Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ராஜபக்ச அரசின் நெருக்கடியும் சர்வதேச நன்கொடையாளர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்ச அரசின் நெருக்கடியும் சர்வதேச நன்கொடையாளர்களும்

-புரட்சி (தாயகம்)-

கடந்த வாரம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஐரோப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, நெதர்லாந்து, சுவிடன், யப்பான், நோர்வே, ஜேர்மனி, சுவிற்லாந்து ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் தூதரக அதிகாரிகளும் ஒன்றுகூடி சிறிலங்காவிற்கு எதிர்காலத்தில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திக்கான நிதியுதவி வழங்குவதானால் சிறிலங்கா அரசு கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பான பத்துக் கடப்பாடுகளை அறிக்கையாக வெளியிட்டார்கள்.

இதன்பின் யப்பானிய விசேட தூதுவரான யசுசி அக்காசி மற்றும் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சரான அலெக்சாண்டர் டௌனர் ஆகியோர்; தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சிறிலங்கா அரசின் நடவடிக்கைகள் தொடர்பாக தமது கண்டனங்களையும் கரிசனைகளையும் தெரிவித்துள்ளார்கள்.

இவ்வாறான அறிவிப்புக்களுக்கு எல்லாம் பதிலளிப்பதுபோல, சிறிலங்கா ஜனாதிபதி தமது வழமையான பாணியில் ஊடகங்களின் இயக்குனர்களையும் பத்திரிகையாசிரியர்களையும் அழைத்து, வெளிநாடுகள் நன்கொடை அளிக்க விரும்பினால் எதுவித நிபந்தனைகளையும் விதிக்கக் கூடாது என்று தெரிவித்தார். அவ்வாறில்லாதுவிடின் தமது அரசாங்க பணத்திலேயே அபிவிருத்தி செயற்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்போவதாக கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளின் உதவியை மட்டும் நம்பியே ஆட்சி நடத்துவதே கடந்த பல தசாப்த காலமாக மாறி மாறி பதவி வகித்த சிறிலாங்கா ஆட்சியாளர்களின் வாடிக்கையாகும். இவ்வாறான சூழ்நிலையில், தற்போது சிறிலாங்காவின் பணவீக்கமானது முன்னெப்பொழுதும் இல்லாதளவிற்கு 20 வீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகவும் பொருளாதாரம் விரைவாக சீரழிந்துபோவதாகவும் பல்வேறு ஆய்வுகள் செய்தி ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில் மகிந்தவின் இவ்வாறான அறிவிப்புக்கள் மேலும் சிறிலங்காவை மோசமான அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கும் நெருக்குவாரங்களுக்கும் அகப்பட வைப்பதற்கே உதவிபுரியும்.

எவ்வாறெனினும் மகாவம்ச மனவுலகில், புராண இதிகாசக கருத்துலகில் புதைந்து கிடக்கும் சிங்கள அரசியல் தலைமைகளும் பேரினவாதிகளும் தமிழ் மக்களையும் விடுதலைப்புலிகளையும் அழிக்க வேண்டும் என்ற தமது பேரினவாத மனநோயின் பாதிப்பில் இருந்து மாறப்போவதில்லை என்பதை அவர்களது அறிக்கைகளும் செயற்பாடுகளும் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அதாவது சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகிக்கின்ற மகிந்தவின் சகோதரான கோத்தபாய மூன்று வருடங்களுக்குள் புலிகளை முற்றாக அழிக்கமுடியும் என்று தெரிவித்தார். கிழக்கில் முதலில் புலிகளை அழித்துவிட்டு வடக்கு நோக்கி எமது நடவடிக்கைகளை திருப்புவோம் என்று சிறிலங்காவின் இராணுவத் தளபதியான சரத் பொன்சேக தெரிவித்தார். இது தவிர பல்வேறு சிறிலங்கா அமைச்சர்களும் பேச்சாளர்களும் புலிகள் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்துக்கொண்டு வருகின்றார்கள் என்றும் அவர்களுக்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்தி வருகின்றோம் என்றும் பரப்புரை செய்து வருகின்றார்கள்.

இவ்வாறுதான் 1960களில் அமெரிக்காவானது வியட்நாமியப் போராட்டத்தில் ஈடுபட்ட வியட்நாமியப் போராளிகள் தொடர்பாக தீவிர பரப்புரை செய்துவந்தது. வியட்நாமிலே போர் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்திய அமெரிக்காவின் நிர்வாகம் 1967ம் ஆண்டு அமெரிக்க மக்கள் வியட்நாம் போருக்கு எதிராக பென்ரகன் முன்பாக ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்தியபோது ~அமெரிக்கா போரிலே வென்றுகொண்டிருக்கின்றது| என்றும் மக்கள் போரில் அமெரிக்கா வெற்றியீட்டுவது தொடர்பாக எதுவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அப்போதைய ஜனாதிபதியான ஜோன்சன் தெரிவித்தார். அதாவது இப்போரானது விரைவில்; முடிவிற்கு வந்துவிடும் என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.

அத்தோடு வியட்நாமில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் மேலாளர் குழாம் தலைவராக விளங்கிய ஜெனரல் வெஸ்ற்மோர் லான்ட் தேசிய ஊடக அமைப்பிற்கு பேட்டி வழங்குகையில் ~வியட்நாமிலே போரின் முடிவிற்கான காட்சிகள் புலப்படத்தொடங்கிவிட்டன| என்று தெரிவித்தார்.

இவ்வாறான அமெரிக்கர்களின் பொய்ப்பரப்புரைகள் ஊடகங்கள் ஊடாக வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் வியட்நாமிய போராளிகளும் வட வியட்நாமிய படைகளும் ஜெனரல் கியாப்பின் தலைமையில் பாரிய சமர் ஒன்றிற்காக தம்மை தயார்செய்துகொண்டிருந்தனர். வியட்நாமிய விடுதலைப் போரின் தலைவிதியை தீர்மானிக்கும் சமராக, விடுதலைப் போராளிகளின் அர்ப்பணிப்பு மற்றும் உளவுரன் என்பனவற்றிற்கு முன்னால் வல்லரசுகள் கூட தோல்விகளையே சந்திப்பார்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை உலக வரலாற்றில் நீரூபித்த நடவடிக்கையாக ரெற் வலிந்த தாக்குதல் நடவடிக்கை (வுநவ ழுககநளெiஎந) அமைந்தது.

ரெற் என்பது வியட்நாமியர்களின் புதுவருடப் பிறப்பு கொண்டாட்டமாகும். பொதுவாக ரெற் வாரம் என்று சொல்லப்படுகின்ற ஜனவரி மாதக் கடைசி வாரத்தில் 1968 ம் ஆண்டு ஜனவரி 30ம் திகதி ரெற் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நடவடிக்கை யூன் 8, 1968 வரை நீடித்தது.

ரெற் நடவடிக்கையின் பிரதான இலக்குகளாக முதலில் தென்வியட்நாமின் எல்லைப்பிராந்தியங்கள் மீது தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டு பிரதேசங்களை முடிந்தளவிற்கு கைப்பற்றுதல். அதனைத் தொடர்ந்து பரந்தளவிலான தாக்குதல் நடவடிக்கைகளை பிரதான நகர மற்றும் மாகாணங்களின் மீது மேற்கொண்டு தென் வியட்நாமிய பொம்மை அரசினை வீழ்த்துவதன் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய அந்நியப் படைகள் வேறு வழிகள் இன்றி வியட்நாமை விட்டு வெளியேறப்பண்ணுதல். இதன்பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட வெளியேறாமல் இருக்கின்ற அமெரிக்கா மற்றும் ஏனைய அந்நியப் படைகளை அழித்து வியட்நாமை பூரணமாக விடுதலை அடையச் செய்தல்.

அமெரிக்கர்களின் பிரதான தளங்கள், தென் வியட்நாமில் அமெரிக்க மற்றும் அமெரிக்க ஆதரவு தென்வியட்நாமிய அரசின் கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற பிரதான தலைநகரங்களான சைகோன் மற்றும் ஹ_ என்பனவற்றின் மீது வியட்கொங் போராளிகள் தாக்குதல்களின் போது தமது பிரதான கவனத்தை செலுத்தியிருந்தனர். ஒட்டுமொத்தமாக எட்டு மாகாணங்கள், ஐந்து சுயாட்சி நகரங்கள், 58 பட்டின சபைகள் என்பனவற்றின் மீது வியட் கொங் போராளிகளால் ஏககாலத்தில் தாக்குதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அத்துடன் பிரதான தலைநகரான சைகோனின் ஆறு முக்கிய இலக்குகள் வியட்நாமிய போராளிகளால் தாக்குதல் நடவடிக்கைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. தென் வியட்நாமிய படைத்துறை தலைமைச் செயலகம், ஜனாதிபதி தியுவினது செயலகம், அமெரிக்க தூதுவராலயம், ரான் சொன் நட் விமானத்தளம், லோங் பிங் கடற்படைத் தலைமைச்செயலகம் மற்றும் தேசிய வானொலி நிலையம் என்பனவே அவையாகும்.

இந்நடவடிக்கைகளில் அமெரிக்க தூதுவராலயத்தின் மீது வியட்கொங் போராளிகள் மேற்கொண்ட தாக்குதலானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஜனவரி 31ம் திகதி அதிகாலை 2.45 மணியளவில் 19 வியட்கொங் போராளிகள் கொமாண்டோ பாணியிலான தாக்குதல் நடவடிக்கையினை மேற்கொண்டு தூதுவராலய சுவரில் துளை ஒன்றை இட்டு பல காவலாளிகளைச் சுட்டுக்கொன்றபடி உள்ளே நுழைந்தார்கள். கிட்டத்தட்ட ஆறுமணி நேரம் வியட்கொங் போராளிகள் தூதுவராலயத்தினை தமது கட்டுப்பாட்டினுள் வைத்திருந்தார்கள். இது அமெரிக்க ஜெனரல்கள் மற்றும் அமெரிக்க அரச அதிகாரிகளின் முகத்தில் கரியைப் பூசியது போலாகிவிட்டது. தமது சொந்த தூதுவராலயத்தை ஒழுங்காக வியட்கொங் போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்க முடியாதவர்கள் எவ்வாறு முழு வியட்நாமை பாதுகாக்கப் போகின்றார்கள் என்று அமெரிக்க மக்களும் அமெரிக்க ஊடகங்களும் கேள்வி மேல் கேள்விகளை எழுப்பினார்கள்.

இதேபோன்று ஹ_ நகரை மீளக் கைப்பற்றுகின்ற நடவடிக்கையில் 216 அமெரிக்க படையினர் கொல்லப்பட்டதாகவும் கா சான் என்ற விமானத்தளத்தில் நிலைகொண்டிருந்த அமெரிக்க மரைன் படையினர் மீதான வியட்கொங் போராளிகளின் தாக்குதலில் 730 படையினர் கொல்லப்பட்டும் 2,642 பேர் காயங்களுக்கும் உள்ளானதாக அமெரிக்கவினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையான அமெரிக்கப் படையினரின் இழப்புக்கள் இதனைவிட பலமடங்கு அதிகம் என்பது பெரும்பாலானோரின் அபிப்பிராயமாகும். அத்துடன் வியட்நாமியப் போராளிகளின் இழப்புக்கள் பல மடங்கு அதிகமாக வழமைபோலவே அமெரிக்கர்களினால் காட்டப்பட்டது.

எது எவ்வாறு இருந்தபோதிலும் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக நீடித்த ரெற் நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கத்தின் அதிர்வுகளை தென்வியட்நாமில் உள்ள அமெரிக்க படைத்துறை மட்டுமல்லாது வோசிங்டனின் வெள்ளை மாளிகை மற்றும் பென்ரகன் ஆகியோர்களும் உணரத்தொடங்கினார்கள். அமெரிக்கா வெல்ல முடியாத போர் ஒன்றிற்குள் அகப்பட்டுகொண்டு சிக்கித் தவிக்கின்றது என்பதை அமெரிக்க ஊடகங்களும் அமெரிக்க மக்களும் தெளிவாகப் புரிந்துகொண்டு இப்போருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்தினார்கள். போருக்கு எதிரான செய்திகளும் கட்டுரைகளும் நாளாந்தம் ஊடகங்களில் வெளிவரத்தொடங்கின.

இதன் விளைவு அமெரிக்க ஜனாதிபதி ஜோன்சன் மக்கள் மத்தியில் தனது செல்வாக்கினை வேகமாக இழக்கத்தொடங்கினார். அத்துடன் மார்ச் 1968ம் ஆண்டு மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் பங்கெடுக்கும் தனது முடிவை மாற்றிக்கொண்டு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டார்.

இதேபோன்று வியட்நாம் போரில் விரைவாக வென்று வருகின்றோம் என்று தெரிவித்த அமெரிக்க படைத்துறை மேலாளர் குழாம் தலைவர் ஜெனரல் வெஸ்ட்மோர் லான்ட் ~பதவியுயர்வு| வழங்கப்பட்டு வியட்நாம் போர் நடவடிக்கைகளுக்கும் அவருக்கும் ஒருவித தொடர்பும் இல்லாமல் செய்யப்பட்டது. அவர் மேல் மாடிக்கு காலால் உதைத்து ஏற்றப்பட்டார் என்று அவரது பதவியுயர்வு பரிகசிக்கப்பட்டது.

வியட்கொங் போராளிகளின் அமெரிக்க படைகளுக்கும் நிர்வாகத்திற்கும் திகைப்பையும் அதிர்ச்சியையும் இழப்பையும் ஏற்படுத்திய ரெற் வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் எதிரொலியாக அமெரிக்கா 1975ம் ஆண்டு ஏப்ரல் 30ம் திகதி மிகுந்த அவமானத்துடன் தனது படைகளை முற்றுமுழுதாக வியட்னாமில் இருந்து வெளியேற்றியது.

இந்த வரலாறு சொல்லும் செய்தியை மகாவம்ச இதிகாச பழமைவாதச் சிந்தனைக்குள் சிக்கியுள்ள பேரினவாதிகள் ஒருபோதுமே விளங்கிக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு விளங்குகின்ற மொழி ஒன்றே ஒன்றுதான். அது என்ன என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

http://www.tamilnaatham.com/articles/2007/...chi20070525.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.