Jump to content

ஊரடங்குச் சட்டமும் பாலியல் தொழிலாளர்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சத்தினால் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் பல்வேறு பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் ஏழு பேர் உயிரிழந்துள்ள அதேவேளை குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200 ஐ அண்மித்துள்ளது. நாட்டின் நிலைமை இவ்வாறே தொடர்வதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

வறுமைக்கோட்டின் கீழுள்ள மக்கள் ஏதோ ஒரு வகையில் தனவந்தர்களாலும் தன்னார்வக்குழுக்களினாலும் கவனிக்கப் படுகின்றார்கள். பலர் உதவிகளைப் பெற்று தமது அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றார்கள். ஆனால் தமது உடலை முதலிட்டு தொழில் செய்யும் பாலியல் தொழிலாளர்களின் நிலைமையோ பார்ப்பாறற்றுக் கிடக்கின்றது. கொரோனா வைரஸினால் சுகாதாரத்துக்கு பாரிய அச்சுருத்தல் நிலவியதால் அவர்களால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் முன்னரே தொழில் செய்ய முடியாத ஒரு நிலைமை தோன்றி விட்டது.

இந்த நிலைமைகள் குறித்து ஹாரட் டு ஹார்ட் லங்கா எனும் LGBTQIA சமூகத்துக்கான அமைப்பின் முகாமையாளர் ஹேமல் மஞ்சு எங்களோடு அவரது உணர்வுகளை பகிர்ந்து கொள்கின்றார். ஓரினச்சேர்க்கையாளரான இவர் பல வருடங்களாக LGBTQA சமூகத்தின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகின்றார். ஹார்ட் டு ஹார்ட் மூலம் குரலற்ற ஒரு சமூகத்துக்கு தன்னால் முடிந்த சேவைகளை இவர் செய்கின்றார். பாலியல் தொழிலாளர்களுடன் பணிபுரியும் இவர் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எம்மோடு பகிர்ந்து கொள்கின்றார்.

ஊரடங்குச் சட்டம் நிலவும் இந்த காலத்தில் இலங்கையில் உள்ள பாலியல் தொழிலாளர்களுக்கு எவ்வாறான உதவிகள் கிடைக்கின்றன?

இங்கே எந்தவொரு அமைப்பும் நேரடியாக பாலியல் தொழிலாளர்களுக்கு உதவுவதாக தெரியவில்லை. இதற்கான செயற்றிட்டகள் இன்னுமும் செயற்படுத்தப்படாமல் உள்ளது. கிட்டத்தட்ட பாலியல் தொழில் செய்யும் அனைவரும் தம்மை ஏதோவொரு அமைப்பில் தம்மை பதிவு செய்திருப்பார்கள். அந்தந்த அமைப்புகளை பொருந்து ஒவ்வொருவருக்கும் உதவிகள் கிடைக்கும். பணமாக உலர் உணவுப்பொருட்களாக அவர்களுல் சிலருக்கு ஏதோ சில உதவிகள் கிடைக்கின்றன.

எங்களது அமைப்பின் மூலமாகவும் நாங்கள் முடிந்தளவு உதவிகளை செய்கின்றோம். எங்களது நன்கொடையாளர்களை தொடர்புகொண்டு விடயத்தை புரியவைத்து நிதி சேகரித்து அதனை வழங்குகின்றோம். எங்களுடைய அமைப்புக்கும் இப்போது நிதி கிடைப்பதில்லை. ஊரடங்குச் சட்டத்தினால் யாரையும் நேரடியாக சென்று தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. எங்கள் அமைப்பில் இருந்து இல்லாமல் அதற்கு வெளியில் சென்று நாங்கள் நிதியை சேர்த்து இவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.

இவர்களது பிரச்சினைகளுக்கு அரசாங்கம் ஏதாவது ஒரு தீர்வு வைத்திருக்கின்றதா?

எனக்குத் தெரிந்த வகையில் அரசாங்கம் இவர்கள் தொடர்பாக கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. அரசும் அரசாங்கமும் ஏனைய மக்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவுதற்கு அல்லும் பகலும் உழைக்கின்றது. அதில் நான் குறை காணவில்லை. அதில் குறை காண்பதற்கான நேரம் இதுவுமில்லை. அது கட்டாயமானது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

கொரோனா வைரஸினாலும் பட்டினியாலும் பொதுமக்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன. இந்த பொதுமக்கள் என்ற வரையரைக்குள் பாலியல் தொழிலாளர்களை அரசாங்கம் உள்வாங்கவில்லை. ஐரோப்பாவில் பாலியல் தொழிலாளர்களுக்கு விசேட சலுகைகள் வழங்கப்படுகின்றன. நாடு முடக்கப்படுவதைத் தொடர்ந்து அவர்களுக்கு சுகாதார அறிவுறுத்தல்களும் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் இலங்கையில் அவ்வாறில்லை. ஏதோ ஒரு சில தன்னார்வக் குழுக்கள் இந்த கஷ்டமான தருணத்தில் அவர்களுக்கு உதவி வருகின்றன.

பாலியல் தொழிலாளர்களை முகாமைத்துவம் செய்வது எங்களது அமைப்பின் செயற்பாடுகளில் இல்லாத ஒன்றுதான். ஆனால் LGBTQIA சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினை என்று பார்க்கும் இது பற்றி கரிசனை காட்ட வேண்டியிருக்கின்றது. நாங்கள் எங்களால் முடிந்தவரை செயற்படுகின்றோம். முடிந்தவரை இணையவழி ஊடாக சமூக ஆர்வலர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு கொடுப்பனவுகளையும் உலர் உணவுப்பொருட்களையும் வழங்குகின்றோம்.

கொரோனா வைரஸ் அச்சம் நிகழும் இந்த காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் எவ்வாறான அறிவுறுத்தல்ளை பின்பற்ற வேண்டும்?

கொரோனா வைரஸ் அனைவரையும் தாக்கக் கூடியது. அதற்கு இனம், மதம், பால்நிலை என எதுவுமே கண்ணுக்குத் தெரியப்போவதில்லை. எனவே அனைவருக்கும் பொது எதிரியாக இருக்கும் இந்தக் கொரோனாவை அனைவரும் இணைந்துதான் விரட்ட வேண்டும். அந்த வகையில் அனைவரையும் போல பாலியல் தொழிலாளர்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து நாட்டை பாதுகாக்க கடமைப்பட்டவர்களாவர். இந்த நாட்டுப்பிரஜை என்பதன் அடிப்படையில் அவர்களும் அரசாங்கம் சொல்லியிருக்கின்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்றித்தான் ஆக வேண்டும்.

தொழிலுக்குச் செல்லாமல் முடிந்தவரை சேமிப்பிலுள்ள பணத்தை உபயோகிக்க அவர்கள் முன்வர வேண்டும். மூக்கு, வாய் போன்ற பகுதிகளை எந்நேரமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சந்தேகத்துக்குறிய நபர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸினை பரப்பி விட்ட பழியை தாம் வாங்கிக் கொள்ளாது அவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்து சுகாதார அதிகாரிகளுக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும். பொருளாதாரத்தை காரணம் காட்டி யாரும் தம் மீது பழியை வாங்கிக் கொள்ளக்கூடாது.  

http://www.bakamoono.lk/tm/article/1823/ஊரடங்குச்-சட்டமும்-பாலிய?fbclid=IwAR2Jghhyw3_C32GN2dGjSvEHSlh49bBLdhLYYTU38UmQxF7ma0ZE2yxdBxA

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.