Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் வாழ் தமிழர்களுக்கு ஒரு தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியில் உள்ள ஒரு பிரபல்யமான தமிழ் வர்த்தக நிறுவனத்தினர் " 4 கார்ட் போடக்கூடிய டிஜிட்டல் சற்றலைட் ரிஸீவர் விற்பனைக்கு உண்டு. அதன் விலை 139 யூரோ " என்று ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர்களால் விற்பனை செய்யப்பட்டுவரும் ரிஸீவர் ஜேர்மன் நாட்டு கொம்பனியான மீடியோன் (Medion) நிறுவனத்தினருடையது.

அந்த ரிஸீவர் மொடலின் பெயர் Medion MD 24014

அதனுடைய உண்மையான விலை 69 யூரோ மட்டுமே.

அந்த ரிஸீவரில் 2 Smartcard போடக்கூடிய ஓட்டைகளும் 2 CI modul (Commen Interface Modul) போடக்கூடிய ஒட்டைகளும் உள்ளன. அந்த இரண்டு மொடூல்களும் ரிஸீவருடன் தரப்படமாட்டாது. (பொதுவாகவே ரிஸீவருடன் சேர்த்து மொடூல்கள் விற்கப்படுவதில்லை)அந்த மொடூல்களை நீங்களாகவே வாங்கிக்கொள்ளவேண்டும். அவை இரண்டும் வாங்குவதானால் அதற்கு கிட்டத்தட்ட 100 யூரோவில் இருந்து 140யூரோ வரை செலவாகும்.

நீங்களாகவே இந்த ரிஸீவர் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் கீழ்காணும் முகவரிக்கு செல்லவும்......

https://www.medionshop.de/

அந்தபக்கத்திற்கு சென்றதும் வலதுகைப்பக்கமாக(பச்சை நிற Boxக்குள்) சிறிது கீழே வரவும்.... அங்கே

Produktsuche என்று தலைப்பிட்டுள்ள பெட்டிக்குள் "MD 24014" என்று கொடுத்துவிட்டு அந்த பெட்டிக்கு கீழே உள்ள "Suchen" என்னும் பட்டனை கிளிக் பண்ணி விபரத்தை தெரிந்துகொள்ளவும்.

போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று மேலே எழுதி இருந்தேன்.....

எது போலியானது:

1. அந்த தமிழ் தொலைக்காட்சியில் வந்த அந்த விளம்பரம் போலியானதா?

அல்லது

2. அந்த தமிழ் வர்த்தக கடை போலியானதா?

அல்லது

3. அந்த ரிஸீவரை தயாரித்து 69 யூரோவிற்கு விற்பனை செய்யும் Medion நிறுவனம் போலியானதா என்பதனை ஜேர்மன் வாழ் தமிழர்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

நன்றி

எனது நண்பர் ஒருவர் அந்த தமிழ் தொலக்காட்சியின் விளம்பரத்தை பார்த்துவிட்டு மேலே சொல்லப்பட்ட ரிஸீவர் 4 கார்ட் போட்டுபார்க்ககூடியது 139 யூரோ நல்ல மலிவான விலையும் கூட, இப்படி 4 கார்ட் போட்டுபார்க்ககூடிய ரிஸீவர் இதுவரையில் எங்குமே சந்தையில் விற்பனைக்கு வரவில்லை என்று எண்ணி மறுநாள் அந்த தமிழ் கடைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு ரிசீவர் ஓடர் பண்ணியுள்ளார். அப்போது அந்த கடைக்காரர் எனது நண்பரிடம் கூறியுள்ளார் "அண்ணே, ரிஸீவர்கள் என்னும் எங்களுக்கு வந்துசேரவில்லை....அநேகமாக இன்று வருமென்று நம்புகிறோம்.... உண்மையில் இந்த ரிஸீவர் சரியான விலை கூடியது... சரி எதற்க்கும் உங்களுக்கும் அந்த விலைக்கே (139 யூரோ) தருகிறோம்... உங்களின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்.........ரிஸீவர் வந்ததும் உங்களுடன் தொடர்புகொள்ளுகிறோம்" என்று பந்தாவாக பேசியுள்ளார்.

அப்போது கூட எனது நண்பர் உண்மையில் 4 கார்ட் போடக்கூடிய ரிஸீவர்தானா என்று கேட்டதற்கு "ஓம்,ஓம் அது 4 கார்ட் போடக்கூடிய ரிஸீவர்தான்... அதில் எந்த பிரச்சினையும் இல்லை அண்ணே" என்று கூறியுள்ளார்

நண்பரும் தொலைபேசி நம்பரை அவர்களுக்கு கொடுத்துவிட்டு போனை வைத்துவிட்டார்.

மூன்று நாட்கள் கழித்து அந்த தமிழ் கடை இவரின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு "அண்ணே ரிஸீவர் இன்று வந்து எல்லோருக்கும் அனுப்பியாகிவிட்டது..... நீங்கள்தான் கடைசி நபர்... உங்களின் வீட்டு முகவரியை தாருங்கள் .... இப்பவே உங்களுக்கும் அனுப்பி விடுகிறோம்" என்று கூறி வீட்டு முகவரியை பெற்றபோது, எனது நண்பர் கேட்டுள்ளார் "அதுசரி நான் இன்னும் பணம் எதுவும் இன்னும் உங்களுக்கு அனுப்பவில்லை... எப்படி அதற்க்குள் ரிஸீவரை அனுப்புகிறீர்கள்" என்று கேட்டதற்கு அந்த கடைக்காரர் அண்ணே நாங்கள் பார்சலை "Nachnahme" (நேரடியாக பணத்தை கட்டி பார்சலை பெறுதல்) மூலம் அனுப்பிவிடுகிறோம் என்று சொல்ல இவரும் சம்மதம் தெரிவித்து முகவரியை கொடுத்துள்ளார்.

மறுநாள் இவரது வீட்டிற்க்கு ரிஸீவர் வந்தது..... €151,90cents (ரிஸீவருக்குரிய பணம் + போஸ்ட்டல் சார்ஜ்) பணம்கட்டி ரிஸீவரை பெற்றார்.

ரிஸீவரை திறந்து பார்த்தபோதுதான் தெரிந்தது அது இவர் எதிபார்த்ததுபோல் ஒரே நேரத்தில் 4 smartcard போடக்கூடியது அல்ல என்று...

உடனே அந்த கடைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு "நீங்கள் விளம்பரத்தில் 4 கார்ட் போடக்கூடிய ரிஸீவர் என்றீர்கள்.... இந்த ரிஸீவரில் 2 கார்ட் போடும் ஓட்டைகள் தான் உள்ளது, மற்றைய இரண்டும் CI modul வாங்கிப்போட்டுத்தானே பாவிக்கலாம்" என்றார். அதற்கு அந்த கடை முதலாலியின் பதில் " ஓம், அதற்கு இப்ப எண்ண .... நீங்கள் மொடூலை வாங்கிப்போட்டு பாவியுங்கோ... அது உங்களுடைய பிரச்சினை..... மற்றது நாங்கள் அந்த விளம்பரத்தில் சொன்னது 4 கார்ட் போட்டு பாவிக்ககூடிய ரிஸீவர் என்றுதான் சொன்னோம், 4 கார்ட் போடக்கூடியது என்று சொல்லவில்லை.. அதனை நீங்கள் சரியாக விளங்கிக்கொள்ளாதது உங்களுடைய பிழை... இதற்க்கு நாங்கள் பொறுப்பில்லை... என்றாராம்.

(4 கார்ட் போடக்கூடியது என்ற சொல்லுக்கும் 4 கார்ட் போட்டு பாவிக்ககூடியது என்ற சொல்லுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று எனக்கும் விளங்கவில்லை. எனக்கும் தமிழ் அறிவு. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தெரிவியுங்கள். அறிந்து கொள்வது நல்லதுதானே)

மேலும் அந்த முதலாளி சொன்னாராம் "அண்ணே இந்த ரிஸீவரின் உண்மையான விலை தெரியாமல் கதைத்துக்கொண்டிருக்கிறீர்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனி இதில் ஒளிவுமறைவு என்ன இருக்கிறது.. அது யார் அந்த வியாபாரி அந்த நிறுவனத்தின் பெயர் என்பவற்றை பகிரங்கமாக இங்கேயே பதி்ந்து விடுங்கள்.. திருடர்களை இனம் காட்டுவோம்..

இன்னும் பலர் ஏமாறாமல் இருக்க அது வழிவகுக்கட்டும்..

இதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கமுடியுமானால் உங்கள் நண்பரைகொண்டு செய்யுங்கள்

நன்றி..

வணக்கம் தோழர்களே!!

1--முதலில் விளம்பர விவரம்

4 கார்ட் போடக்கூடியது என்ற சொல்லுக்கும் 4 கார்ட் போட்டு பாவிக்ககூடியது என்ற சொல்லுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று எனக்கும் விளங்கவில்லை. எனக்கும் தமிழ் அறிவு. உங்களில் யாருக்காவது தெரிந்தால் தெரிவியுங்கள். அறிந்து கொள்வது நல்லதுதானே)

இது ஒரு Irrefuehrende Angabe. / Nach dem Gesetzt gegen den unlauteren Wettbewerb sind unwahre und irrefuerende Angaben verboten.

அதாவது சட்ட ரீதியில் உண்மையற்ற மற்றும் னேர்மையற்ற மேலும் ஏமாற்றும் வார்த்தைகள் தடை செய்யபட்டுல்லது.HGB

ஆகவே விளம்பரம் சட்டத்தை இங்கு காயபடுத்தியிருக்கிறது

2-- விலை . வாங்கும் விலையிலிருந்து என்த ஏற்றுக்குள்ளும் விலைக்கும்ொரு பொருலை விற்ற்கலாம்.(இரு சாராருக்கும் ஏற்று கொள்ளகூடிய விலைக்கு) இங்கு விலை நியாயமாக இருக்குறது என்று சட்டப்படி நிருபிக்க முடியும். Kalkulation Preise sind in der regel ueber 1,84% .எல்லா கடைகளிலும் இதுதன் உண்மை. ஒரு பொரு 1 யூரோ என்றால், கிட்டதட்ட அந்த பொரு 2,59 செட்டுக்கு விற்ற்கப்படும். மேடியோன் இணையத்தலத்தில் நீங்கள் பார்த விலை ஜேர்மனில் முன்மொழிவு விலைஎன்பார்கள். தொடர்வற்ற விளைஎன்பார்கள். (Empfohlene Preis und es ist unverbindlich) BGB/GBG

ஆகவே விலை சட்டம் அனுமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது

3--14 நாட்களில் திருப்பி கொடுப்பது(இணையதல AGB)

இணயதல விதிமுறைக்கு ஏற்ப மற்றும் குடிமக்கள் சட்டபுத்தகத்துக்கு ஏற்ப BGB. 14 நாளைக்குல் இணையகடைகளிலி மட்டும் வாங்கிய பொருட்களை திருப்பிக் கொடுக்க சட்டம் இடம் ஒதுக்கிறது. பாவணையாலர் பாதுபாப்பு சட்டத்தின் படி(Verbraucherschutz) கடைகளில் வாங்கிபொருகளை திருப்பிகொடுக்க சட்டம் இடம் ஒதுக்கவில்லை. இருவருடய சித்தங்களும் ஒருமைப்படும் போது ஒரு பொருல் வாங்குதல் முடிவுபெறுகிறது. மற்றும் படி சுயவிருப்பத்தின் அடிப்படையிலும் தனிப்பட்ட கடி விதிமுறைக்கு அமையவும் பொருகள் திருப்ப பணமாக மாற்றிக்கொள்ளலாம்(Umwandlung eine gegenstand ist moegliche unter Kulanzgruenden und unter eigene AGB bestimmung)

ஆகவே இங்கு பொருலை வியாபாரி திருப்ப ஏற்பது சுயவிருப்பம் சார்ந்தது.

என்னுடைய கருத்து!!

அந்த வியாபரிக்கு நன்றாக வியபாரம் செய திரிந்திருக்கிறது. பேச்சு வல்லவை திசைதிருப்புவாதத்தோடு வலுசேர்க்கப்படுல்லது.

நண்பரே ஆகவெ விளம்பர கட்டலை எனப்படம் Werbe Gruedsetze என்ற பொருளை வியாபாரி கடைபிக்காமள் செயல்பட்டதற்கு எதிராக சட்ட நடவடிகை எடுக்க இடம் இருக்கிறது.

இருப்பினும் நாகரீகம் கருதி இதை தமிழர் நாகரீகத்தோடு செயல்படுவதே நன்று.

இருப்பினும் அனுபவங்கள் பாடமாக அமைந்திருக்கும் என்பது பழமொழி. மேலும் கேள்விகள் இருந்தால் வினாவலாம். சட்டபடி நான் சட்ட ஒழுங்குறை வியாபாரி!!

இது ஒரு இலகுவாக விளங்க்கூடிய சட்ட விதிமுறை மொழிபேயர்ப்பு.

ஜரோப்பிய தமிழனின் எழுத்து பிழைகளை மன்னிக்கவும். முயறி தழரவில்லை எதிர்காலத்தில் செம்தமிழில்எழுதுவேண். நன்றி

Edited by cawthaman

  • தொடங்கியவர்

உங்களின் தகவல்களுக்கு நன்றி. நேற்று நாம் இங்குள்ள லோயர் ஒருவரிடம் ஆலோசனை பெற சென்றபோது அவர் எங்களின் முழு கதையையும் வடிவாக கேட்டு, நாங்கள் காட்டிய பற்றுச்சீட்டையும் பார்த்ததின் பின்னர் அவர் தெரிவித்ததாவது...

1. இது ஒரு முற்றிலும் தவறான விளம்பரம் கொடுத்து இந்த பொருளை விற்பனை செய்துள்ளார். இதற்க்கு அந்த கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். (நீங்கள் கூறியது போலவே சொன்னார்)

2.இது ஒரு தூர தொடர்பு சாதனங்கள் (Fernkommunikationsmittel) ஊடாக(அதாவது வானொலி,தொலக்காட்சி,தொலைபேசி,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படிப்பட்ட புல்லுருவிகளை பகிரங்கமாக அம்பலப்படுத்தவேண்டும், அப்பதான் மற்றவர்கள் ஏமாற மட்டார்கள், அவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கும், இதில் தயக்கம் வேண்டாம்.

வண்க்கம் நண்பரே மீண்டும்,

இது முறறிலும் BGB க்கு புரம்பான விற்பனை. சில வேலை கடைக்காரர்ருக்கு சட்டதிட்டங்கள் வடிவாதெரியாதிருக்களாம்.

மேளும் உங்கள் முதல் பதிவில் விலையையும் விளப்பரத்தையும் தாக்கியிருந்தீர்கள். அதற்கான பதிலைதான் முடிந்தவரயில் சுருக்கி இருந்தேன். வளக்கரிஞர்ட்ட பேய்யிருந்திங்கள் என்டால் நான் எனிய எழுதத்தேவையில்லை.

எப்படியோ சாதகமாக எல்ல முடின்திருக்கிறாது, சந்தோஷம்.

மீணும் சந்திப்போம்

Edited by cawthaman

இப்படியான புல்லுருவிகளை இனங்காட்டுங்கள் நண்பர்களே,

இப்படியானவர்களால்தான் எம் இனத்திற்கு கெட்டபெயர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.