுகளை மேற்கொண்டு இத் துறையை வளர்ச்சியடையச் செய்வதற்காக வடமாகாண சபையின் முதலமைச்சரின் அமைச்சின் கீழ் சுற்றுலாத் துறைக்கென தனியான ஒரு பிரிவு உருவாக்கப்பட்டு பேராசிரியர் தேவராஜாவின் வழிகாட்டலின் கீழ் வடமாகாணத்திற்கான சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து சுற்றுலாப்பணியகம் என்ற ஒரு அமைப்பு தனியாக உருவாக்கப்பட்டு சுற்றுலாத்துறையின் அபிவிருத்திகளை முன்னெடுத்து செல்வதற்கான பொறுப்புகளையும், நடவடிக்கைகளையும் அதனிடம் கையளித்துள்ளோம். 

வடபகுதிக்கான இந்த சுற்றுலாப் பணியகத்தின் செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு துரிதமான அபிவிருத்திப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை நான் அவதானித்துள்ளேன். இன்று நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சி நிகழ்வுகள் மற்றும் உலக சுற்றுலா தின கொண்டாட்ட நிகழ்வுகள் தொடர்பான ஒழுங்குகளை மேற்கொள்வதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலும் எமது அமைச்சின் செயலாளருடன் சேர்ந்து இந்த சுற்றுலா பணியகமும் அதன் இதர உத்தியோகத்தர்களும் அக்கறையும் ஊக்கமும் காட்டி வருகின்றனர். 

வடமாகாணத்தைப் பொறுத்தவரையில் இங்கு மிகக் கூடிய அளவிலான சுற்றுலா மையங்களும் புராதன சின்னங்களும் வரலாற்றுப் பதிவுகளும் மற்றும் இன்னோரன்ன பாரம்பரிய கலை கலாச்சார விழுமியங்களும் காணப்படுகின்றன. அவற்றை முறையாக வரிசைப்படுத்தி எமது புராதன சின்னங்களின் வரலாற்றுப் பதிவுகளை சுற்றுலாப் பயணிகள் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் காட்சிப்படுத்த வேண்டும். 

சரித்திரம் சில இடங்களில் பிறழ்வாக எடுத்துரைத்து வரப்படும் இக்கால கட்டத்தில் எமது பாரம்பரியத்தின் உண்மை நிலை உலகிற்கு எடுத்துக் காட்டப்படுவது அத்தியாவசியமாகின்றது என்றார்.

http://www.virakesari.lk/article/41206

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

யாழ்.மாநகர சபை மைதானத்தில்  சுற்றுலா தின நிகழ்வுகள் ஆரம்பம்!!

 

 

உலக சுற்றுலா தின தேசிய நிகழ்வு யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

கொழும்பு சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சின் அனுசரணையுடன், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, வடமாகாண சுற்றுலாப் பணியகம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் இந்த நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ள நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

உணவு திருவிழா,சுற்றுலா சார்ந்த விற்பனை மையங்கள் ,உள்ளூர் உற்பத்திகள்,ஒன்பது மாகாணங்களை சேர்ந்த சுற்றுலா சார்ந்த விடயங்கள் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய 91 காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பாரம்பரிய கலை கலாசார நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

IMG-ef3477794d980371d93207fc8b517b25-V.jIMG-c4e2bc49d2e13e7d6610e965c876850e-V.jIMG-fb56a4fe622cc85f0dbc091855c29c85-V.j20180926_110730.jpg20180926_110339.jpg20180926_110133.jpg20180926_110009.jpg20180926_101625.jpg20180926_115925.jpg

https://newuthayan.com/story/15/யாழ்-மாநகர-சபை-மைதானத்தில்-சுற்று-தின-நிகழ்வுகள்-ஆரம்பம்.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.