Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும்

Featured Replies

வான் ஆதிக்கத்தின் விளைவு போரின் வியூகத்தை மாற்றும்

-அருஸ்-

வடக்கு - கிழக்கு மாகாணங்களின் இணைப்பை அவசரமாக பிரித்தது ஏன்? வலிந்த தாக்குதல்களின் மூலம் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுக்கள் என்ற முயற்சிகளை முடக்கியது ஏன்? விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை இல்லாதொழிக்கப்போகின்றோம் என கங்கணம் கட்டிக் கொண்டு தாக்குதல்களை தீவிரப்படுத்தியது ஏன்? என்ற கேள்விகளுக்கான பதில் கடந்த ஏப்பிரல் 30 ஆம் நாள் வெளிவந்துள்ளது.

அன்று நடைபெற்ற மேதின பேரணியின் போது அரசின் பிரதான அரசியல் கட்சியான சிறிலங்கா சுதந்திரக்கட்சி தனது தீர்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தது. அதில் தற்போதைய மாகாண சபைகள் கூட மறைந்து மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டுள்ளன. அதாவது இருந்த உலக்கையும் தேய்ந்து உளிப்பிடியாகிவிட்டது.

எதுவுமே அற்ற இந்தத் தீர்வுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் விடுதலைப் புலிகளை ஒடுக்கிவிடலாம் என எண்ணிய ஆளுங்கட்சி தற்போது வேறு வழியின்றி அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு முகம் கொடுக்கும் முகமாக தனது தீர்வுத்திட்டத்தை முன்வைத்துள்ளது. இது முழுக்க முழுக்க தென்னிலங்கை மக்களையும், கடும் போக்கு கூட்டணிக் கட்சிகளையும் திருப்திப்படுத்தும் முகமாக வரையப்பட்ட தீர்வுத்திட்டமாகவே கணிப்பிடப்பட்டுள்ளது. ஒருவேளை விடுதலைப் புலிகள் பலவீனப்பட்டிருப்பின் இந்த தீர்வுத் திட்டத்தை பல நாடுகள் விழுந்து விழுந்து பாராட்டியிருக்கும்.

முன்னைய அரசுகளைப் போலவே தற் போதைய அரசும் இந்த அரைகுறைத் தீர்வுகளை தமிழ் மக்களுக்கு கொடுப்பதற்கு ஏது வாக தாக்குதல்களை தீவிரமாக்கியிருந்தது. தாக்குதல்களை தேர்ந்தெடுக்கும் போது அதற்கு அனுகூலமான காரணிகளாக அரசு பின்வருவனவற்றை கருதியிருந்தது.

(1) 2004 ஆம் ஆண்டு கிழக்கில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி.

(2) ஆழிப்பேரலையினால் விடுதலைப் புலிகளின் முல்லைத்தீவின் பிரதான தளப்பகுதிக்கு அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக் கும் என்ற கணிப்பு.

(3) போர் நிறுத்த காலத்தில் அனைத்துலகத்தில் கொண்டுவரப்பட்ட தடைகள்.

(4) நவீனமயப்படுத்தப்பட்ட தனது வான்படையும் அதனால் விடுதலைப் புலிகளை முடக்கிவிடலாம் என்ற நம்பிக்கையும்.

இவற்றில் அரசின் விமானப்படையை எடுத்தால் கடந்த 10 வருடங்களில் விமானப் படை பெருமளவில் படைக்கல அதிகரிப்புக் களையும், நவீனமயப்படுத்தல் களையும் மேற்கொண்டுவந்துள்ளது.

அதாவது நவீன மிகை ஒலித் தாக்குதல் விமானங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் கடுமையான தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் படைக்கட்டமைப்பையும், கனரக ஆயுத வளங்களையும், தமிழ் மக்களின் உளவியல் உறுதியையும் உடைக்க போது மானது என நம்பப் பட்டது.

இந்த நம்பிக்கைகளின் மூலாதாரமாக உலக நாடுகளில் நடைபெற்ற போர்களில் வான்படைகள் ஆற்றிய பங்களிப்புக்கள் நோக்கப்பட்டது. உதாரணமாக நேட்டோ படைகளின் ஒரு வான்தாக்குதல் நடவடிக்கை பலமான இராணுவ மற்றும் பொருளாதார கட்டமைப்பையுடைய யூக்கொஸ்லாவாக்கியாவை 1999களில் அடிபணிய வைத்துவிட்டது.

அதே போலவே இஸ்ரேலின் வான் தாக்குதல் அகோரம் 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போரை விரைவாக முடித்துவிட்டது. ஜப்பானின் வான் தாக்குதல் வலிமை 1941 ஆம் ஆண்டு பேள்ஹாபர் துறைமுகத்தில் அமெரிக்காவிற்கு பேரழிவை கொடுத்திருந்தது. அமெரிக்க கூட்டணிப் படைகளின் வான்படை வலிமை 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈராக் போரை ஒரு மாதத்திற்குள் முடித்திருந்தது. இப்படி ஏராளமான உதாரணங்களை சொல்ல முடியும்.

அரசு மூன்றாம் ஈழப்போரிலும், போர்நிறுத்த காலத்திலும் பலப்படுத்தப்பட்ட தனது வான் படையையும், வான் கலங்களையும் நம்பியே நாலாம் கட்ட ஈழப்போரில் தீவிரமாக இறங்கியதாக தெரிகின்றது. இந்தக் கால கட்டத்தில வான்படையினரால் தமிழ் மக்களின் பகுதிகள் மீது நிகழ்த்தப்பட்ட பல நூற்றுக்கணக்கான வான் தாக்குதல்களும் அதையே வலியுறுத்துவதாக அமைந்துள்ளன.

ஆனால் அரசு ஒன்றை எண்ணிப்பார்க்க மறந்து விட்டது. அதாவது இதே உத்தியை விடுதலைப் புலிகளும் கையாண்டால் அதன் தாக்கங்கள் எவை? அவற்றை தாங்க முடியுமா என்பவற்றை சிந்தித்து பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

அதாவது உலகக்கிண்ண துடுப்பாட்ட போட்டியின் இறுதிச்சுற்று நிகழ்ந்த நாளில் நள்ளிரவில் இலங்கையின் மிகவும் முக்கியமான பொருளாதார இலக்குகளான கொலன்னாவ எண்ணைக்களஞ்சியம் மற்றும் முத்துராஜவெல எரிவாயு குதங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மிகவும் அதிர்ச்சிகரமானவை. கட்டுநாயக்கா தொடக்கம் இரத்மலானை வரையிலுமான 50 கி.மீ தூரத்திற்கு விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள், பீரங்கிகள், சிறிய ரக தாக்குதல் துப்பாக்கிகள் கொண்டு படையினர் வான் எதிர்ப்புத் தாக்குதலை சரமாரியாக தொடுத்த போதும் புலிகள் இரு இலக்குகளையும் தாக்கிவிட்டு சென்றுவிட்டனர்.

இரண்டாம் உலகப்போரில் 1942 ஆம் ஆண்டு கொலன்னாவை எண்ணெய்க்குதங்களை ஜப்பானின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்கிய பின்னர் தற்போது மீண்டும் ஒரு வான்தாக்குதலை அது சந்தித்துள்ளது. அன்று யப்பானின் வான்படை வீசிய குண்டுகள் குறிதவறி அருகில் இருந்த அங்கொடை மனநல வைத்தியசாலை வளாகத்துக்குள் வீழ்ந்திருந்தன.

ஏறத்தாழ ஓரு மாதகாலப் பகுதியில் விடுதலைப் புலிகள் தமது வான்படை மூலம் இரு தடவைகள் கொழும்பையும் ஒரு தடவை பலாலியையும் தாக்கிவிட்டு எதுவித சிரமங்களுமின்றி தளம் திரும்பியது. இலங்கை வான்பரப்பின் மீது அரசு கொண்டுள்ள பிடிதளர்கின்றதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. மேலும் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் இலக்குகளை பாதுகாக்க தேவைப்படும் விமான எதிர்ப்பு பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளின் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் பீதியை கிழப்பியுள்ளது.

எனினும் பெருமளவில் வாங்கிக் குவிக்கப்படும் விமான எதிர்ப்பு ஆயுதங்களினால் வேறு பல சிக்கல்களும் தோன்ற வாய்ப்புக்கள் உண்டு. அரசின் முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்யும் விமானங்களையோ அல்லது அச்சத்தின் காரணமாக அனைத்துலக விமான சேவை நிறுவனங்களின் விமானங்களையோ தாக்கி விட்டால் நிலைமை மிக மோசமாகிவிடும்.

ஏற்கனவே வவுனியாவில் ஒரு பயணிகள் விமானமும், கட்டுநாயக்கா வான்பரப்பில் வைத்து வர்த்தக விமானம் ஒன்றும் படையினரின் விமான எதிர்ப்புத் துப்பாக்கி மற்றும் விமான எதிர்ப்பு பீரங்கிகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருந்தன. துப்பாக்கி களின் தூர வீச்சு குறைவாக இருந்ததும் விமானங்கள் அதிக உயரத்தில் பறந்ததும் பெரும் அனர்த்தங்களை அன்று தவிர்த்திருந்தது. எனவே தான் அரசும் அதன் ஆலோசகர்களும் சிறிய ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளின் விமானங்களை வீழ்த்துவது எப்படி என சிந்தித்து வருகின்றனர்.

விடுதலைப் புலிகளிடம் உள்ள விமானங்கள் P� ணுடin-143 மற்றும் Pஊ-9 (Pடையவரள Pஊ-9ஃயுஇ ளுறவைணநசடயனெ) ரகத்தை சோந்த இலகுரக பயிற்சி விமானங்கள் என்றும் அதனை இலகுவாக சிறியரக ஆயுதங்களால் சுட்டுவீழ்த்திவிடலாம் எனவும் அரசுக்கு கூறப்படும் ஆலோசனைகள் எவ்வளவு தூரம் சரிவரும் என்பது கேள்விக்குறியே.

ஏனெனில் 1987 களில் இலங்கை அரசின் முன்னணி தாக்குதல் விமானமாக பயன் படுத்தப்பட்ட சியாமாசெற்றி (ளுஐயுஐ ஆயசஉhநவவi ளுகு.260) ரக விமானமும் ஒரு இலகுரக விமானமே. அது ஒரு விமானியும், இரு பயணிகளும் அமர்ந்து செல்லும் பயிற்சி விமானமாகும். இத்தாலியில் இருந்து கொள்வனவு செய்த பின்னர் அதனை குண்டுவீச்சு மற்றும் உந்துகணை செலுத்தும் தாக்குதல் விமானமாக அரசு வடிவமைத் திருந்தது. ணுடin-143இ Pஊ-9 விமானங்களும் ஏறத்தாள அதனை ஒத்த விமானங்களே.

சியாமாசெற்றி விமானத்தைக் கொண்டு 1987களில் ஒபரேசன் லிபரேசன் எனும் பெரும் இராணுவ நடவடிக்கையை படையினர் மேற்கொண்டிருந்தனர். 1990களில் விடுதலைப் புலிகளின் சிறியரக ஆயுதத்தின் நேரடியான சூட்டுக்கு இலக்காகி அது பண்ணைக் கடலில் வீழ்ந்து நொருங்கும் வரையிலும் ஒபரேசன் பலவேகய, ஒபரேசன் மின்னல் உட்பட பல இராணுவ நடவடிக்கைகளில் அது முக்கிய பங்காற்றி இருந்தது.

அதாவது விடுதலைப் புலிகளின் விமானத்தை கண்டதும் ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திவிடலாம். ஆனால் அவர்கள் இரவில் பறப்பதால் முடியாமல் உள்ளது என அரச தரப்பால் முன்வைக்கப்படும் வாதங்கள் நூறு வீகிதங்கள் உண்மையாகப் போவதில்லை.

ஏனெனில் இது சாத்தியமானால், பகலில் குண்டு வீசிய சியாமாசெற்றி விமானங்கள் அனைத்தையும் 1987 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தமது கைகளில் இருந்த ஏ.கே-47 ரக மற்றும் 0.50 கலிபர் துப்பாக்கிகளால் இலகுவாக சுட்டு வீழ்த்தியிருக்க முடியும்.

மேலும் விடுதலைப் புலிகள் தமது வான்படையை அமைத்த போது அதற்கான வான் பாதுகாப்பு பொறிமுறைகளையும் வடி வமைத்திருந்தனர். அதே போலவே தமது வான்கலத்தின் மீதான தாக்குதல்கள் எத்தகையது அதனை முறியடிக்கும் வழிமுறைகள் என்ன என்பன குறித்தும் சிந்திக்காமல் இருக்க மாட்டார்கள்.

சிறிய இலகு ரக விமானங்களைக் கொண்ட வான்படை என விடுதலைப்புலிகளின் வான்படையை எண்ணி அரசு நிம்மதியடைய முடியாது. ஏனெனில் 1986களில் அரசின் பிரதான தாக்குதல் விமானங்களும் தற்போதைய விடுதலைப் புலிகளின் தாக்குதல் விமானங்களை ஒத்த 06 சியாமாசெற்றி விமானங்கள் தான். மேலும் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் தனது விமானப்படையை அமைத்த போதும் 19 இலகுரக விமானங்களைக்கொண்டே அமைத்திருந்தது. அந்த விமானங்களுக்கான விமானிகள், பொறியியலாளர்கள் போன்றோரையும் உலகெங்கும் பரந்து வாழ்ந்த யூதமக்களிடம் இருந்து தொண்டர் சேவை என்னும் அடிப்படையில் பெற்றுக் கொண்டிருந்தது.

கடல் ஆளுமையை விடுதலைப் புலிகளுக்கு விட்டுக்கொடுக்க முடியாது என போர்நிறுத்த காலத்தில் விடாப்பிடியாக நின்ற அரசுக்கு தற்போது வான் ஆதிக்கமும் கேள்விக்குறியாக்கியிருப்பத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.