Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2வது இன்னிங்சிலும் ஸ்மித் அபார சதம் ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை: இங்கிலாந்துக்கு நெருக்கடி

Featured Replies

இங்கிலாந்து அணியுடனான ஆஷஸ் முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் தொடர்ச்சியாக 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 284 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஸ்மித் அதிகபட்சமாக 144 ரன் விளாசினார். இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 374 ரன் குவித்தது. ஜோ பர்ன்ஸ் 133, கேப்டன் ஜோ ரூட் 57, பென் ஸ்டோக்ஸ் 50, பிராடு 29, வோக்ஸ் 37* ரன் விளாசினர். இதைத் தொடர்ந்து, 90 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 3ம் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் பேங்க்ராப்ட் 7, வார்னர் 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். உஸ்மான் கவாஜா 40 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஸ்டீவன் ஸ்மித் 46 ரன், டிராவிஸ் ஹெட் 21 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஹெட் 51 ரன் எடுத்து (116 பந்து, 6 பவுண்டரி) ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். அடுத்து வந்த மேத்யூ வேடு பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, ஸ்மித் சதம் அடித்து அசத்தினார். ஒரே ஆஷஸ் டெஸ்டின் 2 இன்னிங்சிலும் சதம் அடிக்கும் சாதனையை கடைசியாக 2002ல் மேத்யூ ஹேடன் நிகழ்த்தியிருந்தார். ஸ்மித் உட்பட இதுவரை 5 ஆஸி. வீரர்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். ஸ்மித் - வேடு ஜோடி 5வது விக்கெட்டுக்கு 126 ரன் சேர்த்தது. ஸ்மித் 142 ரன் (207 பந்து, 14 பவுண்டரி) விளாசி வோக்ஸ் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
86 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்திருந்தது. வேடு 70 ரன், கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னுடன் களத்தில் இருந்தனர். 300 ரன்னுக்கும் அதிகமான இலக்கை துரத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=515562

 

 

  • தொடங்கியவர்

251 ஓட்டத்தினால் ஆஸி. அபார வெற்றி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.

EBMwoVaX4AAQTA8.jpg

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் முதல் இன்னிங்சில் முறையே அவுஸ்திரேலிய அணி 284 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணி 374 ஓட்டங்களையும் எடுத்திருந்தன.

90 ஓட்டம் என்ற பின்தங்கிய நிலையில் 2 ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய 7 விக்கெட்டுக்களை இழந்து 487 ஓட்டங்களை பெற்றவேளை ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதன் பின்னர் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 398 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. 

நேற்றைய நான்காம் நாள் முடிவின்போது விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்ற இங்கிலாந்து அணியின் போட்டியின் இறுதி நாளான இன்று அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்களில் திக்குமுக்காடி அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 146 ஓட்டத்துக்குள் சுருண்டது.

இதனால் அவுஸ்திரேலிய  அணி 251 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்று தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இங்கிலாந்து அணி சார்பில் ரோரி பேர்ன்ஸ் 11 ஓட்டத்துடனும், ஜோசன் ரோய் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 28 ஓட்டங்களுடனும், ஜோய் டென்லி 11 ஓட்டத்துடனும், பட்லர் ஒரு ஓட்டத்துடனும், பென் ஸ்டோக்ஸ், ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர் தலா 6 ஓட்டங்களுடனும், மொயின் அலி 4 ஓட்டத்துடனும், கிறிஸ் வோக்ஸ் 37 ஓட்டத்துடனும், ஸ்டீவர்ட் பிரோட் டக்கவுட்டுடனும் ஆட்டமிழந்ததுடன், ஜேம்ஸ் அண்டர்சன் 4 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் நெதன் லியோன் 6 விக்கெட்டுக்களையும், பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

EBNk06YWkAA8Umv.jpg

1. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி பேர்மிங்கம், எம்பஸ்டன் மைதானத்தில் கூடுதல் ஓட்டங்களினால் வெற்றிபெற்ற இரண்டாவது அணியாக அவுஸ்திரேலியா பதிவாகியுள்ளது.

2. உள்ளூர் மைதானமொன்றில் முதல் இன்னிங்ஸில் 90 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களினால் முன்னிலை பெற்று இங்கிலாந்து அணி தோல்வியடைந்த நான்காவது சந்தர்ப்பம் இதுவாகும்.

3 இங்கிலாந்து அணியுடன் முதல் இன்னிங்ஸில் பின் தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற ஐந்தாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

4. முதல் இன்னிங்ஸில் 90 அல்லது அதற்கும் மேற்பட்ட ஓட்டங்களினால் பின்னிலையடைந்து மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் அணியாக அவுஸ்திரேலியா உள்ளது. 

 

1. Biggest wins by runs in Edgbaston:

256 Eng vs WI 2004

251 Aus vs Eng 2019 *

217 Eng vs WI 1963

205 Eng vs NZ 1958

141 Eng vs Pak 2016

 

2. England losing a home Test after a 1st innings lead of 90 or more:

177 v Aus Manchester 1961

90 v WI Trent Bridge 1966

108 v SL Leeds 2014

90 v Aus Edgbaston 2019

 

3. Australia winning in England after conceding a 1st innings lead

The Oval, 1882 (Lead 38)

Leeds, 1948 (38)

Manchester, 1961 (177)

Trent Bridge, 1981 (6)

Edgbaston, 2019 (90) *

 

4. Biggest wins after conceding a 1st innings lead of 90+

251 Aus v Eng Edgbaston 2019 (Lead: 90) *

233 SA v Aus Jo'burg 1966/67 (126)

197 Aus v SL Galle 2003/04 (161)

193 NZ v SL Wellington 2014/15 (135)

https://www.virakesari.lk/article/62019

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.