Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவின் எதிரொலியாக மாற்றமடையப் போகும் உலகப் பாரம்பரியங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின் எதிரொலியாக மாற்றமடையப் போகும் உலகப் பாரம்பரியங்கள்

  • சு. ஜீவசுதன்

இனிவரும் காலங்களில் தேவாலயங்களிலும் கிறிஸ்தவ சபைகளின் ஆராதனைகள் மற்றும் எழுப்புதல் கூட்டங்களிலும் தேவசெய்திகளைக் கேட்க மற்றும் பிரார்த்தனைகளில் பங்குபற்றவும் வருபவர்கள் ஆசீர்வதிக்கப்பட்ட ரொட்டித்துண்டுகளை ஒற்றையாகப் பகிரப்படுகின்ற வைன் கிண்ணங்களில் அமிழ்த்தியுண்ண விரும்பப்போவதில்லை. சில கத்தோலிக்க திருச்சபைகள் ஆராதனைகளின்போது அவ்வாறான கிண்ணங்களைப் பயன்படுத்துவதை இலகுவாகக் கைவிடவும் கூடும். அத்துடன் இவ்விரு பிரிவினரும் பிரார்த்தனையின் முடிவில் அமைதிக்கான சமிக்ஞைகளை அருகருகே இருப்பவர்களுக்கு வெளிக்காட்டும்போது பாரம்பரியமாகக் கைலாகு கொடுத்தோ அல்லது கட்டித்தழுவுவதன் மூலமோ தெரியப்படுத்தாது தமது கைகளை அசைத்தோ அல்லது முழங்கைகளை மடக்கித் தலையைத் தாழ்த்திப் புன்னகைப்பதன் மூலமோ தெரிவிக்க முயலக்கூடும்.977-3.jpg

மேற்கூறிய இரண்டு உதாரணங்களும் தற்போது இவ்விரு பிரிவினராலும் கடைப்பிடிக்கப்படுகின்ற கொரோனோவுக்குப் பின்னரான மாற்றியமைக்கப்பட்ட வாழ்த்து முறைகளாகக் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் அவர்களது ஆராதனைகளின் போதும், பூசைகளின் போதும் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்தமுடியுமென இப்பிரிவுகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. இவ்விரண்டு பிரிவினரும் தமது சமயச்செயற்பாடுகளும் பெரும்பாலான பிராத்தியங்களில் கொரோனோத்தொற்றுக்கு ஏதோ ஒருவகையில் காரணியாக அமைந்ததைத் தொடர்ந்து தமது சமயத்தவைர்கள், போதகர்கள் மற்றும் சபைத்தலைவர்கள் போன்றோருக்கு தனிமனிதச் சேய்மை அல்லது இடைவெளியைக் கடைப்பிடித்தல் தொடர்பாகச் சில அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை வழங்கி வருகின்றன.

எனினும் கொரோனா உலகெங்கும் தொடர்ச்சியாகப் பரவிவருவதனையடுத்து அநேகமான சமயப்பிரிவுகள் தாம் பாரம்பரியமாகப் பின்பற்றிவந்த பலசமயப் பரிச்சயங்களை மாற்றியமைக்க முன்வந்துள்ளதோடு தமது வழிபாட்டுச் செயற்பாடுகளிலும் புதிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்டு உட்புகுத்தத் தொடங்கியுள்ளன.

தற்போது திருச்சபைகள் நிகழ்நிலைப் பூசைகளையும் மற்றும் பூசைகளை நேரடித் தொலைக்காட்சி ஒலி – ஒளி பரப்புவதையும் ஆரம்பித்துள்ளன. யூதர்களின் சைனகொக் ஆலயங்களும் எஸ்தரின் கதையைப்படிப்பதற்கான நேரங்களையும் மீளஒழுங்கமைக்கக்கூடும். அனேகமான இஸ்லாமியர் தமது உம்றாப்பயணங்களையும் மட்டுப்படுத்தியுள்ளதோடு மசூதிகளுக்குச் சென்று கூட்டாகத் தொழுதல், பொதுவான நீர்த்தொட்டியில் உடலைச் சுத்திகரித்தல் வெள்ளிக்கிழமைகளில் தொழுகையின் பின்னர் நற்சிந்தனைகளச் செவிமடுத்தல், சகதொழுகையாளர்களைக் கட்டியணைத்தல் மற்றும் கன்னத்தில் முத்தமிடுதல் போன்றவற்றைக் கைக்கொள்ளவேண்டாமென அவர்களது மதத்தலைவர்களாலும் இமாம்களாலும் அறிவுறுத்தப்பட்டுக்கொண்டேயிருக்கின்றனர். மேலும் பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமிய மதகுருக்கள் பலர் தொழுகைகளை இடைநிறுத்துவதையோ அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதையோ எதிர்த்து வருகின்ற சூழ்நிலையில் அங்கு அதிகரித்து வருகின்ற தொற்றுக்களும் மரணங்களும் விரைவில் அவர்களின் பிடிவாதத்தில் தளர்வைக் கொண்டுவரக்கூடும் என்பதை எதிர்பார்க்கலாம். சமய அடையாளங்களோடு அல்லது விழுமியங்களோடு கூடிய அரசியல் நடைமுறையிலுள்ள பாகிஸ்தான் இது தொடர்பான முடிவுகளை விரைந்து எடுப்பதை இலகுவில் எதிர்பார்க்க முடியாவிடினும் இஸ்லாத்தின் தொட்டில் என அழைக்கப்படுகின்ற சவூதியில் மார்க்கச் செயற்பாடுகள் தொடர்பில் குறிப்பிடத்;தக்களவு தளர்வைக் கடைப்பிடிப்பது வியப்புக்குரியதொன்றாகவே காணப்படுகின்றது.

இயேசு பிறந்தஇடமென கிறிஸ்தவர்களால் நம்பப்படுகின்ற பெத்லஹேமிலுள்ள தேவாலயம் மற்றும் ஓமர் பென் கதாப் பள்ளிவாசலும் ஆள் அரவமின்றி வெறிதாகிக் காணப்படுகின்றன. ரோமிலுள்ள புனித பீற்றர்ஸ் சாளரத்தினூடாக ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக போப் பிரான்சிஸ் அவர்கள் வழங்குகின்ற ஆசிச்செய்தியையும் இப்போது வீடியோ சொடுக்கின் மூலம் வழங்க ஆரம்பித்துள்ளார். இதன்மூலம் மக்கள் செறிவாகத் திரள்வதையும், தோய்த்தொற்று ஏற்படுவதனைத் தடுக்கவும் முடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆரதனையை அவர் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் அவர்களுடன் பணியாற்றுபவர்களுக்கு இறையாசீர்வாதம் வேண்டியும் நடாத்தியுள்ளார். அத்தடன் ஒரு சிறிய குழுவினர்க்கு மட்டும் மிகக்குறுகிய நேரத்தில் தனது ஆசியை வழங்கிச் சென்றுள்ளார். வத்திக்கானும் அவ்வாறே சகல பூசைகளையும் ஆராதனைகளையும் மட்டுப்படுத்தியுள்ளதோடு மேலும் பலவற்றை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வத்திக்கான் தனது முதல் கொரோனா நோயாளி அiடாளம் காணப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளதோடு புனித பாப்பரசருக்கும் தொற்று எற்பட்டுள்ளது என்று பரவிய செய்திகளையும் மறுத்துள்ளதுடன் அவருக்குச் சாதாரணமான தடிமனே எற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் இத்தாலியிலுள்ள மிகப்பெரும் பழமைவாய்ந்த பொலக்னா, ரியூறின் மற்றும் வெனிஸ் ஆகிய நகரங்களிலுள்ள தேவாலயங்களில் நடைபெறுகின்ற ஆராதனைகள் மற்றும் திருப்பலிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. சாம்பல்புதனன்று நடைபெறும் ஆராதனைகள் மற்றும் பூசைகள் எல்லாம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் ஆராதனைகள் நிகழ்நிலையிலும் உள்@ர் தொலைக்காட்சியிலும் நடைபெற்றுவருகின்றன. ஹொங்கொங், மொங்கோலியா, தென்கொரியா மற்றும் யப்பான் போன்ற நாடுகளிலுள்ள முக்கிய தேவாலயங்களிலும் பூசைகள் இடை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதைத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. பூசைகள் மற்றும் சமயப்போதனைகளைத் தேவாலயங்களில் நிகழ்த்துவதோடு மட்டும் நன்மைகளைச் செய்யாது தேவாலயங்களுக்கு வெளியேயும் மற்றும் நேரடியாகவன்றி இலத்திரனியல் சாதனங்கள்மூலமும் மக்களை வழிநடத்த முடியுமென்பதை இச்சம்பவங்களின் மூலம் இன்று பல சமய நிறுவனங்கள் நம்பத்தலைப்பட்டுள்ளதுடன் பரீட்சார்த்தமான பல முயற்சிகளையும் தற்போது நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளன.

ஊர்வலங்கள் விருந்துபசாரங்கள், மற்றும் திருவிழாக்கள் நிறைந்த யூதர்களின் புறிம் பண்டிகைக் கொண்டாட்டங்களும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாரம்பரியமாக மேற்கொள்கின்ற பல சடங்குகளைச் சமரசம் செய்ய அல்லது இரத்துச்செய்யுமாறும் யூதர்களிடம் இஸ்ரேலியச் சுகாதார அமைச்சு பரிந்துரைத்துள்ளது. மேலும் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு உணவளித்தல், பரிசளித்தல் மற்றும் பணநன்கொடையளித்தல் போன்றவற்றை இவ்வருடம் நிறுத்தும்படியும் தனது மக்களை அறிவுறுத்தியுள்ளது. ஆபிரிக்க நாடுகளிலுள்ள சில முதன்மையான மசூதிகள் தொழுகைமுடிவுற்றதுடன் மருத்துவத்துறையினரையழைத்து கொரோனோ தொடர்பான விழிப்புணர்வையேற்படுத்துவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்தியப்பிரதமர் மோடியும் தான் இம்முறை ஹோலிப் பண்டிகையில் பங்கு பற்றப்போவதில்லையென அறிவித்துள்ளதோடு பெருமளவில் மக்கள் ஒன்று கூடுதலைத் தவிர்க்கும்படியும் உயர்நிலையதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். திருப்பதி போன்ற சனநெருக்கடி மிக்க இந்து ஆலயங்கள் வரலாற்றில் முதன்முறையாக வெறிச்சோடிக்காணப்படுவதுடன் அவை இந்த வெறுமையை ஆலயத்தைப் பரிபாலிக்கவும் பராமரிக்கவும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. எவ்வாறாயினும் பல சமய மற்றும் அரசியல் தலைவர்கள் தாம் எடுக்கும் இந்த நடவடிக்கைகள் வழமைக்கு மாறானவையாகவும் அந்நியமானதாகவும் நோக்கப்படுவதுடன் தேவைக்கு அதிகமான கண்காணிப்பு மற்றும் முன்தயாரிப்புக்களையும் மேற்கோள்காட்டி இவை மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்கக்கூடுமெனவும் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

எனினும் இந்தியாவில் 144 தடையுத்தரவு பிறப்பிக்க முன்னரே டெல்லி நிஐhமுடீன் மசூதியில் தப்லிக் ஜமாத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சமயமாநாட்டில் பங்குபற்றியோருக்கு கொரோனோத் தொற்று எற்பட்டதைத்தூக்கிப் பிடிக்கும் இந்திய மத்திய அரசு உத்திரபிரதேச மாநில முதல்வர்; யோகி ஆதித்யநாத் நடாத்திய இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பூசை பற்றியோ அதனால் ஏற்படக்கூடிய சாத்தியமான கொNhரனோத் தொற்றுப் பற்றியோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை இந்துக்கள் அல்லாதவர்கள் தவிர வேறுயாரும் தமது தாய்நாட்டில் தொற்றை ஏற்படுத்தமாட்டார்கள் என்கின்ற இந்துக்களின் தேசாபிமானம் பற்றிய அதீத நம்பிக்கையால் மத்தியஅரசு அமைதிகாக்கின்றதோ தெரியவில்லை.

இதுபோன்றே சுவிஸ் போதகர் அரியாலைப்பூசையில் கொரோனாத் தொற்றைப் பரப்பியதற்குப் பொங்கியெழுந்த நாம் யாழ்ப்பாணம் காரைநகரில் மடத்துக்கரை முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற வேட்டைத் திருவிழா பற்றி எந்தவிதமான அக்கறையுமின்றி அமைதிகாக்கின்றோம். அங்கும் ஜேர்மனி மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலில் இருந்தோரும் பொதுச்சுகாதாரப் பரிசோதகரின் அறிவுறுத்தலைக் கருத்திலெடுக்காது 20-03.2020 அன்று நடைபெற்ற விழாவுக்குத் தனிப்பட்ட அரசியல் செல்வாக்குக் காரணமாகக் கொண்டுவரப்பட்டிருந்தனர். இதற்குப் பொலிஸ் காவலும் வழங்கப்பட்டதாக அறியமுடிகிறது. பின்னர் அதிரடிப் படையின் தலையீட்டினால் திருவிழா உட்கோயிலுடன் மட்டுப்படுத்தப்பட்டதுடன் அன்னதானத்திற்கெனத் தயாரிக்கப்பட்ட உணவு மருதபுரம் மற்றும் கல்வந்தாழ்வுக் கிராம மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்டதுடன் இதன்போது பிடிக்கப்பட்ட ஒளிப்படங்கள் அரசியல் நோக்கத்தோடு சமூகவலைத்தளங்களிலும் தரவேற்றப்பட்டிருந்தன.

எனினும் அருட்தந்தை ஆண்டகை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்கள் பரிசுத்தவார நிகழ்வுகளை நிகழ்நிலையாக நடாத்தியிருந்தமையும் இங்கு குறிப்பிடல் பொருத்தமாகும். இந்த ஆக்கத்தை எழுதிக்கொண்டிருந்த போது தங்கொட்டுவை மோருக்குளிய பகுதியில் தேவாலயமொன்றில் ஆராதனைக்காகக்கூடியவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. மேலும் சிலபள்ளிவாயில்களிலும் இந்நிலை காணப்பட்டுள்தோடு கைதுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இவ்வாறான செய்திகளோடு பாகிஸ்தானில் rpயா முஸ்லிம்களே வைரசைப் பரப்புவதாக அவர்கள் மீது சுன்னி முஸ்லிம்கள் வசைபாடுவதாகச் செய்திகள் கூறுவதோடு இலங்கையிலும் இந்நிலை காணப்படுவதாக முஸ்லிம்கள் கவலைப்படுவதோடு கொரோனாத் தொற்றால் இறந்த ஜனஸாக்களைத் தகனம் செய்வது தொடர்பாகவும் தமது அழ்ந்த கவலையை வெளியிட்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தம்மை வெளிப்படுத்தத் தயங்குவதற்கு இறந்தவர்களின் ஜனாஸாக்கள் இஸ்லாமிய நம்பிக்கைகளுக்கு எதிராக எரியூட்டப்படுவதும் ஒருகாரணமாக அமையலாம். கொரோனா இனம், மதம், மொழி ஏன் கடவுளர்களைக்கூட கண்டுகொள்ளாத இன்றைய பேரவல நிலையில் மேற்கூறிய பிரிவினைகளைக் கடந்து சிந்திக்க வேண்டியுள்ளதுடன் இந்த தனிமனித இடைவெளியைப்பேணும் காலத்தில் பல புத்துருவாக்கச் சிந்தனைகளையும் பரிசீலிக்கவும் மனிதகுலம் சிந்திக்க வேண்டும்.

நியூட்டன் பிளேக் காலத்தில் தனிமைப்பட்டிருந்தபோதே புவியீர்ப்பு விசைபற்றிச் சிந்தித்தார். அதுபோலவே இந்தத் தனிமைப்டுத்தல்காலம் எம்மில் பலரிடையே பல அரியமுயற்சிகளையும் பரிசீலிக்;கும் சந்தர்ப்பங்களைத் திறந்துவிடக்கூடும்.

இவ்வாறு தற்காலிகமாகக் கடைப்பிடிக்கப்படுகின்ற தனிமனித இடைவெளியை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகள் எவ்வளவு காலம் கடைப்பிடிக்கப்படல் வேண்டும், இவை நிரந்தரமானவையா அல்லது தற்காலிகமானவையா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எது எவ்வாறாயினும் கொரோனா மனிதர்களைக் கொன்றாலும் மனிதத்தைக் கொல்லாது பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் தனித்த மற்றும் கூட்டுப்பொறுப்புமாகும்.

http://thinakkural.lk/article/38666

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.