Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் ஊடாக இலங்கை குறித்து 2019 இல் மற்றுமொரு பிரேரணை ? ஜெனிவா விவகாரத்தில் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் ஊடாக இலங்கை குறித்து  2019 இல் மற்றுமொரு பிரேரணை ? ஜெனிவா விவகாரத்தில் இராஜதந்திர நகர்வுகள் தீவிரம்

(ரொபட் அன்டனி)

ஐக்கிய நாடுகள்  மனிதஉரிமை பேரவையின்  40 ஆவது கூட்டத்   தொடர் எதிர்வரும்  2019 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல்  மார்ச்  மாதம் 22 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில்   இலங்கை குறித்து மற்றுமொரு பிரேரணையை   கொண்டுவரப்படலாம் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. 

37th-session-of-the-Human-Rights-Council

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இந்த   பிரேரணையை   2019ஆம் ஆண்டில் கொண்டுவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதற்கான இராஜதந்திர  முயற்சிகளும்  இடம்பெறுவதாக தெரிகின்றது.   

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலிருந்து  அமெரிக்கா விலகியுள்ள நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இந்த   பிரேரணையை    கொண்டுவரலாம் என  தெரிகின்றது.   குறிப்பாக  ஜேர்மன் இலங்கை குறித்த   பிரேரணையை கொண்டுவருவதில் முன்னின்று செயற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.   எனினும் இது   தொடர்பில் ஜேர்மன்  எந்த விடயத்தையும் இதுவரை முன்வைக்கவில்லை. 

விசேடமாக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு    இவ்வாறு   ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அல்லது பிரிட்டன் இலங்கை குறித்த பிரேரணையை கொண்டுவரவேண்டும் என்று    வலியுறுத்தி வருகின்றது. இந்நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மாதங்களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன்    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  முன்னெடுக்கலாம் என்று  தெரியவருகின்றது. 

 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ, பிரிட்டனோ இதுவரை   இதுதொடர்பில் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த 2012,2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் இலங்கை தொடர்பாக   நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளை  அமெரிக்காவே முன்னின்று கொண்டுவந்தது.  அதாவது அமெரிக்கத் தலைமையிலான   நாடுகளே இந்தப் பிரேரணைகளை கொண்டுவந்தன.  எனவே  40ஆவது கூட்டத்  தொடரில் என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கடந்த   2015   ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து   பிரேரணை  ஒன்று  நிறைவேற்றப்பட்டது.      இலங்கை     அரசாங்கததின் இணை   அனுசரணையுடன்     இந்த    பிரெரணை   நிறைவேற்றப்பட்;டது. இந்தப் பிரேரணை  கடந்த    2017   ஆம் ஆண்டில் மீண்டும்   இரண்டு       சர்வதேச     மேற்பார்வைக்கான   கால அவகாசத்துக்கு   உட்பட்டது. 

அந் த கால அவகாசம்    2019   ஆம் ஆண்டு மார்ச்  மாதத்துடன்  நிறைவடைகின்றது.  

2015  ஆம் ஆண்டு  பிரேரணையில்      20  பரிந்துரைகள்   முன்வைக்கப்பட்டு;ள்ளன.   காணாமல் போனோர் அலுவலகம்   உணடமையை கண்டறியும் ஆணைக்குழு  இழப்பீட்டு அலுவலகம்    ஆகிய  வற்றை    நிறுவவேண்டும் என்றும் இந்த   பிரேரணையின்      பரிந்துரைகள்   வலியுறுத்துகின்றன. 

அதேபோன்று   பொது மக்களின்   காணி விடுவிப்பு  அரசியல் தீர்வுத்திட்டம்    உள்ளிட்ட  20  பரிந்துரைகள்    முன்வைக்கப்பட்டுள்ளன.     எனினும்     இதுவரை   அரசியல் தீர்வு     காணப்படவில்லை.ஆனால்  காணாமல் போனோர் அலுவலகம்    நிறுவப்பட்டு   தற்போது இயங்கி வருவதுடன்   அதன் இடைக்கால  அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று   இழப்பீட்டு      அலுவலகத்தை அமைப்பதற்கான  சட்ட ம்    பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  அத்துடன் புதிய     அரசியலமைப்பை    உருவாக்குவதற்கான   பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன்  அதன்     வரைபு     ஒன்று   பாராளுமன்றத்தில்   விரைவில்  முன்வைக்கப்படும் என்று    கூறப்பட்டுள்ளது

 

http://www.virakesari.lk/article/42450

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.