Jump to content

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

கிறிஸ்துமஸ் சிறப்புக் கட்டுரை: திண்டாடினாலும் கொண்டாடுவோம்

christmas-featured-article  
 

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது. ‘கிறிஸ்மஸ் கம்ஸ், பட் ஒன்ஸ் எ இயர்’. ஆமாம், கிறிஸ்துமஸ் பண்டிகை ஓர் ஆண்டில் ஒருமுறைதான் வருகிறது.

உலகெங்கும் உள்ள 240 கோடிக் கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, மற்ற சமயங்களைச் சார்ந்த மக்களும் இணைந்து மகிழ்ந்து கொண்டாடும் பெருவிழா கிறிஸ்துமஸ் என்றழைக்கப்படும் கிறிஸ்து பிறப்புப் பெருவிழா.

மேலை நாடுகளில் வாழாவிட்டாலும் இந்த விழாக் காலத்தின்போது, அங்கிருந்தவர்களுக்கு இந்த விழாவைச் சார்ந்த கொண்டாட்டங்களும், அவை உருவாக்கும் களிப்பும் பேரானந்தமும் தெரிந்திருக்கும்.

மகிழ்ச்சியான இப்பெருவிழாவின் மீது பெருந்தொற்று உருவாக்கிய சோகத்தின் கருநிழல் இந்த ஆண்டு படிந்திருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கிய கரோனா நோய்க்கிருமியின் கோரத்தாண்டவம், உலகெங்கும் பரவி ஓராண்டில் லட்சக்கணக்கான மக்களைக் கொன்றிருக்கிறது.

புன்னகையில் கண்ணீர்

இந்நாடுகளில் இந்த விழாக் காலத்தில் எல்லா இடங்களிலும் தவறாது ஒலிக்கும் கிறிஸ்துமஸ் பாடல்களோடு துயர கீதங்களும் சேர்ந்தே ஒலிக்கும். குடும்பத்தில் ஒருவரை அல்லது நெருங்கிய நண்பரைப் பறிகொடுத்தோரின் புன்னகையில் கண்ணீர் ஒளிந்திருக்கும்.

கிறிஸ்துமஸ் விழாவின்போது குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் பரிசு தரும் பழக்கம் இருக்கிறது. நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக ‘விலகியிருங்கள். ஆறடி தூரமாவது தள்ளி நில்லுங்கள்’ என்கிறார்கள் மருத்துவர்கள். ‘கிறிஸ்துமஸ் பார்ட்டீஸ்’ என்றழைக்கப்படும் விழாக்கால விருந்துகளிலும் ஒருவரையொருவர் வாழ்த்தும்போதும் அணைத்துக் கொள்வதும், ஆரத்தழுவுவதும், முத்த மிடுவதும், கை குலுக்குவதும் அங்கே இயல்பாக நிகழ்பவை. ஆனால், நோய் அச்சத்தால் இந்த ஆண்டு இவற்றை கவனமாகத் தவிர்க்க வேண்டியிருக்கும்.

நம்பிக்கை மகிழ்ச்சி அவசியம்

இந்தச் சூழலில் இயல்பாக எழக்கூடிய கேள்வி என்ன? இத்தனைக்கும் மத்தியில் நாம் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்தான் வேண்டுமா?

இன்றைய சூழலில் மட்டுமல்ல புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போதும், ‘இந்த வேளையில் விழா அவசியமா?, கொண்டாட்டம் தேவையா?' என்று கேட்கும் சிலர் எப்போதும் இருப்பார்கள்.

கார்ல் ரானர், ரானல்ட் ரால்ஹைசர் போன்ற அறிஞர்கள் இக்கேள்விக்குத் தெளிவாக பதில் சொல்லியிருக்கிறார்கள். சோதனைகள் சூழும் வேளையில் வேதனையில், விரக்தியில் வீழ்ந்து கிடப்பதால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. சோகம் நம்மை முடக்கிப் போடும். சூழ்ந்திருக்கும் சவால்களைச் சந்திக்க நாம் முனைந்து எழ வேண்டும். அப்படி எழுவதற்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அவசியம்.

நம் மனத்துக்கு வேண்டிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருவதில் திருவிழாக்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. நம்பிக்கையூட்டும் நல்ல நிகழ்வுகளை திருவிழாக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. அந்த நிகழ்வுகள் நமக்குச் சொல்லும் அருஞ்செய்திகளை, அவை மீண்டும் முன்வைக்கின்றன.

கடவுள் கைவிடவில்லை

மானுடத்தைக் கடவுள் இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதற்கான சான்றே பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் எனச் சொன்னார் மகாகவி தாகூர். அப்படியானால், பிறக்கும் இறைமகன் எதற்கான சான்று? அவரின் பிறப்பைக் கொண்டாடும் இவ்விழா சொல்லும் செய்தி என்ன? இறைவன் இவ்வுலகை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார் தெரியுமா? உலகை மீட்க தன் மகனை மனிதனாக அனுப்பும் அளவுக்கு. எனவே, கவலையும் கண்ணீரும் நிறைந்த இந்தச் சூழலில் நாம் இந்த விழாவைக் கொண்டாடியாக வேண்டும். கொண்டாட்ட விருந்துக்கு வழியில்லையே, பரிசுகள் வாங்கப் பணம் இல்லையே என்றெல்லாம் நாம் கவலைப்படத் தேவையில்லை.

பொருள்களோ, பரிசுகளோ இல்லாவிட்டால் என்ன? மனங்களும் கரங்களும் இணைந்திருக்கும்வரை கிறிஸ்துமஸ் என்ற அந்த மானுடகுமாரனின் பிறந்த நாள் அளித்த ஒளி நிலைத்திருக்கும். கருணையும் மனிதநேயமும் செழிக்கும் இடங்களில், மனங்களில் எல்லாம் கிறிஸ்துமஸ் விண்மீன் கண்சிமிட்டும். தெய்வக் குழந்தையின் திருமுகம் மலரும், ஒளிரும். ‘நல்மனம் கொண்டோர் அனைவருக்கும் அமைதி' என்று வாழ்த்தும் வானவரின் பாடல் ஒலிக்கும்.

சூழ்ந்திருக்கும் சிரமங்களுக்கு மத்தியிலும் நாம் கொண்டாட வேண்டும். இதுதான் இன்றைய தேவை. எளியோருக்கு உதவி, எளிமையாய்க் கொண்டாட வேண்டும். தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மறந்துவிடாமல் கொண்டாட வேண்டும்.

இந்தச் சூழலில் இறைவன் எப்படிப் பிறக்க வேண்டும் என்பதைச் சொல்லும் ஒரு பாடல் இருக்கிறது. அதன் காணொளியைக் காண விரும்புவோர் பல்லவியின் முதல் இரண்டு சொற்களான, ‘உயிராக, நலமாக’ என்ற சொற்களை யூ ட்யூபில் தட்டச்சு செய்து தேடலாம்.

‘உயிராக, நலமாக இறைவா நீ வா - இந்த உலகோரின் நிலை கண்டு உடனே நீ வா, நோயோடும் சாவோடும் போராடிடும் - உந்தன் சேயோருக்காய் மீண்டும் பிறந்திங்கு வா’ என்பதுதான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாக்காலம் முழுவதும், உலகெங்கும் உள்ள மனிதர்களின் இதயத்திலிருந்து எழுந்துவரும் வேண்டுதலாக இருக்கும்.

துயரங்களிலிருந்தும் உற்பாதங்களிலிருந்தும் நம்மைக் காத்தருளும் தேவகுமாரனின் பிறந்த நாள் நம்மில் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பெருக்கட்டும்.

 

https://www.hindutamil.in/news/supplements/anantha-jothi/614964-christmas-featured-article-4.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு வெண்ணைக்கு அலைவானேன்? ஒலி, ஒளி எல்லாம் தேவையில்லை, யோசனை தூரம் என்று சொல்வார்களே, அதன் வேகத்தில் சென்றால்……ஒரு நொடிகூட வேண்டியதில்லையே!🤔 ஒரே ஒரு வேண்டுகோள்! வணங்காமுடி அவர்களுக்கு ரிக்கற் எடுத்து அங்கொடைக்கு அனுப்புவதென்றால் எனக்கும் ஒன்று எடுத்து உதவவும் உறவுகளே!!🤣
    • எலோன் மஸ்கின் நிலத்தடி குகை வழித்தடத்திட்டங்கள்(TBM) சில அவுஸ்ரேலியாவிலும் உள்ளது, இது தவிர இணைய வசதி, புதிப்பிக்கப்படக்கூடிய சக்தி திட்டங்களும் உள்ளன.
    • இலங்கை அரசு மீன் வள இழப்ப்ற்கு நட்ட ஈடு கோர முடியாதா? இலங்கை மீனவர்களின் மீன் பிடி உபகரணங்களை அழித்ததிற்கும், தவறான மீன் பிடி முறைகளை பாவித்து மீன் பிடிக்கின்றமையால் நீண்டகால அடிப்படையில் ஏற்பட்டும் மீன் வள இழப்பிற்கும். அப்படியே இந்தியாவிடமும் எல்லை தாண்டிய மீனவர்களை கடந்த காலத்தில் கொன்ற இலங்கை அரசிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பம் சார்பாக நட்ட ஈடு கோரி இந்தியாவில் வழ்க்கு தொடுக்கவும் வேண்டும்.  
    • அறிதலுக்காக மட்டும்.    அதிக விபரிப்புடன்.  எலன் மஸ்க்   
    • அப்ப இதை உங்கள் முந்திய கருத்தில் சொல்லவில்லை? சிலை வைத்தற்காக அல்ல, விகாரை கட்டியதற்கு எதிராகவே கருணாகரம் குரல் எழுப்புகிறார் என்று சொல்லாமல்… சிலை எப்பவோ வைத்தாயிற்றாம் எண்டதோடு மீதி உண்மையை முழுங்கியது நீங்கள். இப்போ என்னை விதண்டாவாதி என்கிறீர்கள். பிகு சிலையோ, அதைசுற்றி சின்ன கோவிலோ இரெண்டும்  எதிர்க்கப்பட வேண்டியதே. முன்பு சிலை வைத்துவிட்டார்கள் என்பதால் இப்போ கோவில் கட்டுவதை எதிர்க்காமல் விட முடியாது. இங்கே மீதி உண்மையை (இப்போ கட்டப்படுவது கோவில்) நீங்கள் எழுதாமல்….ஏதோ இரு வருடம் முதல் நடந்த விடயத்தை இப்போ எதிர்க்கிறார்கள் என்பது போல் எழுதியது கபடத்தனமானதில்லையா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.