Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஈழப்போரும் நான்காவது தலைமுறை தாக்குதல் விமானங்களும

Featured Replies

அருஸ் (வேல்ஸ்)-

அதிக படைவலு கொண்டு கிழக்கை கைப்பற்றுதல், கடுமையான வான் தாக்குதல் மூலம் வடக்கில் உள்ள விடுதலைப் புலிகளை ஒரு நெருக்கடிக்குள் தள்ளுதல், அனைத்துலக சமூகத்தின் முன் அனைத்துக்கட்சி, குழுவைக் கூட்டுதல் என்ற அரசின் நிகழ்சி நிரல்கள் வான்புலிகளின் தாக்குதலுடன் குழம்பிப் போய் உள்ளன.

தனது அனைத்து போர்நிகழ்ச்சி நிரல்களையும் ஒதுக்கிவிட்டு வான்பரப்பின் பாதுகாப்பிற்கான ஆயுதக் கொள்வனவுகள், நிபுணர்களின் தேவை என கடுகதியில் செயலாற்றிவரும் அரசுக்கு தற்போது முதன்மையாக இருப்பது வான்பரப்பின் பாதுகாப்பே.

விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதல் நிகழ்ந்து இரு மாதங்கள் கடந்த நிலையிலும் அரசு தனது வான் பாதுகாப்பு பொறிமுறைகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்களை அடைய முடியவில்லை. விடுதலைப் புலிகளின் விமானங்கள் கொலன்னாவை எண்ணெய்க் களஞ்சியங்களை தாக்கக் கூடும் எனவும் அப்படி அவர்கள் தாக்கவரும் போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான தாக்குதலை கொடுப்பதற்கு என இரகசியமாக கொண்டு வரப்பட்ட சாம்-16 ஹிம்லெற் (ளுயு-16 புஐஆடுநுவு ஐபடய-1 9மு310) ஏவுகணையினால் விடுதலைப் புலிகளின் விமானங்களை தமது தாக்குதல் இலக்கிற்குள் கொண்டுவர முடியாது போனதும் மேலதிக குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கொசோவோ போரின் போது நேட்டோ வான்படையினர் 4500 மீற்றர் உயரத்திற்கு மேலே மிகவும் சந்தோசமாகப் பறந்து தமது தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடியதாக இருந்தது. அதற்கு காரணம் சேர்பிய படையினரின் வான் பாதுகாப்பு பொறிமுறைகள் பழமையானதாகவும், வலிமையற்றதாகவும் இருந்ததே. அன்று சேர்பியப்படையினரிடம் இருந்த வான் எதிர்ப்பு ஏவுகணைகளில் நவீனமானது படைவீரர்களால் காவக்கூடிய இக்லா வகை சாம்-16 ஏவுகணைகளே. இந்த வகை ஏவுகணைகளால் 4500 மீற்றர் உயரத்திற்கு மேலாகவும், 500 அடி உயரத்திற்கு தாழ்வாகவும் பறக்கும் விமானங்களை தமது தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வர முடியாது.

அதாவது இந்த எல்லைப்புள்ளிகளுக்கு அப்பால் விமானங்கள் தப்பிக் கொள்ளலாம். உதாரணமாக, 1967 ஜூன் 5 ஆம் நாள் நடந்த ஒப்பரேசன் போக்கஸ் நடவடிக்கையில் இஸ்ரேலின் தாக்குதல் விமானங்கள் எகிப்தின் தளங்களை அடையும் முன்னர் சோவியத் தயாரிப்பான ளுயு-2யு ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் இருந்து தப்பிப்பதற்கு அவற்றின் குறைந்த தூரவீச்சிற்கும் குறைவான உயரத்திலேயே பறந்து சென்றன. ளுயு-2யு ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள் 30 கி.மீ அதிகூடிய தூர வீச்சும், 8 கி.மீ குறைந்த தூரவீச்சும் கொண்டவை.

கொசோவோ போர் மற்றும் ஒப்பரேசன் போக்கஸ் என இரு நடவடிக்கைகளிலும் ஏவுகணைகளின் இரு உயர வீச்சுக்களின் எல்லைகளை தமது தப்பும் உத்திகளாக விமானங்கள் பயன்படுத்தியிருந்தன.

இலகுரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளின் மட்டுப்படுத்தப்பட்ட உயர வீச்சுக் காரணமாகவே விமானங்கள் தாக்குதலுக்காக அல்லது தரையிறங்குவதற்காக தாழப்பறக்கும் போது அவற்றை வீழ்த்துவதற்கு பெரும்பாலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் மீதான தாக்குதல், அதன் பின்னர் பலாலி மீதான தாக்குதல் என்பவற்றின் போது பெருமளவில் கனரக வான் எதிர்ப்புத் துப்பாக்கிகள், இலகு ரக வான் எதிர்ப்பு பீரங்கிகளை பயன்படுத்திய படையினர்.

கொலன்னாவ மீதான வான்தாக்குதலின் போது சாம்16 ரக ஏவுகணைகளை பயன்படுத்தியிருந்தனர். ஆனால் இரு உத்திகளும் பயன் தராது போனதால் தற்போது இடைமறிப்புத் தாக்குதல் விமானங்கள், உலங்குவானூர்திகள் மீது அரசின் பார்வைதிரும்பியுள்ளது.

வான்படையினரிடம் உள்ள ஆஐ-24ஏஇ ஆஐ-35 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளை வான் தாக்குதல் நடவடிக்கைக்கு ஏற்றவாறு தரமுயர்த்துதல், மிக்-29 ரக நவீன வான் தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்தல் என அரசு தனது வான்படையின் வான் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை வான்படையிடம் உள்ள சோவியத் தயாரிப்பான ஆஐ-24ஏஇ ஆஐ-35P ரக உலங்குவானூர்திகள் இக்லா சாம்-16 வகையான (ஐபடய-ளுயு16 - யுசை-டயரnஉhநன எநசளழைn) வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகளை காவக் கூடியவை. ஆனால், இன்றுவரை அவை வான் எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டிருக்கவில்லை.

வான்புலிகளின் தாக்குதலை தொடர்ந்து அரசினால் மேற்கொள்ளப்படும் வான்படையின் நவீனமயமாக்கலில் விடுதலைப் புலிகளின் விமானங்களை எதிர்கொள்ளும் வான்பாதுகாப்பு பொறிமுறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (1665 கோடி ரூபா) பெறுமதியில் மிக்-29 ரக தாக்குதல் விமானங்களும், உலங்குவானூர்திகளும் கொள்வனவு செய்யப்படும் அதே சமயம் தற்போது உள்ள உலங்குவானூர்திகளுக்கும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்படவும் உள்ளன.

2000 ஆண்டுகளின் முற்பகுதியில் மூன்றாம் தலைமுறை விமானங்களை அதிகளவில் கொள்வனவு செய்து தனது வான்படையை நவீனமயப்படுத்துவதன் மூலம் விடுதலைப் புலிகளை முறியடித்து விடலாம் என எண்ணிய அரசு தற்போது நடைபெற்று வரும் நான்காவது ஈழப்போரின் ஆரம்பத்திலேயே, நான்காவது தலைமுறை தாக்குதல் விமானங்களை அவசரமாக கொள்வனவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

நான்காவது தலைமுறை விமானங்கள் என அழைக்கப்படுபவற்றில் (குழரசவா பநநெசயவழைn தநவ) அமெரிக்காவின் எவ்14, எவ்15, எவ்16, எவ்ஏ18 போன்றனவும், சோவியத்தின் மிக்-29, எஸ்யூ-27 (ளுரு-27) போன்றனவும் அடங்கும்.

அதாவது அண்ணளவாக 1980-2010 வரையான காலப்பகுதிகளில் சேவைக்கு வந்த விமானங்கள் நான்காவது தலைமுறை விமானங்கள் என அழைக்கப்படுகின்றன.

இலங்கை அரசின் மிக்-29 ரக விமானங்களின் கொள்வனவானது அரசு நான்காவது தலைமுறை வான் போருக்குள் நுழைவதையே காட்டுகின்றது. இந்த விமானம் வான் தாக்குதலை பிரதானமாக கொண்டிருந்தாலும், தரைத்தாக்குதலுக்கும் வடிவமைத்து பயன்படுத்தக் கூடியவை. ஆனால் பிரதான தரைத்தாக்குதல் விமானமாக தொழிற்பட முடியாதவை.

எனவே மிக் ரக விமானங்களின் தரமுயர்த்துதலின் ஓரங்கமாகவே மிக்-29 விமானங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன என்பது தவறானது. அதாவது மிக்-27 ரக விமானங்களுக்கு மாற்றீடாக மிக்-29 விமானங்களைக் கொள்வனவு செய்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஏனெனில், ஒரு தரைத்தாக்குதல் விமானத்தை தரைத்தாக்குதல் விமானத்தினால் அல்லது வான்தாக்குதல் விமானத்தை வான்தாக்குதல் விமானத்தினால் மாற்றீடு செய்வதே தரமுயர்த்துதல் ஆகும்.

தரைத்தாக்குதல் விமானத்தை வான்தாக்குதல் விமானத்தால் மாற்றீடு செய்வது என்பது இராணுவத்தின் டாங்கிப்படையை நவீனமயப்படுத்தும் திட்டம் எனக் கூறிக்கொண்டு ஆட்டிலறிகளை வாங்குவது போன்றது.

நடைபெறும் போர் இந்த விமானக் கொள்வனவுகளால் அதிக செலவு மிக்கதாக மாறியுள்ளது. வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள வான் தாக்குதல் மிக்-29 ரக தாக்குதல் விமானங்கள் தற்போதுள்ள தரைத்தாக்குதல் மிக்-27 ரக விமானங்களை விட ஏறத்தாழ 8 மடங்கு விலை அதிகமானவை.

மேலும் இந்த விமானங்களின் பாவனையானது போரை அனைத்துலகத்தின் கவனப்புள்ளியில் எதிர்வரும் காலங்களில் குவியச் செய்யும் என்பதும் உண்மை.

ஏனெனில் அதிக செலவுகளை உள்வாங்கும் போரினால் தம்மால் பொதுமக்களின் அபிவிருத்திக்கு என வழங்கப்படும் நிதி தவறாக பயன்படுத்தப்படக்கூடும் என்ற கவலை அனைத்துலக சமூகத்திற்கு ஒருபுறம் இருக்க, நவீன வான்கலங்களுக்கான நிபுணத்துவ உதவிகள், பயிற்சிகள், விமானிகள் என்ற போர்வையில் பல நாடுகள் இலங்கையில் கால்பதிக்கவும் இடம் வகுத்துவிடும் என்பதும் அதன் காரணங்கள்.

மேலும் சோவியத்தின் நான்காம் தலைமுறை விமானங்களின் பயன்பாடு, அதன் பிரதிகூலங்கள் தொடர்பாக அறிவதற்கும் போட்டியான நாடுகள் ஆவலாக இருக்கும்.

உதாரணமாக எரித்திரியாவுக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையே நடைபெற்ற போரின் போது இரு நாடுகளும் மிக்-29 மற்றும் எஸ்யூ-27 ரக தாக்குதல் விமானங்களை கொண்டு மோதியமை உலகின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஏனெனில், வறுமையான நாடுகள் அதிக செலவான நான்காம் தலைமுறை வான் கலங்களை பயன்படுத்தியமை உலகின் கவனத்தை திருப்பியிருந்தது. ஆனால், முன்னைய வான் தாக்குதல் பொறிமுறைகளும் தற்போதைய வான் தாக்குதல் பொறிமுறைகளும் வேறுபட்டவை. முன்னர் விமானத்தில் இருந்து விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்கு கனரக துப்பாக்கிகள் அல்லது இலகுரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

தற்போதைய நவீன விமானங்களில் வானில் இருந்து வானுக்கு செலுத்தப்படும் குறுந்தூர, நடுத்தர, நீண்ட தூர ஏவுகணைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனினும் மிக அண்மையில் உள்ள விமானங்களை தாக்குவதற்கு கடந்த ஊதா (ஐசு) வழிகாட்டலில் இயங்கும் குறும்தூர ஏவுகணைகள் (யுஐஆ-9 ளுனைநறiனெநச) என்பனவே தற்போதும் பயன்தரும்.

இந்தத் தாக்குதலில் எப்போதும் எதிரி விமானத்தை பின்புறம் இருந்து தாக்கும் உத்தியே (னுழ ழெவ டநவ லழரச ழிpழநெவெ பநவ ழn லழரச ளiஒ ழ'உடழஉம) கடைப்பிடிக்கப்படுவதுண்டு. அதாவது முன்புறம் இருந்து தாக்க முயற்சித்தால் எதிரி விமானத்தின் தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டி ஏற்படலாம் என்பதால் இந்த உத்தி கையாளப்படுவதுண்டு. இதை நாய்ச் சண்டை ஈணிஞ்ழூடிஞ்டவ என அழைப்பதுண்டு. ஆனால், இத்தகைய குறுகிய தூர தாக்குதல்களை நடத்துவதற்கு குறைந்த வேகமுள்ள விமானங்கள் தேவை. அதாவது 300-400 நொட்ஸ் வேகம் அவசியமானது. எனவே மிகைஒலி விமானங்கள் மூலம் னுழபகiபாவ நிகழ்த்துவது கடினமானது.

எனினும் சில விமானங்களில் விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் அதனை தாக்குதலுக்கு தயார் படுத்த முடியும். உதாரணமாக அமெரிக்காவின் கு-15 நுயபடந குறுகிய தூர தாக்குதல்களுக்கு ஏதுவாக அதன் வேகத்தை கட்டுப்படுத்தக் கூடியது.

அரசை பொறுத்தவரையில் தற்போது இரு வகையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அதாவது அதனிடம் உள்ள கே-8 ரக குறைந்த வேகமுள்ள விமானங்களின் மூலம் அல்லது வான்தாக்குதலுக்கு தயார்படுத்தப்படும் உலங்குவானூர்திகள் மூலம் குறுகிய தூர தாக்குதல்களை நடத்தலாம். ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகளின் வான்கலங்களின் எதிர்த்தாக்குதல்களையும் எதிர்கொள்ள நேரலாம்.

இரண்டாவதாக மிக்-29 ரக மிகைஒலி விமானங்களின் நீண்டதூர அல்லது நடுத்தர தூரவீச்சுக் கொண்ட ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நிகழ்த்தலாம். ஆனால் மெதுவாக நகரும் விடுதலைப் புலிகளின் விமானங்களுடன் மிக்-29 ரக விமானங்கள் னுழபகiபாவ இல் ஈடுபடுவது கேள்விக்குறியானது.

எனினும் இலகுரக விமானங்கள் மீதான மிக்-29 ரக விமானங்களின் தாக்குதலாக கியூபாவின் விமானத் தாக்குதல் பதிவாகி உள்ளது. 1996 ஆம் ஆண்டு கியூபா அரசுக்கு எதிராக இயங்கிய டீசழவாநசள வழ வாந சுநளஉரந என்ற அமைப்பின் இரு ஊநளளயெ-337 இலகு ரக பயணிகள் விமானங்களை தனது மிக்-23 மற்றும் மிக்-29 ரக விமானங்களால் கியூபா வான்படை சுட்டு வீழ்தியிருந்தது. இந்த தாக்குதலுக்கு மிக்-29 ரக விமானங்கள் ஏவுகணைகளையே பயன்படுத்தியிருந்தன.

பொதுவாக மிக்-29 ரக விமானங்கள் ஊநளளயெ-337 (குறுந்தூர ஏவுகணைகள்), ஏலஅpநட சு-77இ ஏலஅpநட சு-27 (நடுத்தர தூர ஏவுகணைகள்) போன்றவற்றை கொண்டிருப்பவை. இந்தியாவின் மிக்-29 ரக விமானங்கள் கீ-27 ரக ஏவுகணைகளை கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்களை தொலைவில் வைத்து அழித்துவிடலாம். உதாரணமாக கீ-73 ரக ஏவுகணை 30 கி.மீ தூர வீச்சையும், கீ-77 ரக ஏவுகணை 90-175 கி.மீ தூர வீச்சையும் கொண்டவை. ஆனால், வெப்பத்தை நாடிச்செல்லும் ஏவுகணைகளை (ஏலஅpநட சு-73) ஏவுகணை தவிர்ப்பு சாதனங்கள், மற்றும் தவறான வெப்ப பொறிமுறைகள் (குயடளந hநயவ ளழரசஉநள ளரஉh யள வாந ளரn) மூலம் திசைதிருப்ப முடியும். மேலும் அதிக தொலைவில் உள்ள வெப்பத்தை இந்த ஏவுகணைகள் உணரமாட்டாது. இவை தவிர ஏவுகணைகளின் பார்வையில் இருந்து தப்புதல், எதிர்ப்பு சாதனங்களை பயன்படுத்துதல் (ஊhயகக யனெ கடயசநள ழச டிநயஅiபெ) போன்றவை மூலமும் தப்ப முடியும்.

மேலும் சிறிய விமானங்கள் மிகவும் தாழ்வாக பறந்தால் மிகைஒலி விமானங்களால் அவற்றை தமது இலக்குக்குள் கொண்டுவருவது கடினமாவதுடன் விமானத்தால் உள்வாங்கப்படும் இலக்குகளும் மாறிவிடும். அதாவது தரையில் உள்ள இலக்குகளும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுவிடும்.

அதாவது பகலில் எதுவித முன் எச்சரிக்கைகளும் இன்றி கியூபாவின் வான்பரப்பில் பயணம் செய்த சாதாரண பயணிகள் விமானமான செஸ்னா-337 ரக விமானங்களை சுட்டு வீழ்தியதை போல விடுதலைப்புலிகளின் விமானங்களை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.

அதிக முன் எச்சரிக்கையுடன் தான் அவர்களின் விமானங்கள் பறப்பதுண்டு.

அவ்வாறு இல்லாது விட்டால் கொலன்னாவை தாக்குதலின் போது சாம்-16 ஏவுகணைகளுக்கு அவை இரையாகியிருக்கும். நான்காம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள அரசின் வான்படை கொள்வனவு செய்யும் நாலாம் தலைமுறை வான்கலங்கள் போரில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது தற்போதே ஊடகங்களால் ஊகிக்க கூடியதொன்றாகி விட்டது.

காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட முன்னைய நவீனமயப்படுத்தல்கள் எல்லாம் போரை தீவிரமாக்கியதே அல்லாமல் அதன் வீரியத்தை குறைக்கவில்லை. அதாவது படையினரின் இந்த நவீன ஆயுதங்களின் மேலாதிக்கத்தால் பேரை வெல்லமுடியுமா என்பது சந்தேகமே.

ஏனெனில் நவீனமயப்படுத்தப்பட்ட படையினர் மற்றும் அவர்களின் ஆதிக்கங்கள் என்பவற்றிற்கு அப்பால் போரை தீர்மானிப்பவையாக வேறுபல காரணிகள் உண்டு என்பதை வியட்னாம் சமரில் புரிந்து கொண்டதாக அமெரிக்கவின் சிறந்த படைத்துறை கொள்கை வகுப்பாளரும் வான்படை அதிகாரியுமான கேணல் ஜோன் பொய்ட் கூறியிருந்தார்.

அவர் கூறியது இது தான்:

'நான் இளநிலை அதிகாரியாக இருந்த போது உங்களிடம் வான் ஆளுமை, தரை ஆளுமை, கடல் ஆளுமை இருப்பின் நீங்கள் போரில் வெற்றி பெற்றுவிடுவீர்கள் என எண்ணியதுண்டு.

ஆனால், வியட்னாம் போரில் தரையில், வானில், கடலில் வலுவாகவும், களத்தில் மேலோங்கியும் நாம் இருந்த போதும் போரை இழந்து விட்டோம். எனவே இவற்றை விட மேலதிக காரணிகள் உண்டு என்பதை நான் தற்போது உணருகிறேன்."

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.