Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்" வான்புலிகளை முன்வைத்து ஒரு விபரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்"

வான்புலிகளை முன்வைத்து ஒரு விபரணம்

-பரணி கிருஸ்ணரஜனி-

கடந்த 26 ஆம் திகதி மாலைப்பொழுது அல்ஜசீராத் தொலைக்காட்சியின் ஆங்கில சேவை வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று சீரழியும் சிங்கள அபலைப் பெண்களின் கண்ணீர்க் கதைகளினூடாக சிங்களத்தின் வேறொரு முகத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் கொண்டிருந்தது.

சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு இரையாகி அல்லலுறும் எமது தமிழ்ப் பெண்களின் துயரத்திற்கு நிகரான வலியையும் கவலையையும் மனதில் விதைத்தன அந்தக் கண்ணீர்க் கதைகள். அந்த அபலைகளின் துயரத்திற்குப் பின்னான காரணமாக முன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவான சில பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டாலும் அதன் வழியே போகிறபோக்கில் சிங்கள அதிகார பீடம் கடும் விமர்சனத்திற்குள்ளானது.

ஊழலும் வன்முறையும் நிறைந்த சிங்கள அதிகார வர்க்கம் தமது அதிகாரத்தைத் தக்க வைக்க நடத்தும் சித்து விளையாட்டின் ஒரு பக்க விளைவாகவே அந்தப்பெண்களை நாம் அடையாளங் காணமுடியும். இதை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்திய அல்ஜசீராவின் பணி பாராட்டுதலுக்குரியது.

அதிகாரத்துவத்தினதும் முதலாளித்துவத்தினதும் ஊதுகுழல்களாக மாறி ஒற்றை அறம் பேசும் மேற்குலக ஊடகத்தளத்தில் ஒரு மாற்றுக்குரலாக- எதிர்குரலாக இயங்கும் அல்ஜசீராவின் பணி கவனிப்புக்குரிய ஒன்றாகும். அல்ஜசீரா வழியே அந்தப் பெண்களின் துயரம் உலகெங்கும் பரவிக் கொண்டிருந்த தருணத்தில் மகிந்தராஜபக்ச கிரிக்கெட் இறுதிப்போட்டியைக் காண விமானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிப் பறந்து கொண்டிருந்தார். நாடு எரிந்து கொண்டிருந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனின் கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

இந்த அபத்தத்தை அதிகப்படுத்துவது போல் அவரை வழியனுப்பிவைத்த விமான நிலையம் வேறொரு செய்தியை அவருக்கு அனுப்பி வைத்தது. அதுதான் இந்தக் கட்டுரையினூடாக நாம் பேசப் போகும் விடயம்.

அந்த விவரணப்படம் முடிந்து வெகுநேரமாகியும் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் தொலைக்காட்சிப் பெட்டியை வெறித்துப்பாத்தபடியே உட்கார்ந்திருந்தேன். எனது நினைவுகளைக் கலைப்பது போல் திரையில் டீசநயமiபெ நேறள என்ற வாசகங்கள் மின்னின.

உற்று நோக்கினால் 'கொழும்பு சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு நகருக்கான அனைத்து மின்சார இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டன" என்ற அந்த வாசகங்கள் என்னைப் பெரும் பதற்றத்துக்குள்ளாக்கின.

உடனடியாகத் தாயகத்திற்கு தொடர்பு ஏற்படுத்திய போது தொலைபேசி இணைப்புக்கள் சந்தர்ப்பம் பார்த்துச் சதி செய்தன.

அவுஸ்திரேலியா தொடக்கம் கனடா வரை பரந்துள்ள ஊடகத்துறை நண்பர்களுடன் மின்னஞ்சலினூடாகவும் தொலைபேசியினூடாகவும் தொடர்பை ஏற்படுத்தி விபரம் அறிய முற்பட்டபோது அவர்களும் என்னையொத்த நிலையிலேயே இருந்தார்கள்.

செய்தியறிந்து தமது வயதையும் பதவிகளையும் சற்றே ஒதுக்கிவிட்டு ஒரு குழந்தையின் குதூகலத்தடன் காணப்பட்டார்கள். ஆனால் சிங்களம் மிகத் 'தெளிவாகக்" குழம்பியிருந்தது. ஊடகங்கள் வழி முன்னுககுப் பின் முரணாகச் செய்திகளை தம் இஸ்டத்திற்கு வாரி இறைத்துக்கொண்டிருந்தது.

இத்தாலியிலிருந்து ஒளிபரப்பாகும் ஒரு சிங்களத் தொலைக்காட்சியில் கொழும்பிலிருந்து ஒரு சிங்கள ஆய்வாளர் கட்டுநாயக்க விமான நிலையம் மீது தாக்குதல் நடத்த வந்த புலிகளின் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டதாக ஏதோ நேரில் பார்த்தவர் போல் தனது ஆய்வுகளைக் கவிழ்த்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் அன்று புலிகள் எந்தத் தாக்குதலையும் நடத்தவில்லை. அன்று என்ன நடந்தது என்று இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கணம் வரை யாராலும் வரையறுத்துக் கூறமுடியவில்லை.

கற்பனைகளுக்கும் கட்டுக்கதைகளுக்கும் எதிர்வினை புரியும் ஒரு சமூகம் பதட்டமடைவது இயல்பானதே. அன்று சிங்கள தேசத்தைப் பாடாய்ப்படுத்தியது இத்தகைய பதட்டம்தான்.

விமான நிலையம் மூடப்பட்டு விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. விமான நிலையத்தின் அனைத்து நியம ஒழுங்குகளும் சீர்குலைந்தன. நகர் இருளில் முழ்கியது.

மொத்தத்தில் சிங்கள தேசத்தின் தலைநகரம் மறுநாள் காலை வரை செயலிழந்து கிடந்தது. எங்கோ தேள் கொட்ட எங்கோ நெறிகொட்டியதாம் என்ற கதையாய் செய்தியறிந்து அனுராதபுரத்தில் தரித்து நின்ற ஆஐ - 24 ரக உலங்குவானூர்தி ஒன்று தரையிலிருந்து மேலேழுந்து மீண்டும் தரையில் மோதி 'தற்கொலை" செய்து கொண்டது.

மறுநாள் காலையில் விமான நிலையம் செயலிழந்ததனாலும் நகரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டதனாலும் ஏற்பட்ட பல மில்லியன் ரூபா நட்டத்தை சிங்கள தேசம் சுமக்க வேண்டியிருந்தது.

தாக்குதல் எதுவும் நடைபெறாமலேயே ஒரு மோசமான தாக்குதலின் விளவுகளை சிங்கள தேசம் அனுபவித்துத் தொலைத்தது.

அன்றிலிருந்து மீண்டும் இலங்கைத் தீவிலிருந்து காணாமல் போன ஒரு சொல்லாடலை உலகம் தூசிதட்டி எடுத்தது. அது 'வலுச்சமநிலை". அதைச் சாத்தியப் படுத்தியவாகள் வான் புலிகள். வலுச்சமநிலை குறித்து பல தடவை பேசியாயிற்று. இருந்தபோதும் சில அடிப்படைகளை நாம் பார்ப்போம்.

படிப்படியாகத்தான் வலுச்சமநிலையை ஒரு நாட்டால் தம்பக்கம் திருப்பமுடியுமேயொழிய ஒரேயடியாக குறுகிய கால இடைவெளியில் அதை ஒரு தரப்பு தம்பக்கம் திருப்பமுடியாது என்பது படைவல்லுனர்களின் கருத்து.

இந்த வாய்பாட்டிற்கமைய சமாதானத்தின் பின்னான போர் நகர்வுகளை முன்வைத்து சிங்களத்தின் பக்கம் வலுச்சமநிலை சாய்ந்து விட்டதாகக் கருத்து வெளியிட்டார்கள் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு படைத்துறை ஆய்வாளர்கள்.

அத்தோடு இன்னொரு கருத்தும் உலாவியது. என்னவெனில் சீரான முறையில் சிங்களம் வலுச்சமநிலையத் தம்பக்கம் திருப்பியுள்ளதாலும் அதை மீளத் தம்பக்கம் புலிகள் திருப்பமுடியாதவாறு காய்கள் நகர்த்தப்பட்டுள்ளன என்றும் எதிர்வு கூறப்பட்டது. சம்பவங்களும் சந்தர்ப்பங்களும் இந்த எதிர்வுகூறலை மெய்ப்பிப்பதாகவே இருந்தன.

ஆனால் பிரபாகரன் முன்பு போலவே இந்த வாய்ப்பாடுகளையும் சூத்திரங்களையும் போட்டுடைத்து வலுச்சமநிலையைத் தம்பக்கம் திருப்பிவிட்டிருக்கிறார்.

அவருக்கு இதற்காகத் தேவைப்பட்ட கால அவகாசம் ஒரு மாத காலமே. கட்டுநாயக்கா விமான நிலையத்தில் போட்பட்ட வான்புலிகளின் முதல் குண்டுடன் ஆரம்பமாகிய இதற்கான நகர்வுகள் ஒருமாத காலத்தின் பின் வான்புலிகள் போடாத குண்டுகளுக்கு சிங்களம் புரிந்த எதிர்வினை முலம் சாத்தியமாகியிருக்கிறது.

இன்று சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத்தீர்மானிக்கும் சக்தி பிரபாகரன்தான் என்பது மீண்டும் ஒரு முறை நீரூபிக்கப்பட்டிருக்கிறது. ஈழத்தின் மூத்த ஆங்கிலப் பத்திரிகைளாளர் சிவநாயகம் அவர்கள் ர்ழவளிசiபெ இதழில் ஒரு தலையங்கம் தீட்டியிருந்தார். அதன் தலைப்புத்தான் 'நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்"

அந்தத் தலையங்கம் தீட்டப்பட்ட காலப்பகுதி ஆச்சர்யமாக விருந்தது. ஏனெனில் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வந்து 'ஜெயசிக்குறு" சமரை எதிர்கொண்டிருந்த நேரம் அது. அவரை நேரில் கண்டபோது இது குறித்துக் கேட்டேன், அவர் சொன்னார் கொழும்பில் தாக்குதல் நடத்தக் கூடிய சக்தி உள்ளவரை சிங்களத்தின் தலைவிதி பிரபாகரன் கையில்தான் என்று.

அப்போதும் எனக்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை. குழப்பத்துடனேயே இருந்தேன்.

ஆனால் இன்று வான்புலிகளின் பிரவேசத்துடன் பிரபாகரன் சொல்லியிருக்கும் செய்தி மிகத் தெளிவானது மட்டுமல்ல சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கவும் தொடங்கிவிட்டார்.

மகிந்தவின் படைகள் கைகளைக் கால்களை வெட்டி கண்ணாமுச்சி காட்டிக்கொண்டிருக்க பிரபாகரன் படை இதயத்தில் போய் தாக்கிக்கொண்டிருக்கிறது. வான்புலிகளினால் ஏற்பட்டிருக்குகும் கிலியும் பீதியும் அதன் வீழ்ச்சியின் குறியீடாவே மாறிவிட்டது.

இன்று ஒரு வான்புலிகள் குறித்த அனாமதேய தொலைபேசி அழைப்பே போதும் அதன் நிர்வாக எந்திரங்களை முடக்குவதற்கும் பொருளாதார ரீதியான பேரிழப்பிற்கும். நிலமை இந்தளவிற்குத் தலைகீழாகும் என்று சிங்களம் மட்டுமல்ல அதைத்தாங்கிக் பிடிக்கும் உலக நாடுகள்கூட சிந்தித்திருக்க மாட்டாது.

கிரிக்கெட் பார்க்கச் சென்ற மகிந்த 'நாடு திரும்பும் நிகழ்ச்சி நிரல் இப்போது புலிகளின் கையில்.

அண்மைக்காலமாகவே பெரும் இராணுவப் பின்னடைவுகளைப் புலிகள் பல வழிகளிலும் சந்தித்து வந்தனர் அத்துடன் சமாதான காலத்தில் பல சர்வதேச தடைகள் அழுத்தங்கள் வேறு. போததற்கு ஒட்டுக்குழுக்களின் அட்டுழியங்களும் அதிகரித்திருந்தன. இதனால் சோர்வடைந்து போன மக்கள் வேறு விரக்தியின் விளிம்பில் நின்று புலம்பித் திரிந்தனர்.

இவையெல்லாவற்றையும் ஒருசேர வெல்வதென்பது சாதாரண விடயமல்ல என்பதுடன் சாத்தியமுமில்லை என்று எல்லோருமே முடிவுகட்டியிருந்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இதில் போராட்டத்திற்கு ஆதாரவானவாகள் எதிரானவர்கள் என்ற பாகுபாடு இருக்கவில்லை.

ஊடகத்துறையைச் சேர்ந்த நாங்களும் மக்களை சோர விடாமல் நம்பிக்கைகளை அளித்துக்கொண்டிருந்த போதும் ஒரு சந்தேகம் மனதில் உறுத்திக்கொண்டேயிருந்தது.

புலிகள் மீண்டும் எழுவார்கள், வெல்வார்கள் என்று கைகள் எழுதியதேயொழிய கால்கள் நடுங்கிக்கொண்டுதானிருந்தன.

ஆனால் பிரபாகரன் வான்புலிகளை வழியனுப்பி வைக்கமுன் எடுத்த புகைப்படத்தை உற்றுப்பார்த்தபோது அதில் விடுதலை குறித்த எந்தவிதமான நம்பிக்கையீனங்களும் இல்லை.

தமிழீழம் மீதான பெரும் நம்பிக்கைகள் சுடர்விட்டுப் பிரகாசித்தன. அந்தப் பிரகாசம் இன்று உலகத்தமிழினம் முழுவதையும் மீண்டும் ஒரே குடையின் கீழ் அணிதிரள வைத்திருக்கிறது.

வான் தாக்குதல் முலம் பிரபாகரன் சிங்களத்திற்கு சொன்ன செய்திகளை விட சர்வதேசத்திற்கு செல்லியதுதான் ஏராளம்.

உலகம் புரிந்து விட்டது. புலிகள் மீதான சர்வதேசத் தடைகள் எடுப்பது குறித்தும் அவர்களின் சமதரப்பு அங்கீகாரம் குறித்தும் இப்போது மீண்டும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒஸ்லோவில் களைகட்டிய சமாதானத் திருவிழா இப்போது இலண்டனில் களைகட்டும் சாத்தியம் தெரிகிறது.

அதையும் எதிர்கொள்வார் பிரபாகரன்- அவருக்கேயுரிய தனித்துவத்துடன்.

இந்தக்கட்டுரையை எழுதி முடித்துக்கொண்டிருக்கும் தருவாயில் மன்செஸ்ரர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமை புரியும் எனது நண்பர் ஒருவர் தொலைபேசி எடுத்தார். நான் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன் சற்று தாமதித்து எடுங்கள் என்றேன்.

அவர் 'என்ன தலைப்பு" என்று கேட்டார்.

நான் 'சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்" என்றேன். அதற்கு அவர் தலைப்பை சிறிது மாற்றிக்கொள் என்று சொல்லி கூறிய தலைப்பு 'தெற்காசியாவின் நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்."

நன்றி - தமிழ்நாதம்

எம் தலைவனைக் கண்டு உலகம் பிரமிப்பது இருக்கட்டும்...

பிரமிப்பை விட்டு..அவர் அவாவை பூர்த்தி செய்ய உதவுங்கள்...

வாழும் காவியத்துக்கு வெற்றிப்பட்டையம் தாருங்கள்..

அவர் வரீம் காலத்தில் எம் தெய்வத்தை சுதந்திர தமிழ் தாயகத்தை கண்டு களிள்ள கூடிய பேரின்பத்தை பெறுவதற்கான காரியத்தில் கை கொடுங்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.