Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையர்கள் இதயத்தில் சீனா! – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Featured Replies

இலங்கையர்கள் இதயத்தில் சீனா! – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

 

F084BA6F-FF65-4DD6-9686-6D8574068578-720x450.jpeg

இலங்கையோடு அனைத்து சூழ்நிலையிலும் தோளுக்கு தோளாக நிற்கின்ற நண்பனாக சீனாவை கருதுவதாக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அந்தவகையில் இலங்கையர்கள் சீனாவை இதயத்தில் வைத்திருப்பதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை ஒரு சுதந்திர நாடு என்பதை சர்வதேசம் மதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை ஜனாதிபதி ஐ.நா.வில் முன்வைத்ததாக குறிப்பிட்ட அவர், போர் நிறைவுபெற்று பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த கடுமையாக உழைக்கும் இலங்கை, எஞ்சியுள்ள தூரத்தை கடக்கும் விடயத்தில் ஏனைய சர்வதேச மாதிரிகளைத் திணிக்க முற்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

FBF19716-BBD9-49A3-B949-5729EFF783DB-384

மக்கள் சீனக் குடியரசு ஸ்தாபிக்கப்பட்ட 69வது தினவிழா கொழும்பில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றுது. இதில்  பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஷங்ரி – லா ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், ஜனாதிபதி ஐ.நா.வில் பேசிய விடயங்கள் தொடர்பாகவும் மஹிந்த சமரசிங்க விளக்கமளித்தார்.

“உலகம் எங்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கவேண்டும். பயங்கரவாதம் நிறைவிற்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 30 வருடங்களில் நாம் எதிர்நோக்கியது போன்றதொரு சூழ்நிலையை எதிர்நோக்காதிருப்பதனை உறுதிப்படுத்துவதற்காக எமது நாட்டில் விரிவான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இதனால் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தி, சுபீட்சம் ஆகியவை பாதிக்கப்பட்டன.

நாம் சர்வதேச சமூகத்திடம் எதனைக் கோரினோம் என்றால் இலங்கை ஒரு சுதந்திர நாடு என்பதை மதியுங்கள் என்றே கோரினோம். முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பயணத்தில் நாங்கள் கடைசி தூரத்தை கடக்க வேண்டியுள்ளது. அதனை இலங்கையர்களே பயணித்தாகவேண்டும். எமது மக்களுக்கு என்னதேவை என்பதை நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஏனைய நாடுகளிலுள்ள மாதிரிகளை நாம் இலங்கையில் திணிக்க முடியாது. இந்த நாட்டின் கலாசாரம், மதம் ஆகியவற்றை கருத்திற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நாட்டின் சமூகக் கட்டமைப்பு மிகவும் பன்முகத்தன்மைகொண்டது. இதனைப் புரிந்துகொண்டு செயற்படுங்கள் என்பதையே நாம் சர்வதேச சமூகத்திடம் கோரினோம்.

சீனாவிற்கு இதனை நாம் நினைவுபடுத்த வேண்டியதில்லை. சீனாவை நான் எப்போதும் சகல சூழ்நிலையிலும் துணையாக நிற்கின்ற நண்பன் என்றே குறிப்பிடுவேன். நல்லநேரமாக இருப்பினும் கெட்ட நேரமாக இருப்பினும் சீனா எம்மோடு இருக்கின்றது. இதனை நாம் மிகவும் பாராட்டுகின்றேன். இலங்கையர்கள் அனைவரும் சீனாவையும் சீன மக்களையும் எமது இதயங்களில் வைத்திருக்கின்றனர் என்று கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/இலங்கையர்-இதயத்தில்-சீன/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.