Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையானின் (என்.சந்திரகாந்தன்) 'வேட்கை' 

1.jpg

-எல்லோருக்கும் சொல்வதற்கு கதைகள் இருக்கின்றது. எனவேபிள்ளையானாகிய சந்திரகாந்தனுக்கும் தனது கதையைச் சொல்வதற்கும்எம் எல்லோரையும் போல ஒரு வெளி இருக்கின்றது. எமக்கும்எவ்வகையான அரசியல் தெரிவுகள் இருப்பினும், அதை நிதானமாகக்காழ்ப்பின்றி கேட்பதற்கும் நிதானம் வேண்டும்.

-சந்திரகாந்தன், குழந்தைப் போராளியாக தனது பதினாறாவது வயதில்புலிகள் இயக்கத்தில் 90களில் சேர்ந்தவர். கருணாவின் பிளவு உருவாகிய2004 வரை, 14 வருடங்கள் புலிகள் அமைப்பில் இருந்திருக்கின்றார். 2008-2012 காலப்பகுதியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின்முதலமைச்சரும் ஆகியிருக்கின்றார்.

-சிறையில் தற்போது இருக்கும் சந்திரகாந்தன் மட்டக்களப்பிலிருந்துகைவிலங்கிடப்பட்டு திருகோணமலையிலிருக்கும் மாகாணசபைஅமர்வுகளில் பங்குபெறுவதற்காய்ப் போகும்போது அவர் கடந்து சென்றஇடங்களைப் பற்றிய நினைவுகுறிப்புகள் மட்டுமே இதில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. 'சிறைப் பயணக் குறிப்புகள்' என்றாலும் அதில்சிறை பற்றிய விபரங்கள் அரிது. ஒருவகையில் இல்லையென்றேசொல்லிவிடலாம்.

-இந்த நூலில், ஏன் தான் சிறைக்குள் வைக்கப்பட்டிருக்கின்றார் என்றகுறிப்பு எதுவுமே இல்லை என்பது முக்கிய பலவீனம். ஒருவர்சிறையிலிருந்தால் அவர் எதன் பொருட்டு சிறைக்குள்வைக்கப்பட்டிருக்கின்றார் என்று தெரிவித்திருக்கவேண்டும். ஒரிடத்தில்மட்டும், தாங்கள் ஆயுதங்களை இலங்கை அரசிடம் கையளித்தபோதுதமக்கு பொதுமன்னிப்புத் தரப்பட்டதாய் சொன்னார்கள், அதை அவர்கள்பின்பற்றவில்லை என மட்டும் குறிப்பிடுகின்றார். 

-இன்னொரு பலவீனம், அவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சசராகஇருந்தவர். கிழக்கு மாகாணம் என்பது மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை என்கின்ற மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கியது. அவரதுபணிகளும், குறிப்புகளும் மட்டக்களப்போடு மட்டும் அடங்கிவிடுகின்றது. யாழ்ப்பாணியத்திற்கு எதிராக போராடுவதாய் அலுப்புத்தருமளவிற்குசொல்கின்றவர் அவர்.  சிலவேளை இதைவாசித்துவிட்டுதிருகோணமலைக்காரரோ  அல்லது அம்பாறைக்காரரோ கிழக்குமாகாணத்தில் நாங்கள் வரமாட்டோமா என்று கேட்டால் சந்திரகாந்தன்என்ன விடை வைத்திருக்கின்றாரோ தெரியாது.

-முஸ்லிம் மக்கள் மீது தான் பரிவுள்ளவர் என்றாலும் அதை மீறி கிழக்குமாகாணத்து தமிழ்மக்கள் மீது அக்கறை என்று சொல்லிக்கொண்டுமுஸ்லிம்கள் மீது ஒருவகையான வெறுப்பு உமிழப்படுகின்றது. முக்கியமாய்இறால் பண்ணைகளை யாழ்ப்பாணக்காரனும், ஓட்டமாவடிக்காரனும்மட்டக்களப்பில் எடுத்துவிட்டான் என்று சொல்வதிலிருந்து, இன்றையமுஸ்லிம் முதலமைச்சர் பற்றிக் கூறும் இடத்திலெல்லாம் அந்தக் காழ்ப்புகண்கூடு. இறுதி அத்தியாயத்தில் தன்னை முஸ்லிம் வெறுப்பாளன் என்றுஎவரும் சொல்லிவிடக்கூடும் எனத் தற்பாதுகாப்பு எடுத்துக்கொண்டவுடன்முன்னர் சொல்லதெல்லாம் இல்லையென்றாகிவிடாது. ஒருமுதலமைச்சராக இருந்தவர்,  இப்படி இரு இனங்களுக்கிடையில் எரியும்பிரச்சினைகளையெல்லாம் எழுந்தமானமாய்க் கையாள்வது அவ்வளவுஅழகுமல்ல.

-தான் 2004ல் முதலமைச்சராக இருந்தபோது தமிழர்கள்பெரும்பான்மையாக மாகாணசபையில் இல்லையென்று சொல்லி தன் மீதுமுஸ்லிம்கள் எதிர்ப்பைக்காட்டினர் என்று சொல்லும் அதேசந்திரகாந்தன், இன்றைய மாகாணசபையில் தமிழர்கள்பெரும்பான்மையாக இருந்தும், முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர்கொடுத்தற்காய் தமிழ்த்தேசிய கூட்டமைப்பைத் திட்டித்தீர்க்கின்றார். இது எவ்வளவு பெரும் முரண் என்பது சந்திரகாந்தனுக்கோ அல்லதுஅவரைச் சுற்றியிருப்பவர்க்கோ தெரியவில்லையா?

-முதலமைச்சராக இருந்த சந்திரகாந்தன்செய்கின்ற அபிவிருத்தி எல்லாம் மக்கள்தேர்ந்தெடுக்கின்ற ஒரு அரசியல்வாதிசெய்வதில்லையா? இதில் அவர் சொந்தம்கொண்டாட  என்ன இருக்கின்றது என்பதும்எனக்கு விளங்கவில்லை. ஏன் மகிந்தகாலத்தில் செய்யப்பட்ட நெடுஞ்சாலைஉள்ளிட்ட அபிவிருத்திகள் எல்லாம், போர்க்காலத்தில் ஏனையநாடுகளால்கொடுக்கப்பட்டு நிதியிலிருந்தே மகிந்தாஎடுத்துச் செய்திருந்தார். போர்முடிந்துவிட்டது, பணம் இருந்தது. கொஞ்சத்தை அபிவிருத்தியிற்கு புல்லுக்குத்தேவையானதை எடுத்து நெல்லுக்குஇறைத்தமாதிரியானது. இதை இந்த அபிவிருத்திக்குப் பொறுப்பானஉயர்பதவியில் இருந்த ஒருவரே நேரடியா எனக்குச் சொல்லியிருந்தார். ஒரு அரசியல்வாதி இன்று மக்கள் வரிப்பணத்தில்/பிறநாடுகளின்நிதியுதவியில் செய்யவேண்டியதைச் செய்துவிட்டாலே ஆஹா அற்புதம்என்று பாராட்டவேண்டும் என்று மனோநிலையை யார் உருவாக்கியது?

-இந்த 'வேட்கை' முழுதும் தமிழ்க் கூட்டமைப்பு (எனக்கும் அவர்களைப்பிடிக்காது என்பது வேறுவிடயம்)மீதும், 'வன்னிப்புலிகள்' மீதும்குற்றச்சாட்டு வாசிக்கப்படுகின்றது. இலங்கை அரசு மீது ஒருதுளிவிமர்சனமும் இல்லை. என்ன பெளத்த பேரினவாத அரசு எமக்கு எல்லாஉரிமைகளையும் தந்துவிட்டதா? இல்லை, எமக்கு எல்லாம்கிடைத்தபோது நான் தான் இதையெல்லாம் அறியாது தூங்கிவிட்டேனா?

-16 வயதில் சந்திரகாந்தன், பிள்ளையான் ஆகப் போய் தன் 14 அருமையான வருடங்களை எதற்காக இழந்தாரோ அதன் சிறுதுளிகூடஇன்னமும் நமக்கு எட்டவில்லை என்பதை சந்திரகாந்தன் வெளியில்சொல்ல மறுத்தாலும் அவரது மனச்சாட்சி அதையறியும். அதைப்பேசும்போதுதான் ஒரு நேர்மையான சந்திரகாந்தனை நாமறியமுடியும். இனிவரும் காலத்தில் அவர்க்குக் கிடைத்த புதிய அனுபவங்களையும்வைத்து, இவற்றைப் பேசுவார் என்று நம்புவோமாக.

-கிழக்கு மாகாணத்திற்கு யாழ்ப்பாணிகளாக நாம் செய்த/செய்யும்அட்டூழியங்களை  நாம் மறுக்கமுடியாது. நாம் எப்படி முஸ்லிம்களைவடமாகாணத்தில் இருந்து விரட்டினோமோ, அப்படியே நாம்தான் கிழக்குமாகாணத்தவர்களை எங்களிடமிருந்தும் விலக்கிவைத்தோம் என்பதும்உண்மை. தமிழர்களாகிய நாம் எனக்குரிய உரிமைகளைப் பெறஆயுதமேந்திப் போராடியதற்கு சிங்களப் பேரினவாதமே காரணம் என்றுஎப்படிக் கூறுகின்றோமோ, அந்தளவிற்கு கிழக்கு மாகாண மக்கள்எங்களை விட்டு விலகிப் போவதற்கும் நாம்தான் காரணம் என்பதையும்ஒப்புக்கொண்டு, அவர்களது தனித்துவங்களோடு தனியேஇருக்கவேண்டும் என்று கேட்டால் அதை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும்.

-ஆனால் என்ன சிக்கலென்றால்,  சந்திரகாந்தன் வென்ற 2004-2008 தேர்தலில் தமிழ்க்கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதற்குப் பிறகுநடந்த எந்தத் தேர்தலிலும் கிழக்கின் தனித்துவத்தை வலியுறுத்தும்சந்திரகாந்தனால் முதலமைச்சராக ஆகவோ, அவர் சார்ந்தவர்களோகுறிப்பிட்ட ஆசனங்களை வெல்லவோ முடியவில்லை. தமிழ்க்கூட்டமைப்பு இன்றும் வடக்கு கிழக்கு இணைப்பைக் கைவிடாதஓர் அரசியல் அமைப்பென்றால் கிழக்குத் தமிழ் மக்கள், வடக்குமக்களோடு இணைந்து அரசியல் உரிமைகளைப் பெற விரும்புகின்றார்கள்என எடுத்துக்கொள்ளலாமா?

-சந்திரகாந்தன் தொடர்ந்து தமிழரசு கட்சியிலிருந்து, தமிழ்க்கூட்டமைப்பிலிருந்து இன்றைய தமிழ்ப்பேரவை வரை கிழக்குமாகாணத்தவர் எவரும் தலைமையேற்கவில்லை என்று கூறுகின்றார். அப்படியெனில் சம்பந்தர் எந்த இடத்தைச் சேர்ந்தவர்? இல்லை திருமலைகிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேறிவிட்டதா?

-16 வயதில் விடுதலைப் போருக்காய்ப் போன ஒருவர் 34 வயதில்,  மாகாணமுதலமைச்சராவாது வரவேற்கத்தக்கதே. ஆனால் விடுதலைப் புலிகள் மீதுஇவ்வளவு விமர்சனமும், அந்த 'வன்னிப்புலிகள்' சந்திரகாந்தனுக்கும்அவரது நண்பர்களுக்கும் நிறையச் செய்ததன்பிறகும்  'தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள்' என்ற பெயரைத் தன் கட்சியின்பெயரில்காவிக்கொண்டிருப்பது எதற்கு? அந்த அரசியலிலிருந்து விடுபட்டுதன்னை புத்துயிர்ப்பாக்க எது அவரைத் தடை செய்கிறது அல்லது பெயரில்விடுதலைப் புலிகள் என்று இருப்பது வாக்குகள் ஏதோ ஒருவகையில்கிடைக்கும் என்பதற்காகத்தான் என்றால் இது அரசியல் வியாபாரம்அல்லவா?

-இத்தனைக்கும் அப்பால் சந்திரகாந்தன் தன்னுடைய அனுபவத்தில்இருந்து இதை எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது.  இதன் மூலம்எப்படியெனினும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வேன் என்று ஒருவர்முன்வருவது பாராட்டத்தக்கது. ஏனெனில் எமது சூழலில்ஆயுதப்போராட்டம் முடிந்தபின் அரசியல் செய்கின்ற எல்லோரும் தம்மைப்புனிதர்களாக உருவகித்துக்கொண்டு அரசியல்/செயற்பாட்டுக்களத்தில்இறங்குகின்றார்கள். அவ்வாறு இறங்கும் அனைவரும் செய்யவேண்டியதுமுதலில் சுயவிமர்சனமே. சந்திரகாந்தன் இதை எழுதினாலும் இதில் எந்தசுயவிமர்சனமும் இல்லை என்பதும் ஒரு குறைப்பாடு.

-கருணாவின் பிளவோடு 'வன்னிப்புலிகள்' செய்த படுகொலைகள்பதியப்பட்டிருப்பது முக்கியமானது. இன்னமும் வெருகலில் படுகொலைகள்நடைபெறவில்லை என்பதைச்  சொல்லிக்கொண்டுதான் நம்மில்பெரும்பான்மையோர் இருக்கின்றோம். ஒரு கொலையா இருந்தாலென்ன, பத்து, நூறு கொலைகளாய் இருந்தாலென்ன? அவை கொலைகள்தான். வெளிப்படையாகவும் உரத்தும் பேசுவதே அவ்வாறு பலியானவர்கட்கு நாம்கொடுக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும்.

-அதேகாலத்தில் கருணாவும், சந்திரகாந்தனும் நிகழ்த்தியவேட்டைகளையும் வரலாற்று பார்த்துக்கொண்டல்லவா இருந்தது. சந்திரகாந்தன் அவற்றை எழுதாது தவிர்த்துவிடுவது அதுவும்'எல்லோருக்குமான' முதலமைச்சராக இருந்த ஒருவர்க்கான அறமாகாது.  வன்னிப்புலிகளுக்கு ஆதரவான ஆயுதம் ஏந்தியவர்களை மட்டுமின்றி,  பாராளுமன்ற உறுப்பினராக இருந்தஜோசப் பரராஜசிங்கம் முதல் ரி.ஆர்.ஓமனிதாபிமானப் பணியாளர் உள்ளிட்ட ஆயுதம் ஏந்தாதவர்களையும்கொன்றது யாரென்பதையும் சந்திரகாந்தனினதும், கருணாவினதும்மனச்சாட்சிகள் அறியுமல்லவா?

-புலிகள் விலகிப்போகும் தம் உறுப்பினர்க்கே என்ன தண்டனைகொடுப்பார்கள் என்பதைச் சாதாரண மக்களே அறிவார்கள். மாத்தையாபோன்றோருக்கு என்ன செய்தார்கள் என்பதையும் நாடே அறியும்.மேலும்தமக்குப் போட்டியென நினைத்த சகோதர இயக்கங்களையும் எவ்வாறுஇல்லாமல் ஆக்கினார்கள் என்பதையும் வரலாறு நினைவில்வைத்திருக்கின்றது. இவ்வளவையும் ஒரளவு அறிந்திருக்கக்கூடிய 14 வருடங்கள் அதே அமைப்பில் இருந்த சந்திரகாந்தன், தங்களின்பிளவோடு நடந்த சகோதரப்படுகொலையைப் பேசும்போது, இந்தநீண்டவரலாற்றை மறந்துவிட்டுப் பேசுவது நியாயமில்லையல்லவா? அந்த14 வருடகால இயக்க வாழ்வில் அவர் சார்ந்திருந்த இயக்கத்தோடுகூட்டுப்பொறுப்பையும், அதில் தனிப்பட்ட ஒருவராக தனிப்பட்டபொறுப்பையும் கட்டாயம் எடுத்திருக்கவேண்டும். அதையெல்லாம்செய்யாமல் கருணாவின் பிளவோடு நடந்ததை மட்டும் எழுதுவது இந்தநூலின் அடிப்படை விடயத்தையே கேள்விக்கு உட்படுத்துவதாகஇருக்கின்றது.

-எந்த இயக்கமாயிருந்தால் என்ன அல்லது ஆயுதம் ஏந்தாமல் இருந்தஎங்களைப் போன்றவர்களாய் இருந்தாலென்ன, எங்கள் எல்லோர்க்கும்கூட்டுப்பொறுப்புணர்வு இருக்கின்றது. மக்களாக இருந்துகொண்டுஎவரையும் கொலைசெய்யாதுவிட்டதால் நாமொன்றும் உயர்வானவர்களும்அல்ல. மற்றவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி கேள்வி கேட்கும்அதிகாரமும் அதனால் எங்களுக்கு வந்துவிடவும் முடியாது. ஆனால் ஒருவர்அரசியல்தளத்தில் இயங்கப்போகின்றார் என்றால் இந்தக்கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டியது அவசியம்.  முக்கியமாய் தன்னைசுயவிமர்சனம் செய்யாதவிடத்து அவரின் அரசியல் பயணம் அவ்வளவுசிறப்பாகப் போவதில்லை என்பதை சந்திரகாந்தனைப் போன்றவர்கள்அறியவேண்டும். 

-இறுதியாக இன்று சட்டத்தரணிகளாய் சொகுசாக வாழ்ந்துவிட்டுஅரசியல்வாதிகளாகவும், பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டுசெயற்பாட்டாளர்களாவும்/ஆய்வாளர்களாகவும் இருப்பவர்களையும் விட, சந்திரகாந்தன் போன்று தமது இளமையை, தாம் நம்பியகொள்கையிற்காய் இழந்தவர்களுக்கு அரசியல் செய்வதற்கு பலமடங்குநியாயங்கள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும். 

-அதேவேளை ஒருவர், தான் கடந்தகாலத்தில் செய்த தவறுகளைவெளிப்படையாக ஒப்புக்கொண்டு பொதுவெளியிற்கு வரும்போதே,நிச்சயம் ஒரு பெரும் மக்கள்திரள் அவர்கள் பின் வரும். அதைசந்திரகாந்தன் மட்டுமில்லாது, இறுதி யுத்தத்தில் பல துன்பங்களைஅனுபவித்த பிற முன்னாள் போராளிகளும் உணரவேண்டும். ஒருவகையில்பார்த்தால், தமது உயிரைக்கூட இழக்கத் தயங்காது, ஒருபோராட்டதிற்காய்ச் சென்ற அவர்களைத்தான் நாம் உயரிய இடத்தில்வைத்துப் பார்க்கவேண்டும். அதுவே ஒரு பொறுப்பான சமூகத்தின் முக்கியகடமையாகவும் இருக்கும்.

------------------------------------------------------------------

(நன்றி: 'அம்ருதா' - ஆனி, 2018)

http://djthamilan.blogspot.com/2018/12/blog-post_31.html?m=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.