top-grads-690x500.jpg

டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக (ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கவும், அறிமுகப் படுத்தவும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று நேற்று Toronto கல்விச் சபையின் தலைமையகத்தில் நடைபெற்றது.

டொரோண்டோ கல்விச் சபையின் (TDSB) கீழ் வரும் பாடசாலைகளில் பல்கலைக்கழக புகுமுக(ஆண்டு 12) வகுப்பு தேர்வுகளில் நான்கு மாணவர்கள் மட்டும் 99%க்கும் மேல் புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த நான்கு மாணவர்களில் எவரும் கனடாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களல்லர். இவர்கள் அனைவரும் தற்போது கனேடியப் பிரஜைகளாக இருந்தாலும், குடிவரவாளர்களாகவோ அல்லது அகதிகளாகவோ தான் இந்த நாட்டிற்குள் நுழைந்தவர்கள்.

 

இந்த நான்கு மாணவர்களுள் ஒருவராக ஈழத் தமிழ் மாணவி ஒருவரும் இடம் பிடித்து கனடாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

Top-of-the-class_-Four-highest-achieving
Khalesah Alli, Elin Lui, Hshmat Sahak, and Saranya Jeyakanthan are honoured by the Toronto District School Board for their hard work on July 25, 2019.

சரண்யா ஜெயகாந்தன் (Saranya Jeyakanthan) விக்டோரியா பார்க் கல்லூரியில் 99% சராசரியுடன் பட்டம் பெற்று பல்கலைக்கழக படிப்புக்காக வாட்டர்லூ பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார்.

Hshmat Sahak மற்றும்  100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

பெருமை சேர்த்துத் தந்திருக்கும் சரண்யா ஜெயகாந்தன் என்ற இந்தத் தமிழ் மாணவிக்கும் ஏனைய மாணவர்களுக்கும் டொரொண்டோதமிழின் வாழ்த்துக்கள்.

https://www.torontotamil.com/2019/07/26/with-honours-tdsb-celebrates-top-grads/