Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அரசியலும் கட்சித்தாவலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசியலும் கட்சித்தாவலும்

பாராளுமன்றத்தில் கட்சித்தாவல்கள் குறித்து இப்போதெல்லாம் பெருமளவில் பேசப்படுகிறது. கட்சிமாறும் அரசியல்வாதிகள் கடும் கண்டனத்துக்குள்ளாகிறார்கள்.கட்சித்தாவல்களை ஊக்குவிப்பதற்காக பணமாகவும் பொருளாகவும் பெருமளவில் இலஞ்சம் கொடுப்பதை வழக்கமாக்கிவிட்ட இரு பிரதான கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் கூட கட்சித்தால்களை கடுமையாகக் கண்டனம் செய்யும் விசித்திரத்தையும் காண்கிறோம். கட்சிமாறுவது ஒரு பாவம் என்று தாங்கள் கருதுவதாக நாங்கள் நினைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

PARLIMENTR.jpg

கட்சித்தாவல்களினால் பாதிக்கப்படாத கட்சி எதுவும் இலங்கையில் இல்லை. ஐக்கிய தேசிய முன்னணியின் புதிய அரசாங்கத்தில் மீண்டும் அமைச்சராகியிருக்கும் ஐ.தே.க. அரசியல்வாதியான கலாநிதி ஹர்ஷா டி சில்வா ஒரு சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் கட்சித்தாவல்களைத் தடைசெய்வதற்கு சட்டம் கொண்டுவரப்படவேண்டியது மிகமிக அவசியம் என்று வலியுறுத்தியிருந்தார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து 2014 இல் கட்சித்தாவல்கள் இடம்பெற்றிருக்காவிட்டால் கலாநிதி சில்வாவின் கட்சி மேலும் பல வருட காலத்துக்கு ஆட்சியதிகாரத்தை அனுபவிக்க முடியாமல் போயிருக்கும் என்பதை அவர் அறியாதவராக இருந்திருக்கமுடியாது. 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராகவும் இருந்த மைத்திரிபால சிறிசேன அதிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான கூட்டணியின் பொதுவேட்பாளராக 2014 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார்.அவருடன் வேறு சிலரும் ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்துஅப்போது வெளியேறியிருந்தார்கள்.தற்போது கூட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிமாறி ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்திருக்கிறார்கள்.

கட்சித்தாவல் என்பது உண்மையிலேயே சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மீது வாக்காளர்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கைக்கு செய்கின்ற துரோகமாகும் என்பதில் மறு பேச்சுக்கு இடமில்லை.ஆனால், கட்சித்தாவல்களைத் தடுப்பதற்கு சட்டத்தைக் கொண்டுவர முயற்சிப்பதற்கு முன்னதாக அந்த பிரச்சினையில் உள்ள பல அம்சங்களை குறிப்பாக அதற்கான காரணங்களை யதார்த்தபூர்வமாக ஆராயவேண்டும்.

எந்தவொரு கட்சிக்குமே அறுதிப்பெரும்பான்மைப் பலம் இல்லாத பாராளுமன்றமே ( தொங்கு பாராளுமன்றம்)கட்சித்தாவல்களுக்கு வழிவகுப்பதாக பொதுவில் கூறப்படுகிறது.அதேவேளை, தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையே தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு காரணமாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.காலஞ்செனாற ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தலைமையில் ஐ.தே.க. 1977 ஜூலை பொதுத்தேர்தலில் வெற்றி.பெற்று ஆட்சிக்குவந்த பிறகு தொகுதி அடிப்படையிலான தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளரே உறுப்பினராகத் தெரிவுசெய்யப்படுகின்ற முறைமையை இல்லாமலாக்கியது.பரந்தளவில் கெட்டியான வாக்கு வங்கியைக் கொண்ட தனது கட்சிக்கு விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை என்றென்றைக்கும் அனுகூலமாக இருக்கும் என்று ஜெயவர்தன நினைத்ததே அதற்குக் காரணமாகும்.ஆனால், அது தவறு என்று பிறகு நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை 1989 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இரு தடவைகளே உறுதியான அரசாங்கங்கள் பதவியில் இருந்திருக்கின்றன. பிரேமதாச அரசாங்கமும்(1989 - 1994) ராஜபக்ச அரசாங்கமுமே (2010 - 2015) அவையாகும். எனவே  விகிதாசாரத்தேர்தல் முறையே பலவீனமான அரசாங்கங்களைக் கொண்டுவருகின்றது எனறும் அதன் விளைவாக கட்சித்தாவல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் முன்வைக்கப்படுகின்ற வாதத்தில் தகுதி இல்லை என்று நிராகரித்துவிடமுடியாது.( விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை சிறுபான்மை இனங்களினதும் சிறிய கட்சிகளினதும் பிரதிநிதித்துவங்களுக்ககு வாய்ப்பானதாக அமைந்திருக்கிறது உண்மையே.ஆனால், அது தொடர்பில் இங்கு விளக்கிக்கூறுவது இக்கட்டுரையின் பிரதான நோக்கத்துக்கு பொருந்தாது).

தொகுதி அடிப்படையிலான தேர்தல் முறையும் கூட  உறுதியற்ற அரசாங்கங்களையும் மகத்தான பெரும்பான்மைப் பலம் கொண்ட அரசாங்கங்களையும் கொண்டுவந்தது.1960 களின் ஆரம்பத்தில் நிருவாகத்தை முறையாக நடத்துவதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால் ஐ.தே.க.அரசாங்கம் ஒனறு வீழ்ச்சி கண்டது.அதேவேளை அந்த தேர்தல் முறையின் கீழ் 1970 ஆம் ஆண்டு சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணியும் 1977 ஆம் ஆண்டு ஐ.தே.க.வும் பிரமாண்டமான பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சிக்கு வந்தன.

அதனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல்முறை ஒழிக்கப்பட்டால் உறுதியான அரசாங்கங்கள் பதவிக்கு வரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அணமைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தர்களில் நடைமுறைபபடுத்தப்பட்ட கலப்பு தேரதல் முறையும் கூட எதிர்பார்க்கப்பட்ட பயன்களைத் தரவில்லை.அந்த தேர்தல் முறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லாத தொங்கு சபைகளாகவே இருக்கின்றன.அதற்கு காரணம் தேரதலில் வெற்றியடைந்த தரப்பை விடவும் கூடுதல் ஆசனங்களை தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் பெற்றிருக்கிறார்கள்.தவிரவும், உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கும் அதிகமானதாக அதிகரித்தது ஒரு சாபக்கேடாகப்போய்விட்டது. இந்த உறுப்பினர்கள் வரிசெலுத்துவோருக்கு ஒரு மேரலதிக சுமையாக இருக்கிறார்கள் என்பதே உண்மை.

அரசாங்கங்கள் கட்சித்தாவல்களை பெரும்பாலும் இரு காரணங்களுக்காகத் தூண்டுகின்றன. பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு தேவையான 113 ஆசனங்களைப் பெறத்தவறும் அரசாங்கங்கள் பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு அந்த ஆசன எண்ணிக்கையை அடைவதற்காக மற்றக் கட்சிகளில் இருந்து உறுப்பினர்களை இழுக்கும் வேலைகளில் இறங்குகின்றன. சில அரசாங்கங்கள் பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை ஆசனங்களைக்கொண்டிருந்தாலும் கூட பெரும்பான்மையை அதிகரிப்பதற்காக கட்சித்தாவல்களைத் தூண்டுகின்றன.உதாரணமாக 2010 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் 144 ஆசனங்களைக்கொண்டிருந்த  ராஜபக்ச அரசாங்கம் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கும் கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும் வசதியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெறுவதற்காக ஐ.தே.க. உறுப்பினர்களைக் கட்சித்தாவலுக்குத் தூண்டியது.

கட்சித்தாவல்களினால்  அரசாங்கங்களைப் பலப்படுத்தவும்  அதேவேளை பலவீனப்படுததவும்  முடியும்.2001 ஆம் ஆண்டில் சுதந்திர கட்சியில் இருந்து பல உறுப்பினர்கள் ஐ.தே.க.வுக்கு மாறியதால் குமாரதுங்க அரசாங்கம் வீழ்ச்சி கண்டது.ஜனாதிபதி மகிந்த யாஜபக்சவின் முதலாவது பதவிக்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கட்சித்தாவல்கள் மூலமாகவே ஸ்திரத்தன்மையைப் பெற்றது.ஐ.தே.க.வில் இருந்து பல உறுப்பினர்கள் அந்த அரசாங்கத்துடன் சேர்ந்திருக்காவிட்டால் 2008 வரவு - செலவுத்திட்டத்தை ராஜபக்சவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றமுடியாமல் போயிருக்கும்.அரசாங்கத்தை வீழ்த்தும் நோக்கத்தில் ஐ.தே.க.வும் ஜே.வி.பி.யும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்துவாக்களித்தன. கட்சித்தாவலினால் பாதிக்கப்பட்டிருந்த ஐ.தே.க.வினால் 113 வாக்குகளைத் திரட்டமுடியாமல் போய்விட்டது.போர் நடவடிக்கைகளைச் சீர்குலைக்கும் நோக்குடனேயே தமிழ் தேசிய கூட்டமைப்பை இணைத்துக்கொண்டு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீழ்த்தும் பிரயத்தனத்தில் ஈடுபட்டதாக ராஜபக்ச தரப்பு அந்த நேரத்தில் குற்றஞ்சாட்டியது எனாபது குறிப்பிடத்தக்கது.

கட்சித்தாவல் பிரச்சினை இலங்கையில் உண்மையில் கட்டுமீறிப்போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும். இந்தப் பிரச்சினைக்கு தேசிய முக்கியத்துவ முன்னுரிமை கொடுத்து தீர்வுகாணவேண்டுமென்று பரவலாக சிவில் சமூகத்தினால் வலியுறுத்தப்படுகிறது.இது விடயத்தில் மக்கள் மத்தியில் கிளம்பியிருக்கின்ற வேதனையைப் புரிந்துகொள்ளககூடியதாக இருக்கிறது.தங்களை  மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்பவர்கள் விபச்சாரிகள் போன்று நடந்துகொள்வது ஜனநாயக அரசியலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தேர்தல் மூலமாக மக்களினால் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படுகின்ற செயன்முறையின் அடிப்படைக் கோட்பாட்டையே கட்சித்தாவல்கள் கேலிக்குள்ளாக்குகின்றன.

ஒரு மாதத்துக்கும் சற்று கூடுதலான காலத்துக்கு முன்னர் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஆரவாரத்துடன் சேர்ந்து உறுப்புரிமையைப் பெற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்சவும் அவருடன் இணைந்த 45 க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களும் அண்மைய அரசியல் நெருக்கடியின் முடிவுக்குப்பிறகு தோன்றியிருக்கும் புதிய சூழ்நிலைகளில் பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறுவதற்காக தாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை விட்டு எங்கும் போகவில்லை என்று கூறுவதைக்காணக்கூடியதாக இருக்கிறது.உண்மையில் இவர்கள் இலங்கை மக்களின் விவேகத்தையே நிந்தனை செய்கிறார்கள்.

       ( வீரகேசரி இணையத்தள உள்நாட்டு அரசியல் ஆய்வுக்களம் )

 

http://www.virakesari.lk/article/46819

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.