Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சே குவேரா பிறந்த தினம்: சில முக்கிய குறிப்புகள்

சே குவேரா

 

கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா.

ஞாயிறன்று, மருத்துவராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் 92வது பிறந்தநாள். அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம்.

  • சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக்சிகோவில் சந்தித்தார்.
  • பிடலின் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்து கியூபா சர்வாதிகாரி புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் அரசுக்கு எதிரான புரட்சியில் பங்கேற்ற சே குவேரா, புரட்சி வெற்றிபெற்ற பின்னரும் பிடல் தலைமையில் அமைந்த கியூப அரசில் அமைச்சர், மத்திய வங்கித் தலைவர் உள்ளிட்டப் பொறுப்புகளை வகித்தார்.
  • 1951இல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது தனது நண்பர் அல்பெர்டோ கிரானடோவுடன் ஒன்பது மாதங்கள் இரு சக்கர வாகனத்தில் தென்னமெரிக்க கண்டம் முழுதும் பயணித்தார். அப்போது சே குவேரா எடுத்த குறிப்புகள் 'தி மோட்டர் சைக்கிள் டைரீஸ்' என்ற பெயரில் பின்னாளில் புத்தகமாக வெளியானது. அந்தப் புத்தகத்தின் அதே தலைப்பில் ஒரு ஸ்பானிய மொழித் திரைப்படமும் எடுக்கப்பட்டது.
  • பயணங்களில் பேரார்வம் கொண்டிருந்த சே குவேரா, இந்தப் பயணத்தை மேற்கொள்ளும் முன்பே, ஜனவரி 1950இல் அர்ஜென்டினாவில் தனியாகவே தனது சிறிய எஞ்சின் பொருத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தில் சுமார் 4500 கிலோமீட்டர் பயணித்திருந்தார்.
  • 1959 முதல் 1961 வரை கியூபா மத்திய வங்கியின் தலைவராக பணியாற்றினார் சே குவேரா. அதே காலகட்டத்தில் கியூபாவின் நிதி மற்றும் தொழில் துறை அமைச்சராகவும் செயல்பட்டார். அப்போது நிலச் சீர்திருத்தம் மற்றும் தொழில் துறையை தேசியமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.
  • கியூப அரசின் பிரதிநிதியாக, இந்தியா, சோவியத் யூனியன் உள்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார் சே குவேரா. 1964 டிசம்பரில் சே குவேரா தலைமையிலான கியூப பிரதிநிதிகள் குழு ஐ.நா கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றது. அப்போது ஐ.நாவில் உரையாற்றிய சே தென்னாப்பிரிக்காவில் நிலவிய வெள்ளை நிறவெறி மற்றும் அமெரிக்கா கறுப்பர் இன மக்களை நடத்திய விதம் ஆகியவற்றை விமர்சித்தார்.
சே குவேராபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
  • அதே ஆண்டு இறுதியில் தனது மூன்று மாத சர்வதேச சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய சே குவேரா சீனா, வடகொரியா, ஐக்கிய அரபு எமிரேட்டுகள் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு கியூபா அரசின் வெளியுறவுத் தொடர்பை பலப்படுத்தினார். 1965 பிப்ரவரி 24 அன்று அல்ஜீரிய தலைநகர் அல்ஜெய்ர்ஸ்-இல் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் ஒற்றுமை குறித்து நிகழ்த்திய உரையே சே குவேரா கடைசியாக பொது வெளியில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. அதன்பின் சில வாரங்களில் மாயமான சே குவேரா குறித்து சில மாதங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை.
  • அதே ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதி, சே குவேரா கியூபா மக்களுக்கு எழுதிய 'பிரியாவிடைக் கடிதத்தை' பிடல் காஸ்ட்ரோ வெளியிட்டார். கியூபப் புரட்சிக்கான தனது ஆதரவை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த சே, தனக்கு வழங்கப்பட்ட கியூபக் குடியுரிமை மற்றும் பதவிகள் அனைத்தையும் துறப்பதாகக் கூறியிருந்தார்.
சே குவேரா (இடது) மற்றும் பிடல் காஸ்ட்ரோ (வலது).படத்தின் காப்புரிமைAFP Image captionசே குவேரா (இடது) மற்றும் பிடல் காஸ்ட்ரோ (வலது).
  • அந்தக் காலகட்டத்தில் காங்கோ ஜனநாயக குடியரசில் முன்னாள் பிரதமர் பாட்ரைஸ் லுமும்பாவின் ஆதரவாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சிக்கு ஆதரவாகப் போரிட தனது கொரில்லா படையினர் 12 பேருடன் காங்கோ சென்றிருந்தார் சே.
  • காங்கோ கிளர்ச்சியாளர்களின் செயல் திறனின்மையால் ஏற்கனவே கவலையுற்றிருந்த சே குவேராவின் இருப்பிடம் மற்றும் நடவடிக்கை ஆகியவற்றை அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான சி.ஐ.ஏ கண்டறிந்தது உள்ளிட்ட காரணங்களால் புரட்சியை செயல்படுத்த முடியவில்லை என்று சே நினைத்தார்.
  • அதன்பின் உண்டான உடல்நலக் குறைவைத் தொடர்ந்து தான்சானியா மற்றும் செக் குடியரசில் தங்கியிருந்த சே, ஒரு போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பொலிவியா சென்றார்.
  • 1967 அக்டோபர் 7 அன்று அமெரிக்க ஆதரவு பெற்ற பொலிவிய ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட சே குவேரா அக்டோபர் 9 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் புதைக்கப்பட்ட இடம் அப்போது வெளியே தெரிவிக்கப்படவில்லை.
  • பின்னர் 1995இல் தொடங்கி ஓராண்டுக்கும் மேலாக பொலிவியாவில் நடத்தப்பட்ட ஒரு தேடுதல் வேட்டையில் சே குவேராவின் உடல் என்று கருதப்பட்ட உடல் ஒரு விமானதளம் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அது சேவின் உடல்தான் என்று ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியபின், சே மற்றும் அவரது சகாக்கள் ஆறு பேரின் உடல்கள் கியூபா கொண்டுவரப்பட்டு அக்டோபர் 17, 1997 அன்று ராணுவ மரியாதையுடன் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-44469438

 

 

சாவைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டதில்லை. நான் இறந்து போனால் எனது கை துப்பாக்கியை எடுத்துக்கொள்வார்கள் அப்போதும் அதிலிருந்து தோட்டாக்கள் சீறிப்பாயும் என்று முழங்கியவர் "சே" அப்போது சே வுக்கு 27 வயது தான்.கியூபாதனது சொந்த நாடு என்ற காரணத்தினால் ஃ பிடல் காஸ்ட்ரோ போராட வேண்டிய அவசியம் இயல்பானது, ஆனால் "சே"வுக்கு அப்படி அல்ல .தனக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத ஒரு தேசத்தில் அந்த நாடு மக்களின் விடுதலைக்காகத் தன் உயிரை பணயம் வைத்து ஆயுதம் எடுப்பது என்பது உலக வலராற்றில் எப்போதும் எங்கும் நிகழ்திறதா ஒன்று.இந்தத் காரணத்தால்தான் சேகுவேரா மனிதருள் மாணிக்கமாக போற்றப்படுகிறார்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மண்டியிடாத மாவீரன் – புரட்சியாளர் சேகுவேரா பிறந்த தினம்

35244502_1734345023353201_6486130593896595456_n.jpg?189db0&189db0

 

ஜூன் 14 1928 இல் பிறந்து உலகில் இன்று வரை புரட்சிக்கும் தியாகத்திற்கும் உதாரணமாக திகழ்பவர் சேகுவேரா. 1967ம் ஆண்டு அக்டோபர் 9-ம் திகதி, பொலிவிய இராணுவத்தினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சேகுவேராவின் பிறந்த தினத்தில், அவரது வாழ்க்கை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை அறிவோம்…

  • 1928-ம் ஆண்டு, அர்ஜெண்டினாவின் ரோஸாரியோ பகுதியில் பிறந்தார் சேகுவேரா.
  • 1945 முதல் 51-ம் ஆண்டு வரை புகழ்பெற்ற BUENOES AIRES பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார் சேகுவேரா.
  • 1950-ல் அர்ஜெண்டினாவின் கிராமப்புற பகுதிகளில் 4,500 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார்.
  • 1951-ம் ஆண்டில், தென்அமெரிக்காவில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது, ஏழ்மைநிலை மற்றும் மோசமான பணி சூழல் சேகுவேராவை வெகுவாக பாதித்தது. மனம் தளராத சேகுவேரா 1952-ல்- பெருநாட்டில் தங்கி தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார்.
  • 1954-ம் ஆண்டு, தென்அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளின் ஏழ்மை நிலைக்கு முதலாளித்துவ அரசாங்கங்களே காரணம் என முடிவுக்கு வந்தார் சேகுவேரா.
  • இந்த நிலையில், கம்யூனிஸத்தின் தந்தை என போற்றப்படும் கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் மீது ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
  • இதையடுத்து, கவுதமாலா நாட்டில் நடந்த புரட்சி போராட்டங்களில் பங்கேற்க தொடங்கினார் சேகுவேரா.
  • கவுதமாலா மீது படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் ஜக்கோபா அர்பென்சை ராஜினாமா செய்ய வைத்தது. இதையடுத்து, இடதுசாரி அரசாங்கங்களுக்கு அமெரிக்கா முக்கிய எதிரி என்ற முடிவுக்கு வந்தார் சேகுவேரா.
  • 1955-ம் ஆண்டு, மெக்சிகோவில் ஃபிடல் மற்றும் ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேசினார்.
  • கியூபாவை ஆட்சி செய்து வந்த சர்வாதிகார அரசை கவிழ்க்க போராடி வந்த புரட்சி படையில் சேகுவேரா இணைந்து செயல்பட்டார்.
  • 1956-ல் சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள் உட்பட 82 புரட்சி படையினர் கியூபாவை அடைந்தபோது தாக்குதலுக்கு ஆளாகினர்.
  • இதில், சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள் மற்றும் சிலர் மட்டுமே உயிர் பிழைத்தனர்
  • 1958-ம் ஆண்டு, சேகுவேரா, காஸ்ட்ரோ சகோதரர்கள், கியூபாவில் நடந்த வந்த சர்வாதிகார ஆட்சியை கவிழ்த்தனர்
  • 1959-ல் அர்ஜெண்டினாவில் பிறந்த சேகுவேரா, கியூபாவின் குடியுரிமை பெற்றார்.
  • 1960-ல் கியூபாவில் நடந்த புரட்சி மார்க்ஸிஸ்ட் புரட்சி என முழக்கமிட்டார் சேகுவேரா.
  • கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் சேகுவேரா.
  • 1963-64-ல் ஐநா.சபையில் சோஷியலிச புரட்சி பற்றி உணர்ச்சிகரமாக உரையாற்றினார் சேகுவேரா.
  • 1965-ல் கியூபா அரசில் தான் வகித்து வந்த பதவிகளை இராஜினாமா செய்தார்.
  • புரட்சி தேவைப்படும் நாடுகளில் அதை கொண்டு வருவதே தனது இலக்கு என கூறி கியூபாவை விட்டு வெளியேறினார் சேகுவேரா.
  • ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கம்யுனிஸ்ட் புரட்சியை கொண்டு வர பாடுபட்டார் சேகுவேரா.
  • புரட்சி நடவடிக்கைக்காக சேகுவேராவை கைது செய்ய ஆபிரிக்காவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதை முறியடித்து 1966-ல் ஆபிரிக்காவிலிருந்து தப்பித்து கியூபா வந்தார் சேகுவேரா
  • பின்னர், மீண்டும் தென்அமெரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
  • பொலிவியாவின் புரட்சி படையில் சேர்ந்தார் சேகுவேரா
  • 1967ம் ஆண்டு அக்டோபர் 8ம் திகதி பொலிவிய இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார் சேகுவேரா.
  • 1967-ம் ஆண்டு அக்டோபர் 9ம் திகதி 9 முறை சுடப்பட்டு சேகுவேரா கொல்லப்பட்டார்.
  • சேகுவேராவை பற்றிய THE MOTORCYCLE DIARIES என்ற திரைப்படம், கடந்த 2004-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
  • புரட்சியின் மாபெரும் அடையாளமாக இன்று வரை கொண்டாடப்படுகிறார் சேகுவேரா!.

https://newuthayan.com/மண்டியிடாத-மாவீரன்-புரட/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.