Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

25 வருட பழைய வழக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

40-AF4-B0-D-49-ED-4-FF2-9117-E80872-B265
நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லையேர்மனியில் Osnabrueck  நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது.

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது.

“24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு  நேரத்திலேயே அந்தக் கொலை நடந்திருக்கிறது. விசாரணைகளை மேற்கொண்டிருக்கிறோம்என்று பொலீஸ் அறிக்கையை வெளியிட்டது. ஆனால் அவர்களால் கொலையாளியை மட்டும் கண்டு பிடிக்க முடியாமல் போயிருந்தது.

Silke அணிந்திருந்த Pullover இனால் அவளது கழுத்து நெரிக்கப் பட்டு அந்தக் கொலை நடந்திருந்தது. பலரிடம் விசாரணைகளை மேற்கொண்டும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாததால் ஒரு கட்டத்தில் Silke சம்பந்தப்பட்ட கோப்பை போலீஸ் தரப்பில் மூடி வைத்து விட்டார்கள்.

2011இல் 57 வயதான கட்டிட வேலை செய்து கொண்டிருந்த Siegfried என்ற யேர்மனியருக்கு பணம் தேவைப்பட்டது. பணத்தை எங்கே இருந்து எடுக்கலாம் என்று நினைத்தவருக்கு உடனடியாக நினைவுக்கு வந்தது தனது அருகாமையில் இருந்த Sparkasse என்ற வங்கி. வங்கிக்குச் சென்ற Siegfried தன்னிடம் இருந்த ஆயுதத்தைக் காண்பித்து பணத்தைக் கேட்டிருக்கிறார். அவர் பணம் கேட்டதோ தகவல்கள் தரும் (Service point) இடத்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம். இந்த நிலையை அவதானித்த வங்கி ஊழியர்கள் உசாராகிவிட Siegfried பதட்டமாகி வங்கியில் பணம் கட்ட வந்த 53 வயதான ஒரு பெண்ணிடம் ஆயுதத்தைக் காட்டி அவளிடம் இருந்த 400 யூரோக்களைப் பறித்துக் கொண்டார்.

ஆனால் Siegfried வங்கியை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பொலீஸார் வந்துவிட அவரால் தப்பிக்க முடியாமல் போயிற்று.

வங்கியில் தகவல் தரும்  பெண்ணிடம் பணம் கேட்டு, கொள்ளையடிக்க நினைத்த Siegfried இன் இந்தச் செயல்யேர்மனியின் முட்டள்தனமான வங்கிக் கொள்ளைஎன்று இன்றுவரை வர்ணிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது.

13 சகோதரர்களுடன் பிறந்த Siegfried சிறு வயதிலேயை பல சின்னச்சின்னக் குற்றச் செயல்களைச் செய்திருக்கிறார். அவற்றிற்காக சிறு சிறு தண்டனைகளை அவர் பெற்றிருந்தாலும், வங்கியைக் கொள்ளையிட முயன்றதற்காக அவருக்கு கிடைத்த தண்டனையே அதிகமாக இருந்தது. வங்கியைக் கொள்ளையிட முனைந்ததற்காக அவருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது.பொதுவாக குற்றவாளிகளின் DNA பொலீஸ் தரப்பில் எடுத்து வைத்துக் கொள்வது நடைமுறை.  Siegfried விடயத்திலும் அது நடந்தது

நீண்ட காலமாக மூடி வைக்கப் பட்டிருந்த Silkeஇன் கோப்பு ஒரு பொலீஸ் அலுவலகரின் கண்ணில் பட, அவர் அவளது கொலை பற்றிய தகவலை ஆராய்ந்தார். அப்போது அவருக்கு ஒரு உண்மை தெரிந்தது.  Silke கொலை செய்யப் பட்ட பொழுது அவளது Pulloverஇல் இருந்து சேகரித்து வைக்கப் பட்டிருந்த தடையங்களுடன் Siegfried இன் DNA ஒத்துப் போனது. அதை அந்த அலுவலகர் உறுதிப் படுத்தினார்.

2011 இல் செய்த குற்றத்துக்காக,  2018இல் சிறையில் இருந்து விடுதலையான Siegfried மேல் குற்றம் உள்ளதாக பொலீஸ் வழக்கொன்றைத் தாக்கல் செய்தது.

1995இல் Siegfried வேலையில்லாமல் இருந்த காலப்பகுதியில் தனது காரில் அமர்ந்திருந்த சமயம், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போதையில் வந்த Silke வாடகைக் கார் என்று கருதி  Siegfried இன் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். அதுவே அவளது வாழ்க்கைக்கு முடிவானது.

கார் வேறு பாதையில் செல்வதை அவதானித்த Silke காரை நிறுத்தச் சொல்லி அதில் இருந்து இறங்கி ஓடிய போதே அவளைத் துரத்திச் சென்ற Siegfried வயல்வெளியில் அவளைக் கொலை செய்திருக்கிறார் என்பது விசாரணையில் தெளிவானது.

வேலை இல்லை.குடும்பத்தில் உள்ள பிரச்சினை, மன அழுத்தம், மது போதை எல்லாம் சேர்ந்து எனது கட்சிக்காரரை இந்தக் கொலையைச் செய்ய வைத்திருக்கிறது என Siegfriedஇன் சட்டத்தரணி நீதி மன்றத்தில்  வாதத்தின் போது குறிப்பிட்டார்.  

களவு, பாலியல் வன்முறை, அடிதடி, ஏமாற்றுதல் என்று ஏகப்பட்ட விடயங்களுக்கு ஏற்கனவே Siegfried சொந்தக்காரனாகி தண்டனைக்கு உள்ளானதை எல்லாம் கவனத்தில் கொண்டு Siegfriedக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப் பட்டிருக்கின்றது.

DNA பரிசோதணையில்  மீண்டும் ஏதாவது வழக்கில் மாட்டிக் கொண்டால் அடுத்த ஆயுளை Siegfried எங்கே போய்த் தேடப் போகிறார்

Edited by Kavi arunasalam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.