Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணிகளை விடுவிக்காவிடில்- நாங்களாகக் குடியமர்வோம் கேப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்டகாலமாக தங்கள் நிலங்களை விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி வரும்,கேப்பாப்பிலவ மக்கள் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் உள்ளதாவது,

கேப்பாபுலவு பூர்வீக மக்களாகிய நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த, அசாதாரண சூழ் நிலை காரணமாக விட்டுச் சென்ற பூர்வீக வாழ் நிலங்களை இராணுவத்தினர் அபகரித்துள்ளனர்.

அவற்றை விடுவிக்கக் கோரி, 670 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நாம்
இன்று நேற்றல்ல 2009 ஆண்டு நடைபெற்ற இறுதிப் போரின் போது நாங்கள் எமது சொத்துக்களை இழந்து நிர்கதியான நிலையில் எமது சொந்த ஊரைவிட்டு இடம்பெயார்ந்தோம்.

பின்னர் கேப்பாபுலவு மாதிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டோம். அரசினால் ஜனநாயக வழியில் மீள் குடியமர்த்தப்படுவோம் என எமது கிராம சேவையாளர் பிரிவுக்குள்ளேயே 10 வருடங்களுக்கு மேல் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருந்தோம்.

எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும் என பல வடிவங்களில் உரிமைக் குரல் கொடுத்தோம். அரசு பாரா முகமாக இருக்க எமது வாழ்விடத்தை நாமே பெற்றெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

2017 .03 .01 அன்று “எமது பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும்’’ என அகிம்சை வழிப்போராட்டத்தைத் தொடர்ந்துள்ளோம்.

ஆனால் நல்லாட்சி அரசு எமது போராட்த்திற்கான முழுமையான நிரந்தரமான தீர்க்கமான தீர்வை இதுவரை பெற்றுத்தரவில்லை என்பது எமக்கு மிகவும் வேதனை தருகிறது.

நாம் அரசிற்கோ , இராணுவத்தினருக்கோ, தேசிய நல்லிணக்க சமாதானதிற்கோ எதிரானவர்களல்ல .

எமது வாழ்விடத்தில் மீள்குடியேறி; நிம்மதியாக சுதந்திரமாக எங்களால் வாழ முடியவில்லை என்பதால் இந்த போராட்ட நிலைக்கு தள்ளப்பட்டோம் என்பது தாங்களும் சர்வதேசமும் அறிந்தத உண்மையே.

போர்க்காலத்தில் இடம் பெயர்ந்த 138 குடும்பங்களின் 282 ஏக்கர் வாழ்விடக் காணிகளுடன் , 08 நபர்களின் 25 ஏக்கர் திட்ட மத்திய வகுப்பு காணிகள் 200 ஏக்கர் உள்ளடக்கலாக மொத்தம் 482 ஏக்கர் காணி விடுபடும் வரை எமது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிடமாட்டோம் என்ற மனவுறுதியுடனும் காணி அத்தாட்சி பத்திர உறுதியுடனும் போராட்டத்தைத் தொடர்ந்தோம் என்பது உலகரிந்த உண்மையாகும்.

இவ்வாறு எமது போராட்டத்தின் கோரிக்கைகளை ஜனதிபதிக்கு நீங்கள் எடுத்துரைத்து கூறியதற்கு அமைய 303 நாளடகளுக்குப் பின்னர், 104 குடும்பங்களின் 171 ஏக்கர் காணியும் மக்களின் பொது அமைவிடங்களான பாடசாலை, பொ.நோ.மண்டபம், சனசமுகநிலையம், முன்பள்ளி ,பொதுக்கிணறு, ப.நோ.சங்கம், பொது விளையாட்டு மைதானம் ,இந்து கிறிஸ்தவ மயானங்கள், கிறிஸ்தவ ஆலயம் போன்ற இராணுவ ஆக்கிரமிப்பிலிருக்க 65 நபர்களுக்கு சொந்தமான 111 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டு 38 குடும்பங்கள் மீள் குடிமயர்த்தப்பட்டமைக்கு நன்றிகள்.

எனினும் 71 ஏக்கர் மக்கள் வாழ்விடக் காணிகள், 25 ஏக்கர் திட்ட பெருந்தோட்டக் காணி 100 ஏக்கர் காணிகள் உள்ளடங்களாக (காணி அத்தாட்சிப் பத்திரமுடைய) 104 குடும்பங்களின் 171 காணிகள் விடுவிக்கப்படவில்லை.

670 நாள்களாக கொட்டும் மழை ,பனியிலும் நுளம்புத் தொல்லையுடன் குழந்தைகளுடன், நாற் சந்தி தெருவோரத்தில் நாயாகக் கிடக்கும் எமது வாழ்விடத்துக்கு ஒரு தீர்வு இல்லை.

இந்த நிலையில் ஜனாதிபதி டிசெம்பர் 31 ஆம் திகதிக்கிடையில் சகல மக்களின் காணிகளும் கையளிப்பேன் என வாக்குறுதியளித்த போதும், கேப்பாபுலவு மக்களின் காணிகள் தொடர்பில் ஆராயப்படும் என்று தெரிவித்ததாக நாங்கள் ஊடகங்ஙள் வாயிலாக அறிந்துள்ளோம்.

நாமும் எமது வாழ்விடத்தில் மீள் குடியமர்த்தப்படுவோம் என்ற ஆதங்கத்துடன் எதிர் பார்த்திருந்தோம். ஆனால் காணிகள் விடுவிப்புப் பட்டியலிஎமது வாழ்விடம் அமையவில்லை என்பதை மாவட்டச் செயலர் மூலம் அறிந்து கவலையில் மூழ்கியுள்ளோம்.

எனவே இனியும் காலம் தாழ்த்தவோ பொறுத்து போராடக்கூடிய நிலையிலோ நாம் இல்லை . என்பதை மனவருத்தத்துடன் அறியத் தருவதுடன், டிசம்பர் 31 ஆம் திகதிக்கிடையில் முழுமையாக காணிகளைப் கையளிக்கா விட்டால்
அடுத்துவரும் நாள்களில் எமது பூர்வீக நிலங்களில் எமது சொந்த விருப்பத்துடன் மீள்குடியேரவுள்ளோம்.

எமது பூர்வீக நிலங்களில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்.
இதனால் மக்களாகி எமக்கும் இராணுவத்தினரால் இடையூறு முரண்பாடுகள் ஏற்பட்டால் நாட்டின் தலைவரும் முப்படைகளின் தலைவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்புக்குரியவரார். என்றுள்ளது.

https://newuthayan.com/story/12/காணிகளை-விடுவிக்காவிடில்-நாங்களாகக்-குடிமருவோம்-கேப்பாப்பிலவு-மக்கள்-எச்சரிக்கை.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.