Jump to content

Recommended Posts

Posted
34 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லாத்தையும் வாசிக்கவும் களைக்குதே மல்லிகைவாசம்.

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

தேடலில் உண்மையான ஆர்வம் இருந்தால் வாசிப்பதில் களைப்பு இருக்காது, சுமே அக்கா!

நான் ஒன்றும் விரிவான கட்டுரை ஒன்றும் எழுதிவிடவில்லை. கள உறவுகளால் பல்வேறு விதமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன. அதற்கு விளக்கம் கொடுக்கப்போய் இந்தத் திரி நீண்டுவிட்டது! இது போன்ற விவாதங்களின் போது இது சகஜமாக நிகழ்வதுண்டு தான்.

 

Posted
45 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எல்லோருக்கும் அடையாளம் உண்டுதான் எனினும் எல்லோரும் ஆன்மீகத்தில் பற்றுக்கொண்டு தம் அடையாளங்களை அறிய முயன்றால் .., அது இயல்பு வாழ்வை ஏற்றுக்கொள்ளுமா????

எழுதப்பட்ட கருத்துக்களை முழுமையாகவும், கவனமாகவும் வாசித்துப் பாருங்கள் அக்கா. ஆன்மீகத்தில் பற்றுக் கொள்ளவேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. இன்னும் ஆன்மீகம் என்பதை துறவறத்தோடு நம்மில் பலர் குழப்பிக்கொள்கின்றனர். அது முற்றும் துறத்தலாக இருக்கவேண்டியதில்லை. தான் என்பது ஆத்மா என்று தெளிந்துகொண்டு உலக வாழ்வில் நல்வழியில் ஈடுபடுவதும் ஆன்மீகம் தான். இது மதம் சார்ந்ததாக இருக்க வேண்டியதில்லை.

அத்துடன் நமதும், பிறரதும் அடையாளத்தை அறிய ஆன்மீக விழிப்புணர்வும் ஒரு வழி என்றே என்று கூறி இருந்தேன். சிலர் தமது மதங்களைப் பின்பற்றியும், இன்னும் சிலர் தத்துவார்த்தமாகவும் அடையாளம் பற்றிய தெளிவைப் பெறுகிறார்கள். 

எனவே இங்கு இயல்பு வாழ்க்கை ஏற்றுக்கொள்ளுமா என்ற கவலை தேவையற்றதே!😊

Posted
59 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

சக மனிதரை மதிக்கத் தெரிந்தாலே போதுமே அதைவிட்டு சக மனிதரின் அடையாளத்தை அறிந்து அதன்பின் அவரை மதிப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாததே. 

சக மனிதரை நிஜமாகவே மதிப்பதற்கு தமதும், சக மனிதரதும் அடையாளத்தை அறிவது அவசியம். இந்தத் தெளிவு தான் நமதும், மற்றோரதும் சொல்லுக்கான, செயலுக்கான காரணங்களை புரிந்துகொண்டு ஓர் harmonyஆக வாழ (live in harmony) உதவும்.

இது நடைமுறைக்கு ஒவ்வாவிட்டால் ஓர் குழுவாக உண்மையாக யாரும் ஒன்றுபட முடியாது. உதாரணத்திற்கு, தனி மனிதனின் அடையாளங்களை, தனி மனித வித்தியாசங்ளை உணராத ஓர் இனம் உண்மையான சமாதானத்துடன் வாழவோ, ஓர் இனமாக முன்னேறவோ முடியாது. 😊

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.