Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

The Two Popes

இளங்கோ-டிசே

Tuesday, February 25, 2020

 
டத்தில் தலைப்பைப் போல இது இரண்டு போப்புகளைப் பற்றியபடம். மரபுவாதியான ஜேர்மனியப் போப் பெனடிக்கிற்கும், மறுமலர்ச்சியைக் கொண்டுவர விரும்பும் ஆர்ஜெண்டீனிய போப்பிரான்ஸிற்கும் இடையிலான உறவையும், முரணையும் இந்தப் படம்முழுவதும் நாங்கள் பார்க்கின்றோம்.
 
போப் பெனடிக் போப்பாக இருக்கும் கடைசிக்காலங்களில்கார்டினலாக இருக்கும் பிரான்ஸில் ஆர்ஜெண்டினாவிலிருந்துதனது பதவியை இராஜினாமாய்ச் செய்வதற்காக ரோமுக்குவருகின்றார்.அப்போது போப் பெனடிக் வத்திக்கானில் நடக்கும்சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கின்றார். மரபுவாதியானபெனடிக் ஒருவகையில் சமகால உலகை விட்டுவிலகிப்போய்க்கொண்டிருப்பவர். ஏற்கனவே இருந்த போப்புக்கள்வகுத்த வழிமுறையில் பாதை தவறாது பயணித்துக்கொண்டிருப்பவர்.
 
Two_Popes.jpg
கத்தோலிக்க மதத்திற்குள், தேவலாயங்களுக்குள் பல சர்ச்சைகள்வெடிக்கத் தொடங்கின்றன. தற்பால்உறவுகள், பாலியல் வன்முறைகள், இலஞ்சம் எல்லாம் வத்திகானைச்சுற்றிச் சுழல்கின்றன. பாவமன்னிப்பைவழங்கிவிட்டால் எல்லாம்யதார்த்தத்திற்கு வந்துவிடும் என போப்பெனடிக் நம்புகின்றார். கார்டினல்பிரான்ஸிலோ தேவாலயங்கள்பாவத்தின் கறைகளைப் பற்றிஅக்கறைப்படுகின்றதே தவிர, அதுஏற்படுத்தும் காயங்களைப் பற்றிக்கவலைப்படுவதில்லை என்று மறுத்துப் பேசுகிறார். மேலும் தவறைச்செய்தவர்க்கு பாவமன்னிப்பை வழங்குவதன் மூலம் பாவத்தைச்செய்தவர் நிம்மதி அடைகின்றார். ஆனால் அவரால் பாவம்இழைக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைப் பற்றி தேவாலயம்கவலைப்படுகின்றதா என்கின்ற முக்கிய கேள்வியை எழும்புகின்றார்.
 
முரண் உரையாடல்களினால் இவர்கள் இருவருக்கும் இடையில்நட்பு ஏற்படுகின்றது. மரபுவாதியான போப் பெனடிக் நல்லதொருபியானோ வாசிப்பாளர் என்பதையும், பீடில்ஸின் இரசிகர்என்பதையும் கார்டினல் பிரான்ஸில்வெளிக்கொண்ர்ந்துவிடுகின்றார். இந்தத் தடைகள் எதுவும்கார்டினல் பிரான்ஸிற்கு இருப்பதில்லை. டாங்கோ ஆடுபவராக, உதைபந்தாட்டத்தை தன்னை மறந்து இரசிப்பவராக, வறியமக்களிடையே இறங்கி வேலை செய்பவராக அவர் இருக்கின்றார் . ஆனால் அவருக்கும் ஒரு இருண்ட காலம் என்பதை நாம்இத்திரைப்படத்தின் இரண்டாம் பகுதியில் பார்க்கின்றோம்.
 
1970களில் ஆர்ஜெண்டீனா ஒரு சர்வாதிகாரியின் ஆட்சிக்குள்போகின்றது. இடதுசாரிகள், அரசவிழ்ப்பாளர்கள் மட்டுமின்றி, பாதிரிமார்களையும் கொடுங்கோல் ஜனாதிபதியின் இராணுவம்வேட்டையாடத் தொடங்குகின்றது. பல்வேறு தேவாலயங்கள்பைபிளை சற்று ஒதுக்கிவைத்து மார்க்கிசம் பற்றியும், புரட்சிபற்றியும் பேசத் தொடங்குகின்றன. பாதர் பிரான்ஸில் தனதுநண்பர்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு அரசுடன் இரகசியமாகப்பேச்சுவார்த்தைகளை நடத்துகின்றார். அந்தப் பொழுதுகளில்பாதர் பிரான்ஸின் இரண்டு பாதிரித்தோழர்கள் கடத்தப்படும்போது, பிரான்ஸிசே இராணுவத்துக்குக் காட்டிக்கொடுத்தவர் எனக்குற்றஞ்சாட்டப்படுகின்றார். இந்தப் பொழுதிலேயே அவரதுகாதலியாகவும், பிறகு தோழியாகவும் மாறியவரை, கொடுங்கோல்ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் செய்த காரணத்தால்பிரான்ஸிஸ்ல் இழக்கின்றார்.
 
இவ்வாறு குற்றஞ்சாட்டல்களுக்கும், இழப்புகளுக்கும் இடையில்ஆர்ஜெண்டீனா சர்வாதிகாரத்திலிருந்து ஒருமாதிரி விடுபடுகின்றது. வத்திகானின் பேச்சை இந்தக் காலங்களில் கேட்கவில்லையெனஒதுக்குப்புறமான மலைக்கிராமத்துக்கு எல்லாப் பதவியும்பறிக்கப்பட்டு, பிரான்ஸில் சேவைக்காக அனுப்பப்படுகின்றார். அங்கிருக்கும் மக்களோடு பழகி, அவர்களுக்கு பாவமன்னிப்புவழங்குவதுடன், தன்னையும் மாற்றிக்கொள்ளும் பிரான்ஸிஸ்மீண்டும் ஆர்ஜெண்டீனா மக்களின் நன்மதிப்புக்கு உள்ளாகின்றார். பின்னர் வத்திகானால் கார்டினாலாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
 
இதே காலகட்டத்தில் 2013ல், பல்வேறு சர்ச்சைகளால் தனதுவயதைக் காரணங்காட்டி போப் பெனடிக் தனது பதவியைஇராஜினாமாய்ச் செய்யும்போது, அடுத்த போப்பாக, கார்டினல்பிரான்ஸிஸ் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அப்போது ஓரிடத்தில்போப் பிரான்ஸில் பெனடிக்கை நோக்கிச் சொல்வார், நீங்கள்பாரத்தை இறக்கிவைத்துவிட்டீர்கள், நான் இனிச் சுமக்கவேண்டிஇருக்கின்றது' என்று. 
பில்லியன்கணக்கான மக்களின் நம்பிக்கைக்குரியவரான ஒருபோப்பின் பதவி என்பது மிகக் கடினமான ஒன்றுதான். 
 
two%2Bpopes3.jpg
போப் பெனடிக் தனதுபதவியைத்துறக்கப்போகின்றேன் என்றுசொல்லும்போது பிரான்ஸிஸ்அவரை ஓரிடத்தில் தடுப்பார். அப்போது போப் பெனடிக்சொல்வார், கடவுளின்குரலைக் கேட்கமுடியாதஎன்னால் இந்தப் பதவியில்தொடர்ந்து இருக்கமுடியாது என்று. அந்தக் கடவுளின் குரலைபிறகு போப்பாக வந்த பிரான்ஸிஸால் கேட்கமுடிந்ததா என்பதுநமக்குத் தெரியாவிட்டாலும், அவர் ஏழைமக்களைத்தேடிப்போவதிலும், அவர்களோடு சாதாரணமாகப் பேசுவதன்மூலமாகவும் கடவுளின் குரலைக் கேட்கமுடியும் என நம்புவதாகபோப் பிரான்ஸின் பாத்திரத்தினூடாக அறிந்துகொள்கின்றோம்..
 
இந்தத் திரைப்படம் நீண்டகாலமாக வத்திகான் மீதும், பாதிரிமார்கள் மீதும் வைக்கப்படும் முக்கிய எந்தக் குற்றச்சாட்டைநோக்கியும் நகரவில்லை என்பதை, அப்படி நகர்வதற்குஇடமிருந்தும் அங்கு போகவில்லை என்பதை ஒரு குறையாகத்தான்சொல்லவேண்டும். ஆனால் வத்திகானில் மாற்றங்களைக்கொண்டுவர முயலும் ஒரு போப்பை நாம் இங்கே காண்கின்றோம். மரபுவாதியாக இருந்தாலும் இன்னொரு போப்பையும் அவரின்குறைபாடுகளுடன் சரி ஒருபக்கமாய் இப்படி இருந்துவிட்டுப்போகட்டுமென ஆறுதல்கொள்கின்றோம். அதிலும் மனம் உடைந்துபோய் இருக்கும் போப் பெனடிக்கிற்கு, கார்டினல் பாவமன்னிப்பைவழங்கி ஆசிர்வதிக்கும் இடம் அவ்வளவு நெகிழ்வானது.
 
இறுதியில் இந்தத் திரைப்படத்தில் இன்னாளும், முந்தியதுமானபோப்புக்கள் இருவரும் 2014ல் நடக்கும் ஆர்ஜெண்டீனா- ஜேர்மனிஉதைபந்தாட்ட இறுதி ஆட்டத்தைப் பார்க்கும் காட்சிகள்சுவாரசியமானது.. ஒருவகையில் இந்தத் திரைப்படம்போப்புக்களையும் சாதாரண மனிதர்களாக்கி நம்மைப் பார்க்கவைக்கின்றது. அவர்கள் அதிகாரம் நிரம்பியவர்களோ, திருவுருவாக்க வேண்டியவர்களோ அல்ல, இரத்தமும் சதையுமானநம்மைப்போலவே தவறுகளை விடக்கூடியவர்களும், மனம்வருந்தக்கூடியவர்களுமே என்ற நிலைக்கு இறுதியில்வந்தடைகின்றோம். 
 
அதுவே மதங்களையும், போப்புக்களையும் சற்று விலத்திப் பார்க்கும்என்னைப் போன்றவர்களுக்கு அவசியமான புள்ளியெனநினைக்கின்றேன். ஆக, நாங்கள் எவருக்கும் உயர்ந்தவர்களுமல்ல, தாழ்ந்தவர்களுமல்ல என்ற புள்ளியை வந்தடைகின்றோம்..
................................................
 
(Dec 21, 2019)
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.