Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கி திரைப்பட விழா ஒரு பார்வை

Featured Replies

சென்னை திரைப்பட ரசிகர்களுக்கு சர்வதேச திரைப்படங்களை அறிமுகம் செய்வதில் முன்னணியில் உள்ளது, இன்டர்நேஷனல் சினி அப்ரிசியேஷன் பாரம். (Internationl Cine appreciation Forum).

பிரான்ஸ், இத்தாலி, துருக்கி, ஜெர்மன், இஸ்ரேல், ஈரான், லெபனான், அல்ஜீரியா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான், சிலி, பிரெசில், பெரு உள்ளிட்ட உலகில் சினிமா தயாரிக்கும் அனைத்து நாடுகளின் சிறந்த திரைப்படங்களையும் இவ்வமைப்பு சென்னையில் திரையிட்டுள்ளது. மேலும் தொடர்ந்து திரையிட்டு வருகிறது.

டிசம்பர் மாதம் இவ்வமைப்பு (ICAF) நடத்தும் சர்வதேச திரைப்பட விழாவே தமிழ்நாட்டில் நடக்கும் மிகப் பெரிய சர்வதேச திரைப்பட விழா! நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்படும்.

சென்ற மாதம் துருக்கி திரைப்பட விழாவை மூன்று நாள்களுக்கு ICAF நடத்தியது. துருக்கியின் முக்கியமான ஐந்து இயக்குனர்களின் திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன.

சென்ற மாதம் 28-ந் தேதி சென்னையில் அமைந்துள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை திரையரங்கில் இவ்விழா தொடங்கியது. ICAF-யுடன் The embassy of the Republic of Turkey Delhi இணைந்து இவ்விழாவை நடத்தியது. துவக்க நாளில் துருக்கியின் Consulate General டாக்டர் V.L.DUTT கலந்து கொண்டு படவிழாவை தொடங்கி வைத்தார்.

28,29 மற்றும் 31 தேதிகளில் நடந்த இவ்விழாவில் துருக்கியின் ஐந்து முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்த ஐந்தை இயக்கிய இயக்குனர்களும் உலக அளவில் திரைப்பட இயக்கத்திற்காக கொண்டாடப்படுகிறவர்கள்.

28-ம் நாள் 'The Bandit' திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை இயக்கியவர் Yavuz Turgul. 1996-ல் வெளியான இப்படம் Germany Bogeuy Award, Festroia - Troia இன்டர்நேஷனல் சர்வதேச திரைப்பட விழாவில் 'கோல்டன் டால்பின்' விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றது.

Yavuz Turgul துருக்கி தலைநகர் இஸ்தான்ஃபுல்லில் 1946-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கும் நம்மூர் சரண், சிம்புதேவன், சுசிகணேசன் இவர்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இவர்களைப் போலவே Yavuz Turgul-ம் நிருபராக இருந்து இயக்குனரானார். 1976-ம் ஆண்டு முதல் திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுத ஆரம்பித்த இவர் 1984-ம் ஆண்டு தனது முதல் படத்தை இயக்கினார். 'Fahriye Abla' என்ற அந்தப் படம் இவரை துருக்கியின் முக்கிய இயக்குனராக அடையாளம் காட்டியது. துருக்கியின் மிகப் பெரிய நடிகர் Sener Sen-யுடன் சேர்ந்து பலப் படங்களை இயக்கினார் Yavuz Turgul.

29-ம் தேதி இரண்டு படங்கள் திரையிடப்பட்டன. முதல்படம் Omer Vargi இயக்கிய 'Under Construction.' 2003-ல் வெளியான இப்படம் இரண்டு கட்டிடத் தொழிலாளர்களைப் பற்றியது. இத்தாலிக்கு கடத்தல்காரர்களாக செல்ல விரும்பும் இவ்விருவரைப் பற்றிய இப்படம் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது.

கனவு கதாபாத்திரம்?

இரண்டாவது திரையிடலாக Serdar Akar இயக்கிய 'Off Side' திரைப்படம் திரையிடப்பட்டது. வாழ்க்கையும் ஒரு ஃபுட்பால் விளையாட்டை போன்றதே என்ற கருவை மையமாகக் கொண்ட இப்படம் இஸ்தான்ஃபுல் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த படம் மற்றும் பீப்பிள்ஸ் சாய்ஸ் என நான்கு முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்தது.

துருக்கியின் முக்கிய இயக்குனரான Serdar Akar 1964-ம் ஆண்டு துருக்கியிலுள்ள அன்காரா (Ankara) என்ற இடத்தில் பிறந்தார். எகனாமிக் அண்டு கமர்ஷியல் சயின்ஸில் கிரோஜுவேட்டான இவர் Mimar Sinan பல்கலைக்கழகத்தில் 1994-ம் ஆண்டு சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான பட்டப்பிடிப்பை முடித்தார். 1999-ம் ஆண்டு இவரது முதல் படம் 'On Boad' வெளியானது. முதல் படமே இவருக்கு சிறந்த துருக்கி இயக்குனர் விருதை பெற்றுத் தந்தது.

விழாவின் இறுதி நாளான 31-ம் தேதி திரையிடப்பட்ட இரண்டு திரைப்படங்களில் ஒன்று இயக்குனர் Ahmel Ulucay இயக்கியது. 'Boats out of watermelon Rinds.' 2004-ல் வெளியான இப்படம் உலகம் முழுவதும் விருதுகளை குவித்தது.

Ankara சர்வதேச திரைப்பட விழா மற்றும் இஸ்தான்ஃபுல் சர்வதேச திரைபடவிழாவில் சிறந்த படத்துக்கான விருது, Montpellier Mediterranean திரைப்பட விழாவில் Goldern Antigone விருது, Sun Sebastion சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருது ஆகியவை இப்படத்திற்கு கிடைத்த விருதுகளில் சில.

தனது செலவுகளுக்காக திரைப்படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுத்த Atif Yilmaz சிறந்த ஓவியரும் கூட. தனது ஓவியத் திறமையையும் அவர் தனது செலவுகளுக்கு பணம் ஈட்டவே பயன்படுத்தினார்.

பிரான்சின் புதிய அலை இயக்குனர்கள் பிரான்ஸ்வோ த்ரூபோ, கோடர்ட் மாதிரி இவரும் இயக்குனராகும் முன் விமர்சகராக இருந்தார். துருக்கியின் இன்றைய இளம் இயக்குனர்கள் பலர் இவரிடமிருந்து வந்தவர்கள். மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவின் 'Golden Prize', 'Golden Palm' உள்ளிட்ட ஏராளமான சர்வதேச விருதுகளை இவரது படங்கள் வென்றிருக்கின்றன.

துருக்கி படவிழாவை தொடர்ந்து ICAF இந்த மாதம் முழுவதும் பல்வேறு நாடுகளின் திரைப்பட விழாக்களை நடத்துகிறது. முதலில் அலஜீரியன் திரைப்பட விழா. இதன் முதல் திரையிடல் 'தி பேட்டில் ஆஃப் அல்ஜீரிஸ்.' இதன் இயக்குனர் கிளோ பொன்டோகர்வா ஒரு டாக்குமெண்டரி தயாரிப்பாளர். அரசியல் போராளி. மாணவ பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பல இன்னல்களை சந்தித்தவர். பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்து விடுபட அல்ஜீரிய புரட்சிக்காரர்கள் நடத்திய போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் 1965-ல் வெளியானது. உலகம் முழுவதும் பார்வையாளர்களை பதற வைத்த இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் தங்க சிங்க விருது வென்றது.

உலகின் தலைசிறந்த படங்களை பார்க்க சென்னை சினிமா பார்வையாளர்களுக்கு ICAF தலைவாசலாக உள்ளது. ICAF-ல் உறுப்பனராகி சிறந்த படங்களை சென்னையிலேயே ரசிக்கும் அரிய வாய்ப்பு உங்களுக்கு உள்ளது. இதற்கு நீங்கள் ICAF-ன் சென்ரல் செகரட்டரி E. தங்கராஜ் அவர்களை 9840151956-ல் தொடர்பு கொண்டால் மாதம் தோறும் சர்வதேச திரைப்பட விழாவை ரசிக்கலாம்!

:rolleyes::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.