Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள்.!

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் இன்றாகும்.

திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் கரன், கடற்கரும்புலி மேஜர் சுலோஜன், கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன், கடற்கரும்புலி மேஜர் தமிழினியன், கடற்கரும்புலி மேஜர் குமரேஸ், கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை, கடற்கரும்புலி கப்டன் மொறிஸ், கடற்கரும்புலி கப்டன் மேகலா, கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி, கடற்கரும்புலி கப்டன் வனிதா, கடற்கரும்புலி கப்டன் நங்கை ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 22ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

ஏழு மணிநேரம் இடம்பெற்ற இந்தக் கடற்சமரின்போது தமிழர்களின் வீரம் மீண்டும் சிங்களத்திற்கு கடற்கரும்புலிகளால் புகட்டப்பட்டது. பல சாதனைகள் தடம் பதியப்பட்டும் சென்றது. இத் தாக்குதலில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டும் 62 கடற்படையினர் படுகாயமடைந்தும் கப்டன் தர அதிகாரி உட்பட சில கடற்படையினர் தமிழ்நாட்டுக்கு தப்பிசென்று பின்னர் விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பவதா தரையிறங்கு கலம் மீதான தாக்குதல் மற்றும் , வலம்புரிக் கப்பல் மீதான தாக்குதலில்வெற்றிகளுக்கு  வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்.!

Slide140.jpgSlide141.jpgSlide142.jpgSlide143.jpgSlide144.jpgSlide145.jpgSlide135.jpgSlide136.jpgSlide137.jpgSlide138.jpgSlide139.jpg


 

https://www.thaarakam.com/news/114421

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை.!

Last updated Feb 21, 2020

நாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது.

இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன.

கனரக ஆயுதங்களின் பலம் இல்லாத காலம் அது. எழுபத்தைந்து பேர் கொண்ட அணி காவல் செய்யும் பகுதியில் ஒரேயொரு பிறவுண் எல்.எம்.ஜியுடனும் ஒரு ஆர்.பி.ஜியுடனும் நின்ற காலம். எமது படைவலு இலகுரக ஆயுதக்காரர்களது சூட்டு வலுவிலும், மனோ வலுவிலுமே பேணப்பட்டது.

கையில் குண்டுகளுடனோ, சுடுகலன்களுடனோ ஒருவர், இருவராக முன்னே போய் பகைக் காப்பரண்களை நெருங்கித் திடீர்த் தாக்குதல் செய்து எதிரியை நிலைகுலைய வைப்பதுதான் அப்போது எமது முக்கிய வேலை.

நைற்றிங்கேள் இதில் மிகவும் தேர்ந்தவர். எதிரி ஏவும் இருரவைகளுக்கு இடையேயுள்ள இடைவெளியைப் பயன்படுத்தி முன்னேறவும் பின்னகரவும் அவரால் முடியும் என்று எங்களில் பலரால் அவரது செயல்கள் சொல்லப் படுவதுண்டு. பலாலியின் செழித்த வாழைமரங்களில் ஒன்றுமட்டும் போதும் எதிரியின் கண்ணில் படாமல் இவருக்குக் காப்பளிக்க. அவ்வளவு மெல்லிய உடல்வாகு. தோற்றத்துக்குச் சற்றும் பொருந்தாத கடும் துணிச்சல். சிறிதும் குறிவழுவாத சூடு.

Slide141.jpg1990ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மாங்குளத்தில் அமைந்திருந்த சிறிலங்காப் படைத்தளத்தை அழிப்பதற்கான பயிற்சிக்கு திறமையாளர்கள் பலர் தேர்ந்தெடுக்கப் பட்ட போது பட்டியலில் நைற்றிங்கேள் என்ற பெயர் முன்னணியில் இருந்தது. அப்போது அவர் ஏழுபேர் கொண்ட அணியின் பொறுப்பாளர். இவரின் மேலான பொறுப்பாளர் பலாலியிலிருந்து நைற்றிங்கேளைப் போகவிடமாட்டேன் என்று சிறப்புத் தளபதியிடம் ஒற்றைக் காலில் நின்றார். சண்டையொன்றில் தான் விழுந்தால், வெற்றிடத்தை நிரப்ப நைற்றிங்கேள் வேண்டும் என்ற அவரின் பிடிவாதமே கடைசியில் வென்றது.

என்னுடைய அணியில் நைற்றிங்கேள் இருக்கவேண்டும் என்ற விருப்பம் இவர் ஒருவரிடம் மட்டுமல்ல, அணித்தலைவிகள் பலரிடமும் இருந்தது. மிகச் சிறந்த சூட்டாளர் என்பதால் இவருக்கு ஆர்.பி.ஜி வழங்கப்பட்டது. ஏவப்படுகின்ற எறிகணைகள் ஒவ்வொன்றும் இலக்கை சரியாகத் தாக்கவேண்டும். “தவறிவிட்டது” என்ற சொல்லுக்கு இவரது அகராதியில் இடமில்லை. எனவே ஆர்.பி.ஜியும் நைற்றிங்கேளும் தோள் சேர்ந்தனர்.

விடுதலைப்புலிகளின் வரலாற்றுப் புகழ்மிக்க, ”ஆகாய கடல் வெளிச்சமர்” பரந்த வெளியில் விரிந்த போது கடலால் தரையிறக்கப் பட்டு இரைந்து வந்த டாங்கிகளிடமிருந்து எமது ஆளணியைப் பாதுகாக்க ஆர்.பி.ஜியின் பலம் தேவைப் பட்டது. எந்த அணியிலும் இல்லாது நைற்றிங்கேள் தனியாக இயங்க விடப்பட்டிருந்தார். “நைற்றிங்கேளை அனுப்பு” என்ற கட்டளை களத்தின் ஒரு முனையிலிருந்தும், கேணல் பால்ராஜிடமிருந்தும் வரும். மறுமுனையிலிருந்து கேணல் யாழினியிடமிருந்தும் (விதுஷா) வரும்.

எங்கு டாங்கி இரைந்ததோ, அங்கு அவர் தேவைப் பட்டார். எத்திசையில் அவர் போனாரோ, அங்கு அதன் பின் ராங்கின் இரைச்சல் கேட்காது.

களத்தின் தேவைக்கேற்ப கடுகதியாக விரையும் நைற்றிங்கேள், துளியும் தற்பெருமை இல்லாத, எப்போதும் எவரையும் கனம் பண்ணுகின்ற தன் இயல்பில் கடைசிவரை வழுவவில்லை.

1993ஆம் ஆண்டில் பூநகரியிலிருந்த சிறிலங்காப் படைத்தளத்தைத் தாக்குவதற்கு நாம் தயாராகிக் கொண்டிருந்தோம். நடவடிக்கையில் இறங்கப் போகும் ஆர்.பி.ஜிக்களின் பொறுப்பாளர் நைற்றிங்கேள். பூநகரிப் படைத்தள இராணுவம் அதற்கிடையில் முன்னகரப் போவதற்கான அறிகுறிகள் தென்பட, மறிப்பதற்கு பூங்கா தலைமையில் பெண் போராளிகளின் அணியொன்று போனது. மறிப்பு வேலியாகக் காப்பரண்களை அமைத்தது. ஆர்.பி.ஜிக்களுக்கான நிலைகள் மிகநேர்த்தியாக நைற்றிங்கேளின் வழிநடத்தலில் அமைக்கப்பட்டு, பார்வையை ஈர்த்தன. நிலைகளைப் பார்வையிட வந்தார் கேணல் சொர்ணம். அவரின் கவனத்தையும் அந்நிலைகள் ஈர்த்தன.

“ஆர் உங்கட ஆர்.பி.ஜி பொறுப்பாளர்?”

கேணல் சொர்ணத்தின் முன், காற்றிலாடும் கழுகுபோல வந்துநின்ற நைற்றிங்கேளைப் பார்க்க அவருக்குச் சிரிப்பு வந்துவிட்டது.

“எத்தினை ஷெல் அடிச்சிருக்கிறீங்கள்?”

“இருபத்திமூண்டு”

அதிர்ச்சி தரும் பதில்.

“எங்கெங்கே அடிச்சீங்கள்?”

“ஆனையிறவில பதினெட்டு. அதுக்குப் பிறகு வேற வேற சண்டையளில அஞ்சு”

நைற்றிங்கேளைக் கூர்ந்து பார்த்தவர்,

“நீங்கள்தான் அந்த நைற்றிங்கேளோ?” என்றார்.

இதுபோதும். இதற்குமேல் நைற்றிங்கேளைப் பற்றி நாம் வேறெதுவும் பேசத் தேவையில்லை.

போன சண்டைகள் எதிலுமே அவர் காயப்பட்டதில்லை. தனது இலக்கைத் தாக்கி விட்டு, சிறு கீறல் கூட இல்லாமல் திரும்பி வந்த ஒவ்வொரு முறையும்,

“ஏதோ ஒரு சண்டையில் நான் முழுசாப் போறதுக்குத்தான் இப்படிக் காயங்களேயில்லாமல் வாறன்” என்றவர் பூநகரி சிங்களக் கூட்டுப்படைத்தளம் மீதான “தவளை” நடவடிக்கையில் காலில்லாமல் வந்தபோது, சற்று நிம்மதியடைந்தோம். ஆள் போவதைவிடக் கால்போனது பரவாயில்லையென்று.

ஒற்றைக் காலோடு தன் வாழ்வின் அடுத்த கட்டம் இதுதான் என்பதை அவர் முடிவெடுத்த போது நாம் கவலை அடையவில்லை.

கடலிலும் அவரின் வேகம் தணியவில்லை எனப் பெருமைப்பட்டோம்.

நினைவுப்பகிர்வு:- மலைமகள்

மொட்டவிழ்ந்த கனவுகளிலிருந்து……..!


 

https://www.thaarakam.com/news/114438

 

கடற்கரும்புலி கப்டன் வனிதா.!

Last updated Feb 21, 2020

அன்பு….

கரும்புலிகள் உறுதிக் குத்தான் இரும்பை ஒத்தவர்கள். ஆனால், அவர்களின் மனங்களோ மிக மிக மென்மையான உணர்வுகளால் சேர்ந்து உருவாக்கிய அன்புக்கூடு அவர்களுக்கும் காதல் இருந்தது.

இந்தத் தேசத்தின் மீதும், தலைவன் மீதும், மக்கள் மீதும், ஏன் இவை எல்லாவற்றோடும் கூடவே அம்மா அப்பா உடன்பிறப்புக்கள் என்ற சுற்றத்தின் மீதும் தான்.

அம்மா என்றால் அவளுக்கு உயிர். சிறு அகவை தொட்டே அம்மா எங்கு போனாலும் அம்மாவுக்குப் பின்னாலே ஒரு வாலாக அவள்…

இரவில் படுப்பது என்றால் ஏன் வெளியில் செல்வது என்றால் எல்லாவற்றிற்கும் அவளுக்கு அம்மா வேண்டும் அம்மாவைப் பிரிந்து அவள் இருந்ததே இல்லை.

ஆனால், காலத்தின் தேவையுணர்ந்து அம்மா மீது அன்பு கொண்ட அவள் போராடப் புறப்பட்ட போது அந்த ஊரே முதலில் நம்பவில்லைத்தானே.

அவளா….?, எப்படி…? அம்மாவை விட்டுவிட்டு…? எல்லோரது கேள்விகளுக்கும் மாறாகவே அவளது விளக்கம் இருந்தது.

தாயை நேசிப்பவனால்தான் தாய் நாட்டுக்காகப் போராட முடியும் நான் அம்மாவை நேசிப்பது உண்மையாக இருந்தால், இந்தத் தேசத்தையும் என்னால் நேசிக்க முடியும் என்று பெரும் தத்துவஞானி போல் கருத்துச் சொல்லுவாள்.

பயிற்சிகளில், சண்டைக் களங்களில் எல்லாவற்றிலுமே அவள் பெரும்புலி ஆனாலும் அம்மா என்ற சொல்லை உச்சரிக்காமல் அவள் படுக்கைக்குப் போனதே இல்லை.

ஒரு முறை அவள் விடுமுறையில் போனபோது அம்மா அதிகம் பாவிக்கும் புடைவை ஒன்றை எடுத்து வந்து விட்டாள்.

Slide145.jpgஅன்றிலிருந்து அவள் படுக்கையின் தலையணை அது தான். அதில் படுக்கும் போது அம்மாவோடு இருப்பது போன்ற சுகம் அவளுக்கு அவள் எங்கு போனாலும் அதை மட்டும் அவள் மறந்தும் விட்டு விடமாட்டாள்.

விடுதலையின் தேவைக்காக அவள் நகர்ந்த பயணங்கள் எல்லாவற்றிலும், கூடவே அவளுடன் அந்தப் புடைவையும் நகரும்.

அந்தப் பூ மனசுக்குள் இப்போது மக்கள் படும் இன்னல்களுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டவேண்டும் என்ற துடிப்புத் துளிர்விட்டது.

மக்களுக்காகத் தன்னைத் துறப்பது என்ற முடிவை அவள் எடுத்து விட்டாள்.ஆனால், தன் ஆசை அம்மா எப்போதும் தன் குரலைக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காய் தனக்கு விருப்பமான அம்மாப் பாடல்களையெல்லாம் தனது குரலிலே பாடி ஒலிப்பதிவு செய்த ஒரு ஒலி நாடாவை அவள் அம்மாவுக்காக கொடுத்திருந்தாள். இப்படி அம்மா மீது அன்பு கொண்ட அவளால் எப்படிப்பகை அழித்து புதிய வரலாற்றைப் படைக்க முடிந்தது.

அது தான் வள்ளுவர் சொன்ன “அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” என்ற குறட்பா கடற் கரும்புலி கப்டன் வனிதாவிற்குச் சாலப் பொருத்தமல்லவா?

நினைவுப்பகிர்வு:- பிரமிளா.

நீலக்கடலின் நெருப்புக்குழந்தைகளிலிருந்து………….!
 

 

https://www.thaarakam.com/news/114441

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.