Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்"

Featured Replies

"சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்"

-சபேசன் (அவுஸ்திரேலியா)-

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வசித்து வந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசின் செய்கையை, அமெரிக்க அரசு உட்படப் பலரும் கண்டித்துள்ளனர். ஜே.வி.பி உட்படப் பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிறிலங்கா அரசின் இச்செயலைக் கண்டித்துள்ளன.

~இச் செயல், தமிழர்களை நாடு கடத்துவதற்கு ஒப்பானது| - என்கின்ற வகையில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ~வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் தாயகப்பகுதி என்ற உண்மையை, இந்த வெளியேற்றம், நிரூபணம் செய்து விட்டது| என்ற தர்க்கமும் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது.

~நாடு கடத்தல், தமிழர் தாயகத்திற்கான நிரூபணம்| என்பவை போன்ற கருத்தாடல்களுக்கு அப்பால், இந்த விடயத்தை மேலும் ஆழமாகப் பார்த்து, மிக முக்கியமான கருத்து நிலையை முன் வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.!

தமிழர்களை ~நாடு கடத்தல்| என்கின்ற செயற்பாடு, 1948 ஆம் ஆண்டளவிலேயே ஆரம்பமாகி விட்டது. மலையகத் தமிழர்களின் வெளியேற்றம் அல்லது நாடு கடத்தலோடு, இந்தக் ~கடத்தல் பயணம்| அரசியல் ரீதியாகத் தொடங்கி விட்டது. பின்னர் அம்பாறை - கல்லோயாவில், முதன் முதலாக இனக்கலவரம் வெடித்து தமிழர்கள் கலைக்கப் படுகின்றார்கள். அதன் பின்னர் 1958-1971-1983 என்று இந்தப் ப(h)ணி தொடர்ந்து நடைபெற்றது. அத்தோடு சிங்களக் குடியேற்றங்கள், இராணுவ நடவடிக்கைகள் போன்ற ஷசெயற்பாடுகளும்,| தமிழர்களை நாடு கடத்தும் பணிகளுக்கு உறுதுணையாக நின்றன.

இந்தச் செயல்களின் அடிப்படையின் ஊடாகத்தான், சிங்கள-பௌத்தப் பேரினவாதச் சிந்தனையின் கருதுகோளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெரும்பான்மைச் சிங்களவர்களைப் பொறுத்தவரையில், ~தமிழர்களுக்கு இலங்கை சொந்தம் இல்லை| என்பதுதான் அவர்களுடைய அடிப்படைக் கருதுகோளாகும். தமிழர்கள் என்பவர்கள் வந்தேறு குடிகள் என்பதுவும், அவர்களுடைய தாயகம் இந்தியாவின் தமிழ்நாடு என்பதுவும்தான் சிங்களவர்களின் நிலைப்பாடு.! ~ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு சென்று தனிநாட்டிற்காகப் போராட வேண்டும்| என்று ஜே.வி.பி சொல்வதின் உள்ளார்த்தமும் இதுதான்.! தமிழர்கள் இலங்கைத்தீவின் தொன்மைக்குடிகள் என்பது, ஆய்வுகள் ஊடாக நிரூபிக்கப்பட்டு விட்டபோதும், சிங்களவர்கள் தங்களுடைய மகாவம்சச் சிந்தனையிலிருந்து இன்னமும் விடுபடவில்லை.

இந்தக் கருதுகோளின் அடிப்படையிலிருந்துதான், சிங்களவர்களின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் ஆரம்பமாகின்றன. தமிழர்கள் விரட்டியடிக்கப்படுவதும், தமிழர்களுடைய தாயக மண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதும், அங்கே சிங்களப் பௌத்தக் கோவில்கள் கட்டப்படுவதும், சிங்களப் பௌத்தச் சின்னங்கள் நிர்மாணிக்கப்படுவதும், தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் சிங்களப் படையினர் அங்கே, சிங்கள-பௌத்தச் சின்னங்களை எழுப்புவதும் ஒரு வழக்கமாகவே வந்து விட்டதற்கு, சிங்களவர்களின் இந்தக் கருதுகோள்தான் காரணமாகும்.!

இப்படியாகத் தமிழர்களை நாடு கடத்தல் என்பதில் இன்னுமொரு முக்கியமான விடயமும் உள்ளது. தமிழர்களை நாடு கடத்துதல் என்கின்ற போது, தமிழர்களை (அவர்களுடைய) தமிழர் தாயகப் பகுதிகளுக்கு அனுப்புதல் என்பதற்கு அப்பால், தமிழர்களை - முற்றாக இலங்கைத் தீவிலிருந்தே - அகற்றிவிட வேண்டும் என்பதுதான் சிங்களவர்களின் ஆசையாகத் தொடர்ந்தும் இருந்து வருகின்றது.

சிங்களவர்களின் இந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான அடிப்படையான நடவடிக்கைதான், தமிழர்களின் தாயகத்தைப் பறித்தெடுத்தலாகும்.!

தமிழர்களின் தாயகம் என்று வருகின்றபோது, ~தமிழ்பேசும் முஸ்லிம்களும் தமிழர்கள்தான்| என்பதன் அடிப்படையில், முஸ்லிம்களின் நிலங்கள், அரசால் பறித்தெடுக்கப்படுகின்றன. அண்மைக்காலமாக, முஸ்லிம் தலைமை இது குறித்து அங்கலாய்த்து வருவதையும் நாம் காணக்கூடியதாக உள்ளது.

மலையகத்தமிழ் மக்களுடைய நிலங்களில், படிப்படியாகச் சிங்களப் பாடசாலைகள் அமைக்கப்பட்டு வருவதையும் நாம் இவ்வேளையில் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

இதனூடாக மலையகத் தமிழ் மக்களுடைய பகுதிகள் சிங்கள மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு மலையகப்பகுதிகள் சிங்கள மயப்படுத்தப்பட்டு, மெல்ல, மெல்ல மலையகத் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தில், 1983- ஜூலையில், சிறிலங்கா அரசால் திட்டமிட்டு நடாத்தப்பட்ட, தமிழினப் படுகொலைகளைக் குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கக்கூடும். தென்பகுதித் தமிழர்களை நாடு கடத்த வேண்டும் என்ற, சிங்களவர்களின் நீண்ட காலக்கொள்கையின் உச்சக்கட்டச் செயற்பாடுதான், அன்றைய 1983 தமிழினப் படுகொலைகளாகும். இதனூடாகத் தமிழர்களை நாடு கடத்துவது என்பது மட்டுமல்லாது, அவர்களின் பொருளாதாரப் பலத்தையும், பொருளாதாரத்தையும் சீரழிப்பதுவும் ஒரு நோக்கமாக இருந்தது.

இன்றைக்கும் கூட இது மறைமுகமாகச் செயல்படுத்தப்படுகின்ற ஒரு வடிவமாகும் என்பதே உண்மையுமாகும்.!

கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களைச் சிறிலங்கா அரசு இப்போது பலவந்தமாக வெளியேற்றியதன் மூலம், சிறிலங்கா அரசு, முதன்முறையாக, பகிரங்கமாகத் தன்னடைய சிங்களப் பேரினவாதக் கருதுகோளைத் தெரிவித்து, ஒத்துக் கொண்டிருக்கின்றது. அத்தோடு, இவ்வளவு காலமும், தான் செய்து வந்துள்ள செயல்களையும் அது இன்றைக்குப் பகிரங்கமாகவே ஒத்துக் கொள்வதாகத்தான் இச்செயல் அமைந்துள்ளது.

ஆனாலும் சிறிலங்கா அரசு, தன்னுடைய செயலைக் குற்றம் என்று ஒப்புக் கொள்கின்ற அளவிற்கு நேர்மையாக இல்லை. தன்னுடைய இந்தச் செயல், நியாயமானது, தேவையானது என்று துணிவோடு சொல்;கின்ற அளவிற்கு, இன்று சிறிலங்கா அரசு தெம்பாக இருக்கின்றது.

இங்கே இன்னுமொரு விடயத்தையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகி;ன்றோம். ஒருபுறம் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மன்னிப்புக் கேட்கும் பாணியில் பேசுகின்றார். மறுபுறம் பாதுகாப்பின் அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அரசின் செயலை நியாயப்படுத்தி எதிர்க்கதை பேசுகின்றார்.

நாம் வாசகர்களுக்குச் சொல்ல வருவது என்னவென்றால், இவை இரண்டுமே, மகிந்த ராஜபக்சவின் இரண்டு முகங்கள் என்பதே! இவையெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்ட விடயங்கள்தான்.!

பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள், மீண்டும் திரும்பி கொண்டு வரப்பட்டதற்கு காரணம், வெளிநாடுகள் தெரிவித்த கண்டனங்கள்தான் என்று சிலர் கூற ஆரம்பித்துள்ளார்கள். இது படு முட்டாள்தனமான கருத்தாகும். இத்தகைய கருத்துக்கள், சிறிலங்கா அரசானது ஜனநாயக கருத்துக்களுக்கு இசைந்து கொடுக்கும் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கி, சிறிலங்காவின் அரசுமீது தேவையற்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கே வழிவகுக்கும். இப்படியான அரைவேக்காடான அரசியல் கருத்துக்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இப்போது நடைபெற்று முடிந்துள்ள இந்த ~நாடு கடத்தல்| சம்பவம் குறித்து நாம் தெளிவான பார்வையைக் கொண்டிருக்க வேண்டும். இங்கே தமிழர்கள் திட்டமிட்டுக் கலைக்கப்பட்டு, திட்டமிட்டுக் கூப்பிடப்படுகின்றார்கள். அதிலும், எல்லோரும் மறுபடியும் திரும்பக் கூப்பிடப்படவில்லை. சிலபேர்தான் மறுபடியும் கூப்பிடப்பட்டுள்ளார்கள். மற்றவர்களை அரசு கலைத்து விட்டது.

இங்கே இன்;னுமொரு மிக முக்கியமான விடயத்தை நாம் சுட்டிக்காட்டித் தர்க்கிக்க விழைகின்றோம். சிறிலங்கா அரசிற்கு யார் யார் முறையாக அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியுமோ, அவர்கள் சிறிலங்காவில் பிரசன்னமாக இருக்கின்ற போதுதான், சிறிலங்கா அரசு தமிழர் மீது மிகவும் முறைகேடாக நடந்து கொண்டு வந்திருக்கின்றது. சிறிலங்கா அரசிற்கு மிகப் பெரிய நிதி உதவியைக் கொடுப்பதற்காக, ஜப்பானியாவின் சிறப்புத்தூதுவர் யசூசி அகாசி சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தபோதுதான்;, சிறிலங்கா அரசு கொழும்பிலிருந்த தமிழர்களைப் பலாத்காரமாக நாடு கடத்துகின்றது. மிக மோசமான நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ள சிறிலங்கா அரசிற்கு, யசூசி அகாசியின் பிரசன்னம் ஒரு பொருட்டாகக் கூடத் தென்படவில்லை. அந்த அளவிற்கு தமிழர்களை அழிக்கவேண்டும் என்கின்ற தங்களுடைய அடிப்படைக் கருதுகோளில் சிங்களம் உறுதியாக உள்ளது.

சிறிலங்காவின் இந்த நிலைப்பாட்டைச் சிறிது விரிவாகப் பார்க்கலாம். போர் நிறுத்தத்தைக் கவனித்து, நெறிப்படுத்துவதற்காகக் கண்காணிப்புக்குழு, இலங்கையில் பிரசன்னமாக இருந்தபோதும், மகிந்தவின் அரசும் அதன் இராணுவமும், தமிழர்கள் மீதான வன்முறைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டிருந்தன. போதாக்குறைக்கு, கண்காணிப்புக் குழு மீதும் மகிந்தவின் அரசு குண்டுகளை வீசியது. வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் குறித்தோ, அவற்றின் தொண்டர்களின் நலன் குறித்தோ, மகிந்தவின் அரசு கவலைப்படுவதேயில்லை. கடந்த வாரம் கூட, திருகோணமலையில் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்தோனியோ மகாலக்ஸ் மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளது.

ஒரு சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் ஓரளவிற்கு இந்த அவலங்கள் குறித்துக் குரல் எழுப்பினாலும்கூட, இத்தகைய கொலைச்சம்பவங்கள், குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. அரச சார்பற்ற நிறுவனங்கள், கண்காணிப்புக்குழு, நோர்வே என்று பல உலக அமைப்புக்கள் ~சமாதானம், மறுவாழ்வு| - என்று இலங்கைக்கு வந்தன. இவைகளையெல்லாம் சிறிலங்கா அரசு ஒவ்வொன்றாகக் கலைத்து விட்டது. இவைகள் சமாதானக் காலத்தில் செய்த பொதுவாகச் செய்து வந்த பணிகள் யாவுமே சிதைக்கப்பட்டன. தமிழர்களைப் போலவே, இவைகளும் ஒருவிதத்தில் நாடு கடத்தப்பட்டன என்று கூறலாம். இப்போது வெளிப்படையாகவே சிறிலங்கா அரசு தமிழர்களை நாடு கடத்துகின்;ற வேலையைச் செய்து வருகின்றது. இங்கே இன்னுமொரு அவல நிலையையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். சிறிலங்கா அரசு, தமிழர்களை நாடு கடத்துவது என்று கூறிக்கொண்டு, கொண்டு செல்;கின்ற இடத்திலும் - அதாவது யாழ்ப்பாணத்தில்- தமிழர்கள் படுகொலைகளையும், வன்முறைகளையும், மனித உரிமை மீறல்களையும் சந்திக்க நேரிடுகின்றது. அங்கே கொழும்பில் பாதுகாப்பு இல்லையென்றால் இங்கே யாழ்ப்பாணத்திலும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

எது எப்படியாக இருந்தாலும், தங்களுடைய சிங்கள-பௌத்தப் பேரினவாத சிந்தனையை அமல்படுத்துவதிலேயே சிங்களம் முனைப்பாக உள்ளது. அத்தோடு உலகத்தில் மாறி வருகின்ற அரசியலுக்கு ஊடாக, தாங்கள் வௌ;வேறு நாடுகளின் உதவியோடு, தங்களது அரச பயங்கரவாதச் செயல்களை முன்னெடுத்துப் போரைத் தொடர்ந்து நடாத்தலாம் என்றும் சிங்களம் நம்புகின்றது.

இவற்றை விளங்கிக் கொள்ளாமல், சிங்கள தேசத்தை, உலகநாடுகள் தடவிக்கொடுத்துக் கொண்டிருப்பதுதான், பிரச்சனை நீடிப்பதற்கு காரணமாக உள்ளது.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகமாக 1972 இல் பொறுப்பேற்றுக் கடமையாற்றிய கேர்ட் வொல்ட்கைம் (முருசுவு றுயுடுனுர்நுஐஆ) என்;பவர் அண்மையில் காலமானார். இவர் ஹிட்லரின் நாசிப்படையில் ஒரு படைவீரனாக இருந்த விடயம், இவர் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர்தான் தெரிய வந்தது. இந்த விடயம் உலகளாவிய வகையில் மிகப் பெரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்தது. கேர்ட் வொல்ட்கைம், அமெரிக்க மண்ணில் காலடி எடுத்து வைப்பதை அமெரிக்கா பின்னர் தடை செய்தது. ஆனாலும் இவரை ஒஸ்ரியாவின் ஜனாதிபதியாக, ஒஸ்ரிய மக்கள் பின்னர் தெரிவு செய்கின்றார்கள். இதன் பிறகு, ஐரோப்பிய நாடுகள், ஒஸ்ரியாவைப் பகிஷ்கரிக்கத் தொடங்குகின்றன.

இந்த எடுத்துக்காட்டின் ஊடாக, சிறிலங்காவின் சிங்கள மக்களையும், அவர்களின் அதிபர் மகிந்த ராஜபக்சவையும் நாம் அணுகிப் பார்க்க வேண்டும். மகிந்த ராஜபக்ச, ஹிட்லருக்கு இணையான கொள்கைகளோடு தமிழினப் படுகொலைகளை நடாத்தி வருபவர். ஹிட்லரின் நாசி படையில் பணிபுரிந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகத்தை ஒஸ்ரிய மக்கள் தேர்ந்தெடுத்ததைப் போன்று, மகிந்த ராஜபக்சவைச் சிங்களப் பேரினவாதம் தேர்ந்தெடுக்கின்றது. முன்பு ஹிட்லரின் அடக்குமுறைகளை ஆரம்பத்தில் கண்டு கொள்ளாத மேற்குலகம், பின்னர் உலகப்போரில் கலந்து கொள்ளவேண்டி வந்தது. அது ஒரு படிப்பினையாக விளங்கி வருகின்றது. இதேபோல், இன்றைக்கு, மகிந்த ராஜபக்சவின் ஹிட்லர்த்தனமான நடவடிக்கைகளைச் சட்டை செய்யாமல் விட்டுப் போட்டு, நாளை அவசரமாக ஓடித்திரிவதில் என்ன பலன் இருக்கக்கூடும்.? ஹிட்லரின் மனித உரிமை மீறல்களின் பரிமாணம் மிகப்பெரியதுதான் என்றபோதிலும், ஒப்பீட்டளவில், ஹிட்லருடைய பேரினவாதக் கொள்கைக்கும், மகிந்த ராஜபக்சவின் பேரினவாதக் கொள்கைக்கும் வித்தியாசமில்லை. செயல்களிலும் வித்தியாசமில்லை.

இரண்டாவது உலக மகா யுத்தத்தின்போது, மேற்குலகம் எத்தனையோ விதமான அழுத்தங்களை ஜேர்மனியின் மீது போட முயன்ற போதும், ஹிட்லர் அசைந்து கொடுக்கவில்லை. ஹிட்லரின் குணாதிசியம் மாறாமல், ஹிட்லர் ஹிட்லராகவே இருந்தார். ஹிட்லரைப் போலத்தான் சிங்கள சமூகத்திற்கும் தாங்கள்தான் உயர்குலம்- என்கின்ற பேரினவாதம் உள்ளது. ஜேர்மனியைப் பொறுத்தவரையில் ஒரே ஒரு ஹிட்லர்தான்! ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரையில், சுமார் ஒரு கோடி ஹிட்லர்கள் உள்ளார்கள்.

~புலம் பெயர்ந்த ஒரு சிங்கள ஹிட்லராகச் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ச திகழுகின்றாரா?| என்ற ஐயமும் எமக்குண்டு! அமெரிக்க நாட்டின் குடியுரிமையைக் கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றார். தமிழ் மக்களின் வெளியேற்றத்திற்குக் காரணமான, கோத்தபாய ராஜபக்சவைத் தண்டிக்க வேண்டும், என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறீ ஜெயசேகர, பகிரங்கமாகவே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் கோத்தபாய ராஜபக்ச, தமிழ் மக்களின் வெளியேற்றத்தை நியாயப்படுத்தியிருப்பதோடு மட்டுமல்லாமல், ~அமெரிக்கா இ;வ்வாறு செய்திருந்தால் அதனை உலகம் வரவேற்றிருக்கும்| என்று அமெரிக்காவைத் துணைக்கு அழைத்திருக்கின்றார். ஆனால் அமெரிக்காவோ தமிழர்களின் வெளியேற்றத்தைக் கண்டித்துள்ளது. ~இது இலங்கையின் அரசியல் யாப்பிற்கும் முரணானது| என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் எமக்குள் ஒரு கேள்வி எழுகின்றது.

கோத்தபாய ராஜபக்ச ஒரு அமெரி;க்கக் குடிமகன் ஆவார். அவர் வேறொரு நாட்டில் (அதாவது சிறிலங்காவில்) அந்த நாட்டின் அரசியல் யாப்புக்கு எதிராகச் செயற்பட்டிருக்கின்றார். அந்தச் செயலை அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்லாது அமெரிக்க அரசும் கண்டித்திருக்கின்றது. ஆனால், அமெரி;க்கக் குடிமகனான கோத்தபாய ராஜபக்சவோ, இது விடயத்தில் தேவையில்லாமல் அமெரிக்க நாட்டின் பெயரை இழுத்து, அமெரி;க்காவிற்குக் களங்கம் இழைக்க முயன்றிருக்கின்றார்.

~ஆகவே அமெரிக்கக் குடிமகனான கோத்தபாய ராஜபக்ச, வேறொரு நாட்டில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதற்காகவும், தேவையில்லாமல் அமெரிக்காவின் பெயரைக் களங்கப்படுத்தியதற்காகவும், அவர்மீது சட்டரீதியாக, அமெரி;க்காவில் வழக்குப்பதிவு செய்யப்படுமா?| என்று எமக்குள் ஒரு கேள்வி எழுகின்றது.

இதற்குரிய தகுந்த பதிலை அமெரிக்கா வாழ் தமிழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் தருவார்கள் என்று நம்புகின்றோம்.

எதற்கும் அமெரி;க்காவைத் துணைக்கிழுக்கின்ற கோத்தபாய ராஜபக்ச, சௌகரியமாகச் சில விடயங்களை மறந்து விடுகின்றார். உலகில் உள்ள நாடுகளில், மிகப் பெரிய சுதந்திர நாடாக இருக்கின்ற அமெரிக்காவின் மாநிலங்களுக்கு, மிகப்பெரிய அதிகாரங்கள், உரிமைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. தவிரவும், அமெரிக்கா தன்னுடைய நாட்டில் குண்டுகளைப் போடவில்லை. தன்னுடைய மக்களை அழிக்கவில்லை. கோத்தபாய ராஜபக்ச இவை பற்றியெல்லாம் பேசவே மாட்டார்.

ஏனென்றால் சிங்கள தேசத்தின் அடிப்படைக் கருதுகோளின்படி, தமிழர்களுக்குத் தாயகம் என்று எதுவும் இல்லை. தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழ் பேசும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, மலையக வாழ் தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு வழியில் அவர்கள் அழிக்கப்படவே வேண்டும்.

எம்முடைய பார்வையின்படி சிங்களத்தின் இந்தக் கருதுகோள், எதிர்காலத்தில் சிங்கள முஸ்லிம்களையும், சிங்களக் கிறிஸ்தவர்களையும் அழிக்க முனையும் என்பதில் சந்தேகமில்லை.

சிங்கள மக்களை அரசியல் ரீதியாக வழி நடத்துகின்ற தலைவர்களும், அவர்களை மத ரீதியாக வழி நடத்துகின்ற பௌத்த பிக்குகளும் உண்மையில் ஹிட்லரின் வடிவங்களே! ஆகவே, அங்கே ஒரு மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று கனவு காண்பதும், முயற்சிப்பதும் முட்டாள்த்தனமானது. இதனால்தான் தமிழீழத் தேசியப் பிரச்சனைக்கு, இடைநிலைத் தீர்வு இல்லை என்பதையும் தமிழீழம்தான் தீர்வு என்பதையும் நாம் வலியுறுத்தியே வந்திருக்கின்றோம். இதனைத்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் மிக நீண்ட காலமாகச் சொல்லிக் கொண்டே வந்திருக்கின்றார்கள். இந்தக் கருத்தை மேற்குலகம் ஏற்காமல், ~இல்லை-இல்லை-பேசித் தீர்க்கலாம்| - என்று சொல்லிக்கொண்டு வருகின்றது. ஆனால் இன்று சிறிலங்கா, மேற்குலகத்திடமே கேட்கின்றது, ஷநீங்கள் யார் எங்களைக் கேட்பதற்கு|- நாங்கள் இப்படித்தான் செய்வோம் - என்று!

முன்பு தமிழர்களுக்குச் சிங்களம் சொல்லியதை, இன்று அது (சிங்களம்) உலகிற்கும் சொல்கின்றது.

சிங்களத்திற்குப் புத்தி புகட்டப்படும்போது, அது மேற்குலகின் அறிவுக்கண்ணையும் திறக்கக் கூடும். அதைத்தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.

http://www.tamilnaatham.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.