Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரறிவாளனின் தற்காலிக விடுப்பு இரண்டு வார காலத்துக்கு நீடிப்பு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்; எழுவர் விடுதலை பற்றி இவர்கள்.

H.Raja - விடுதலை செய்ய கூடாது
K.S.Alagiri - விடுவிக்க கூடாது, இவர்கள் குற்றவாளிகள், தமிழர்கள் அல்ல
R.S.Bharathi - ஊடகமெல்லாம் ரெட் லைட் ஏரியா மாதிரிதான் செய்படுகின்றது. 

கொலைக்கு துணை போனவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் தண்டனை, விடுதலை தள்ளிப்போவதற்கு என்ன காரணம்?

பிகு: வசை சொற்களில்லை 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளடக்கம்:- இவங்க வழக்கில் தாமதம் ஏன்.!?" Former CBI officer Ragothaman | Arnab Goswami

சார்ஜ் சீட் போட்ட CBI ஆபிஸர்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7பேர் விடுதலை: மதுரை எம்.பியின் கடிதத்தை உள்துறைக்கு அனுப்பிய குடியரசுத் தலைவர்

 
Untitled-1-1.jpg
 31 Views

ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களின் விடுதலை தொடர்பாக மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் குடியரசுத் தலைவருக்கு கடந்த 05ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார்.

அந்தக் கடிதத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் பதிலளிக்கையில், “உங்கள் கடிதத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.ilakku.org/7பேர்-விடுதலை-மதுரை-எம்-பி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுவர் விடுதலையில் ஆளுநர் கள்ள மௌனம் – சீமான் கண்டனம்

 
1-77-696x513.jpg
 42 Views

”எழுவர் விடுதலைக்காக தமிழகச் சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றி இரண்டாண்டுகளைக் கடந்த பிறகும், அதுகுறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தியினைத் தெரிவித்து முடிவெடுக்க அறிவுறுத்தியும் ஆளுநர் கள்ள மௌனம் சாதித்து வருவது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்களும், எல்லாத்தரப்பு மக்களும் எழுவர் விடுதலைக்கோப்பில் ஆளுநர் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும் என்பதைத்தான் ஒருமித்துக் குரலெழுப்பி வருகிறார்கள். எழுவரையும் விரைவாக விடுவிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என முன்னாள் சொசிலிட்டர் ஜெனரல் மோகன் பராசரனும் வலியுறுத்தியிருக்கிறார்.

ராஜீவ் காந்தி உயிரிழக்கக் காரணமாக இருந்த பெல்ட் பாமை தயாரித்தவர் யாரென்றே இதுவரை மத்திய புலனாய்வுத்துறை கண்டறியாத நிலையில், அதற்குப் பேட்டரி வாங்கிக்கொடுத்தார் எனும் குற்றச்சாட்டின் கீழ் தம்பி பேரறிவாளனை 29 ஆண்டுகளாய்ச் சிறைப்படுத்தியிருப்பது எவ்வகையிலும் நியாயமில்லை.

பேரறிவாளன் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றமே அவரின் 161 மனு நிலுவையில் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், அவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்துவது தமிழக அரசின் முழு முதற் கடமையாகும்.  ஆகவே, அதனை மனதில்கொண்டு குறைந்தது தம்பி பேரறிவாளனையாவது உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”  என்று தெரிவித்துள்ளார்.

 

https://www.ilakku.org/எழுவர்-விடுதலையில்-ஆளுநர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி பேரறிவாளனை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய முன்வர வேண்டும்-சீமான்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 தமிழர்கள் விடுதலை என்பது இம்முறையும் தேர்தல்கால வாக்குறுதிகளில் ஒன்றாகுமா? 

 
image_710x400xt-696x392.jpg
 42 Views

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, ஈழ ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் என பலராலும், பல கோணத்திலும் தமிழக அரசிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இன்னொரு பார்வையில் பார்த்தால், தற்போதைய இந்திய அரசியலில் தேர்தல்கால பிரச்சார நடவடிக்கையாக இது நடைபெறுகின்றதா எனவும் எண்ணத் தோன்றுகின்றது. எதிர்வரும் ஏப்ரல் 2021இல் சட்டசபைத் தேர்தல் வரவிருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள் தற்போதே ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

1991 மே 21ஆம் திகதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, ஸ்ரீபெரும்புத்தூரில் தற்கொலைக் குண்டுதாரியின் தாக்குதலுக்கு இலக்காகி அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் 14பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து, இத்தாக்குதலை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பமாகின.

Untitled-1-2.jpg

1991ஆம் ஆண்டில் இந்தத் தாக்குதல் காரணமாக, இந்தியாவில் வசித்த பல தமிழர்கள் (ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும்) கைது செய்யப்பட்டனர். இறுதியில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என பேரறிவாளன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகிய 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் முருகன், சாந்தன், றொபேட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய நான்கு பேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அத்துடன் றொபேட் பயஸ், ஜெயக்குமார் இருவரும் உறவினர்கள்.

விசாரணையின் போது, பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. இதில் சோனியா காந்தியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி மூன்று பேரும் ஜனாதிபதிக்கு மனு அனுப்பியிருந்தனர். ஆனால் மற்ற மூவரின் கருணை மனுக்கள் ஓகஸ்ட் 2011 இல் குடியரசுத் தலைவரால் மறுக்கப்பட்டன.

இவ்வாறு கருணை மனுக்கள் மறுக்கப்பட்ட நிலையில், இவர்களது தூக்குதண்டனைக்கு  2011செப்டம்பர்  9இல் நாள் குறிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை விலக்கக்கோரி சில அரசியல் மற்றும் திராவிட இயக்கங்கள் போராட்டம் நடத்தின. இதன் பயனாக 2011ஓகஸ்ட் 30இல் சென்னை உயர்நீதிமன்றம் இம்மூவரின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற எட்டு வாரங்களுக்கு தடை விதித்தது. இம்மனு குறித்து ஜனாதிபதி முடிவு எடுக்க காலதாமதமானதாகியதால், உச்ச நீதிமன்றம் கடந்த 2014ஆம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

அத்துடன் 2018 செப்டெம்பர் 09ஆம் திகதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, “அரசியல் சட்டம் 161 பிரிவைப் பயன்படுத்தி ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்யலாம். அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது” என்று தீர்ப்பு வழங்கினர்.

2014 பெப்ரவரி சட்டமன்றக் கூட்டத் தொடரில்,  பேரறிவாளன், முருகன், நளினி, றொபேட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், சாந்தன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு, மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால், அவர்களை தமிழக அரசே விடுதலை செய்யும் என்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முதல்வரை சந்தித்து நன்றி கூறியிருந்தார்.

ஆனால் சட்டத்துறை அமைச்சர், ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புலானய்வு நடத்தி வருகின்றனர். அந்த அமைப்புகளை கண்காணிக்கும் அமைப்பு(Multi disciplinary monitoring agency) விசாரணை அறிக்கையை தந்த பின்னர், அதனை வைத்துதான் விடுதலை பற்றி முடிவு செய்யமுடியும் என ஆளுநர் கூறினார் என்றார்.

ஆனால் இன்று வரை அந்த வழக்கில் முடிவுகள் அளிப்பதில் எந்தவித முன்னேற்றமும் காணப்படவில்லை. தேர்தல்கள் நெருங்கும் போது, இந்தியாவிலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளாக ஈழத் தமிழர் பிரச்சினைகளையும், ஈழ அகதிகள் பிரச்சினைகளையும், 7 தமிழர்கள் விடுதலையையும் அவ்வப்போது கையில் எடுப்பது வழக்கமாகி விட்டது.

இதேவேளை நவம்பர் 03ஆம் திகதி பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான வழக்கு விசாரணக்கு வந்தது. இந்த விசாரணையின் போது, மாநில அரசின் பரிந்துரையை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடிவு எடுக்காமல் தங்கள் அலுவலகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது, சட்டத்தின் அடிப்படையில் மாநிலத்தில் ஆட்சி நடைபெறவில்லையோ என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே அந்த தோற்றத்தை நீக்கிட, தமிழக அரசின் பரிந்துரை மீது விரைவாக முடிவு எடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கு நவம்பர் 23 விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இது இவ்வாறிருக்க தற்போது பேரறிவாளன் சுகயீனம் காரணமாக கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி பரோலில் சென்றுள்ளார். தாயார் அற்புதம்மாள் மீண்டும் 15 நாட்கள் பரோல் கேட்டுள்ளதால், எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி வரை அவருக்குப் பரோல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக, விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து பல எதிர்க்கட்சிகளின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின. தீர்மானத்தை அமுல்ப்படுத்த அதிமுக தவறி விட்டது என திமுகவும், திமுக ஆட்சியிலிருந்த காலத்தில் அவர்களுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்திருக்கலாம் என அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் தொடங்கினர்.

 இதற்கிடையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் கடந்த புதன்கிழமை (04) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியத் தலைநகர் புது டில்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு இந்தியப் பிரதமர், குடியரசுத் துணைத் தலைவர், உள்துறை அமைச்சர்  ஆகியோரைச் சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார். அவரின் பேச்சுக்களில் இந்த 7தமிழர்களின் விடுதலை தொடர்பான விடயமும் அடங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களின் விடுதலை தொடர்பாக பல அரசியல்வாதிகளும், ஈழ ஆதரவாளர்களும், நலன் விரும்பிகளும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வகையில்,

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, 7 தமிழர் விடுதலைக்கு தீர்மானம் போட்டது அதிமுக அரசுதான். அவர்களுக்கு தண்டனை கொடுக்கலாம் என்று தீர்மானம் போட்டவர்கள் திமுக என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள். தற்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து பேச திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை, என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலையை வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக அமைச்சரவையின் 9.9.2018ஆம் திகதியிட்ட பரிந்துரையைப் பரிவுடன் ஏற்று அவர்களை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன் என்று எழுதியுள்ளார்.

123698861_4522516871122941_8597140512638

பா.ம.க நிறுவுநர் ராமதாஸ் அறிக்கையில், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் தேவையற்ற காலதாமதம் செய்வதை அனுமதிக்க முடியாது. ஆளுநரிடம் தமிழக அரசு அழுத்தம் கொடுத்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டிப்பு நிறைந்த வார்த்தைகள் 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான விவகாரத்தில் புதிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியிருக்கின்றன. 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுக்காமல் தாமதிப்பதன் மூலம் ஆளுநர் எதையும் சாதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் கி. வீரமணி அவர்கள், 7 தமிழர்களின் விடுதலையில் நீதிமன்ற உத்தரவை ஏற்று விரைவில் ஆவன செய்ய வேண்டும் என்றார்.

7 பேரை நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இவர்களுடன், தமிழர் பேரியக்கத்தின் செயலாளர் கி. வெங்கட்ராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்,  மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா போன்றோரும் இவர்களின் விடுதலைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரபலங்கள் சிலர் இவர்களின் விடுதலை குறித்து தங்கள் ருவிற்றர் பக்கங்களில் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுவர் விடுதலைக்கு யார் தடை என்பது ஆளுநருக்கே தெரியும்  என்று கவிஞர் வைரமுத்து ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

தொல். திருமாவளவன் தனது ருவிற்றர் பதிவில், ஆளுநரின் தாமதத்தைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது உச்சநீதிமன்றம். எழுவரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் சைகை இல்லாமல் ஆளுநர் அசையமாட்டார். தமிழக அரசே அவர்களை விடுதலைசெய்! என்று பதிவிட்டுள்ளார்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதில் காங்கிரஸுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும், சட்டம் என்ன சொல்கிறதோ அதனை ஏற்றுக்கொள்வோம் என்றும் அந்த கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

இதேவேளை, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். “பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும்படி அரசியல் கட்சியினர் கோருவது ஏற்புடையது அல்ல. முன்னாள் பிரதமரை கொலை செய்து இந்தியாவிற்கு கேடு விளைவித்தோருக்கு பரிந்துபேசுவது தமிழர் பண்பாடாகாது. கொலை குற்றம் செய்தவர்களை குற்றவாளிகள் என்றுதான் கருத வேண்டுமே தவிர, தமிழர்கள் என அழைப்பது சரியல்ல. ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம்.” என்று கூறியுள்ளார்.

 

https://www.ilakku.org/7-தமிழர்கள்-விடுதலை-என்பத/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பேரறிவாளன் விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது - நடிகர் பார்த்திபன்

பேரறிவாளன் விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது - நடிகர் பார்த்திபன்

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார்.


இந்நிலையில் விடுதலையில் நியாமமும் தர்மமும் இருப்பதால் உடனே நிகழ வேண்டி நானும் போராடுகிறேன் என நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும்,துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால்,அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.

 

 

 

 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/11/20111933/There-is-justice-and-virtue-in-liberation--Actor-Parthiban.vpf
 
 
சினிமா செய்திகள்
பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடலை இணையதள வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இந்த முறையாவது தன் மகனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்த போது பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கண்ணீர் சிந்தியுள்ளார்.


இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்  டுவிட்டர் பதிவில்,

ஒரு குற்றமும் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் விடுதலையை மறுப்பது அநீதி – பேரறிவாளனின் தாயார் கவலை

 
1-129-696x387.jpg
 44 Views

சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி கவலை வெளியிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், உட்பட ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகின்றது. 2018 ஆம் ஆண்டு ‘ என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டோம் ‘ என்று ராகுல் காந்தி கூறியுள்ளது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி இணையதளங்களில் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

 

அதில் விஜய் சேதுபதி, சத்யராஜ், சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ‘ரிலீஸ் பேர‌றிவாளன்’ என்ற ஹேஸ்டேக்குடன் வந்த பாடல் தற்போது சமூக வலை தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், ‘சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி’ என்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

 

https://www.ilakku.org/7-பேர்-விடுதலையை-மறுப்பது/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாமதிப்பது நீதியல்ல.... பேரறிவாளன் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சினிமா பிரபலங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வலியுறுத்தி ராப் பாடல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வைரலானதை அடுத்து 'ரிலீஸ் பேர‌றிவாளன்' என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

சினிமா பிரபலங்கள் பலரும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்து வருகின்றனர். அதன் தொகுப்பு பின்வருமாறு:

விஜய் சேதுபதி 

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும். அற்புதம்மாள் அவர்களின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி’ என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ்

ஒரு குற்றமும் செய்யாத ஒரு மனிதனுக்கு 30 ஆண்டுகள் சிறை. தனது மகனைத் திரும்பப் பெற ஒரு தாயின் 30 வருட போராட்டம்... பேரறிவாளனை விடுவிக்க முதல்வர், ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பார்த்திபன்

அற்புதம் அம்மாள் நீதித்துறையின் பொற்பாதம் பிடிக்காதக் குறையாக கடந்த வருடங்களில் அவர் நடந்த தூரமும், துயரமும் அளவிட முடியாதது.விடுதலையில் நியாயமும் தர்மமும் இருப்பதால், அது உடனடியாக நிகழ வேண்டி போராடும் நல்லிதயங்களில் நானும் ஒருவன் என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

விஜய் ஆண்டனி

நிரபராதியான சகோதிரர் பேரறிவாளன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும். உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய வேண்டும் என்று கூறிய பிறகும் தாமதிப்பது நீதியல்ல என விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

பிரகாஷ்ராஜ்

தீர்ப்புக்குப் பின்னும் மறுவிசாரணைக்கான சட்டங்கள் நம் நாட்டில் இருக்குமானால், பேரறிவாளன் சட்டப்படி குற்றமற்றவராக விடுதலையாகி இருப்பார். ஆனால் அவருடைய விடுதலைக்காக  நடைமுறையில் இருக்கும் சட்டங்களையே நம்ப வேண்டியிருக்கிறது என பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/11/20135640/2082894/Tamil-Cinema-celebrities-request-to-release-perarivalan.vpf

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ட்விட்டரில் டிரெண்ட் செய்யும் திரைப் பிரபலங்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளனுக்கு பெருகிவரும் ஆதரவு | மௌனம் காக்கும் ஆளுநர்

 

  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: சிபிஐ!

 

spacer.png

பேரறிவாளன் விடுதலைக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை, ஆளுநர் கையில்தான் முடிவு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 30 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்து வருவதால் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

குறிப்பாக தனது மகனை விடுவிக்க வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டரீதியாக போராடி வருகிறார்.  7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இவ்விவகாரத்தில் இன்னும் முடிவு எடுக்காமல் தமிழக அரசின் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.

இதனிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

 

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீதான தற்போதைய நிலை என்ன என்பது குறித்து தமிழக ஆளுநரிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதேபோன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது குறித்து நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சர்வதேச தொடர்புகள் குறித்து பன்னோக்கு விசாரணை ஆணையம் மற்றும் சிபிஐ விசாரணை நடத்தி வருவதால் அந்த விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நிலோபர் நிஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்தது போல் தன்னையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வழக்கு நவம்பர் 23ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ள நிலையில் நேற்று சிபிஐ தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் பேரறிவாளன் விடுதலை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது ஆளுநர் கையில்தான் இருக்கிறது. இவ்விவகாரத்தில் சிபிஐக்கு தனிப்பட்ட ரீதியில் எந்த பங்கும் இல்லை. பெல்ட் வெடிகுண்டு விவகாரம் தொடர்பான விசாரணை உள்ளிட்ட எங்களின் இறுதி அறிக்கையை யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் போதுமானது. இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை.  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

https://minnambalam.com/public/2020/11/22/12/perarivalan-case-cbi-response-petition

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளனை விடுதலை செய்ய தடுப்பது எது | பின்னணி அரசியல் | சாட்டை | துரைமுருகன் |

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநரே முடிவெடுக்க வேண்டும்-சிபிஐ

 
1-151.jpg
 50 Views

பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கிற்கும், எம்டிஎம்ஏ என்று அழைக்கப்படும் பல்நோக்கு விசாரணைக் குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலைக்கு  ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து, அவர்   வெளியிட்ட அறிக்கையில்,”பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிப்பதில் தங்களுக்கு மறுப்பு ஏதுமில்லை என உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கூறிய பிறகும் பேரறிவாளன் விடுதலையைத் தாமதிப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தை ஆளுநர் அவமதிப்பதாகவே பொருள்படும்.” என்று கூறியுள்ளார்.

யார் இந்த ஏழு பேர்? - You Turn

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை முடிவெடுத்தது. அந்த பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும், ஆளுநர் இதுவரை அதன் மீது எந்த முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.ilakku.org/பேரறிவாளன்-விடுதலை-விவகா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.