Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் குறித்த ஆர்வம் வடக்கில் எப்படியுள்ளது? கலாநிதி ஜெகான் பெரேரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் குறித்த ஆர்வம் வடக்கில் எப்படியுள்ளது? கலாநிதி ஜெகான் பெரேரா

July 25, 2020

jehan-2-219x300.jpg
டம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வாரம் வெளியிடப்பட்டதேர்தல் விஞ்ஞாபன அறிக்கையில், தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்க ளின் ஒன்றிணைந்த வடிவத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு தமிழ் மக்களிடமிருந்து புதிய ஆணை கோரப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒரு பிரிக்கப்படாத நாட்டில் நீடித்த அமைதியை உறுதி செய்ய முடியும் என்று அதில் கூறப்பட்டுள்ளதுஇது சுதந்திரம் பெற்ற ஆரம்ப நாட்களிலிருந்தும் பின்னர் மூன்று தசாப்த கால யுத்தத்திலிருந்தும் தமிழ் அரசியலில் முதலிடம் வகித்த சமூக சமத்துவ பிரச்சினைகளுடன் இணைந்த தொன்றாக செல்கிறது.

கடந்த காலத்தை கையாள்வதில், போரின் இறுதிக் கட்டங்களில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் உட்பட காணாமல் போன ஆயிரக்கணக்கானோருக்கான நீதி மற்றும் உண்மையை கண்டறிதல், காணாமல்போனோர் அலுவலகம் (OMP) , அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டிய அவசியம்,போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதில்களையும் நீதியையும் வழங்குவதற்கான இழப்பீடுகள்தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளின் செழுமையான காலகட்டத்தின்போது , அரசியலமைப்பு வடிவத்தில் சமூகங்களுக்கிடையிலான சமத்துவத்தைய தார்த்தபூர்வமாக்குவதற்கு நாடியிருந்த தமிழ் அரசியல் சமூகத்தின் அரசியல் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைமூலம் அரசியல் தீர்வுக்கான சிறந்த வாய்ப்பைக் கொண்டிருந்தன.

எண்ணிக்கை அடிப்படையில்ஒரு தேசிய சிறுபான்மையினராக தமிழ் அரசியல் சமூகம் குறைவான தன்மையை கொண்டிருந்த நிலையில் விடுதலைப்புலிகள் தமது இராணுவ சக்தியின் மூலம் களத்தில் அதனை உருவாக்கியிருந்தனர் .இராணுவ சமத்துவத்தை அடைவதில் இருந்து வந்த பேரம் பேசும் சக்தி உருவாகிஇருந்தது. யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது, புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் சமநிலைஅந்தஸ்தை கோரினர். யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி ஏற்பாட்டின் அவசியம் குறித்து அரசாங்க முகவரமைப்புகளே பொதுவான விழிப்புணர்வை உருவாக்கத் தொடங்கிய ஒரு காலம் இருந்தது.

jaffna-00.jpgஇப்போது தேவைப்படுவதுபோல, மோதலுக்கான எந்தவொரு பேச்சுவார்த்தை தீர்வும் அரசியலமைப்பில் உட்பொதிக்கப்பட வேண்டும் என்பதற்கான அங்கீகாரம் இருந்தது. அரசியலமைப்பில் அடித்தளமாக இருக்கின்ற தீர்வு தேவைப்படுகிறது, இதனால் அரசாங்கத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களைத் தொடர்ந்து அரசியல் ரீதியாக ஊக்கமளிக்கும் மாற்றங்களுக்கு அது உட்படமாட்டாது .எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளின் தோல்விக்குப் பின்னர், தமிழ் அரசியலுக்கு போரின் போது இருந்த பேரம் பேசும் வலிமை இனி இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமானது இலங்கை அரசியலுக்குள் ஒரு சமமான சமூகமாகக் கருதப்பட வேண்டும் என்ற தமிழ்மக்களின் நீண்டகால அபிலாஷையின் அடையாளக் கூற்றின் தன்மையைக் காணலாம். இதுவொரு குறியீடாக மட்டுமே இருக்கக்கூடிய காரணம், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தையும் ஆளும் கட்சியையும் எதிர்கொள்கிறது என்பதனாலாகும். பெரும் பான்மையின தேசியவாதத்தின் பலத்தால் அதிகாரத்திற்குத் தள்ளப்பட்டுள்ளநிலையில், அவர்களின் கோரிக்கைகளை நியாயமானதாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக அதன் ஆற்றல் கட்டுப்படுத்தபட்டிருக்கலாம்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ , வெற்றி பெற்ற உடனேயே,தனது அரசாங்கம் அதிகாரப் பகிர்வு அடிப்படையில் தீர்வுகளைத் தேடப்போவதில்லைஎனவும் , மாறாக பொருளாதார வளர்ச்சியில்கவனத்தை கொண்டதாக இருக்கும் இருக்கும் என்று கூறினார். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் இனங்களுக்கிடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் சமத்துவம் போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, இன மோதல்கள் முடிவுறாமல் , நாட்டைமேலும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்துவதோடு, வளர்ச்சிக்கான அதன் வாய்ப்புகளையும் குறைத்துவிடும் அரசாங்க முன்னுரிமை அரசாங்கத்தின் தேர்தல் பிரசாரத்தின் முழு உந்துதலும் அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்வதற்காக வாக்காளர்களிடம் 2/3 பெரும்பான்மையைக் கேட்க வேண்டும் என்பதாக உள்ளது. தொலைநோக்கு என்பது என்பது அதிகாரத்தை மையப்படுத்துவதே தவிர அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதல்ல என்பதாக தென்படுகிறது.

கடந்த அரசாங்கம் திறம்பட ஆட்சி செய்யத் தவறியமைக்கு பரிசீலனைகள் மற்றும் சமப்படுத்தல்கள் கொண்ட அரசியலமைப்பின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன் தோல்விக்கு முக்கிய காரணம் அரசியலமைப்பு அல்ல, ஆனால் அரசாங்கத் தின் கூட்டணியில் இரு முக்கிய கட்சிகளும், அவர்களின் தலைவர்களும் ஒன்றிணைந்து செயற்படுவ தற்கு பிடிவாதமாக விரும்பவில்லை. அரசாங்கத்தின் ஒரு அங்கம் மற்றைய பாகங் களின்மீது மேவிச் செல்வதற்கான அதிகாரத்தை வழங்குவதை விட, கலந்தா லோசனை மற்றும் கருத்தொருமைப்பாடு பின்பற்றப்படும் என்று அரசியலமைப்பு எதிர்பார்க்கிறது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம், தற்போதைய அரசாங்கத் தலைமையால் ஒரு பிரச்சினையாகக் கருதப்படுகிறது, ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் இடையில் நிறைவேற்று அதிகாரங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் போன்ற பொது நிறுவனங்களை அரசியல் தலையீட்டிலிருந்து பாதுகாக்க முயன்றது.

19 ஆவது திருத்தத்தை ரத்து செய்ய முற்படுவதில், அரசியல் அதிகாரத்தின்கரங்களில் அதிகாரத்தை திரும்பவும் குவிக்க அரசாங்கம் முயல்கிறது. 19 ஆவது திருத்தத்தை நீக்குவது பாராளுமன்றத்திற்கு எதிராக ஒரு தனி ஆளிடம் அதிகாரத்தை குவிக்கிறது என்பதையும் , இது காலப்போக்கில் நல்லாட்சிக்கான சிறந்த சூத்திரமாக இருக்காதுஎன்பதுவும் அதிகளவுக்கு உணரப்படவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமா னது அரசாங்கத்தின் அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ர்ந்துகொள்ளுதல் என்பதில் முக்கியத்துவம் கொடுப்பதில் மாறுபடும். எவ்வாறாயினும், இடம்பெறவிருக்கும் பொதுத் தேர்தல்களில் அரசாங்கமும் அதன் ஆதரவாளர்களும் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன்இருக்கும் நிலையில் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (மற்றும் பிற சிறுபான்மைக் கட்சிகள்) தங்கள் முதல் நிலைப்பாடு நிராகரிக்கப்பட்டால் இரண்டாவது நிலைப்பாடொன்றை கண்டுபிடிக்க வேண்டும். இது ஒரு சமூகத்தின் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து சமூகங்களின் உறுப்பினர்களுக்கும் நீடிக்கப் பட்ட குடியுரிமை சமத்துவத்தை கோருவதாக இருக்கலாம். சமவாய்ப்பு மற்றும் சம உரிமைகளின் அடிப்படையில் தொகுதிகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

இதேவேளை அரசாங்கத் தலைவர்கள் சமமான குடியுரிமை என்ற கருத்தாக்கத்திற்கு , குறைந்தபட்சம் இதுவரை குறியீடாக.தங்கள் ஆதரவை உறுதிப்படுத்த தயாராக உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது . ஐக்கிய அமெரிக்காவில் கண்டது போல், கறுப்பின வாழ்க்கை விட யம் என்ற போராட்டம் மைய நிலைக்கு வந்துவிட்டதால், இன சிறுபான்மையினராக நிரந்தர மாக இருப்பவர்களுக்கு பெரும்பான்மையின உறுப்பினர்களால் அங்கீகாரம் இருக்கவேண்டும். தனது ஆரம்ப உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , இன மற்றும் மதபெரும்பான்மையினரின் வாக்குகளால் அவர்தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் சிறுபான்மை சமூகங்களின் வாக்காளர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

அப்படியிருந்தும், ஜனாதிபதி தனக்கு வாக்களிக்காதவர்கள் உட்பட , அனைத்து இலங்கையர்களுக்கும் ஜனாதிபதியாக இருப்பதாக உறுதியளித்தார்.இதேபோன்று இலங்கையில் நல்லிணக்கத்தை வென்றெடுப்பது தொடர்பான ஐ. நா. மனிதஉரிமைகள் பேரவையின் 301 தீர்மானத்தில் கைச்சாத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்து ஆற்றியஉரை யில் ,”இலங்கை அரசாங்கத்திலும் பார்க்க எவருமே பல்லின, பல்மதபல் மொழி, பல்கலாசார இலங்கை மக்களை இதயத்தில் கொண்டிருக்கவில்லை என்று குறிப் பிட் டிருந்தார்.

இவை அரசாங்கத்தலைவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய நிலைநிறுத்த வேண்டிய பொது உறுதிமொழிகள் . கடந்த வாரம் நான் யாழ்ப்பாண குடாநாட்டில் தேசிய சமாதான பேரவையின் எனது சகாக்களுடன் மூன்று நாட்கள் வெவ்வேறு சிவில் சமூக குழுக்களுடன் கூட்டங்களில் கலந்து கொண்டேன். தற்செயலாக பொதுத் தேர்தல் பற்றிய எண்ணப்பாடு அவர்களின் மனதில் இல்லை மற்றும் ஒரு கட்சியின் வெற்றியின் விளைவுகள் மற்றும் அவைபற்றிய பற்றிய ஊகங்கள் தொடர்பாகவும் எந்தவொரு விவாதத்திலும் இடம்பெறவில்லை. வீதி மற்றும் படகு மூலம் யாழ்ப்பாணத் தீவுகளிலொன்றுக்கு பயணம் செய்தபோதும் , தேர்தல் பிரசாரத்தின் அறிகுறிகளும் வேறுபட்டதாக தென்பட்டிருக்கவில்லை.

யாழ்ப்பாண மக்களுக்கு தேர்தல்கள் தொடர்பாக பெரிய எதிர்பார்ப்புகளும் இல்லை, தேர்தல்கள் தொடர்பாகவும்யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறித்தும் அவர்கள் அதிகளவு எதிர் பார்ப்பை கொண்டிருக்கவில்லை என்பதாக இது இருக்க கூடும் . எந்தக் கட்சி நாட்டை நிர்வகித்தாலும் அவர்களின் வாழ்க்கை மாறாது என்று அவர்கள் கருத கூடும். சுதந்திரம் பெற்றகடந்த 70 ஆண்டுகளில் அவர்கள் உணர்ந்தவற்றால் தேர்தல்கள் தொடர்பாக மோசமான உணர்வுகள் அவர்களுக்கு ஊட்டப்படிருக்கலாம்.

எனவே, இடம்பெற்றுவரும் தேர்தல் பிரசாரத்தால் அவர்கள் அதிகம் ஈர்க்கப் படுவதில்லை. எவ்வாறாயினும், தமிழர்களும் பிற சிறுபான்மைக் குழுக்களும்இலங்கையில் குடிமக்களாக ஏனைய சமூகத்தவர்களுடன் , அனைவரும் சமஉரிமைகளையும் வாய்ப்புகளையும் அனுபவிக்கும் ஒரு தேசத்தில், ஒன்று பட்ட மற்றும் அமைதியான சமூகத்தில் ஏனைய சமூகத்தவர்களுடன் சகோதர சகோதரிகளாக வாழ விரும்புகிறார்கள். இடம்பெறவிருக்கும் தேர்தல்களின் குறிப்பிடத்தக்க மற்றும் குறைவான அம்சங்களில் ஒன்றாக , நீடித்த இன மோதலுக்கு எவ்வாறு தீர்வு காண முன்மொழிகின்றன என்பது பற்றி எந்தவொரு முக்கிய அரசியல் கட்சிகளும் அதிகம் சொல்லவில்லைஎன்பதாகும்.

கடந்த ஏழு தசாப்தங்களாக சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் போர் மற்றும் அழி வை ஏற்படுத்தியதும் மனித உரிமை மீறல்கள் சர்வதேச மனித உரிமை விவகாரங்களில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடிப்பதற்குவழிவகுத்த முக்கிய தேசிய பிரச்சினை இதுவாகும். தேர்தல்களை எதிர்கொள்ளும் போது, தேசிய அரசியல் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமூக உரிமைகள் தொடர்பான சவாலை எதிர்கொள்ள விரும்புவதில்லையென தென்படுகிறது.மாற்றீடாக , குறைந்த பட்சம் வடக்கு மக்களால் முன்வைக்கப் படும் சம குடியுரிமை பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, வடக்கில் பல்வேறு அரசியல் குழுக்களால் நடத்தப்பட்டுவரும் தற்போதைய தேர்தல் பிரசாரங்கள் மிகவும் பிளவுபட்டுள்ளன, துண்டு துண்டான ஆணையை கொடுப்பதாக இதன் விளைவு அமைந்துவிடும்.

இது தேர்தல் பலத்துடன் கூடிய நிலையில் இருந்து அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.யாழ்ப்பாணத்தில் நாங்கள் நடத்திய அனைத்து கூட்டங்களிலும், சமத்துவமான குடியுரிமை பிரச்சினை காணப்பட்டது. நாங்கள் சந்தித்த சமூகக் குழுக்கள், அவர்களுக்கு சேவையாற்றுவதற்கான படகுகள் மற்றும் பேருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அவற்றின் மோசமான நிலை, நன்னீர் இல்லாத பிரச்சினை , இந்திய மற்றும் தெற்கு மீனவர்கள் உட்பட வெளியாட்களால் மீன்வள ம் மற்றும் மணல் வளம்களை சலுகை பெற்றவர்கள் அணுகக்கூடியதன்மை போன்றபிரச்சினைகள் காணப்படுகின்றன.

அரசாங்கம் சட்டரீதியாக நாட்டின் பிறபகுதிகளுக்கு மக்களுக்குக் கொடுத்தது என்று நம்புவதை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களை சமமாகப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர்.. தேர்தலில் போட்டியிடும் தேசிய அரசியல் கட்சிகள் அனைவருக்கும் சமமான குடியுரிமையை உறுதி செய்வது அவர்கள் உருவாக்கும் அரசாங்கத்தின் அடிப்படை உறுதிப்பாடாக அமைய வேண்டும் . அபிவிருத்தி, ஆளுகை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இலங்கை எவ்வாறு சர்வதேச அளவில் நழுவியுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, நான்கரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு1948 ஆம் ஆண்டில் காலனித்துவ ஆட்சியிலிருந்தும் சுதந்திரத்தைப் பெற்றபோதான , எமது அரசியல் நிலையை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு அரசியல் கட்சியும் அவற்றின் தலைவர்களும் இந்த பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்
 

http://thinakkural.lk/article/57765

 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய சமாதானப் பேரவையின் தலைவராக இருந்தவாறு 2017இலங்கையரசின் சார்பிலே யெனீவாவில் காலஅவகாசம் கேட்டபோது என்ன கருத்தில் இருந்தார். சிங்கள அறிவுயீவிகளிடமும் இராசதந்திரிகளிடமும் எமது தமிழ்த் தலைமைகள் நிறையக் கற்கவேண்டியுளளது. அல்லது அவர்களது***   வை குடித்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.