Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனது நியூசிலாந்துப்பயணம்

Featured Replies

எப்படியாச்சும் வாற வருசம் நீயூசிலாந்து போக வேண்டும்... :o

  • Replies 253
  • Views 31.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துகள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் தூயா, லீ.

லீ நீங்கள் நியூசிலாந்துக்கு செல்லவேணுமென்றால் நியூசிலாந்தின் தெற்கு நிலப்பரப்புக்கு( South Island) செல்லுங்கள். மிகவும் அழகானது. இதுவரை நான் யாழில் பதிந்த இடங்கள் தெற்கு நிலப்பரப்பில் அமைந்தவை.

ஓம் அரவிந்தன்.. நன்றி..!

  • தொடங்கியவர்

தொடர்ந்து பயணிக்கும் போது

pa010204ld3.jpg

pa010206gt2.jpg

pa010207xe8.jpg

pa010208ng8.jpg

  • தொடங்கியவர்

pa010209rg5.jpg

pa010210pi0.jpg

  • தொடங்கியவர்

புகாகி ஏரியில் இருந்து கிறைஸ் சேர்ச் வரையிலான பகுதிகள் பச்சைப் பசேலேன அழகாக இருந்தாலும், இதுவரை நான் விபரித்த 7 நாள் பயணத்தின் இடங்களின் அழகினை விட அழகு குறைந்தது போல எனக்குத் தென்பட்டது.

தொடர்ந்து கிரைஸ் சேர்ச்சுக்கு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

pa010211ig0.jpg

pa010212jy3.jpg

pa010213zo6.jpg

pa010214lc2.jpg

pa010215vb3.jpg

pa010216qi0.jpg

அரவிந்தனின் "எனது நீயுசிலாந்து பயணம்"வாசித்தேன்.

படங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

நேரிலேயே நானும் பார்த்த இடங்கள் என்பதால்

மேலும் அழகாக தெரிகிறது.

"றோட்றுவா" என்ற இடம்

ஒவ்வொருவரும் பார்த்து பிரமிக்க வேண்டிய

சுற்றுலா பகுதி.

நியூசிலாந்தின் அமைதி ஒவ்வொரு

மனங்களையும் கவரும் என்பதை,

உங்கள் கட்டுரையும் நிருபித்து

இருக்கிறது. ^_^

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்துக்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் கனிச்டா. நீங்கள் குறிப்பிட்ட றோட்றுவாவுக்கு சென்றிருக்கிறேன். நியூசிலாந்தின் வட நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. வட நிலப்பரப்பில் உள்ள அழகான இடங்களில் ஒன்று . எனினும் வட நிலப்பரப்பை விட தென் நிலப்பரப்பு மிகவும் அழகானது. நான் விவரித்த தென் நிலப்பரப்பில் உள்ள வொக்ஸ் கிளெசியர், வனக்கா, குயின்ஸ்டவுன், மில்வோட் ஒலி ஆகிய இடங்கள் றோட்றுவாவை விட அழகானவை.

  • தொடங்கியவர்

காலையில் உணவினை உண்ணாததினால் பசித்தாலும் போகிற வழியில் நல்ல உணவகங்கள் தென்படவில்லை. Tekapo ஏரிப்பகுதியிலும் பார்ப்பதற்கு பெரிதாக இல்லை என்பதாலும் கிறைஸ் சேர்ச்சில் சென்று சாப்பிடலாம் என்று முடி வெடுத்ததினால் தொடர்ந்து கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.

pa010217vt5.jpg

pa010218bv9.jpg

pa010219bf5.jpg

pa010220ta0.jpg

  • தொடங்கியவர்

pa010221cm7.jpg

pa010222th1.jpg

pa010224fi1.jpg

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் தென் நிலப்பரப்பில் போகும் வழிகளில் செம்மறி ஆடுகளைக் காணக்கூடியதாக இருக்கும். முன்பு வீதிகளில் அடிக்கடி செம்மறி ஆடுகள் செல்வதினால், வாகனங்களில் செல்பவர்களுக்கு இடையூறாக இருந்தது. இப்பொழுது வீதி ஓரங்களில் கம்பி வேலி அடைக்கப்பட்டிருப்பதினால் செம்மறி ஆடுகள் வீதிகளில் வருவதில்லை.

pa010225zh7.jpg

pa010226jt9.jpg

  • தொடங்கியவர்

pa010227yb7.jpg

மேலே உள்ள படத்தில் தூரத்தில் வெள்ளை நிறமாகத் தெரிகிற Rakaia நதி

போகிற வழியில் ஒரு பாலத்தின் மேலாக வீதி சென்றது. பாலத்தின் கீழ் ரகைய(Rakaia) நதி ஒடுகின்றது.

img0487ew2.jpg

dsc00707hp3.jpg

img0486dt4.jpg

  • தொடங்கியவர்

தொடர்ந்து கிரைஸ்ச் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தேன்.

pa010231ew9.jpg

pa010234vl2.jpg

pa010236tt4.jpg

  • தொடங்கியவர்

நியூசிலாந்தின் தென் நிலப்பரப்பில் அதிக மக்கள் வாழும் கிறைஸ்சேர்ச்சினை மதியம்1 மணியளவில் அடைந்தேன். இங்குதான் நியூசிலாந்துப்பயணத்தில் 7 நாட்களில் வீதிகளில் மக்களையும், வாகனங்களையும், கடைகள், வர்த்தக நிலையங்களையும் அதிகளவில் கண்டேன். காலையில் உண்ணாததினால் பசியெடுக்க, வீதியில் தென்பட்ட மக்டோனால் உணவகத்தில் அன்றைய மதிய உணவினை உண்டேன். உண்டபின்பு கிறைஸ் சேர்ச் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள அந்தாட்டிக்கா நிலையத்தினை அடைந்தேன். இங்கு அந்தாட்டிக்கா கண்டத்தைப் பற்றி பல தகவல்களை அறியக்கூடியதாக இருக்கிறது. அந்தாட்டிக்காவுக்கு அருகில் இருக்கும் சர்வதேச விமான நிலையம் கிறைஸ்சேர்ச்சில் இருக்கிறது. சுற்றுலாப் பயணிகள் அந்தாட்டிக்காவுக்கும் சுற்றுலா செல்வதுண்டு.

antarctic1kk6.jpg

pa010239if5.jpg

  • தொடங்கியவர்

அந்தாட்டிக்காவில் விஞ்ஞானிகள் பனிக்கட்டிகள் உள்ள இடங்களில் பிரயாணம் செய்யும் போது Hagglund என்ற வாகனத்தில் பயணிப்பார்கள். அதே மாதிரியான Hagglund வாகனத்தில் நாங்கள் குன்றின்மீதும், சிறு நீர்நிலையிலும் (அந்தாட்டிக்காவில் பிரயாணம் செய்யும் போது ஏற்படும் அனுபவங்களைப் போல) பயணித்தோம். பயணத்தின் போது சாரதி, சுற்றுலாப்பயணிகளுக்கு இரசிக்கத்தக்கவிதமாக விளக்கங்களைத் தந்தார்.

hagglund11mh8.jpg

infoantarctichagglundsp1.jpg

pa010241sf3.jpg

pa010242py8.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

பூச்சியத்துக்கு கீழ் 5பாகை வெப்பநிலையில் இருக்கக்கூடிய அறை ஒன்றிற்கு சென்றோம். அங்கு அந்தாட்டிக்காவைப் போல செயற்கையாக செய்திருந்தார்கள். சடுதியாக பூச்சியத்துக்கு கீழ் 18 பாகை வெப்பநிலைக்கு அறையின் வெப்பநிலையினைக் கொண்டுவந்தார்கள். அந்தாட்டிக்காவில் புயல் வீசுவது போல அவ்வெப்பநிலையில் காற்று மணித்தியாலத்திற்கு 40கிலோமிற்றர் வேகத்தில் பலமாக வீசும். ஒவ்வொரு 30 நிமிடத்துக்கு ஒருமுறை இக்காற்று அவ்வறையில் வீசுவதற்கு ஏற்றவகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வறைக்கு செல்லுவதற்கு சூடான ஆடையினை அணியத்தருவார்கள். அத்துடன் பெரிய குளிரைத்தாங்கக் கூடிய பாதணியினையும் அணியத் தருவார்கள்.

flickrthelees66657359pt3.jpg

Edited by Aravinthan

  • தொடங்கியவர்

சிறிய நீல நிறப் பென்குயின்களை இந்த அந்தாட்டிக்கா நிலையத்தில் காணலாம். இப்பென்குயின்களில் சில வெளியே வாழ்ந்தால் உயிர்வாழமுடியாத நிலையில் இருப்பதினால் இங்கே அவற்றுக்கு பாதுகாப்பு தருகிறார்கள்.

anatarcticcentre3ox5.jpg

அந்தாட்டிக்கா கண்டத்தில் உள்ளதுபோல பல உருவங்கள் செய்து காட்சிப்படுத்தி இருப்பதினை Antarctic Centreல் காணலாம்.

chch20antarctic20centreme0.jpg

chch20antarctic20centretn0.jpg

chch20antarctic20centrews2.jpg

  • தொடங்கியவர்

பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இருந்து எவ்வாறு பிரிந்து சென்றது என்பவற்றை காணொளிகளில் காண்பித்தார்கள். மேலும் பலசுவையான அந்தாட்டிக்கா பற்றிய செய்திகளை அறியக்கூடியதாக இருக்கிறது.

அந்தாட்டிக்கா நிலையத்துக்கு சென்றதினை எனது வேலைத்தளத்தில் வேலைசெய்பவர்களுடன் கதைக்கும் போது, எங்களுடன் வேலை செய்த சீனா நாட்டுப் பெண்மணி ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு அந்தாட்டிக்காக் கண்டத்துக்கு சுற்றுலா சென்று வந்ததைப் புகைப்படங்களில் காண்பித்தார்.

பென்குயீன்ஸ் அழகா இருக்கு..பக்கத்தில் சென்றீர்களா?

  • தொடங்கியவர்

பென்குயீன்ஸ் அழகா இருக்கு..பக்கத்தில் சென்றீர்களா?

சில பென்குயிஸ் இருக்கும் இடத்துக்கு செல்ல முடியாது. அறையின் வெளியில் நின்று கண்ணாடி வழியாகப் பார்க்கவேண்டும். சிலவற்றைக் கிட்டச் சென்று பார்க்கலாம்.

சில பென்குயிஸ் இருக்கும் இடத்துக்கு செல்ல முடியாது. அறையின் வெளியில் நின்று கண்ணாடி வழியாகப் பார்க்கவேண்டும். சிலவற்றைக் கிட்டச் சென்று பார்க்கலாம்.

ஓ..:lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அந்தாட்டிக்கா நிலையத்தைப் பார்த்து முடிக்க கிட்டத்தட்ட மாலை 4 மணியாகி விட்டது. அன்றைய மாலைப் பொழுதினைப் போக்க கிறைஸ்சேர்ச்சில் உள்ள Gondola க்கு சென்றேன். மலையின் அடியில் இருந்து மலை உச்சிக்கு கம்பிகையிற்றினால்( cable car -gondola) மேலே செல்லவேண்டும். ஏற்கனவே நான் 3ம் நாள் பயணமன்று குயின்ஸ்டவுனில் உள்ள சென்றதினைப் பற்றி விபரித்திருந்தேன்.

3352gondola1ng4.jpg

மேலே ஏறியதும் அங்கிருந்து எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட கிறைஸ் சேர்ச் நகரத்தின் புகைப்படங்கள்.

pa010253zo3.jpg

pa010255tj9.jpg

pa010256dm7.jpg

pa010257gc7.jpg

  • தொடங்கியவர்

pa010258vv3.jpg

pa010259dx0.jpg

pa010261bw7.jpg

pa010260gw3.jpg

  • தொடங்கியவர்

அன்றைய இரவு உணவைக் கிறைஸ்சேர்ச்சில் உள்ள இந்திய உணவகத்தில் உண்டபின்பு, விடுதிக்கு சென்றேன். இவ்விடுதியில் தான் நியூசிலாந்துக்கு வந்த போது தங்கினேன். மறு நாள் அதிகாலை சிட்னியை நோக்கி விமானத்தில் பறந்தேன்.

இதுவரை காலமும் நியூசிலாந்து நாட்டின் தென் நிலப்பரப்பில் உள்ள முக்கிய இடங்களுக்கு 2005ம் ஆண்டில் பயணித்த சம்பவங்களை இங்கு உங்களுடன் பகிர்ந்திருந்தேன். இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் உறவினர்கள் சிலரைப் பார்ப்பதற்காகவும், சுற்றுலாவுக்காகவும் நியூசிலாந்துக்கு இலவச விமானப் பயணம் செய்திருந்தேன். தென் நிலப்பரப்புடன், வட நிலப்பரப்பில் உள்ள ஒக்லாந்து, ரொட்டுறுவா உட்பட சில பகுதிகளுக்குச் சென்றிருந்தேன்.

இதனைத் தொடர்ந்து இங்கு பதியட்டுமா? அல்லது வேறு நாட்டுகளுக்குச் சென்ற சுற்றுலாக்களை எழுதி விட்டு எழுதட்டுமா என்று யோசிக்க, யாழ்கள உறுப்பினர் யமுனா அவர்கள், வேறு நாட்டு அனுபவங்களை எழுதி விட்டு இப்பகுதியில் இவ்வருடத்தில்(2008ல் ) பயணித்த நியூசிலாந்து அனுபவங்களைத் தொடர்ந்து தரச்சொன்னார். வேறு நாடு என்றால் சிறிலங்கா, தாயகத்துக்கு 2005ல் சென்றதினை எழுதட்டுமா? அல்லது அமெரிக்கா, கனடா, முன்பு வாழ்ந்த இங்கிலாந்து பற்றிச் சொல்லட்டுமா என்று கேட்க, தற்பொழுது வாழும் அவுஸ்திரெலியா பற்றி எழுதச் சொன்னார்.

அவுஸ்திரெலியாவில் நான் வாழ்வதினால் அடிக்கடி அதிக இடங்களைப் பார்த்தினாலும், அவுஸ்திரெலியா உலகில் மிகவும் பெரிய நிலப்பரப்பினை உடைய நாடுகளில் ஒன்று என்பதினால் ஒரே தலைப்பின் கீழ் அவுஸ்திரெலியாவைப் பற்றி எழுதாமல் அவுஸ்திரெலியா - பகுதி1 பிரிஸ்பனும் சூழவுள்ள இடங்களும். பகுதி 2 -கன்பரா.........என்று பேர்த்தும் சூழவுள்ள இடங்களும், மெல்பேர்ணும் சூழவுள்ள இடங்களும், சிட்னியும் நியூசவூத் வேல்ஸ் மானிலமும்.... என்று தலைப்பிட்டு எழுதலாம் என முடிவெடுத்தேன்.

அடுத்து வருவது அவுஸ்திரெலியாவில் சுற்றுலா பகுதி1 -பிரிஸ்பனும் சூழவுள்ள இடங்களும். பகுதி 1 முடிவடைந்ததும், வேறு நாடு ஒன்றினை எழுதிவிட்டு, மறுபடியும் நியூசிலாந்தில் இவ்வருடத்தில் பார்த்தவற்றை உங்களுடன் இப்பகுதியில் பகிர்ந்து கொள்கிறேன்.

வனு-அற்று தொடரினை நான் எழுதும் போதுஅங்கு எனது புகைப்படக்கருவியினால் எடுக்கப்பட்ட தேங்காய் நண்டின் புகைப்படத்தை அவதாராகச் சூட்டி யாழில் வந்தேன். நியூசிலாந்துப்பயணத்தின் போது குயின்ஸ்டவுனில் பயணித்த வேகப்படகினை அவதாரைச் சூட்டி யாழுக்கு வந்தேன். பிரிஸ்பனும் சூழவுள்ள பகுதி பற்றிச் சொல்லும் போது புதிய அவதாருடன் யாழுக்கு வருவேன்.

Edited by Aravinthan

நியூசிலாந்து தொடர் முடிந்து விட்டதே என்ற சோகம் இருந்தாலும்...புதிய தொடர் ஆரம்பிக்க போவதையிட்டு சந்தோசம்.. எப்போது ஆரம்பம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.