Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பில் தமிழர் வெளியேற்றம்: இந்தியா தலையிட வலியுறுத்தல்

Featured Replies

சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை தலையிட வேண்டும் என்று ஆசிய மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

புதுடில்லியில் ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குநர் சுகாஸ் சக்மா வெளியிட்ட அறிக்கை:

சிறிலங்கா அரசாங்கத்தால் தமிழ் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனச் சுத்திகரிப்பு உள்ளிட்ட இனவாத நடவடிக்கைகள் தொடர்பாக இந்திய அரசாங்கமும் திராவிட முன்னேற்றக் கழகமும் தலையிட வேண்டும்.

பாதுகாப்புக் காரணங்களை சுட்டிக்காட்டி 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விலங்குகளைப் போல் பேரூந்துகளில் அடைத்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். தங்களது உடைமைகளை எடுத்துச் செல்ல அரைமணி நேரம்தான் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றிய நடவடிக்கையானது ஹோல்கொஸ்ட்டை நினைவுபடுத்துவதாக உள்ளது.

கொழும்பு நகரிலிருந்து தமிழர்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டது குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலையிட வேண்டும். தமிழர்கள் வெளியேற்றமானது இனங்களுக்கு இடையே பாரிய பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. எந்த ஒரு குடிமக்கள் சமூகத்திலும் இத்தகைய இனவெறி மற்றும் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை ஏற்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=32104

இலங்கையில் மீண்டும் ஒரு ஆடி 83 படுகொலை - இனக்கலவரம் ஆரம்பமாகிவிட்டதா?

ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 8 யூலை 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

07-06-2007 கொழும்பில் இருந்து 760 தமிழர்கள் உடுத்த உடுப்புடன் இரவோடு இரவாக துரத்தப்பட்டனர்.

08-06-2007 புத்தளத்தில் 13 அண்களும் 2 பெண்களுமாக 15 தமிழரின் உடல்கள் துண்டங்களாக வெட்டப்பட்டு வீசப்பட்டுள்ளனர்.

08-06-2007 உயர்நீதிமண்றம் தமிழர்கள் கொழும்பில் இருந்து துரத்தபடுவதற்கு தடை உத்தரவு கொடுத்ததை அடுத்து துரத்தபட்ட தமிழர்கள் 200 பேர் மீண்டும் கொழும்புக்கு வவுனியாவில் இருந்து ஆயுதமுனையில் கொன்டுவரப்பட்டனர்.

நாளை நடக்கபோவது என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய பங்களி(ழி)ப்புக்கள்

இன்றைய இலங்கைத்தீவின் பிரச்சினைகளுக்கு இந்திய பங்களிப்பு என்ன? இந்தியா தன் பங்கை அளிக்கப் போகிறதா? அன்றி அழிக்கப் போகிறதா? என்னை மறந்து தமிழை வியக்கிறேன். ‘ள’இ ‘ழ’ ஆனால் கொடை கொலையாகிவிடும். கொடை கொலையாக ‘ட’இ ‘ல’ ஆனால் மட்டும் போதுமே. என்னை மறந்து மீண்டும் தமிழை வியக்கிறேன். தமிழுடன் வாழ்ந்தவர்க்கு இது வியப்பாகாது.

அண்மையில் இரண்டு கட்டுரைகள் கண்ணில் விழுந்தன. முதலாவது பின்வரும் இணையத்தில் வந்த பி(B). ராமனின் (Additional Secretary (retd), Cabinet Secretariat, Govt. of India, New Delhi, and, presently, Director, Institute For Topical Studies, Chennai. E-mail: itschen36@gmail.com ) கட்டுரை:

http://tamilweek.com/news-features/archives/998

இந்தக் கட்டுரையின் முதல் பந்தியில் இலங்கைத்தீவின் பிரச்சினை என்ற நாடகத்தில் இந்தியாவின் பாத்திரங்கள் எவை என்பதைத் தெளிவின்றியே பார்க்கிறார். முதலாவது பாத்திரம்:

The first is as a catalyst to promote a political solution to the problems and grievances of the Sri Lankan Tamils and Muslims, who are also Tamil-speaking, in a manner which would give the Tamils and Muslims full political rights without weakening the unity of Sri Lanka and without adding to the bitterness between the Sinhalese and the Tamils. முதலாவது, ஸ்ரீலங்கா ஒன்றாக இருப்பதைப் பலவீனப் படுத்தாமலும், சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையேயுள்ள காழ்ப்புணர்ச்சியைக் கூட்டாமலும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ் பேசும் இஸ்லாமியருக்கும் உள்ள பிரச்சினைகளுக்கும், துயரங்களுக்கும் அரசியல் தீர்வுக்கு ஊக்குவித்துவிட்டு விலகுதல். Catalyst என்பதற்கு சாதாரண சூழ்நிலையில் நடக்க முடியாத மாற்றத்தை சாதாரண சூழ்நிலையிலே நடக்கவைக்க ஏதுவாகிவிட்டு விலகிவிடுதல் எனப் பொருள் கொள்ளலாம்.

தமிழர் என்பது மொழிவாரியாக வகுக்கப்பட்ட இனம். இஸ்லாமியர் என்பது மதரீதியாக வகுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் பேராசிரியர்-கவிஞர் அப்துல் ரகுமான், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான், ஓய்வுபெற்ற நீதிபதி-அறிஞர் இஸ்மாயில் அனைவரும் தமிழ் இலக்கியத்தையும், கலையையும் வளர்த்த தமிழர்களா? இல்லை தமிழர்களே இல்லையா? அல்லது அவர்களுக்கு மட்டும் என்று தமிழ்நாட்டு அரசியல் உரிமைகள் தமிழர்களுக்கு இருப்பதையும் விட தனியே உள்ளனவா? தமிழ் பேசும் இஸ்லாமியரைத் தனி இனமாகக் கண்ட ராமனால் ஏன் தமிழ் பேசும் கிறீஸ்தவரைத் தனி இனமாகக் காண முடியவில்லை? ஒரே கலக்கம். குழப்பம். இது இந்தியா வேடமிட்ட நகைச்சுவைப் பாத்திரம். ஸ்ரீலங்கா ஒன்றாக இருப்பதைப் பலவீனப் படுத்தாமல் இருக்க ஈழத்தமிழரின் சாத்வீகப் போராட்டங்கள் விடிவைத் தராததன் விளைவுதான் ஆயுதப் போராட்டம் என்பதை ராமனும் இந்தியாவும் மறந்தனவா? அன்றி மறப்பது போல் நடிக்கின்றனவா? இது இரண்டாவது பாத்திரம்.

The second is to ensure that terrorism does not pay and that the Liberation Tigers of Tamil Eelam (LTTE) does not become a role model for terrorist organisations elsewhere in the world, including India. The LTTE is acquiring for itself all the defining characteristics of a State actor such as a conventional army, navy and air force and is hoping that if it keeps fighting, the international community will ultimately reconcile itself to its passage from the status of a non-state actor to that of a state actor by recognising its objective of an independent Tamil Eelam. இரண்டாவது, பயங்கரவாதத்தால் பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படக் கூடாது. இத்துடன் விடுதலைப் புலிகள் இந்தியா உட்பட உலகெங்கும் உள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு முன் உதாரணமாக இருக்கவும் கூடாது. ஒரு நாடு என்பதை நிர்ணயிக்கும் மரபுவழித் தரைப் படை, கடற்படை, விமானப்படை என்பவற்றுடன் தொடர்ந்து போராடினால் சர்வதேசம் இறுதியில் தமிழீழத்தை அங்கீகாரமற்ற நிலையிலிருந்து அங்கீகாரமுள்ள நிலைக்கு உயர்த்தி அவர்களின் தமிழீழத் தாயகத் தாகத்துக்குத் தண்ணீர் ஊற்றுவார்கள்.

1980களில் இந்திய ஆதரவுடன்; தொடங்கிய ஆயுத விடுதலைப் போராட்டத்தை எடுத்த எடுப்பிலேயே, 21 ஆண்டுகளின் பின் 2001ல் ஐநா பாதுகாகப்புச் சபையின் 1373 விதியின் கீழ் பயங்கரவாதம் என்று கூறுவது எந்தவகை நியாயம். பரதக்கலையை தேவதாசிகள் தொடங்கினார்கள். உண்மை. அந்தப் பரம்பரையில் பின் தோன்றிய சிலப்பதிகார மாதவி இதற்கு விலக்கு. மாதவியைத் தாசி என்பது போலவே தமிழீழ ஆயுத விடுதலைப் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்பது. 9/11 ன் பின் தமிழீழ ஆயுத விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம். 9/11 ன் முன் தமிழீழ ஆயுத விடுதலைப் போராட்டம் பயங்கரவாதம் அல்ல. 9/11 நடக்காமலே இருந்தால் என்ன முடிவு? ஒரு நாட்டினுள்ளே உள்ள ஒரு இனத்தின் தலைவிதியை எழுதுவது யார்? அந்த இனமா? அந்த நாடா? அண்டை நாடா? சர்வதேசமா? இனம் தனக்கே உரிய முறையில் போராடுகிறது. நாடு கொழும்பு விடுதிகளில் இருக்கக் கூடாது உங்களுடைய ஊர்களுக்குப் போங்கள் என்று போராட்டத்துக்கே தீர்வு காண்கிறது. சர்வதேசம் சட்ட விதியின் கீழ் அங்கீகரித்து விடுமோ என அண்டை நாடு அழுகிறது. இது வில்லத்தனமா? வில்லங்கத்தனமா?

எனவே இரண்டு பாத்திரங்களையும் இணைக்க எம். ஆர். ராதாவையும், தேங்காய் சீனிவாசனையும் இவ்வுலகில் மீண்டும் பிறவி எடுக்க வேண்டுவோம்.

இரண்டாவது கட்டுரைபற்றி அடுத்தமுறை சந்திக்கும்போது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.