Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் கலாசாரத்தின் ஆரம்பம்

Featured Replies

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவாரென ஜனாதிபதித் தேர்தலின் போது ஆரம்பத்திலேயே தெரியவந்தது. சூழலைப் பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்தி தனது தேர்தல் பிரசாரங்களுக்கு போஸ்டர், பொலித்தீன் என்பவற்றை அவர் பாவிக்கவில்லை. இதனை ஏனைய வேட்பாளர்களும் பின்பற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவர் தனது அரசியல் மேடையை ஏனைய வேட்பாளர்கள் மீது சேறு பூசுவதற்காக பாவிக்கவில்லை. அதற்குப் பதிலாக தனது எதிர்கால அபிவிருத்தி திட்டங்களையே மக்களுக்குத் தெரிவித்தார்.

66col66666130902239_9545846_20112019_SNB

தேர்தல் போட்டிக்கு முகம்கொடுத்து எதிராளியைத் தோற்படிப்பது அரசியலில் இடம்பெறும் சிறப்பு விடயமாகும். அதற்குப் பதிலாக அதிகாரத்திலிருந்த கட்சி பலவிதமான தடைகளை ஏற்படுத்த முயற்சி செய்தது. அது கோட்டாபயவை தேர்தலில் போட்டியிடுவதைத் தடுப்பதற்காகும். அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்களின் ஆதரவு உள்ளதென்பதை முன்னரேயே அறிந்திருந்தார்கள்.

கோட்டாபய ராஜபக்ஷ தனது தேர்தல் பிரசாரத்தின் போது அனைத்து மக்களினதும் ஆதரவைக் கோரியிருந்தாலும் சிறுபான்மையினர் அவரின் கோரிக்கையை செவிமடுக்கவில்லை. ஆனாலும் தனக்கு வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் ஒரே மாதிரியாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவேன் எனக் கூறியுள்ளார்.

தனது ஆரம்ப காலத்தை ஹம்பாந்தோட்டை வீரக்கெட்டிய கிராமத்திலேயே கழித்தார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்று கடற் அதிகாரியாக 1971 ஏப்ரல் 26ம் திகதி இலங்கை இராணுவத்தில் சேர்ந்தார். 1972 மே 25ம் திகதி இரண்டாவது லெப்டினன்ற் ஆக பதவி வகித்தார். இலங்கை சமிக்ஞைகள் படை அணி, சிங்க ரெஜிமெண்ட், ரஜரட்ட ரைபள், விஜயபாகு காலாற்படை ரெஜிமெண்ட் என்பவற்றோடு இணைந்து இரண்டாவது கட்டளை அதிகாரியாகப் பணியாற்றினார்.

முதலாவது கஜபா ரெஜிமெண்ட் 1983ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 1971/ 1992 வரை தனது 21 வருட கால இராணுவ சேவையில் கட்டளை அதிகாரியாக காட்டிய திறமைக்கு ரணவிக்ரம பதக்கம், ரணசூர பதக்கம், ஜே. ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச, டி. பி. விஜேதுங்க ஆகிய அப்போதைய ஜனாதிபதிகளால் மும்முறை பெற்ற வீரராவார். அவர் கற்ற வெளிநாட்டுப் பாட நெறிகள் அநேகம். அவர் 1987 வடமராட்சி யுத்தம், ‘ஒபரேஷன் ஸ்ரைக் ஹாட்’ ,முப்படைகளின் நடவடிக்கைகளை (1991) என்பவற்றை வெகு வெற்றிகரமாக செயற்படுத்திய கட்டளையதிகாரியாவார்.

1992ம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் பணியாற்றினார். அவ்வருடம் தனது 21 வருட கால இராணுவ வாழ்க்கையை முடிவு செய்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பதவிக்காக அமெரிக்கா லோஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு சென்றார். 30 வருடகால யுத்தத்தை தோல்வியடையச் செய்ய 2009ஆம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து பெரும் பங்காற்றினார். 2006ம் ஆண்டு டிசம்பர் 01ம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

59col99130402304_9545840_20112019_SNB_CM

2019ம் ஆண்டு ஓகஸ்ட் 11ம் திகதி மஹிந்த ராஜபக்ஷவால் 2019 இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டார்.

 

ராஜபக்ஷக்களின் சரித்திரம்:

இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றி முழு உலகமுமே பேசுகின்றது. பல தடைகளைத் தாண்டி தனது வெற்றியை அடைந்தவர் அவர். தெற்கிலுள்ள சாதாரண மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். அவர் வீழ்ந்த போதெல்லாம் அவர்கள் கைதூக்கி விட்டார்கள். அவரது 49 வருட கால அரசியல் வாழ்க்கையில் அவர் சம்பாதித்த சொத்து 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவாகும். யுத்தத்தை ஆயுதத்தால் அழிக்க முடியாது என்று கூறிய வேளையில் அதனை முடிவுக்குக் கொண்டு வந்தவர் அவர். யுத்தம் நடைபெற்ற வேளையிலும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்தவர் மஹிந்த. நாட்டைப் பொறுப்பேற்கும் போது தனிமனித மொத்தத் தேசிய வருமானம் 1420 அமெரிக்க டொலர்களாகும். அது 2014ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் 3400 ெடாலராக அதிகரித்திருந்தது. நாட்டின் யுத்தத்தையும் பொருளாதாரத்தையும் வெற்றிகொள்ளும் திறமை அவருக்கு இருந்தது.

அவர் ஹம்பாந்தோட்டை ருஹுணு மாகம்துறை துறைமுகத்தை புதிதாக அமைத்தார். கொழும்புத் துறைமுகத்தின் 2ம் கட்டப் பணியையும் பூர்த்தி செய்தார். கொழும்பு துறைமுகத்தை அண்டிய கடலை நிரப்பி 500 ஏக்கரில் புதிய நகரமொன்று உருவாக்கப்படுகின்றது. இதன் மூலம் இரண்டு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகின்றது. பட்டதாரிகளுக்கு உத்தியோகம் பெற்றுக் கொடுத்து அரசு ஊழியர்களை 15 இலட்சமாக ஜனாதிபதி மஹிந்த அதிகரித்தார்.

 

தெற்கின் சிங்கங்களான ராஜபக்ஷக்கள்

ராஜபக்ஷக்கள் சரித்திர காலம் தொட்டே மக்கள் சேவையை அர்ப்பணிப்புடன் செய்தவர்கள். அவர்களின் அரசியல் சரித்திரத்தில் அவர்கள் திடீரென அதிகாரத்துக்கு வந்தவர்கள் அல்ல. தெற்கில் அவர்களைப் பற்றி முதலில் குறிப்பிடப்படுவது 1761ம் ஆண்டு கண்டி அரச மாளிகையில்அனுமதி பெற்று மடுவன்வெல பிரதேச 13 நிலமேக்களுடன் தெற்கில் போர்த்துக்கேயரின் கோட்டையை தாக்க வந்தவர்கள் என்பதாகும்.

அதில் ஒருவர் கொடக்கவெல ராஜபக்ஷ நிலமே. சப்ரகமுவ படையுடன் சண்டையிட்ட இந்த நிலமே கட்டுவன, தங்காலை, மாத்தறை போர்த்துக்கேய கோட்டை மற்றும் காலிக்கோட்டை என்பவற்றைத் தாக்கியுள்ளார்கள்.

பின்னர் படையினர் சப்ரகமுவையை நோக்கிச் செல்லும் போது ராஜபக்ஷ நிலமே மாத்தறை கரத்தொட்ட விஜேசிங்க குடும்பத்தின் பெண்ணொருவரை திருமணம் முடித்து தனது வசிப்பிடமாக கரத்தொட்டையை ஆக்கிக் கொண்டார். இவர்களின் வழி வந்த வணிகசிந்தாமணி தொன் அந்திரிஸ் ராஜபக்ஷ 1818 இல் ஊவவெல்லஸ்ஸ யுத்தத்தில் வீர கெப்பட்டிபொல நிலமேயுடன் இணைந்து போர் புரிந்தார். வீரக்கெட்டிய புத்தியாகம என்னும் இடத்துக்கு வசிக்க வந்த அவரின் வழிவந்த டி. ஏ. ராஜபக்ஷவின் தந்தை டொன் டாவித் ராஜபகஷவாகும். வீரகெட்டிய புத்தியாகம வளவ்வை தனது பிறந்த இடமாகக் கொண்ட அவரின் புதல்வர்கள் டீ. ஏ. ராஜபக்ஷ டி. எம். ராஜபக்ஷ ஆவர்.

ஊவா புரட்சியின் போது வீர கெப்பட்டிபொல காட்டிக்கொடுக்கப்பட்டு ஆங்கிலேயர் கைது செய்த போது வணிகசிந்தாமணி மொஹட்டி டொன் அந்தியஸ் ராஜபக்ஷவும் அவரது ஆதரவாளர்களும் மாணிக்க கங்கையின் ஊடாக கதிர்காமத்துக்கு தப்பிச் சென்றார்கள்.

அவர்களைப் பின்தொடர்ந்து வந்த ஆங்கிலேயரால் டொன் அந்திரியஸ் ராஜபக்ஷவை கைது செய்ய முடியவில்லை. அவர் பின்னர் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தார்.

அவரால் அதனை செய்ய முடியாது போனாலும் அவரின் பேரர்களான டி. எம்.ராஜபகஷ, டி. ஏ. ராஜபக்ஷ ஆகியோர் முன்னெடுத்துச் சென்றார்கள்.

1936ல் கவுன்சில் சபைக்கு டி. எம். ராஜபக்ஷ முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் ஒரு குலத்தைச் சேர்ந்த மக்களுக்கு மேலாடையணிவது ஆங்கிலேயருக்கு ஆதரவான பிரபுக்களால் தடை செய்யப்பட்டிருந்தது. அதனைப் போராடி அவர்களுக்கும் அவ்வுரிமையைப் பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் அவர்களின் ஆதரவையும் பெற்றார். அவர் 1945 வரை அம்மக்களின் பிரதிநிதியான கவுன்சில் சபையின் பிரதிநிதியாக இருந்தார்.

திடீரென அவரின் மறைவுக்குப் பின்னர் டொன் அந்தியஸ் ராஜபக்ஷவின் இன்னொரு பேரரான மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையான டி. ஏ. ராஜபக்ஷவை பதவிக்கு வருமாறு கோரினார்கள். சாதாரண வாழ்க்கையை மேற்கொண்ட முதலில் அதனை ஏற்கவில்லை. ஆனால் மக்களின் வற்புறுத்தல் காரணமாக வயலில் தனது கைையக் கழுவிய பின்னர் ஹம்பாந்தோட்டை இடைத்தேர்தலில் போட்டியிடக் கையெழுத்திட்டார்.

அதில் ஏகமனதாகத் தெரவு செய்யப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பமாக பண்டாரநாயக்கவின் அரசிலிருந்து விலகி எதிர்க்கட்சிக்கு மாறிய சந்தர்ப்பமாகும். அவருடன் எதிர்க்கட்சிக்கு சென்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆரம்பித்து பொதுமக்களுக்காகப் பணியாற்றியவராவார். அப்போதைய பிரதமர் டி. எஸ். சேனநாயக்க பண்டா போனதைப் பற்றிக் கவலையில்லை, டீ. ஏ. போனது தாங்கமுடியவில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்வின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக பதவி வகித்தார்.

1965 தேர்தலில் பெலிஅத்த பாராளுமன்ற உறுப்பினரான டீ. ஏ. ராஜபக்ஷ அத்தொகுதியில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் ஓய்வாக ஏழ்மையான வாழ்க்கை நடத்திய அவர் 1967 ஆம் ஆண்டு காலமானார். தனது பரம்பரையில் மக்கள் சேவைக்காக லக்ஷ்மன் ராஜபக்ஷ மற்றும் ஜோர்ஜ் ராஜபக்ஷ ஆகியோரை மக்கள் சேவையை முன்னெடுத்துச் சென்றனர்.

1970 ஆண்டு தேர்தலுக்காக பெலிஅத்த தொகுதியில் ராஜபக்ஷ ஒருவரைத் தேடி சிறிமா அம்மையார் டீ. ஏ. ராஜபக்ஷவின் வீட்டுக்கு வந்தார். அப்போது மஹிந்த ராஜபக்ஷவின் தாயார் மூத்த புதல்வர் பொலிஸ் சேவையில் உள்ளார். சிறிய மகன் நன்றாகக் கதைக்கக் கூடியவர். அவனை அரசியலில் ஈடுபடுத்துங்கள் என்று கூறினார். அப்படிக் குறிப்பிட்டது மஹிந்த ராஜபக்ஷவையே ஆகும். 1970 தேர்தலில் பெலிஅத்த தொகுதிக்கு மெதமுலனையில் சிறிய மகன் போட்டியிட்டார். அவரின் பெயர் பேர்சி மகேந்திர ராஜபக்ஷவாகும். பின்னர் பெயரை பெயரை மஹிந்த ராஜபக்ஷ என மாற்றிக்கொண்டார்.

நீங்கள் எனக்கு ஆதரவு தாருங்கள். நான் உங்களைக் காப்பேன் என மக்களுககு உறுதி அளித்தார். அதன்படி 1970ம் ஆண்டு தேர்தலில் பெலிஅத்தயில் பெரும் வெற்றியீட்டினார். 1970 தொடக்கம் 77 வரை வயதில் குறைந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

1977 தேர்தலில் சமகி பெரமுன அரசு தோல்வியடைந்தது. முதற்தடவையாக முல்லிகிரிகல தொகுதி ராஜபக்ஷக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவும் பெலிஅத்தயில் தோல்வியடைந்தார். 1977 இல் அதிகாரத்துக்கு வந்த ஜே.. ஆர் சிறிமாவோ அம்மையாரின் குடியுரிமையையும் பறித்தார். 1982 டிசம்பர் ஜே. ஆர். ஜயவர்த்தன தனது ஆட்சிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்குரிமையைப் பயன்படுத்தினார்.

மீண்டும் முல்கிரிகல இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. 18.-05-.1983ல் நடத்தப்பட்ட இத்தேர்தலில் ஜோர்ஜ் ராஜபக்ஷவின் மகளான நிருபமா ராஜபக்ஷ போட்டியிட்டார். ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தில் அரசியலில் தேர்தலில் ஈடுபட்ட முதலாவது பெண்மணியான அவரை வெற்றி பெற ஐ. தே. க. இடமளிக்கவில்லை.அவ்வேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதந்தகுலரத்ன முல்கிரிகலயில் வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுவொன்றின் மூலம் தோல்வியடைந்தார்.

அதன்பின்னர் நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்ஷ போட்டியிட்டார். மிகவும் மிகவும் தேர்தல் வன்முறைகளை மேற்கொண்டு ஐ.தே.க சமல் ராஜபக்ஷவை தோற்கடித்து குலரத்னவை மீண்டும் வெற்றிபெறச் செய்தார்கள். அதன்பின்னர் மஹிந்தவை பொய்குற்றச்சாட்டில் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் 1988ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஹம்பாந்தோட்டையில் போட்டியிட்டு மஹிந்தவும், சமலும் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார்கள்.

அதிகரித்த பொருளாதார வளர்ச்சி சிறிமாவோ அம்மையாரின் குடியிரிமை ரத்துச் செய்யப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு உயிரூட்டி 1994ம் ஆண்டு வெற்றிக்கு வழிவகுத்தார். 1994ம்ஆண்டு தனக்குக்கிடைத்த மீன்பிடித்துறை அமைச்சை திருப்தியாக நடாத்தினார். சமல் ராஜபக்ஷவுக்கு பிரதியமைச்சுப் பதவி கிடைத்தது. பின்னர் மஹிந்த தொழில் அமைச்சரானார். எதிர்க்கட்சித் தலைவரானார், பிரதமரானார். 2005ம் ஆண்டு நவம்பர் 18ம்திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் மூலம் ஜனாதிபதியானார். 2014ம்ஆண்டு அளவில் இலங்கையை உலகில் சிறந்த பொருளாதார வளர்ச்சியடைந்த நாடாக மாற்றினார். தனது சகோதரரான கோட்டாபய ராஜபக்ஷவுடன் இணைந்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

அவரது சகோதரர் கோட்டாபய 16.11.2019 இல் ஜனாதிபதித் தேல்தலில் வெற்றி பெற்று 18.11.2019 அன்று இலங்கையின் 7வது ஜனாதிபதியாக அனுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

நந்திக பெத்தேகம

https://www.thinakaran.lk/2019/11/22/கட்டுரைகள்/44238/புதிய-அரசியல்-கலாசாரத்தின்-ஆரம்பம்

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.