Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

E- Kalvi அமைப்பு பற்றிய சிறு குறிப்பு ..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
Image may contain: 2 people, eyeglasses
 
 

இலங்கையில் இடம் பெற்ற முப்பது வருட யுத்தம், பல கல்வியாளர்களை புலம் பெயர வைத்தது. அவர்கள் அனைவரும் விருப்பத்தின் பேரில் புலம்பெயர்தவர்கள் அல்ல. தமது சிந்தனை திறனை, அறிவை மனிதசமூகத்துக்கு இலங்கையில் வழங்க முடியாத சூழ்நிலையில், உலகின் ஏதோ ஒருமூலையில் இருந்து கொண்டு வழங்குவோம் என்றே புலம்பெயர்ந்தார்கள்....

அந்தவகையில், புலம் பெயந்தவர்தான் நண்பர் கலாநிதி குமாரவேல் கனேசன். புலம் பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தாலும், இலங்கையில் உள்ள மாணவர்களுக்குள்ள ஆசிரியர் பற்றாகுறையை உணர்ந்து, தன்னோடு ஒத்த சிந்தனை உள்ளவர்களையும் இணைத்து, E kalvi என்ற ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் இலங்கை கிராமங்களில், இளைஞர்களை கொண்ட தன்னார்வு அமைப்புகளை உருவாக்கி மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கி வருகின்றார். வடமாகாண கல்வி திணைகளமும், சில பாடசாலைகளில் இவர்களது சேவையை பயன்படுத்துகின்றது. E Kalvi அமைப்பின் அனுசரனையுடன் உருவாக்கப்படும் இளைஞர் தன்னார்வ குழுக்கள், சுயமாக செயலூக்கத்துடன் இயங்க கூடிய ஜனநாயக பண்புகளுடன் கூடிய மிகச்சிறந்த மாதிரியாகும்.

இலங்கையில் E Kalvi Centres என்று அழைக்கப்படுகின்ற இந்த அமைப்புக்கள் வடகிழக்கு, மலையகம் உட்பட 30 க்கு மேற்பட்ட இடங்களில் செயற்பட்டு கொண்டு இருப்பதுடன், ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுக்கும் ஒவ்வொன்றாக இது பரந்து வியாபித்து வளர வேண்டும்.

E kalvi அமைப்பின் செயற்பாடு மட்டுமல்ல, தற்போது கோரோனா வைரஸ் தாக்குதலினால், உலகமே பதட்டத்துக்குள்ளாகி இருக்கும் போது மக்களுக்கு விழிப்புணர்வை கொடுக்கும் வகையில் பல கட்டுரைகளையும், செய்திகளையும் முகநூல் வாயிலாக வெளியிட்டு வருகின்றார்.

தானுன்டு,தன் குடும்பம் உண்டு என்று இல்லாமல் தன்னால் இயன்ற சமூகநலப்பணிகளை செய்து வருகின்ற கலாநிதி குமாரவேல் கனேசன் அவர்கள் தொடர்ந்தும் அப்பணிகளை,தேக ஆரோக்கியத்துடன், உத்வேகத்துடன் செய்வதற்கு இறையருள் துணை நிற்க வேண்டும் என பிரார்தித்து, அவரது பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் பேருவகை கொள்கின்றேன். நீங்களும் என்னுடன் இணைந்து அவரை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல், பின்வரும் இணைப்புக்கு சென்று அனைத்து செயற்திட்டங்களையும் பார்வையிட்டு, அங்கத்தவராக சேர்ந்து, ஏழை மாணவர்களின் கல்வி கண் திறக்கும் இந்த மகத்தான பணியினை மேலும் விரிவாக்க உதவுமாறும் வேண்டுகின்றேன்.

E- Kalvi அமைப்பு பற்றிய சிறு குறிப்பு ..

1.e-Kalvi Charity Fund Inc. (also known as JUGA - Victoria Inc) - என்பது அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் யாழ் பல்கலைக்கழக பட்டதாரிகளினால் 2014 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இலாப நோக்கமற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2. நண்பர் குமாரவேலு கனேசன் அவர்கள் அதன் ஆரம்பகால உறுப்பினராகவும் தொடர்ந்தும் அதன் செயலாளராகவும் தொடர்பாளராகவும் இருந்து வருகின்றார் . 2018 ஆம் நிதியாண்டில் அதன் தலைவராக கடமையாற்றியுள்ளார் . e-Kalvi charity யின் பங்களிப்பில் தற்போது Muralee Muraledaran தலைமையில் 18 பேர் கொண்ட செயற்குழுவும் 100 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் ஈடுபட்டுள்ளனர்.

3. e-kalvi charity யின் தற்போதைய facebook பக்கம் - https://www.facebook.com/JUGAvictoria. இணையம் www.ekalvi.org

4. தற்போது வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், இலங்கை தேசிய கல்வி நிறுவனம் என்பன E Kalvi அமைப்பின் நடவடிக்கைகளை அங்கீகரித்து சேர்ந்து பயணிக்கின்றன.

5. E - Kalvi அமைப்பின் மகுட வாசகம் - Educated Children are Our Future - கற்றறிந்த சிறுவரே எம் கலங்கரை விளக்கம்.

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'

-பாரதி

அன்பே இறைவன்
#யோவதியார்
17.04.2020

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.