Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமுதாயத்தில் காணப்படும் ' டிஜிட்டல் பிளவை ' கொரோனா வைரஸ் மேலும் அதிகரிக்கக்கூடும்

Featured Replies

>சமுதாயத்தில் கணனியையும் இணையத்தொடர்பையும் பயன்படுத்துவதற்கான வசதியைக்கொண்ட பிரிவினருக்கும் அந்த வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாத பிரிவினருக்கும் மத்தியிலான இடைவெளியே ' டிஜிட்டல் பிளவு ' ( Digital divide ) என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளவு நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் பாரியளவில் அகலமானதாக இருப்பதுடன் நகர்ப்புறங்களிலும் கூட வசதிபடைத்தவர்களுக்கும் வசதியில்லாத பின்தங்கிய மக்கள் பிரிவினருக்கும் இடையில் இடைவெளி பாரியதாக இருக்கிறது.

digital_2-1586901642.jpg


புதிய கொரோனாவைரஸ் உலகெங்கும் பரவத்தொடங்கியதும் உலக நாடுகள் தொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கை (Lock down) நடைமுறைப்படுத்துகின்றன. அரசாங்க சேவையில் உள்ள ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அலுவலகங்களுக்கு வராமல் வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கேட்கப்பட்டிருக்கின்றனர்.வீடுகளில் இருந்து பணியாற்றுவது கணனியையும் இணையத்தொடர்பு வசதியையும் பயன்படுத்தி செய்யப்படுகின்ற தொழில்களில் உள்ளவர்களுக்கு மாத்திரமே இயலும்.அவ்வாறு கணனிமய பணிகளை அலுவலகங்களில் செய்கின்றவர்களில் எத்தனை பேரிடம் வீடுகளில் இருந்து வேலைசெய்வதற்கு வசதியாக கணனியும் இணையத்தொடர்பிணைப்பும் சொந்தமாக இருக்கின்றன? அவ்வாறு சொந்தமாக இருந்தாலும் கூட அலுவலகப்பணிகளை வீடுகளில் இருந்து கடமையுணர்ச்சியுடன் எத்தனை பேர் செய்வர் ? இவை முக்கியமான கேள்விகள்.

கொரோனாவைரஸ் நெருக்கடிக்குப் பிறகு கணனியையும் இணையத்தையும் பயன்டுத்தும்போக்கு பெருமளவில் அதிகரித்திருந்தாலும், எமது நாட்டில் எத்தனை சதவீதமான அரசாங்க ஊழியர்களும் தனியார்துறை ஊழியர்களும் அந்த அதிகரிப்புக்குள் அடங்குகிறார்கள்? என்பதும் இன்னொரு கேள்வி.
முக்கியமான சில அரசாங்க அலுவல்களும் தொடர்பாடல்களும் இணையவழியினூடாக இடம்பெறுகின்றன.குறிப்பாக, வங்கிகளின் செயற்பாடுகள் பெருமளவுக்கு கணனிமயமாகவே முன்னெடுக்கப்படுகின்ன. இவ்வாறான கணனிமய முன்னெடுப்புகளில் நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் இடையில் இடைவெளி காணப்படுகிறது.

இத்தகைய பின்புலத்தில், கணனி மற்றும் இணையத்தொடர்பு வசதியைப் பெறமுடியாத -- அந்த வசதியைப்பயன்படுத்தக்கூடிய பொருளாதார நிலையில் இல்லாத மக்கள் பிரிவினர் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டியது அவசியமாகும்.
இந்த பிரச்சினை குறித்து புதனன்று இந்தியாவின் முக்கிய ஆங்கில தினசரிகளில் ஒன்றான டெக்கான் ஹெரால்ட் ' டிஜிட்டல் பிளவு மேலும் மோசமடையக்கூடும் ' ( The digital divide could worsen ) என்ற தலைப்பில் ஆசிரியதலையங்கத்தை எழுதியிருக்கிறது.அதில் கூறப்பட்டிருக்கும் பெரும்பாலும் சகல விடயங்களுமே இலங்கைக்கும் பொருந்துவதாக அமைந்திருக்கின்றன. அதனால், அந்த ஆசிரிய தலையங்கத்தின் தமிழாக்கத்தை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

மக்களின் வெளி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியிருக்கும் நாடளாவிய ஊரடங்கு (Nationwide lockdown ) பெரும் எண்ணிக்கையான செயற்பாடுகளையும் சேவைகளையும் டிஜிட்டல் தளத்துக்கு (Digital platform ) தள்ளிவிட்டிருக்கிறது.டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் செயலிகள் ( Digital devices and apps ) ஊடாக அரசாங்கம் முன்னெப்போதையும் விட இப்போது கூடுதலான அளவுக்கு மக்களடனான தொடர்பாடல்களையும் கொடுக்கல்வாங்கல்களையும் செய்கிறது.வங்கிகளின் செயற்பாடுகளும் பொருட்கள் விநியோகம் உட்பட ஏனைய பொதுவசதிகள் நிறுவனங்கள் மற்றும் சேவைகளும் கணனிமயமாவது கடுமையாக அதிகரித்திருக்கிறது. கல்வியைப் பொறுத்தவரையிலும் கூட , காலவரையறையற்ற ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படத் தொடங்கியதும் இதுவே நிலைமை.

ஊரடங்கின் விளைவாக மார்ச் முதல் தரவுகள் நுகர்வு அளவிலும் ( Data consumption ) ஒரு பெரிய அதிகரிப்பு பதிவாகியிருக்கிறது.கணனிமய அதிகரிப்பு வரவேற்கப்படுகிறது.ஏனென்றால், அது தொடர்பாடல் மற்றும் சேவைகள் வழங்கலின் வேகத்தையும் வினைத்திறனையும் அதிகரிக்கிறது.அத்துடன் பல சந்தர்ப்பங்களில் அது முறைகேடுகளையும் நேர்மையின்மையையும் ஒழிக்கிறது.பொதுவில் இடர்மிகு நிலைமைகளில், மக்கள் தங்களது அலுவல்களைச் செய்துகொள்வதற்கு கூடுதல் எளிதானதும் சிக்கல் இல்லாததுமான வழிமுறைகளில் நாட்டம் காட்டுகிறார்கள்.பெரும் எண்ணிக்கையான நபர்கள் அவ்வாறு செய்யும்போது சமூக நடைமுறைப் பாங்குகளும் செயல்நோக்க நியமங்களும் ( Community styles and standards of functioning) விழிப்புணர்வு மட்டங்களும் உயர்வடைகின்றன.

ஆனால், டிஜிட்டல் உலகில் ஏற்றத்தாழ்வுகளும் அசமத்துவங்களும் காணப்படுகின்றன.அதை ஒத்துக்கொண்டு அவற்றை தீர்ப்பதில் கவனம் செலுத்தவேண்டியது அவசியமாகும்.டிஜிட்டல் செயற்பாடுகளும் சேவைகளும் பெருமளவுக்கு நகரங்களுக்கு அனுகூலமானவையாகவே சாய்ந்திருக்கின்றன.கிராமப்பகுதிகளில் டிஜிட்டல் செறிவு அல்லது அடர்த்தி 25 சதவீதமாக மாத்திரமே இருக்கிறது.ஆனால், அது நகர்ப்புறங்களில் சுமார் 97 சதவீதமாகும்.இ்ந்திய சனத்தொகையின் 66 சதவீதம் வாழ்கிறது என்பதை நோக்கும்போது ஏற்றத்தாழ்வு மேலும் வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.இணையத்தொடர்பு வேக வேறுபாடுகளும் மின்விநியோகத்தில் உள்ள பிரச்சினைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
டிஜிட்டல் உட்கட்டுமானங்களும்சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டு, கிராமங்களில் சிறிய நகரங்களிலும் தரமுயர்த்தப்படவேண்டும் ; மிகவும் கூடுதல் எண்ணிக்கையான மக்கள் அவற்றைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும்.டிஜிட்டல் சேவைகளை நன்றாக பெறக்கூடிய வாய்ப்பு விவசாயிகளுக்கும் சிறிய தொழில்துறை நிறுவனங்களை நடத்துபவர்கள், மாணவர்கள் மற்றும் வசிப்பிடம் மற்றும் தனிப்பட்ட பின்னணி காரணமாக பின்தங்கிய நிலையல் உள்ள மற்றைய பல பிரிவினர்களுக்கும் உதவியாக அமையும்.அசமத்துவமான டிஜிட்டல் கட்டமைப்பு அவர்களின் நலன்களுக்கு எதிரானதாக அமைந்து கிராமிய -- நகயர்ப்புற இடைவெளியை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

வர்க்க வேறுபாடு மற்றும் பால்நிலை வேறுபாடு ஆகியயவற்றின் அடிப்படையிலான டிஜிட்டல் பிளவிலும் அதிகரிப்பு காணப்படுகிறது. உயர்வர்க்கத்தவரும் மத்தியதர வர்க்கத்தவரும் டிஜிட்டல் உலகை அனுபவிப்பதற்கான வாய்ப்பை மிகவும் பெருமளவுக்கு கொண்டிருக்கிறார்கள்.அதை அவர்கள் பொழுதுபோக்கு உட்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற அதேவேளை, வறிய பிரிவினருக்கு அந்த வசதிகள் பெருமளவுக்கு கிடைப்பதில்லை.

ஊரடங்கு தொடரும் நிலையில் , பொது நிறுவனங்களின் தொழில்நுட்ப சாதனங்கள் மிகவும் பிரபல்யமானவையாக மாறுகின்றன.பல நிறுவனங்கள் தொடர்பு கொள்வதற்கும் சிறுவர்களை போதிப்பதற்கும் இணையவழி தளங்களை ( Online platforms ) பயன்படுத்துகின்றன.ஆனால், இது நகர்ப்புறங்களில் உள்ள சிறுவர்களுக்கு மாத்திரம், அதுவும் கூடுதலாக தனியார் நிறுவனங்களின் வசதிபடைத்த மாணவர்களுக்கு பயன்தரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.வீடுகளில் உள்ள மாணவர்களுடன் பாடவிதானங்களுக்கு புறம்பான பல்வேறு நடவடிக்கைகளுக்காக ஊடாட்டங்களைச் செய்வதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்துமாறு மத்திய இரண்டாம் நிலைக்கல்விச் சபை பாடசாலைகளைக் கேட்டிருக்கிறது.ஆனால், டிஜிட்டல் கொள்கைகளும் நடைமுறைகளும் பெருமளவுக்கு சமுதாயத்தின் சகல பிரிவினருக்கும் பயன்தரத்தக்கவையாக அமைவதையும் தற்போது காணப்படுகின்ற டிஜிட்டல் பிளவு ஊரடங்கு நீக்கப்பட்டதும் மேலும் அகலமாகாதிருப்பதையும் உறுதிசெய்துகொள்ளவேண்டியது அவசியமாகும்.
 

https://www.virakesari.lk/article/80075

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.