Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு, கிழக்கு தமிழருக்கு அரசின் செய்தி என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு தமிழருக்கு அரசின் செய்தி என்ன?

[08 - June - 2007] [Font Size - A - A - A]

தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ற பெயரில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளவத்தை, புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களில் 500 க்கும் அதிகமானவர்களை பலவந்தமாக வெளியேற்றிய பொலிஸார் அவர்களை பஸ்களில் ஏற்றி வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்கியிருக்கும் கொழும்பு விடுதிகளில் முன்னரெல்லாம் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் அவர்களை விருப்பத்துக்கு மாறாக வெளியேற்றி தலைநகரிலிருந்து அப்புறப்படுத்தியிருப்பது இதுவே முதற்தடவையாகும். விடுதிகளில் தங்கியிருப்பதற்கு தகுந்த காரணத்தைக் கூறக்கூடிய எவரும் வெளியேற்றப் படமாட்டார்கள் என்று பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா கடந்தவாரம் அளித்த உறுதிமொழிக்கு முற்றிலும் முரணான வகையில் நேற்றைய தினம் பொலிஸார் செயற்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

மீண்டும் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கு மக்கள் சொல்லொணா நெருக்கடிகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பகுதிகளிலிருந்து மக்கள் தலைநகருக்கோ அல்லது தென்னிலங்கையின் எந்த வொரு முக்கிய நகருக்குமோ அநாவசியமாக பயணம் மேற்கொள்வதில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கான தரை வழிப்பாதை மூடப்பட்டதன் பின்னர் அங்கு வாழும் மக்கள் கொழும்புக்கு வருவதென்பது எவ்வளவு சிரமமானது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களில் எவருமே உல்லாசப் பிரயாணியாக கொழும்புக்கு வரக்கூடிய மனநிலையில் இல்லை. எத்தனையோ வேதனைகளைச் சுமந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் அந்த மக்கள் மிகவும் அத்தியாவசியமான அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகத்தான் கொழும்புக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் வந்து சேருகிறார்கள். மருத்துவ சிகிச்சை, கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு, வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான அலுவல்களைப் பார்த்தல் போன்ற தேவைகளுக்காகவே வடக்கு, கிழக்கிலிருந்து மக்கள் இன்று கொழும்புக்கு வருகின்றார்களே தவிர, முன்னென்றுமில்லாத பாதுகாப்பு நெருக்கடிகளுக்கு மத்தியில் எவருமே அநாவசியமாக தலைநகருக்கு வருவதற்கு விரும்புவதில்லை.

இத்தகைய மக்களில் கொழும்பில் உறவினர்கள் இல்லாதவர்கள் தனியார் விடுதிகளிலேயே தங்க வேண்டியிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் அடிப்படை வசதிகளே போதுமாக இல்லாத இந்த விடுதிகளில் பெருந்தொகைப் பணம் செலுத்தியே இவர்கள் தங்குகிறார்கள். பாதுகாப்பு நிலைவரம் படுமோசமாகச் சீர்குலைந்த பிறகு தனியார் விடுதிகளில் தங்கியிருக்கும் வடக்கு, கிழக்கு மக்கள் அன்றாடம் சொல்லொணா தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலம். சோதனை என்ற பெயரில் பொலிஸாரும் படையினரும் அகாலவேளைகளில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் தங்களது அத்தியாவசிய அலுவல்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே இவர்கள் விடுதிகளில் தங்கியிருக்கிறார்கள். தங்கியிருப்பதற்கான காரணங்களை விளக்கிக் கூறுவதற்கு அவகாசம் வழங்கப்படாமல், காலைக்கடன்களை கழிப்பதற்குக் கூட சந்தர்ப்பம் கொடுக்கப்படாமல் நேற்றைய தினம் விடுதிகளில் இருந்து தமிழர்கள்- வயோதிபர்கள், குழந்தைகள், பெண்கள், நோயாளிகள் என்று எந்தவிதமான வித்தியாசமுமின்றி - வெளியேற்றப்பட்டிருக்கிறார்

உனக்கு தாயகம் வடக்கு கிழக்கு என சொல்லப்படும் தமிழீழம் எம்முடன் நீ சேர்ந்து வாழமுடியாது உன்னால் முடிஞ்சால் உனக்கென நாட்டை உருவாக்கி கொள் இதுதான்

அப்படிச்சொல்லுங்க ஈழவன் அதைத்தான் நானும் சொல்ல வந்தேன். எனி புலிகளுக்கு எதேனும் உதவி செய்ஞ்சு அவர்களுக்கு ஈழத்தில் முன்னம் பதுகாப்பு கொடுத்தது போல தம்ழர்கள் மீண்டும் இறங்கி வந்து ஆதரவளிக்கும் காலம் தமிழீழ விடுதலைப்புலிகளின் பக்கம் நகர்கின்றது. :rolleyes:

சிறிலங்கா குடிமக்களா? or தமிழீழக் குடிமக்களா? கேள்வியை எழுப்பியிருக்கும் கொழும்பு நடவடிக்கை.

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள், சிறிலங்காவின் குடிமக்களா? அல்லது தமிழீழக் குடிமக்களா? என்ற கேள்வி பல தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதாக இந்திய எழுத்தாளர் எம்.ஆர்.நாராயணசுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதிய செய்திக்கட்டுரையின் தமிழ் வடிவம்:

எந்த ஒரு நாட்டிலும் எந்த ஒரு அரசாங்கமும் தவறு செய்யலாம். ஆனால் சில தவறுகள் அரசியல் மடத்தனமானதாகி விடும். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் பெரும் எண்ணிக்கையிலான விடுதிகளிலிருந்து தமிழர்களை வெளியே துரத்தியமையும் இந்த வகையில்தான் அடங்கும்.

சிறிலங்காவின் ஆளும் வர்க்கமானது நீண்டகாலமாக "தமிழர் தாயகம்" எனும் எனும் கோட்பாட்டை நிராகரித்து வந்தது. ஏனெனில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே யுத்தம் இல்லாத பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்வதாகவும் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் அரசாங்கமும் தலைவர்களும் கூறி வந்தனர்.

ஆனால் வியாழக்கிழமை சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட உச்சகட்ட நடவடிக்கையானது "தமிழர் தாயகம்" நடைமுறையில் உள்ளது என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசம் என்பதை பிரித்தும் காட்டியிருக்கிறது.

கொழும்பில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வசிக்கும் பிரதேசங்களில் உள்ள சிறிய விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள், தங்கள் பொதிகளுடன் வவுனியாவுக்கும் மட்டக்களப்புக்கும் பேரூந்துகள் மூலம் ஏற்றிச் செல்லப்பட்டனர்.

இலங்கைத் தீவில் வடக்கு கிழக்கில் "தமிழர் தாயகம்" எனப்படுகிற பிரதேசத்தில் முக்கியமான இரு நகரங்கள் வவுனியாவும் மட்டக்களப்பும்.

இலங்கையில் சிங்கள மற்றும் தமிழர் தேசங்கள் உள்ளன என்றும் இந்த இரு தேசங்களும் இணைந்து செயற்பட முடியாதவை என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்வைத்து வரும் வாதத்தை நிரூபிப்பது போல் கொழும்பின் ஒரே ஒரு நடவடிக்கை அமைந்துவிட்டது.

இத்தகைய பாரிய வெளியேற்ற நடவடிக்கைக்கு சிறிலங்காவிலும் சிறிலங்காவுக்கு வெளியேயும் பாரிய கண்டனத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியமானது அல்ல. சிறிலங்கா தலைமை நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.

வெளியேற்றப்பட்ட தமிழர்கள் - விடுதலைப் புலிகளின் முகவர்கள் அல்லது சக்திவாய்ந்த தற்கொலைதாரிகள் என்று சிறிலங்கா காவல்துறையினர் வாதிடலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பதுங்கியிருக்கும் விடுதலைப் புலி முகவர்கள் கொழும்பின் வழமையான பிற பகுதிகளில் ஏன் வசிக்கக்கூடாது?

ஆக கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றினால் அது பயங்கரவாதத்துக்கு எதிரான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை?

1980-களில் யாழ்ப்பாணத்தில் தமிழர் ஆயுதப் போராட்டம் வேர்விட்ட காலத்தில், ஈருருளில் தமிழ் கெரில்லாக்கள் தாக்குதலை நடத்துகின்றனர் என்று கூறி ஈருருளிகளை தடை செய்தனர்.

அப்படியானால் போராளிகள் முச்சக்கர வாகனங்களை பயன்படுத்தினால் அதுவும் தடை செய்யப்பட்டுவிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

கணவன் அல்லது மனைவியை ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக உடலுறவைத் தடை செய்வார்களா?

கொழும்பில் நீண்ட காலம் அல்லது குறுகிய காலம் தங்கியிருந்தபோது தமிழ் மற்றும் சிங்களவர் இடையே ஆழமான பிளவு இருப்பதை அறிய முடிந்தது.

கொழும்பு நகரில் பலமுறை முச்சக்கர வாகனங்களில் சென்றிருக்கிறேன். காவல்துறை அல்லது இராணுவ சோதனைச் சாவடி அருகே தமிழ் வானொலி ஒலிபரப்புகளை தமிழ் சாரதிகள் நிறுத்தி விடுவதை அவதானித்திருக்கிறேன். "அவர்கள் உங்களை யார் என்று கேட்டால் தமிழர் என்று சொல்ல வேண்டாம். இந்தியன் என்றும் டில்லியிலிருந்து வந்திருப்பதாகவும் கூறுங்கள்" எனத் தெரிவிப்பர்.

மிகவும் கட்டுக்கோப்பான நவீனமான எதிரியுடனான இலங்கை யுத்தம் மிகக் கடினமானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் கொழும்பு விடுதிகளிலிருந்து தமிழர்கள் துரத்தப்பட்டமையானது- எண்ணிக்கை 500 ஆக இருக்கலாம்- விடுதலைப் புலிகளின் தவறான தத்துவத்தை நிரூபிப்பதாக உள்ளது.

கொழும்பிலிருந்து வியாழக்கிழமை பலவந்தமாக தமிழர்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து தாங்கள் சிறிலங்காவின் குடிமக்களா? அல்லது தமிழீழத்தின் குடிமக்களா? என்ற கேள்வி பல தமிழர்களிடத்தில் எழுந்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

-Puthinam-

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.