Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வென்ற போர்வையில் தொடரும் நில அபகரிப்பு யுத்தம்?

[19 - June - 2007]

* அரசில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் செய்யவேண்டிய காரியம்

"அது ஒரு பெரியதவறு. அப்படியான தவறொன்று நடந்திருக்கக் கூடாது. இனிமேல் அது நடவாது" என்று தான் தமிழர் கொழும்பு `லொட்ஜ்"களிலிருந்து வெளியேற்றியது தொடர்பாக வருத்தம் தெரிவிக்கையில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் கூறிவைத்தார். பின்னர் ஜெனிவா நகரில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO)96 ஆவது வருடாந்த கூட்டத்தில் உரையாற்றியபோது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அது தொடர்பாக சற்று வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும், தமிழர் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தும் விதத்திலேயே ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது. "நாம் லொட்ஜ்களிலிருந்து ஆட்களை வெளியேற்றியதையிட்டு அண்மையில் அதிக கரிசனை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஏறத்தாழ 20,000 பேரில் 302 பேர் மட்டுமே இதில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களில் பலர் சுயவிருப்பின் பேரிலேயே சென்றனர். இந்த விடுதிகளிலிருந்துதான் அநேகமாக எல்லா தற்கொலைக் குண்டுதாரிகளும் செயற்பட்டு வந்துள்ளனர். எனவே நாம் விசேட கவனம் செலுத்தவேண்டிய நிலையில் உள்ளோம். இலங்கை ஆயுதப்படையினர் மற்றும் காவல் துறையினர் உலகில் மிக ஒழுக்கமான படைகளோடு ஒப்பிடக் கூடியவர்கள். அவர்கள் மனித உரிமைகளை பெரிதும் மதிப்பவர்கள். உலக அரங்கில் எம்மீது பரப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அதிகளவு பெரிதுபடுத்தப்பட்டுள்ளன" என ஜனாதிபதி தனதுரையில் குறிப்பிட்டிருந்தார். "படையினர் எல்லாம் சுத்தமானவர்களல்ல. ஆட்கடத்தல்களில் படையினரிற் சிலர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்" என யாழ்.படைத்தளபதி சந்திரசிறி சென்றவாரம் கூறியதும் ஞாபகத்திற்கு வருகிறது.

மற்றும் பிரதமர் மேற்கூறியவாறு வருத்தம் தெரிவித்தது தவறென அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தனக்கே உரிய பாணியில் கூறியதையிட்டு அலட்டத் தேவையில்லை. ஆனால், பாதுகாப்புச் செயலாளர் `லொட்ஜ்'களிலிருந்து தமிழர் வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தியுள்ளார். அத்தோடு மேற்கு நாடுகள் எம்மை மிரட்டமுடியாது. இங்கு அண்மையில் வருகை தந்திருந்த பிரித்தானிய அமைச்சர் `கிம் ஹவால்ஸ் விடுதலைப் புலிகளுக்கு எதிராக வாயைத் திறக்கவேயில்லை, ஐ.நா.அமைப்புகளில் விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளனர், என்றெல்லாம் ஆவேசப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய ILO உரையினை நாம் மீண்டும் சற்று நோக்குவோமாயின் நாம் இராணுவத் தீர்வு ஒன்றினை நம்பியிருக்கவில்லை. தனது பல்லின அரசாங்கம் எந்தவொரு இனத்தையும் புறக்கணிக்கவில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழு (APRC) இனப்பிரச்சினைக்கான அரசியல தீர்வுக்குரிய பல்வேறு யோசனைகளை ஆராய்ந்து வருகிறது. அதனூடாக நல்லதொரு முடிவு எட்டப்படும் என தான் திடமாக நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டதைக் காணலாம். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாகவே உண்மை நிலைமை உள்ளதாகவே அககீஇ தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கருத்து வெளியிட்டுள்ளார். அககீஇயில் இணைத் தலைமை நாடுகள் அதிகம் நம்பிக்கை கொண்டிருக்கின்றனவாயினும், சர்வதேச சமூகம் அதில் நம்பிக்கை இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.

இணைத்தலைமை நாடுகள் என்னும்போது இன்னொரு விடயம் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த நாடுகளின் கூட்டமொன்று 25.06.2007 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் ஆரம்பமாகவுள்ளதல்லவா? அவற்றின் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதாகத் தெரிகிறது. அதாவது இலங்கை அரசுக்கான நிதி உதவிகளை ஒத்திவைக்கும் விடயத்தில் ஜப்பான், இலங்கை அரசுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அறியப்படுகிறது. இதற்குப் பொறுப்பாயிருக்கவல்ல யசூசி அகாஸியின் இலங்கை அரசாங்கத்திற்கு சாதகமான போக்கினை நாம் ஏற்கனவே விமர்சித்திருந்தோம்.

மனித உரிமைகள்

இலங்கையில் மனித உரிமைகள் முற்றாக மீறப்பட்டு வருவது பற்றியும், சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புக்கான அவசியம் பற்றியும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஐரீன் கான் ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலைப்பாட்டினை சென்றவாரம் ஜெனிவா நகரில் வைத்து ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் நேரடியாகவே எடுத்துரைத்துள்ளார். குறிப்பாக கடந்த 18 மாத காலத்தில் மிக வேகமடைந்துள்ள மனித உரிமை மீறல்கள் நிலைமையை சீர்திருத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையானது யானைப்பசிக்கு சோளப்பொரி எனும் நிலையில் உள்ளதால் ஜனாதிபதி ராஜபக்ஷ நேரடியாக தலையிட்டு ஆவன செய்யவேண்டும் எனவும், சர்வதேச கண்காணிப்புக் குழுவொன்றினை ஏற்படுத்துவதற்கு, ஐ.நா.வை அணுகுமாறும் ஐரீன் ஆணித்தரமாக வேண்டியிருந்தார். நீதியை நிலைநாட்டி மக்களைப் பாதுகாப்பதற்கு வேண்டிய உள்நாட்டு பொறிமுறைகள் மிக அற்பமாகவிருப்பதாகவும், குற்றமிழைப்பவர்கள் நழுவிச் செல்வதாகவும் ஐரீன் சுட்டிக்காட்டியிருந்தார். அத்தோடு நீதியரசர் உடலகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவினது (இ?ஐ) பக்கச்சார்பின்மையும். வெளிப்படைத் தன்மையும் கேள்விக்குறியாயிருப்பதாக சர்வதேச பிரபல்யமானவர்கள் குழு (ஐஐஎஉக) தலைவர் நீதியரசர் என்.பகவதி விலாவாரியாக எடுத்துக்காட்டியுள்ளது தொடர்பாகவும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் கவனத்தினை ஐரீன்கான் ஈர்த்திருந்தார். அவ்வாறாகவே ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆணையாளர் லூயி ஆபர் அம்மையாரும் - ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். முற்றிலும் சுதந்திரமான வெளிப்படைத்தன்மை கொண்ட சர்வதேச கண்காணிப்பு ஏற்பாடொன்றின் மூலம் தேசிய மனித உரிமை மையங்களும் பலப்படுத்தப்படுவதற்கு வழிபிறக்கும். இது விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கும் விஸ்தரிக்கப்படும் எனவும் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தத

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கட்டுரையின் இறுதிப்பகுதி மிகவும் கவனங்கொள்ள வைக்கிறது.

"வடக்கு - கிழக்கு பேரினவாத சக்திகளின் நில அபகரிப்பு கைங்கரியமும், சிங்கள குடியேற்றங்களும் டி.எஸ்.சேனநாயக்க `கல்ஓயா' திட்டத்தை ஆரம்பித்த காலமும் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. போர்ச் சூழலில் வடக்கு, கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயம் (HSZ) என்பது நில அபகரிப்புக்கானதொரு ஊடகமாகவே கையாளப்பட்டு வருகிறது. யாழ். மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் வீடுவாசல்கள்(HSZ) ஆக்கப்பட்டு காடுமண்டி நிற்கின்றன. அவற்றை நிறுவுவதில் தான் யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் செயற்பட்டதாக அன்று யாழ்.மாவட்டத் தளபதியாகவிருந்தவராகிய இன்றைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் கூறியிருந்தார். சம்பூர், மூதூர் பகுதிகள் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்டபோது அவை HSZ ஆக மாற்றப்படும் வாய்ப்பு உண்டு என அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். இத்தகைய அடிப்படை நோக்கங்கள் கொண்டதாகவே மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் ராணுவ அணுகுமுறை தொடர்கிறது. அரசியல் தீர்வு, சர்வகட்சி மாநாடு (ASC) சர்வகட்சி மாநாட்டு பிரதிநிதிகள் குழு (APRC) என்ற போர்வையில், யுத்த முனைப்பிலேயே அரசாங்கம் குறியாகியிருக்கிறதென்பது தெளிவானதாகும்.

இந்த நிலையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பட்டம் பதவிகளை உதறித் தள்ளிவிட்டு எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி மக்கள் போராட்டங்களுக்கு வழிசமைக்க வேண்டும். எதிர்த்தால் சந்ததியினர் தம்மைக்காறி உமிழ்வதா இல்லையா எனும் தெரிவு அவர்கள் கைகளிலேயே உள்ளது."

---- தினக்குரலின் சுட்டுவிரல் சுட்டும் திசையில்,

இந்த நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேசப் பிரச்சாரங்களை முடுக்கிவிடுவது புலம்பெயர் தேசங்களில் வாழும் நமது வரலாற்றுக் கடமையாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.