Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் மழைவெள்ளத்தில் சிக்கிய 5 விவசாயிகள் இராணுவத்தினரால் பத்திரமாக மீட்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த கடும் மழையையடுத்து வெள்ளத்தில் சிக்கிய 5 விவசாயிகளை இராணுவத்தின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

farmes.jpg

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்குட்டபட்ட நித்தகை குளத்தின் கீழ் நெற்செய்கையினை மேற்கொண்ட விவசாயிகள் ஐந்துபேர் கடந்த 21.12.18 அன்று வயல் காவலுக்கு சென்றுள்ளார்கள்.

இதன்போது 21 ஆம் திகதி இரவு 22 ஆம் திகதி அதிகாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக அவர்கள் ஐவரும் நித்தகை குளவயல்பகுதியில்  இருந்து வெளியேறி ஆண்டான்குளத்து ஜயனார் கோவில் பகுதிவரை வந்துள்ளனர்.

அதன் பின்னர் அவர்கள் குமுழமுனை நோக்கி வரமுடியாத நிலையில்  காட்டாற்று மழைநீர் வயல் நிலங்களை ஊடறுத்து பெருக்கெடுத்து பாய்ந்துள்ளது.

Andan_kulam__26_.jpg

இந்நிலையில் 22.12.18 அன்று மாலை 5.00 மணியளவில்  முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அவர்களின் நிலமைகள் குறித்து தெரியப்படுத்தப்பட்டது.

இதற்கமைய முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதியுடன்  குறித்த ஐந்து விவசாயிகளையும் மீட்பதற்காக படையினரின் உதவியினை எழுத்துமூலம் கோரியுள்ள நிலையில் குறித்த இடத்திற்கு சென்ற படையினர் ஐவரையும் படகுமூலம் மீட்டு கடல்வளியாக நாயாற்று பகுதி வீதிக்கு கொண்டுவந்துள்ளனர்.

நாயாற்றுப்பகுதியில் வைத்து விவசாயிகள் ஐவரையும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் இ.பிரதாபனிடம் படையினர் கையளித்துள்ளார்கள். பிரதேச செயலாளர் முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம் குறித்த ஐந்து விவசாயிகளையும் மாவட்ட செயலகத்தில் வைத்து ஒப்படைத்துள்ளார்.

இதன்போது மாவட்ட செயலகத்தில் வைத்து விவசாயிகளுக்கு அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளரினால் அனர்த்தம் தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் முன்னாயத்த செயற்பாடுகள் தொடர்பிலும் எடுத்துரைக்கப்பட்டு அவர்களை அவர்கள் இடங்களுக்கு கொண்டு சென்று விட்டுள்ளார்கள்.

இந்த சம்பத்தில் ஐந்து விவசாயிகளில் மூவர் கடந்த 08.11.18 அன்று நித்தகை குளம் உடைப்பெடுத்த போது வெள்ளத்தில் அகப்பட்டு பின்னர் அனர்த்த முகாமைத்துவத்தின் உதவியுடன் விமானப்படையிரின் உலங்குவானூர்தி கொண்டு மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/46836

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.