Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவீந்திரவை விசாரணை செய்வதில் காலதாமதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவீந்திரவை விசாரணை செய்வதில் காலதாமதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

11 மணவர்கள் கடத்தல் தொடர்பில் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவுக்கு எதிராக விசாரணைகள் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

imageproxy.jpg

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியமை தொடர்பில்  பிரதான சந்தேகநபரான நேவி சம்பத் எனபப்டும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டிஆரச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டில் முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்ர விஜேகுனரத்னவுக்கு எதிராக  சி.ஐ.டி. நேற்று வரை எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

தொடர்ச்சியாக சி.ஐ.டி. க்கு இந்த விடயத்தில் உயர் மட்ட அரசியல் அழுத்தம் கொடுக்கபப்டுவதால் குறைந்த பட்சம் அட்மிரால் ரவீந்ரவை விசாரணைக்கு அழைக்க திகதியொன்றினைக் கூட நேற்று மாலை வரை தேர்வு செய்ய முடியாமல் இருப்பதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.

நேவி சம்பத் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற விடயத்தில் அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்னவின் பங்களிப்பு தொடர்பில் பல சாட்சிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குற்றவாளி ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமை,  விசாரணை அதிகாரிகளுக்கு இடையூறு செய்தமை உள்ளிட்ட நீதிமன்ற பிடியாணை இன்றி கைது செய்ய முடியுமான குற்றச்சாட்டுக்கள் ரவீந்ர விஜேகுணரத்னவுக்கு எதிராக உள்ளன. எனினும் அவரிடம் குரைந்த பட்சம் விசாரணைகளை கூட முன்னெடுக்க முடியாத நிலையில் சி.ஐ.டி. அழுத்தங்களுக்கு உட்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் ரவீந்ரவுக்கு எதிராக உடன் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், அவரிடம் விசாரணைகளை செய்யவும் கோட்டை நீதிவான் பல தடவைகள் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 ஏற்கனவே நேவி சம்பத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்ப்ட்டுள்ள நிலையில்,  அந்த நபருக்கு எதிராக செயற்பட்ட சட்டம் ரவீந்ர விடயத்திலும் செயற்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

http://www.virakesari.lk/article/42458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.