Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டத்தை விட்டு திடீரென வெளியேறிய மைத்திரி

 

maithripala-sirisena-300x200.jpgசிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென வெளியே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிலங்கா அதிபரின் இல்லத்தில் நேற்று நடந்த கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில், தேர்தல் கூட்டு தொடர்பாக கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்வைத்த திட்டத்துக்கு தொகுதி அமைப்பாளர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென எழுந்து வெளியே போனார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அத்துடன் கூட்டமும், முன்கூட்டியே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது.

சிறிலங்கா அதிபர் அவசரமாக கூட்டத்தில் இருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப் பதிலளித்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் றோகண லக்ஸ்மன் பியதாச,

“ அதிபர் முன்கூட்டியே வெளியேறினார். தனிப்பட்ட பயணமாக வெளிநாடு செல்வதற்காக, விமான நிலையத்துக்குப் புறப்படவே அவர் அங்கிருந்து சென்றார்” எனத் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/12/25/news/35616

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வெளிநாடு சென்றார் மைத்திரி இலங்கையில் நடக்கபோகும் அரசியல் பரமபதம்

 

maithripala-sirisena-300x178.jpg

பிரதான செய்திகள்:தனிப்பட்ட பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருட இறுதி விடுமுறையை கழிப்பதற்காக தனது குடும்பத்தாருடன் தாய்லாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் அங்கு ஒருவார காலத்திற்கு தங்கியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் முழுமையான அமைச்சரவை ஒன்று உருவாக்கப்படாத நிலையில் ஜனாதிபதி அவர்கள் வெளிநாடு சென்றிருப்பது அமைச்சரவை நியமனங்களில் மேலும் இழுபறிநிலையை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

நாட்டில் அமைச்சரவை தொடர்பான சிக்கல் நீடித்துக் கொண்டிருப்பதுடன், இதுவரை அமைச்சர்களுக்கான கூட்டமும் இன்னமும் நடைபெறவில்லை.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டுக்கான பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் தனப்பட்ட பயணம் இது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களில் அடங்கும் பொறுப்புக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று (24) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அதனை வெளியிடாது ஜனாதிபதி வெளிநாடு சென்றுள்ளமையானது மேலும் தாமதங்களை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 2ம் திகதியளவிலேயே தனது பயணத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடுதிரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

https://www.todayjaffna.com/134708

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.