Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தங்கத்தைத் தேடி முல்லைத்தீவு வீடொன்றில் அகழ்வு

March 22, 2019

puthaiyal.png?resize=796%2C444விடுதலைப்புலிகளால் தங்கம் புதைத்து வைத்ததாக நம்பப்படும் அறை ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக அகழ்வு நடவடிக்கை நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் முதன்மை வீதியின் அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரின் விசாரணைகளின் போது முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விடுதலைப்புலிகளின் தங்க நகைகள் புதைத்து வைத்ததாக தகவல்கள் கிடைத்ததனையடுத்து நீதிமன்ற உத்தரவுடன் முல்லைத்தீவு காவல்துறையினர் ,சிறப்பு அதிரடிப்படையினர்,தொல்பொருள் திணைக்களத்தினர்,மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் ஆகியோர் சென்று வீட்டின் அறை ஒன்றில் தோண்டியுள்ளனர்.

எனினும் குறித்த வீட்டில் யுத்தம் நடைபெற்ற காலத்தின் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் தடயங்களே மீட்டுள்ளதாகவும் அங்கு தங்க ஆபரணங்கள் எவையும் மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது 2011 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட நாணயக்குற்றி ஒன்று காணப்பட்டுள்ளதனையடுத்து குறித்த பகுதி ஏற்கனவே தோண்டப்பட்டு மூடப்பட்டுள்ளதாக தெரிவித்து அகழ்தல் நடவடிக்கையை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puthaiyal-2.png?resize=800%2C428

 

 

http://globaltamilnews.net/2019/116619/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.