Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில், படையினரின் செயற்பாடுகள் – மக்கள் விசனம்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு அருகில், படையினரின் செயற்பாடுகள் – மக்கள் விசனம்…

March 23, 2019
Kili-school.jpg?resize=800%2C600

குறித்த முகாம் கழிவுகளை ஓர் இடத்தில் குவிப்பதனால்,  பாடசாலை பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்தில் அவற்றை எரிப்பதனால் பாடசாலை சூழல் மாசடைவதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று (22.03.19) பாடசாலைக்கு பெற்றோர் சென்றிருந்த சமயம் நச்சுமருந்து கலந்த வித்தியாசமான காற்றை சுவாசித்தது போன்ற உணர்வு காணப்பட்டதாக பெற்றோர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளனர்.

IMG20190323072845.jpg?resize=1226%2C920

பாடசாலை சூழலை மாசுபடுத்தும் வகையில் படையினர் முகாம் அமைத்துள்ள பகுதியில் அண்மை நாட்களாக துர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில் தானும் உணர்ந்துள்ளதாகவும், பல பெற்றோர், மாணவர்கள் இவ்விடயம் தொடர்பில் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் பெற்றோரிடம் தெரிவித்த பாடசாலை முதல்வர், இவ்விடயம் தொடர்பில் மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

யுத்தம் நிறைவின் பின்னர் பாடசாலை காணி மற்றும் விளையாட்டு மைதான காணிகளில் முகாம் அமைத்துள்ள படையினர் கடந்த ஆண்டளவில் ஒருபகுதி காணியை விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட காணியில் தரம் 4,5 வகுப்புக்கள் நடார்த்தப்பட்டு வருகின்றது. இரண்டாயிரத்திற்கும்  மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் குறித்த பாடசாலைக்கான இட நெருக்கடி காணப்படும் நிலையில் படை முகாமை அகற்றி பாடசாலையின் இட பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பல்வேறு வகையிலும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் படையினரின் இவ்வாறான செயற்பாடு தொடர்பில் பாடசாலை சமூகமும், பெற்றோரும் விசனம் வெளியிடுகின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு தரமான பாடசாலை சூழலை ஏற்படுத்தி தருமாறும், படையினர் வசமுள்ள பாடசாலை காணியை விடுவித்து பௌதீக வள பற்றாக்குறைகளை சீர் செய்து தருமாறும் பெற்றோர் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

http://globaltamilnews.net/2019/116683/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.