Jump to content

பாலியல் உறவு : நீங்கள் கன்னித்தன்மையை இழக்க சரியான வயது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
 
படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை Getty Images

சீக்கிரமாகவே கன்னித்தன்மையை இழந்துவிடுவது பிரிட்டிஷின் இளம் வயதினரின் மத்தியில் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டிஷ் மக்களின் பாலியல் நடத்தை குறித்த ஒரு ஆய்வு கூறியுள்ளது.

பதின் பருவ வயதில் உள்ள பெண்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கும் அதிகமானோரும், ஆண்களில் நான்கில் ஒரு பங்கினரும், 20 வயதுகளில் துவக்கத்தில் இருப்பவர்களும் தாங்கள் பாலியல் உறவில் ஈடுபட்ட காலகட்டம் 'சரியான காலமல்ல' என ஒப்புக்கொண்டுள்ளனர்.

பிரிட்டனில் பாலியல் உறவில் ஈடுபட ஒருவர் பதினாறு வயதை தாண்டியிருக்க வேண்டும்.

ஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பலர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் எனத் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் ஒவ்வொரு தசாப்த காலகட்டத்திலும் பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து விளக்கமாக சொல்வது இந்த அறிக்கைதான்.

பி எம் ஜே பாலியல் மற்றும் இனப்பெருக்க நல இதழில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஒரு ஆய்வு நடத்தியுள்ளது.

ஆய்வு முடிவு என்ன சொல்கிறது?

இளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என நினைக்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு.

சற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் தெரியவந்ததாக ஆய்வு கூறுகிறது.

பெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் முன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை UniversalImagesGroup

''இருவருக்கும் சம்மதமா?''

பாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது. அதாவது முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.

பெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.

ஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்கின்றனர், சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் எனச் சொல்ல முடியாது என்கிறார்.

''ஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம்'' என்கிறார்.

சக ஆராய்ச்சியாளரான மருத்துவர் மெல்லிசா பால்மர் கூறுகையில், ''இளைஞர்களை விட இளம் பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுமாறு தங்களது இணையிடம் இருந்து அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர் என்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது'' என்றார்.

''ஆராய்ச்சி முடிவுகளில் சில சாதகமான முடிவுகளும் கிடைத்துள்ளன. இளம் வயதினரில் பத்தில் ஒருவர் முதல் பாலியல் உறவில் கருத்தடை செய்வதற்கான நம்பகமான வழிகளை கையாள்வதாக தெரிவித்துள்ளனர். பாதுகாப்பாகவும், இணையின் சம்மதம் பெற்று எப்படி முதல் பாலியல் உறவில் நல்லபடியாக ஈடுபடுவது என்பதை இளம் வயதினர் அறிய பள்ளிகளில் பாலியல் கல்வி குறித்து முறையாக கற்றுக்கொடுக்க வேண்டும்'' என்கிறார் மெல்லிசா.

படத்தில் உள்ளவர்கள் மாடல்களேபடத்தின் காப்புரிமை ullstein bild

சரி பாலியல் உறவில் ஈடுபட சரியான கால கட்டம் எது?

உங்களுக்கு பாலியல் உறவில் ஈடுபட வேண்டுமென தோன்றினால் முதல் உங்களிடம் சில கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்.

  • இது சரியான சமயம் என உணர்கிறீர்களா?
  • உண்மையில் நான் எனது இணையை நேசிக்கிறேனா?
  • இணையும் உங்களை அதே அளவுக்கு நேசிக்கிறாரா?
  • கரு உருவாகாமல் தடுப்பதற்காகவும், எச் ஐ வி போன்ற தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் ஆணுறை பயன்படுத்துவது குறித்து எனது இணையுடன் நான் பேசினேனா? அப்படி பேசிய நிகழ்வு சரியாக இருந்ததா?
  • கர்ப்பத்தை தடுக்க என்ன கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது என்பது குறித்து பேசினோமா? அதனை கைவசம் வைத்திருக்கிறோமா?
  • பாலியல் உறவில் ஈடுபட முதலில் ஒப்புக்கொண்டு பின்னர் ஒருவேளை ஏதோவொரு புள்ளியில் மனம் மாறினால், பாலியல் உறவுக்கு 'நோ'சொல்ல என்னால் முடியுமா? அப்படியொரு நிலையை இருவராலும் சகஜமாக எதிர்கொள்ள முடியுமா?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களால் 'ஆம்' என விடை கூட முடிந்தால். நீங்கள் பாலியல் உறவில் ஈடுபட சரியான சமயம் வந்திருக்கலாம். ஆனால் கீழ்கண்ட ஏதாவதொரு கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில் சரியான நேரமாக அது இல்லாமலிக்கலாம்.

  • நான் யாரிடமிருந்தாவது பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்திக்கிறேனா? குறிப்பாக எனது இணையிடம் இருந்து அல்லது நண்பர்களிடமிருந்து.
  • பாலியல் உறவில் ஈடுப்பட்ட பின்னர் நான் ஏதாவது வருத்தம் கொள்வேனா?
  • எனது நண்பர்களை ஈர்க்கவோ அல்லது அவர்களை தக்கவைக்க பாலியல் உறவில் ஈடுபடுவது குறித்து சிந்திக்கிறேனா?
  • எனது இணையை என்னுடன் தக்க வைக்கவே பாலியல் உறவு குறித்து யோசிக்கிறேனா?

ஆதாரம் - பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ்

https://www.bbc.com/tamil/science-46883227

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.