Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“சீனாவின் உலகளாவிய விரிவாக்கமும் - இலங்கையின் வெளியுறவில் ஏற்பட்டுள்ள சவாலும்”

Screenshot-2020-09-21-12-20-48-634-org-m சீனாவின் அரசியல் பொருளாதார இராணுவ பலம் பற்றிய அமெரிக்காவின் அறிக்கையிடல் அதிக நெருக்கடியான உலக அரசியல் தளத்தை தந்துள்ளது. அமெரிக்க உலக நாடுகளை நோக்கி சீனா இராணுவ கட்டமைப்பினை ஏற்படுத்துவதென்பது அமெரிக்காவுக்கு எதிரான முனையங்களை நோக்கியதாகவே தெரிவதாக குறிப்பிட்டுள்ளது. பென்டகனின் அறிக்கையிடல் உலகளாவிய அரசியல் ஒழுங்கின் மீதான அமெரிக்காவின் அக்கறையைக் காட்டுவதுடன் சோவியத் யூனியனுக்கு பின்பு அமெரிக்காவுக்கு எதிரான உலக ஒழுங்கினை எப்படித் தடுப்பதென்ற உத்தியுடன் அமைக்கப்படுவதாகவே தெரிகிறது. இக்கட்டுரையும் சீன அமெரிக்க் மோதல் அதிகரிக்கும் போது இலங்கை சீன உறவு எத்தகைய போக்கினையு எதிர் கொள்ளும்' என்பதை தேடுவதாக உள்ளது.

அமெரிக்க அறிக்கையிடலில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை முதலில் நோக்குவது பொருத்தமானதாக அமையும்.

சீனா வெளிநாடுகளில் தமக்குரிய கட்டமைப்பு ரீதியான வசதிகளை நிறுவுவதற்கு முற்பட்டுவருகிறது. குறிப்பாக வெளிவிவகாரம் பொருளாதாரம் மற்றும் இராணுவ ரீதியில் அத்தகைய விஸ்தரிப்பினை நிறுவ முனைகிறது.சிவில் மற்றும் இராணுவத்தின் இணைப்புக்கான தந்திரோபாயத்தை வகுத்துக் கொண்டுள்ள சீனா பொருளாதார சமூக ஒருமைப்பாட்டிற்கான தந்திரோபாயத்தினையும் பாதுகாப்பு தந்திரோபாயத்தனையும் வகுத்து செயல்பட ஆரம்பித்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.மக்களுடனான இராணுவ ஒருங்கிணைப்பினை வலுப்படுத்துகின்ற வழிமுறைகளை சீன அரசு திட்டமிட்டு மேற்கொள்வதாகவும் தொழில்நுட்பம் சார்ந்தும் ஏனைய கைத் தொழில் மற்றும் விவசாயத் துறைகள் சார்ந்தும் மக்களுடனான நெருக்சகத்தினை இராணுவம் கொண்டுள்ளதாக அவ்வறிகையிடல் வெளிப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம் சார்ந்த எழுச்சியையும் மக்களையும் ஒன்றிணைப்பதற்கான முறைமை ஒன்றினை சீனா உருவாக்கிவருவதாகவும் ஏறக்குறைய பாதுகாப்பு கொள்கையை உள்நாட்டின் சோஸலிஸ கட்டுமானத்திற்குள் வரைபதற்குரிய திட்டமிடலை செய்துள்ளதாகவும் தெரிவிதித்துள்ளது.

சீனாவின் பாதுகாப்புக் கொள்கையைப் பொறுத்தவரை யுஉவiஎந னநகநளெந எனும் எண்ணக்கருத்தினைக் கொண்டிருப்பதுடன் தனது இராணுவத்தினை world class நிலையை உருவாக்கும் திட்டமிடலை கொண்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி 2049 இல் சீனாவின் அத்தகைய இராணுவத்தினைக் கொண்ட Great Modern Socialist Country எனும் அடைவை எட்டுவதென்ற திட்டமிடலுடன் அந்நாடட்டுத் தலைவர்கள் செயல்பவடுவதாக அவ்வறிக்கையிடல் தெரிவித்துள்ளது.

கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள ஜிபுரி அமைந்துள்ள இராணுவத் தளம் போன்று அதாவது தரைப்படை கடற்படை ஆகாயப்படைகளைக் கொண்'ட இராணுவத் தளம் போன்று பல தளங்களை கட்டமைக்கும் நகர்வில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக சீனாவின் இராணுவத் தள விஸ்தரிப்புக்கான கட்டமைப்புக்களை மியான்மார் தாய்லாந்து சிங்கப்பூர் இந்தோனேசியா பாகிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் அமைப்பவதற்கு திடட்டமிட்டுள்ளதாக பென்டகன் அமெரிக்க காங்கிரஸட்சுக்கு வழங்கிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய சீனாவின் இராணுவக் கட்டமைபட்பானது அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தலையீடு செய்யவும் அமெரிக்காவுக்கு எதிரான நகர்வுகளை செய்யவும் ஆதரவாக பிற நாடுகளுக்கு உதவவும் சீனா முயலும் எனக்குறிப்பிட்டுள்ளது.

எனவே சீனாவின் நகர்வுகள் தொடர்பில் இதே பகுதியில் பல கட்டுரைகள் அவ்வப்போது வெளியாகியிருந்தது. சீனா அடுத்த வல்லரசு என்ற எண்ணத்துடன் பயணிகிறது என்பது மிக நீண்டகாலமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயமாகும். தற்போது அதற்கான ஆதாரங்களையும் திட்டமிடல்களையும் பென்டகன் அறிக்கையாக சமர்பித்துள்ளது. இதன் பிரகாரம் அமெரிக்கா எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளும் என்பது ஒருபுறம் அமைய மறுபக்கத்தில் சீனா எதிர்கால உலக ஒழுங்கினை வரைய ஆரம்பித்துள்ளது என்பது தெளிவாகப் புலனாகிறது. அதனை வரைய முயலும் போலது முன்னாள் சோவியத் யூனியனது உபாயங்களை கைக் கொள்ள முனைகிறது என்பதை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக இராணுவ வலையங்களை ஒன்றினைப்பதுவும் இராணுவ தளங்களை விஸ்தரிப்பதுவும் அதன் முதல் நோக்கமாக அமைகிறது. சோயத் யூனியனும் இவ்வாறே உலக நாடுகளை தனது பக்கம் ஈத்துக் கொளட்வதில் முனைப்புக் கொண்'டு இயங்கியது. சோவியத் யூனியனுக்கு அதன் சோலிஸக் கொள்கையுஞம் தேசிய இனங்கள் மீதான கரிசனையும் வாய்ப்பாக அமைந்தது போல் சீனாவுக்கு இல்லாது விட்டாலும் பொருளாதார உதவியை நோக்கிய வாய்ப்புகளும் அதற்கான உபாயங்களும் சந்தர்ப்பத்தினை கொடுக்கும் என்பதை காணமுடிகிறது. அது மட்டுமன்றி உலகளாவிய ரீதிஜயில் கொவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியிலிருந்து சீனா தப்பிக் கொண்டதுவும் ஏனைய நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கு உதவும் நோக்குடனும் தனது விரிவாக்க கொள்கையை ஏற்படுத்த முனையும்' என்பதை பென்டகன் அறிக்கை மூலம் உணர முடியும்.

எனவே சீனா இரு துருவ உலக ஒழுங்கினை வரைய ஆரம்பித்துவிட்டதை காணுகின்ற போது முன்னாள் சோவியத் யூனியனது வெற்றிடத்தை நோக்கி நகர்வதாகவே தெரிகிறது. கொவிட்-19 பிற்பட்ட உலகம் ஏதோ ஒரு அடிப்படையில் இராணுவ முக்கியத்துவத்தையும் அதற்கான தயாரிப்புகளையும் அதற்கான தொழில் நுட்பத் திறன்களையும் ஒருங்கே கொண்டதாக காணப்படுகிறதை அவதானிக்க முடிகிறது. அமெரிக்காவின் உத்திகள் பெருமளவுக்கு சீனாவின் போக்கினை தடுப்பதாக அமைந்தாலும் அதன் வளர்ச்சி பொருளாதார அடிப்படையில் மேல் எழுச்சி கண்டுவிட்டதென்பது தவிர்க்க முடியாது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை எழுந்துள்ளது. அதன் பொருளாதார பலம் இராணுவ கட்டமைப்புக்களை விரிவாக்கம் செய்வதற்கான அடிப்படையை தரக் கூடியதாக அமையும் என்பது அதிகாரக் கோட்பாடு வரையறுக்கும் விடயமாகும். அதன் பிரகாரமே சீனாவின் வளர்ச்சிப் போக்கு அமைந்துவருகிறது.

இவற்றை முன்னிறுத்திக் கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கையும் அகப்பட்டிருப்பதுவும் அதற்கான அணுகுமுறைகளை தனக்குள்ளே நிறுவ முயல்வதுவும் தவிர்க முடியாத அரசியலாக உள்ளது.இதனாலேயே இலங்கை ஆசியா நோக்கிய வெளியுறவுக் கொள்கையை வரைவது பற்றியும் அணிசேராமைக் கொள்கை பற்றியும் முதன்மைப்படுத்துகின்றது. இலங்கை அரசாங்கத்தின் மிகப்பிந்திய நகர்வாக சீனாவுக்கான தூதுவராக முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பாலித ஹேகண நியமிக்கப்பட்டிருப்பதுவும் இந்தியாவுக்கான தூதுவராக மிலிந்த மொறக்கொட ஏற்கனவே நியமனமாகியிருப்பதுவும் முக்கிய விடயமாக தெரிகிறது. பாலித சீனாவுடனான இலங்கையின் உறவைப் பலப்படுத்துவதில் அதிக கரிசனை கொண்டவராக ராஜபக்ச - ஜனாதிபதியாக இருந்த போது செயல்பட்டவர். அவரது நியமனம் சீனாவை நெருக்கமான உறவுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியாக தெரிகிறது.

அதே நேரம் அமெரிக்காவும் தனது செல்வாக்கினை இலங்கையில் ஏற்படுத்துவதற்காக தனது இலங்கைக்கான தூதுவரை பயன்படுத்துவது போன்று அண்மையில் அவுஸ்ரேலியாவுகட்கான தூதுவரையும் ஒரு தூதுக்குழுசைவயுமட் பிரதமர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் போன்றவர்களை சந்திப்பதற்கான நகர்வுகளை மேற்கொண்டது. அதில் கலந்து கொண்ட அவுஸ்ரேலியாவுக்கான இலங்கை தூதுவர் இலங்கை இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என குறிப்பிள்ளார்.அதற்கான நடவடிக்கைகளில்' இலங்கை ஈடுபட வேண்டும் எனவும் பரஸ்பரம் உரையாடலின் போது பரிமாற்றிக் கொண்டனர்.

எனவே இலங்கை சீனா-அமெரிக்கா தொடர்பில் அதிக கவனம் கொண்டிருப்பதற்கு முயல்வதுவும் அதனால் ஏற்படவுள்ள பாதிப்புகளை சந்திக்கவும் தயாராக வேண்டும். ஆனால் உலகளாவிய ரீதியில் சீனாவும் அமெரிக்காவும் தெளிவான பிரிவினையை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளன. கடந்த ரணில்-மைத்தி ஆட்சியில் நிகழ்ந்தது போல் அல்லாது அத்தகைய பிரிவினை மிக வெளிப்படையாக தெரிகிறது. ஆகவே வெளிப்படையான போட்டிக்குள் இரு தரப்பினையும் மௌனமாக கையாள முடியாத நிலை ஏற்படும். இது இலங்கைக்கு மட்டுமானதல்ல உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்குமானது. அதிலும் இலங்கை இன்னும் ஒரு படி அதிக நெருக்கடி காத்திருகிறது. அது இந்தியா என்கின்ற அயல் நாடாக மட்டுமல்லாது இந்தியா எனும் பிராந்திய சக்தியாகவும் அமெரிக்காவுடனான நட்பு சக்தியாகவும் உள்ளமையாகும்.. அதனால் இலங்கையின் போக்கு அதிக நெருக்கடிக்குள் நகர்கிறது.அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா அல்லது சீனாவை அங்கீகரிப்பதா அல்லது இந்தியாவுடன்' பயணிப்பதா என்ற குழப்பத்திற்குள் இலங்கையின் வெளியுறவுப் பொக்கு காணபடுகிறது.

அருவி இணையத்திற்காக கலாநிதி.கணேசலிங்கம் 

http://aruvi.com/article/tam/2020/09/16/16813/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.