Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் மூன்று மாதங்கள் இடைநிறுத்தம்

மன்னார் மனிதப் புதைகுழிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தப்படுவதாக மன்னார் சிறப்பு சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட தரப்பினருடன் நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் மறு அறிவிப்பு செய்யப்படும் வரை கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி முதல் இடைநிறுத்தப்பட்டன.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வு கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக வெளியான அறிக்கையின்படி, இந்தப் புதைகுழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனித எச்சங்கள் கிறித்துவுக்கு பின் 1477 - 1642ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு இடைப்பட்டவை என அந்த அறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மனித புதைகுழி

இவ்வாறு வெளியான அறிக்கை குறித்து ஆராய்ந்த மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி, அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதன்படி, இந்த மனித புதைகுழியின் அகழ்வு பணிகளை தொடர்வது குறித்து நேற்றிரவு வரை நீதிபதி தலைமையில் சிறப்பு சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள், பல்வேறு ஆய்வுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சமிந்த ராஜபக்ஸ, அந்த அறிக்கைகள் கிடைக்கும் வரை தீர்மானம் எதையும் எடுக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கை தொல்பொருள் திணைக்களத்தினாலும் குறித்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்ததாகவும், அந்த ஆய்வுகளின் அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை பிரதிநிதி

தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் நேற்று இந்த விடயம் குறித்து கேட்கப்பட்டதாக சமிந்த ராஜபக்ஸ கூறினார்.

திணைக்களத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட மூன்று மாத கால அவகாசம் தேவையென இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் கூறியுள்ளனர்.

அதன்படி, மன்னார் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

அத்துடன், மன்னார் மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டு, தோண்டி எடுக்கப்படாமல் இன்னும் இருக்கும் மனித எச்சங்கள், மூன்று மாத காலம் அவ்வாறே வைக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க அறிக்கை

அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களை விரைவாக தோண்டி எடுக்காமல் இருந்தால், அவை சேதமாகும் என்பதால், அவற்றை மீண்டும் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமிந்த ராஜபக்ஸ கூறினார்.

இந்த நடவடிக்கைகளுக்கு மேலும் இரண்டு வார காலம் தேவைப்படுவதாக கூறிய அவர், இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை இலங்கை

மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 343 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 330 தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட மனித எலும்பு கூடுகளில் 30, சிறார்களுடையவை என்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் ஆய்வு கூடத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையை மட்டுமே அடிப்படையாக வைத்து, இந்தப் புதைகுழியின் காலத்தை நிர்ணயித்துவிட முடியாது என போர்க் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்ஜன் தெரிவிக்கின்றார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47677458

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.