Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடமிருந்து இலங்கைக்கு எந்த அரசியல் அழுத்தமும் வராது- மலிக் சமரவிக்கிரம

Featured Replies

சீனாவிடமிருந்து இலங்கைக்கு எந்த அரசியல் அழுத்தமும் வராது- மலிக் சமரவிக்கிரம

 

 
 

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் வர்த்தக உறவுகளே காணப்படுகின்றன எதிர்காலத்திலும் இந்த நிலையே காணப்படும் என இலங்கையின் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம பேர்ளினை சேர்ந்த ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

நியுயோர்க் டைம்ஸ் சமீபத்தில் இலங்கை சீனா உறவுகள் குறித்து வெளியிட்டிருந்த செய்திகள் ஆதாரமற்றவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் இலாபத்தில் இயங்குவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் புதிய திட்டமொன்றை வகுத்துள்ளது என அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் கீழ் துறைமுகத்தை இலாபகரமானதாக்குவதற்கான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை அவர்கள் அதனை அமைத்து விட்டு அனைத்தும் தானாக நடைபெறும் என வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாங்கள் திட்டமொன்றை தயாரித்துள்ளோம் நான்கு ஐந்து வருடங்களில் அது சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நாங்கள் அபிவிருத்தி செய்யவிரும்புகின்றோம் அது சரியான இடத்தில் உள்ளது என நாங்கள் கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரங்களில் சீனாவின் பரந்துபட்ட பங்களிப்பு குறித்து நான் கவலையடையவில்லை எனவும் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

hamm.jpg

நாங்கள் இது குறித்து அதிகம் கவலையடையவேண்டிய அவசியமில்லை என நான் கருதுகின்றேன்,சீனாவுடனான எங்கள் உறவுகள் வெறுமனே வர்த்தக அடிப்படையிலானவை,எதிர்காலத்திலும் அவ்வாறான நிலையே காணப்படும் அரசியல் அழுத்தங்கள் எதுவும் காணப்படாது என நான் கருதுகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/41282

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.