Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன ஐக்கியத்தை பாதுகாக்க எம்.எஸ் உதுமாலெப்பை கூறும் யோசனை என்ன?

 

நேர்காணல்: எம்.எம்.ஏ.ஸமட்

கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்தைப் பேசித் தீர்க்­காது தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் மௌனம் காத்து காலம் கடத்­தி­யதன் விளைவே இப்­பி­ரச்­சி­னையில் பேரி­னவாத சக்­திகள் மூக்கை நுழைக்கக் கார­ண­மா­யிற்று. தமிழ், முஸ்லிம் உறவை பாது­காக்க கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலமே தீர்வு காணப்­பட வேண்­டு­மென 'வீர­கே­சரி' நாளி­த­ழுக்கு வழங்­கிய விஷேட நேர்காணலில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்­சரும் கிழக்கு மாகாண முன்பள்ளிக் கல்விப் பணி­ய­கத்தின் தவி­சா­ள­ரு­மான எம்.எஸ். உது­மா லெப்பை தெரி­வித்தார்.

அந்நேர்கா­ணலின் முழு விப­ரமும் வரு­மாறு:

கேள்வி: மு.கா.வின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் அஷ்­ரபின் பாச­றையில் வளர்ந்­த­தாகக் கூறும் உங்­க­ளது அர­சியல் அனு­ப­வங்­களைப் பகிர்ந்து கொள்ள முடி­யுமா?

பதில்: மறைந்த தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்­கிரஸ் என்ற தனித்­துவக் கட்­சியை ஸ்தாபித்து முஸ்லிம் மக்­களின் வாக்குப் பலத்தை பேரம் பேசும் சக்­தி­யாகப் பயன்­ப­டுத்­தினார். பேரி­ன­வாதக் கட்­சி­க­ளி­னால் கறி­வேப்­பி­லை­களாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்த முஸ்லிம் சமூ­கத்தின் வாக்­குப்­ப­ல­மின்றி இந்­நாட்டில் ஓர் ஆட்சி மாற்­றத்தை உரு­வாக்க முடியாது என்ற செய்­தியை 1994இல் இத்­தே­சத்துக்கு அறி­வித்தார். 

வடக்கு, கிழக்கு உட்­பட நாட்டின்  ஏனைய பிர­தே­சங்­க­ளி­லு­முள்ள முஸ்­லிம்­களை ஒரு கட்­சியின் கீழ் ஒற்­று­மைப்­ப­டுத்­தினார்.  முஸ்­லிம்­களின் வாக்கு உரிமை மூலம் பேரம் பேச­லி­னூ­டாகப் பெறப்­பட்ட அர­சியல் உரி­மை­க­ளையும், சலு­கை­க­ளையும் அவர் முஸ்­லிம்­க­ளுக்கு மாத்­தி­ர­மின்றி ஏனைய இன மக்­க­ளுக்­கா­கவும் பயன்­ப­டுத்­தினார். அவ்­வா­றான ஆளு­மை மிக்க தலை­மைத்­து­வத்தின் அர­சியல் பாசறை அனு­ப­வங்கள் அவ­ரது மர­ணத்தின் பிற்­பாடு எனது அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கும் மக்கள் நலன் சார்ந்த பணி­க­ளுக்கும் பக்­க­ப­ல­மாக வழி­கோ­லி­யது என எண்ணு­கின்றேன்.

கேள்வி: முஸ்லிம் அர­சி­யலில் பேரம் பேசும் சக்தி ஏன் இழக்­கப்­பட்­டுள்­ளது?

பதில்: அஷ்­ரபின் அர­சியல் யுகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டு­வ­தற்கு முஸ்­லிம்­களின் அர­சியல் சக்தி பெரும் பல­மாக இருந்­தது. அந்தப் பலம் சமூ­கம்­சார்ந்த நலன்­க­ளுக்­காக ஆட்­சி­யா­ளர்­க­ளுடன் பேரம்­பே­சு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது. ஆனால், இன்று முஸ்­லிம்­களின் வாக்­கு­ரி­மை­யு­ட­னான பேரம்­பேசும் சக்தி இழக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் அர­சியல் தலை­மை­களின் கொள்கை ரீதி­யி­லான பிரச்­சினை அல்­லது முஸ்­லிம்­களை அர­சியல் ரீதி­யாக வழி­ந­டத்­து­வ­தி­லுள்ள தவ­றுகள் என்­பன முஸ்­லிம்­களின் வாக்­கு­ரி­மையின் பேரம் பேசும் சக்தி இழந்­தி­ருக்­கின்­ற­மைக்கு கார­ண­மாக இருக்­கு­மெனக் கரு­து­கிறேன். 

கேள்வி: தேசிய காங்­கிரஸ் கட்­சியின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வ­ரான நீங்கள் அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கிய பின்னர் அக்­கட்­சியின் தற்­போ­தைய நிலை பற்றி..

பதில்: அஷ்­ரபின் மர­ணத்தின் பின்னர் மு.கா.வின் தலை­வ­ரான ரவூப் ஹக்­கீமு­ட­னான கொள்கை ரீதி­யான முரண்­பா­டுகள் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து விலகக் கார­ணமா­யின. அத­னால் நான் உட்­பட பலர் அக்­கட்­சி­யி­லி­ருந்து வில­கினோம்.  அக்­கட்­சி­யி­லி­ருந்து தேசிய காங்­கிரஸ் என்ற கட்­சியைத் தலைவர் அதா­வுல்லா உரு­வாக்­கி­ய­போது அக்­கட்­சியின் உரு­வாக்­கத்­துக்கும், வளர்ச்­சிக்கும் பாடு­பட்டேன்.

தலைவர் அதா­வுல்­லா­வு­ட­னான நம்­பிக்­கையின் கார­ண­மாகப்  பத­வி­களை வகித்து பல வரு­டங்கள் இக்­கட்­சியில் பய­ணிக்க முடிந்­தது. அக்­கட்­சியின் மூலம் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்று இரண்டு முறை கிழக்கு மாகாண சபையில் அமைச்­ச­ராக பதவி வகித்­துள்ளேன். அதற்கு தலைவர் அதா­வுல்­லா­வுக்கு நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளேன்.

ஆனால், கட்­சியின் தலை­வ­ருக்கும் எனக்கும் எந்தப் பிரச்­சி­னை­யு­மில்லை. இருப்­பினும், அக்­கட்­சிக்குள் இருக்­கின்ற ஒரு சிலர் அக்­கட்­சியை மேலும் வலு­வூட்டி  சமூக மயப்­ப­டுத்தி முன்­கொண்டு செல்­வ­தற்கு தலை­மைக்கு வழி­வி­டா­த­வர்­க­ளாக செயற்­ப­டு­கின்­றார்கள். அதற்­கான எனது பல முயற்­சி­க­ளுக்கு தடை­யா­கவும் இருந்­துள்­ளார்கள். 

அது­மாத்­தி­ர­மின்றி, அக்­கட்சி மீதான எனது விசு­வா­சத்தின் மீது அவவி­சு­வாசம் ஏற்­பட் டது. என்­மீது தவ­றான கண்­ணோட்­டமும் செலுத்­தப்­பட்­டது. நான் வளர்த்த கட்­சியும் என்னை வளர்த்த கட்­சி­யி­னு­டைய தலை­மையும் எனது மனம் புண்­படி நடந்து கொண்­டன.  இச்­சூழல் அக்­கட்­சியில் தொடர்ந்து பய­ணிக்க முடி­யாத நிலையை உரு­வாக்­கி­யது. இவற்றின் கார­ண­மா­கவே இக்­கட்­சி­யி­லி­ருந்து விலக நேரிட்­டது. இன்றும் அக்­கட்­சிக்­குள் சிலரின் செயற்­பா­டுகள் மாற்­ற­ம­டை­ய­வில்லை. மாற்­றங்­களைக் காணு­கின்­ற­போது அக்­கட்சி பழைய நிலைக்குத் திரும்­பலாம் என நினைக்­கின்றேன். 

கேள்வி: தேசிய காங்­கிரஸ் கட்­சியின் மூலம் கிழக்கு மாகாண சபையின் அமைச்­ச­ராகப் பதவி வகித்த நீங்கள் முகம்­கொ­டுத்த மிகப் பெரும் சவா­லாக எதைக் கரு­து­கின்­றீர்கள்?

பதில்: கிழக்கு மாகாண அமைச்­ச­ராகப் பதவி வகித்த காலத்தில் இன, மத, பிர­தேச வேறு­பா­டின்றி பாரிய அபி­வி­ருத்திப் பணி­களை மேற்­கொள்­ளவும் அபி­வி­ருத்­தி­யி­னூ­டாக இம்­மா­கா­ணத்தில் வாழும் மூவின மக்­க­ளுக்­கி­டை­யிலும் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் சந்­தர்ப்­பம் கிடைத்­தது. இருப்­பினும், சிலர் தங்­கள் அர­சியல் நிகழ்ச்சி நிரல்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி  எமது அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு தடை­யாக இருந்­தார்கள். 

கிழக்கு மாகாண சபை  மக்கள் பிரதி நிதிகள் இன்றி செயற்­பட்ட காலத்தில் மக்­களின் ஆட்­சி­யா­ளர்­க­ளாக அதி­கா­ரி­ களே செயற்­பட்­ட­ார்கள். மக்­களின் நலன்­களை அதி­கா­ரி­களே கவ­னித்து வந்­தார்கள். ஆனால், அவ்­வ­தி­கா­ரி­க­ளால் மக்­களின் நலன்கள் சமத்­து­வ­மாகப் பேணப்­ப­ட­வில்லை.

நீண்­ட­ கா­ல­மாக அதி­கா­ரி­க­ளினால் ஆளப்­பட்டு வந்த கிழக்கு மாகாண சபைக்கு 2008ஆம் ஆண்டு மக்கள் பிர­தி­நி­திகள் தெரிவு செய்­யப்­பட்­ட­போது  மக்­களின் நலன்­களை மக்கள் பிர­தி­நி­திகள் முன்­னெ­டுப்­பதில் சில சவால்­களை எதிர்­நோக்­கி­னார்கள். அவ்­வா­றான சவால்­களை நானும் எதிர்­நோக்­கினேன். 

கேள்வி: ஆட்சிக் காலம் நிறை­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல்­களை ஒக்­டோபர் 15ஆம் திக­திக்கு முன்னர் நடத்த வேண­டு­மென தேர்தல்கள் ஆணைக்­குழுவின் தலைவர் கூறு­கிறார். இது தொடர்பில் உங்­க­ளது கருத்­தென்ன?

பதில்: உண்­மையில் பொருத்­த­மான கேள்வி. ஒரு மாகாண சபைக்­கான ஆட்­சிக் காலம் முடி­வ­டைந்­த­வுடன் அம்­மா­காண சபைக்கே அத்­தேர்தலை நடத்­து­வ­தற்­கான அதி­காரம் இருந்­தது. ஆனால், அதை இல்­லாமல் செய்து அவ்­வ­தி­காரம் பாரா­ளு­மன்­றத்­துக்கு  தாரை­வார்த்துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்கும் திக­தியில் தேர்தலை நடத்­து­வ­தற்­கான அதி­காரம் இதன் மூலம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

கிழக்கு மாகா­ணத்தில் இந்த வர­ லாற்றுத் தவறை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் செய்­துள்­ளன. இதனை எதிர்க் கட்­சியில் இருந்­த­போது நாங்கள் எதிர்த்தோம்.  மாகாண சபைக்­கான ஆட்­சிக்­காலம் முடி­வ­டைந்தால் தேர்தல் நடத்­தப்­பட வேண்டும். அதற்கு ஆத­ரவு வழங்க வேண்டும் என்று கோரினோம்.

இவ்­வி­ட­யத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் இரண்டு நிலை­மை­களைக் நாங்கள் கண்டோம்.  வடக்கு மாகாண சபை­யிலே இதனை எதிர்த்­தார்கள். ஆனால், கிழக்கு மாகா­ணத்தில் தேர்தல் நடத்­து­வ­தற்­கான அதி­கா­ரத்தை பாரா­ளு­மன்­றத்துக்கு வழங்­கி­னார்கள். மாகாண சபைக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரத்தை மத்­திய அர­சாங்­கத்­துக்கு வழங்­கி­யதை வர­லாற்றுத் துரோ­க­மென்றே கரு­து­கி றோம்.

ஜன­நா­யக விரோ­தத்­திற்கு ஆத­ரவு வழங்­கிய தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் காங்­கி­ரஸும் தற்­போது மாகாண சபைத் தேர்தல்­களை நடத்த வேண்டும். ஜன­நா­யகச் செயற்­பா­டு­க­ளுக்கு  மாறு செய்யக் கூடாது எனக் கூறு­கி­றார்கள். 

இந்­நி­லையில், ஆட்சிக் காலம் நிறை­வ­டைந்த மாகாண சபை­க­ளுக்­கான தேர்தல்கள் உரிய காலத்­திற்குள் நடத்­தப்­பட வேண்டும். இல்­லையேல் பதவி விலக வேண்டி ஏற்­படும் என தேர்தல்­கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர்  தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். இருப்­பினும். இததேர்தல் எப்­போது நடை­பெறும் என்­பதை இறை­வன்தான் அறிந்­தவன் எனக் கூறப்­படும் நிலையில். தேர்தல் நடத்­தப்­ப­டாமல் காலம் கடத்­தப்­ப­டு­வது உண்­மையில் ஜன­நா­யக விரோதச் செயற்­பாடு என்றே எண்­ணுகின்றேன்.

கேள்வி: மக்கள் சேவையைத் தொடர விரும்பும் நீங்கள் அடுத்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடை­பெற்றால் அதில் கள­மி­றங்­கு­வீர்­களா?

பதில்: தேர்தலில் போட்­டி­யி­டு­வதும் அதன் மூலம் அர­சியல் அதி­கா­ரங்கள் கிடைப்­பதும் இறைவன் நாட்­டப்­ப­டியே இடம்­பெ­று­கி­ன்றன. மாகாண சபைத் தேர்தல் நடை­பெ­றுமா இல்­லையா? எந்தத் தேர்தல் முதலில் நடை­பெறும். என்­பது பற்றி சிந்­திப்­ப­தற்கு முன்னர் சமூகம் எதிர்­நோக்­கி­யி­ருக்கும் நெருக்­க­டி­க­ளி­லி­ருந்து முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காப்­ப­தற்கு முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களை ஒன்­று­ப­டுத்த வேண்­டிய தேவை­யி­ருக்­கி­றது.

முஸ்­லிம்­களின் பாது­காப்பும், வாழ்­வு­ரி­மையும் பேரி­ன­வா­தி­க­ளால் கேள்­விக்­கு­றி­யாக்­கப்­பட்­டுள்ள சூழலில், தேர்தல் ஒன்று நடை­பெற்றால் அதில் எவ்­வாறு முஸ்­லிம்கள் முகம் கொ­டுப்­பது? அதற்­காக முஸ்லிம் சமூகம் எவ்­வாறு வழி நடத்­த­ப்பட வேண்டும் என்று சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது. இவ்­வா­றான சமூக ரீதி­யான சிந்­த­னைக்கு மத்­தியில் தேர்தல் நடை­பெற்றால் அதில் கள­மி­றங்­கு­வது பற்றிச் அச்­சூ­ழலில் சிந்­திக்­கலாம் என எண்­ணு­கின்றேன்.

கேள்வி:மாகாண சபைத் தேர்தல் நடை பெற்றால் எந்தக் கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யிட உத்­தே­சித்­துள்­ளீர்கள்? 

பதில்:  இப்­போது இருக்கும் நிலை­மை யில், அனைத்துக் கட்­சி­­களும் பிரச்­சி­னை­க­ளுக்குள் தள்­ளப்­பட்­டுள்­ளன. முஸ்லிம் அர­சியல் கட்சித் தலை­மை­களின்  பேரம் பேசும் சக்­தியை ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களைக் கார­ணம் காட்டி பல­மி­ழக்கச் செய்யும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றன. இருப்­பி­னும், மக்கள் தெளிவாக இருக்­கி­றார்கள். மக்­களின் தீர்­மானம் இவ்­வி­ட­யத்தில் முக்­கி­ய­மாகும்.

முஸ்­லிம்­களை அடக்கி ஆளு­வ­தற்கு சிங்களப் பேரி­ன­வா­த­மும், ஒரு சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களும் முற்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். இத்­த­ரு­ணத்தில் முஸ்லிம் சமூ­கத்தைப் பாது­காக்க வேண்­டிய மிகப் பெரிய பொறுப்பு முஸ்லிம் அர­சி­யல்­ வா­தி­க­ளுக்கு உள்­ளது. 

ஏனெனில், சகல விதத்­திலும் முஸ்­லிம் கள் பாதிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார் கள். ஆதலால், அபி­வி­ருத்தி அர­சி­ய­லுக்கு அப்பால் உரிமை அர­சி­ய­லுக்கு முன்­னு­ரிமை வழங்கிச் செயற்­படும் அர­சியல் சூழல் முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளால் தோற்­று­விக்­கப்­ப­டும்­போது  எந்தக் கட்­சி­யி­னூ­டாக போட்­டி­யி­டு­வது என்­பது பற்றி யோசிக்­கலாம் என நினைக்­கின்றேன்.

கேள்வி: முஸ்லிம் அர­சியல் கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் நீண்­ட­ கா­ல­மாகப் பேசப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் உங்­க­ளது கருத்து என்ன?

பதில்: இவ்­வி­டயம் தொடர்பில் நீண்­ட கா­ல­மாக நானும் பேசி வரு­கின்றேன். தேசிய காங்­கி­ரஸில் அங்கம் வகித்த காலத்­திலும் நான் இவ்­வி­டயம் தொடர்பில் தேசிய காங்­கி­ரஸின் தலை­மை­யி­டமும் எடுத்­து­ரைத்­தி­ருக்­கிறேன். ஆனால், கிழக்கு மாகாண முஸ்லிம் அர­சியல் தலை­மை­கள்தான் ஒன்­று­பட வேண்டும் என்­பதே தலைவர் அதா­வுல்­லாவின் நிலைப்­பா­டாக இருக்­கி­றது.

ஆனால், சமூ­கத்தின் பல மட்­டங்­க­ளி­லுள்­ளோரும் அனைத்து முஸ்லிம் அர­சியல் தலை­மை­களும் ஒன்­று­பட வேண்டும் என்ற நிலை­பாட்டைக் கொண்­டி­ருப்­பதைக் காண முடி­கி­றது. இந்த நிலைப்­பாட்­டில்­தான் நானும் உள்­ளளேன்.

ஏனெனில், முஸ்லிம் அர­சியல் கூட்­ட­மைப்பின் ஊடா­கவே முஸ்லிம் அர­சி­ய­லுக்­கான பேரம் பேசும் சக்தியைக் கட்­டி­யெ­ழுப்ப முடியும். பல்­வேறு பிள­வு­க­ளுக்கு மத்­தி­யிலும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சியல் உரி­மை­க­ளுக்­காக போரா­டு­கி­றது என்­பது வெளிப்­படை. 

முஸ்லிம் அர­சியல் கூட்­ட­மைப்பு முஸ் லிம் காங்­கி­ர­ஸினால் உரு­வா­க­்கப்­பட்­டி­ருக்க வேண்டும். ஆனால், அதனை முஸ்லிம் காங்­கிரஸ் செய்­ய­வில்லை. இருப்­பினும், கடந்த ஏப்ரல் தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் ஒன்­று­ப­டுவ­தற்­கான சூழல் தோற்­று­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதனை சாத­க­மாகப் பயன்­ப­டுத்தி முஸ் லிம்  பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒன்­மைப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இந்த ஒற்­றுமை முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால மற்றும் எதிர்­கால நலன்­க­ளுக்­கான முஸ்லிம் அர­சியல் கூட்­ட­மைப்­பாகப் பரி­ண­மிக்க வேண்டும் என்­பது என அபிப்­பி­ரா­ய­மா­க­வுள்­ளது.

கேள்வி: முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் சம­கால நெருக்­க­டி­களின் பின்­ன­ணியில் அர­சியல் கார­ணங்கள் இருப்­ப­தாக உணர்­கி­றீர்­களா-?

பதில்: ஏப்ரல் 21 தாக்­குதல் சம்­பவம் தொடர்பில் பல்­வேறு கதை­யா­டல்கள் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­ன்றன. இந்­நி­லையில். இச்­சம்­பவம் அர­சியல் நோக்­கத்­துக்­காக இடம்­பெறச் செய்­யப்­பட்­டி­ருக்­குமா என்ற சந்­தே­கமும் காணப்­ப­டு­கி­றது. அத்­துடன், வெளிநாட்டு சக்­தி­களின் தொடர்­போடு அர­சியல் நோக்கம் கொண்­ட­வர்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருக்­கலாம் எனவும் மக்கள் சந்­தே­கிக்­கி­றார்கள். 

இருப்­பினும், யார் இதன் பின்­ன­ணி யில் இருக்­கி­றார்கள் என்­பதை  அறிய வேண்­டு­மெ­னவும் இச்­சம்­ப­வத்­து டன் தொடர்­பு­ப­ட்ட­வர்­க­ளுக்கு உச்ச தண்­டனை வழங்க வேண்­டு­மெ­னவும் நான் ஜனா­தி­ப­திக்கு அவ­சரக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். ஏனெனில், இத்­தாக்­கு­தல்கள் இனங்­க­ளுக்­கி­டையில் ஐக்­கி­யத்தை இல்­லாமல் செய்­தி­ருக்­

கி­ன்றன. இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்ப, சந்­தே­கங்­களை இல்­லாமல் செய்ய இத்­தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் செயற்­பட்­ட­வர்கள் கண்­ட­றி­யப்­பட வேண்­டு­மென்­பதை ஜனா­தி­ப­திக்கு அனுப்­பிய கடி­தத்தில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தேன். 

கேள்வி: நாட்­டி­னதும் சமூ­கத்­தி­னதும் நலன்­க­ருதி அமைச்சுப் பத­வி­களை கூட்­டாகத் துறந்த­தாகக் கூறிய முஸ்லிம் அமைச்­சர்கள் மீண்டும் அப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­பது தொடர்பில் உங்­க­ளது கருத்­தென்ன?

பதில்: முஸ்­லிம்­களின் பாது­காப்­பையும் நாட்டின் அமை­தி­யையும் கருதி  முஸ்லிம்  அமைச்­சர்­களும், ஆளு­நர்­களும் பதவி துறந்­தமை வர­வேற்­கத்­தக்க விடயம் என்றே கரு­து­கிறேன்.

இதில், ஐக்­கிய தேசியக் கட்­சியின் இரு அமைச்­சர்­களும் பதவி துறந்­தமை பாராட்­டப்­படக் கூடி­யது. இருப்­பினும், அவர்­க­ளுக்கு இருந்த அழுத்­தங்­களின் கார­ண­மாக மீண்டும் அப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­றுக் கொண்­டார்கள்.

தாக்­கு­தல்­களின் பின்னர் முஸ்லிம் சமூகம் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­பட வேண்டும்.  தாக்­குதல் சம்­ப­வத்­துடன் தொடர்­பற்ற பலர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். குரு­நாகல், மினு­வாங்­கொடை போன்ற பிர­தே­சங்­களில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் வாழ்­வா­தாரம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறுப்புப் பேச்­சுகள் நிறுத்­தப்­பட வேண்டும் என கோரிக்­கைகள் விடுக்­கப்­ப­டு­கின்­றன. 

இவ்­வா­றான சூழ­லில், வழங்­கப்­பட்ட ஒரு மாத கால அவ­கா­சத்­துக்குள் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களில் எத்­தனை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­பட்­டுள்­ளது என்பது பற்றிச் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

அமைச்சுப் பத­வி­களைத் துறப்­ப­தற்கு விதித்த நிபந்­த­னை­களைக் கருத்­திற்­கொண்டு மீண்டும் அமைச்சுப் பொறுப்­பு­களை ஏற்­பதே சமூ­கத்­துக்குப் பய­னளிக்கும். இல்­லையேல் ஏதி­ர­ணி­யினர் கூறு­வது போன்று அர­சாங்­கத்­தினால் இயற்­றப்­பட்ட ஒரு நாட­க­மா­கவே கரு­தப்­படும் என நினைக்­கின்றேன்.

கேள்வி:பொது­ப­ல­ சே­னாவின் போகம்­பர தீர்­மா­னங்­களை எவ்­வாறு நோக்­கு­கின்­றீர்கள்?

பதில்: உண்­மையில், பொது­பல சேனா அமைப்­பினர் இவ்­வா­றான இன­வாதக் கருத்­து­களை முன்­வை­ப்ப­தற்­காக ஒரு கூட்­டத்தைக் கூட்­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கி­ய­மை கவ­லை­ய­ளிக்­கு­ம் வி­ட­ய­மாகும்.

அவசர­காலச் சட்டம் அமு­லி­லுள்ள ஒரு சூழ­லில்தான் இக்­கூட்­டமும் இக்­கூட்­டத்தில் இன­வா­தத்தைத் தூண்டக் கூடிய தீர்­மா­னங்­களும் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. ஆனால், அவ­ச­ர காலச் சட்­டத்­தினால் இதனைத் தடுக்க முடி­ய­வில்லை.  

இந்­நாடு பல்­லின மக்கள் வாழும் நாடு. சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழ்­கி­றார்கள். அதனை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கின்றோம். ஆனால்,  இந்­நாட்டில் வாழும் ஏனைய மக்­க­ளுக்கும் தாய்­நாடு இலங்­கைதான் என்­பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  

சிறு­பான்மை மக்­களின் உணர்­வு­களை மிதித்துச் செயற்­பட அனு­ம­திக்க முடி­யாது. பல்­லாண்டு காலம் இந்­நாட்டில் இன ஐக்­கி­யத்­துடன் வாழும் முஸ்­லிம்கள் இந்­நாட்டை விட்­டு­விட்டு சவூதிக்கோ, ஈரா­னுக்கோ சென்று வாழ முடி­யாது.

இந்­நி­லையில், பொது­ப­ல­ சே­னாவின் அக்­கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட தீர்­மா­னங்களை இருண்­ட­தொரு இலங்­கையை உரு­வாக்­கு­வ­தற்­கான முயற்­சி­யா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி: கல்­முனை உப பிர­தேச செய­லக தர­மு­யர்வு தொடர்பில் உங்­க­ளது நிலைப்­பாடு என்ன?

பதில்: இன ரீதி­யாகப் பிரிக்­கப்­பட்ட கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் தரம் உயர்த்­தப்­ப­டு­வதை  அப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் எவ்­வாறு எதிர்க்­க­வில்­லையோ அவ்­வாறே நானும் எதிர்க்­க­வில்லை. ஆனால்,  நிலத்­தொ­டர்­பற்ற எல்­லை­களைக் கொண்ட பிர­தேச செய­லக­மாக தர­மு­யர்த்­தப்­ப­டு­வதை அங்­கீ­க­ரிக்க முடி­யாது என்­பதே எனது நிலைப்­பா­டாகும். 

அத்­துடன், ஜன­நா­யக விதி­மு­றை­க­ளுக் கும், பிர­தேச இன ஒற்­று­மைக்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும், முஸ்லிம் காங்­கி­ரஸும் ஒரே மேசையில் அமர்ந்து கல்­முனை விவ­கா­ரத்­துக்கு பேச்­சு­வார்த்தை மூலம் தீர்வு காணப்­பட வேண்­டு­மென்­பதும் எனது நிலைப்­பா­டா­க­வுள்­ளது.

கேள்வி: கல்­முனை விவ­கா­ரத்­தையும், தோப்­பூ­ருக்­கான தனி­யான பிர­தேச செய­லகக் கோரிக்­கை­யையும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வாறு கையாள வேண்­டு­மென எதிர்­பார்க்­கி­றீர்கள்?

பதில்: கல்­மு­னையின் இன ஐக்­கி­யத்­துக்கு பாதிப்பை  ஏற்­ப­டுத்தும் வகையில் பௌத்த தேரரின் உண்­ணா­வி­ர­தப் போ­ராட்­டத்­துக்கு வழி­விட்டு இப்­பி­ர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­து­வ­தற்கு ஒரு சில தமிழ் அர­சி­யல்­வா­தி­களும், சிவில் அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் முயற்சித்தனர். 

இனவாதத்தை விதைக்கும் பேச்சு களைப் பேசினர். இவற்றின் விளைவு இவ்விவகாரத்துடன் தொடர்பற்ற மூன்றாவது சக்திகள் கல்முனையின் விவகாரத்தில் மூக்கை நுழைக்க காரண மாக அமைந்தது. இவ்விடயத்தில் முஸ்லிம்கள் சிங்களவர்களுக்கும் தமிழ ருக்கும் எதிரானவர்கள் எனக் காட் டவும் சில தமிழ் அரசியல்வாதிகள் முற்பட்டனர். ஆனால், அவை எவையும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், கல்முனை வடக்கு பிர தேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு காட்டும் அக்கறை போல் தோப்பூர் பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் கோரும் தனியான பிர தேச செயலகக் கோரிக்கையையும் நிறை வேற்ற ஒத்துழைப்பு வழங்க வேண் டும்.  அவ்வாறு செயற்படாவின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரு முகங்களுடன் செயற்படுவதாகவே கருத வேண்டி ஏற் படும். 

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ், முஸ்லிம் ஒற்றுமையின் பலத்தினதும் பலவீனத்தினதும் எதிர்காலம் பற்றி...

பதில்:  இந்தக் காலகட்டத்தில், பேரின வாத சக்திகள் கடந்த காலங்களில் தமிழ் மக்களின் உரிமை உள்ளிட்ட பல விடயங் களில் என்ன செய்தார்கள்? எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை வரலாற்று அனுபவமாகப் பார்த்திருக்கின்றோம். அதனை தமிழ் சமூகம் நன்றாக உணர்ந்தி ருக்கிறது. 

வடக்கு, கிழக்கில் வாழும் சிறு பான்மை மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டுமெனின் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்பதையும் அவ்வனுபவங் கள் உணர்த்தியிருக்கின்றன.

தமிழ், முஸ்லிம் அரசியல் தலைமை களுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். அப்போதுதான் வடக்கு, கிழக் கில் இரு சமூகங்கள் சார்ந்த பிரச்சினை களுக்கு தீர்வைக் காண முடியும். இது தமிழ், முஸ்லிம் ஒற்றுமையில்தான தங்கி யிருக்கிறது.

மாறாக இரு சமூகங்களும் தங்களுக் குள்ள பிரச்சினைகளைப் புரிந்துணர்வு டன் பேசித்தீர்க்காது பேரினவாத சக்தி களின் உதவியை நாட முற்படுவார்களா யின் வடக்கு, கிழக்கில் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை பலவீனமடையச் செய்யப்படுவதோடு இப்பலவீனமானது பேரினவாத சக்திகளின் செயற்பாடுகளுக் கும், அநாவசிய தலையீடுகளுக்கும் இலகுவான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை நிகாரகரிக்க முடி யாது.

 

 

https://www.virakesari.lk/article/60834

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.