Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதர்” க்கு அதிர்ச்சி : தொடர்ச்சியாக தவறிழைக்கிறார் கோத்தா - மனோ விசேட செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதர்” க்கு அதிர்ச்சி : தொடர்ச்சியாக தவறிழைக்கிறார் கோத்தா - மனோ விசேட செவ்வி

(நேர்காணல்: ஆர்.ராம்)

 

 விரைவில் உதயமாகிறது ஐக்கிய மக்கள் கூட்டணி

 ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதருக்கு அதிர்ச்சி

 1000 ரூபா சம்பளம்... சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம்

 தமிழ், முஸ்லிம் தரப்புக்களுடன் பொதுவேலைத்திட்டம்

 இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை தோல்வி

 

 

பிரதேச சபை உறுப்பினராக கூட அனுபவத்தினைக் கொண்டிருக்காத கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷ பரிசுத்தமானவர், இராணுவ ஒழுக்கம் கொண்டவர் என்று சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புக்களை ஏற்படுத்தியபோதும் அரசியல் அனுபவமின்மையால் தவறுக்கு மேல் தவறிழைத்து வருகின்றார் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார்.

1st.jpg

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, 

 

கேள்வி:- ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் போக்கை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்:- இலங்கை வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வாக்குகளை பெற்ற அரசும் இதுதான். வந்த வேகத்திலேயே, செல்வாக்கு சரிவு கண்ட அரசும் இதுதான். இரண்டு பெருமையும் கோட்டாபய தலைமையினான அரசுக்கும், மஹிந்த தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சிக்கும் கிடைத்துள்ளன. 

1.jpg

இந்நிலைமைக்கான ஆறுதல் பரிசுகளை, கோட்டாவின், செல்ல அமைப்பான “வியத்மக”, கூட்டணியின் ஏனைய குட்டி கட்சி தலைவர்கள், அரசியல் தேரர்கள், ஓய்வு பெற்று வீடு போக வேண்டிய முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் பகிர்ந்துக்கொள்ள வேண்டும்.

இதில் சந்தோசமாக பலதும் பெற்றுக்கொண்டவர்கள், அரசின் மைய வட்டத்துக்குள் இருக்கும் சிலபல தொழிற்துறை பிரமுகர்கள்தான். 

அரசாங்க கட்சியின் பெரும் தேர்தல் வெற்றிக்கு வழி சமைத்த காரணம்தான், இந்த வீழ்ச்சிக்கான காரணமாகவும் இருக்கின்றது. இதுதான் இங்கே விசித்திரம்.

அரசியல்வாதிகள் மீது பெரும் அதிருப்தி கொண்டிருந்த சிங்கள மக்களுக்கு, இதுவரை ஒரு பிரதேச சபையில்கூட அங்கத்தவராக இருந்திராத “மிஸ்டர் பரிசுத்தம்” எனவும், “இராணுவ ஒழுங்கு” கொண்டவர் எனவும், பெரும் எதிர்பார்ப்பை வழங்கிய நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, இன்று தனது அனுபவமின்மை காரணமாக தவறுகளுக்கு மேல் தவறுகள் செய்து தன்னை நம்பிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாகி வருகிறார். 

இதில் தனது மூத்த சகோதரரும் ராஜபக்ஷ குடும்பத்தின் “கோட் பாதர்” மஹிந்தவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளமைதான் அதியுச்சமான நிலை. 

2.jpg

கேள்வி:- இத்தகைய நிலைமைகளை சாதகமாக்கி தாங்கள் பங்கேற்றிருக்கும் எதிர்க்கட்சி உரிய வகிபாகத்தினை பொறுப்பெடுத்திருக்க வேண்டுமல்லவா?

பதில்:- ஆம், இல்லை ஆகிய இரண்டுமே என் பதில்கள்தான். ஆளும் அணிக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் தற்போதே தேர்தலொன்று நடந்தால், எதிரணிக்கு அப்படியே கிடைத்து விடாது. சிலவேளை, மொட்டு கட்சிக்கு வாக்களித்த கணிசமான வாக்காளர்கள், தேர்தலில் வாக்களிக்காமல் வீட்டிலேயே இருந்து விடலாம். அவர்கள் மனம் மாறி, தொலைபேசிச் சின்னத்துக்கு வாக்களிக்கும் நிலைமை இன்னமும் உருவாகவில்லை. இதை நான் சமீபத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித்திடமும் சொன்னேன். 

3.jpg

கேள்வி:- அப்படியென்றால் ஆளும் தரப்பினை கட்டுப்படுத்தும் செயற்றிறன் எதிர்க்கட்சிக்கு இல்லையா?

பதில்:- இன்னமும் செயற்றிறன் இல்லை, அமைப்பும் இல்லை. வெறுமனே கனவு காண முடியாது. காணவும் கூடாது. எதிரணியில் பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஆரம்பத்தில் ஒரு கூட்டணியாகவே உருவாக்கப்பட்டது. பொது தேர்தலின் பின் ஐக்கிய தேசியக் கட்சி சஜித் கரங்களுக்கு வரும் என்று இயல்பாகவே எதிர்பார்க்கப்பட்டது. 

4.jpg

ஆனால், அதனைத் தருவதற்கு ரணில் விக்கிமரசிங்க தயாரில்லை. ஆகவே ஐக்கிய மக்கள் சக்தி தனி கட்சியாக மாற்றப்பட்டது. அதனைச் சுற்றி, ஐக்கிய மக்கள் கூட்டணி என்று புதிய கூட்டணியை உருவாக்க நாம் முடிவு செய்துள்ளோம்.

எல்லாவற்றுக்கும் முன்தாக இந்த கூட்டணி உருவாக வேண்டும். இக்கூட்டணியின் முதல் பங்காளி கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணியாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இணையும். வேறு பலரும் வந்து சேரலாம். இதன் பின்னர் கூட்டணியின் தலைமைக்குழு அமைய வேண்டும்.

அடுத்து, சஜித், சம்பிக்க இடையில் புரிந்துணர்வு உருவாக வேண்டும். சஜித்தான் எமது கூட்டணியின் தலைவர். ஆனால், சம்பிக்கவுக்கு காத்திரமான இடம் இருக்கவேண்டும். இதை நான் இந்த இருவரிடமும் கூறியுள்ளேன். சம்பிக்கவுடன் தற்போது, சஜித் சார்பில் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும்பண்டார தலைமையில் ஒரு குழு பேசுவதாக சஜித் என்னிடம் கூறியுள்ளார். ஆகவே அது சுமூகமாக விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கின்றோம். அவற்றின் பின் தான் நாம் அரசை நேர்பட எதிர்கொள்ள தயாராவோம். இந்த அரசு முதலில் தானாக விழும் வரை விழட்டும். அவசரப்பட வேண்டியதில்லை.

5.jpg

கேள்வி:- பாட்டலி சம்பிக்க ரணவக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் சிங்கள கடும்போக்கு கொண்டவர்களாக இருக்கிறார்களே? 

பதில்:- சம்பிக்க, சரத்பொன்சேகா போன்ற சிங்கள வாக்குகளை கொண்டு வரக்கூடியவர்கள் இங்கே தேவை. அவர்களது கடந்த காலங்களை நினைத்துக்கொண்டு நாம் தயக்கம் காண்பிக்க முடியாது. இல்லாவிட்டால் மாற்று அரசு அமைக்கவும் முடியாது. அப்படி பார்த்தால், அவர்களுக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், கட்சிகள் மீது விமர்சனங்கள் இருக்குமல்லவா? அவற்றை யார் பார்ப்பது?

6.jpg

மேலும் பிரச்சினைகள் வரும்போது நாம் நேரடியாக அவற்றுக்கு முகம் கொடுக்கின்றோம். தற்போதைய அரசில் இருக்கும் சிறுபான்மை அரசியல்வாதிகளை போல வாயை மூடிக்கொண்டு இருக்கும் பழக்கம் எனக்கில்லை. சமீபத்தில் சரத் பொன்சேகா, மரணித்தோரை நினைவு கூருவது தொடர்பில், முரண்பட்டு என்னையும் பெயர் கூறி குற்றஞ்சாட்டியபோது, நான் சபையிலேயே அவருக்கு விளங்கும் வண்ணம் பதில் கூறியிருந்தேன். 

 கேள்வி:- சம்பிக்கவின் “43ஆம் படையணி” என்ற புதிய அமைப்பின் நோக்கம் என்ன?

பதில்:- அவர், ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி இந்த அமைப்பை உருவாக்கி உள்ளார். நான் முன்னரே கூறியது போன்று, இந்த அரசில் அதிருப்தியடைந்து வெளிவரும் “69 இலட்ச” சிங்கள வாக்காளர்கள் எடுத்த எடுப்பிலேயே ஐக்கிய மக்கள் சக்திக்குள் நுழைய மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு இடைத்தங்கல் முகாம் தேவை. அதுதான் “43ஆம் படையணி”. அதை எப்படி, ஐக்கிய மக்கள் சகதிக்குள் கொண்டு வருவது என்றுதான் இப்போது கலந்துரையாடப்பட்டுக்கொண்டிருக்கின்றது. 

7.jpg

கேள்வி:- ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் வேறு தமிழ் அரசியல் கட்சிகளையும் இணைத்துக்கொள்வீர்களா? 

பதில்:- இல்லை. அதற்கு ஒரு போதும் நாம் இடம் கொடுக்க மாட்டோம். வடக்கு, கிழக்குக்கு வெளியே, தமிழர் சனத்தொகையை, வாக்காளர் தொகையை இதைவிட பலவீனமாக்க முடியாது. ஏற்கனவே தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் மூன்று கட்சிகள் உள்ளன. ஆனால், நாம் ஒரு கட்சியாகத்தான், ஐக்கிய மக்கள் கூட்டணிக்குள் இருக்கின்றோம். அதுவேபோதும்.

மேலும், நாங்கள் கடந்த பல்லாண்டுகளாக துன்பப்பட்டு, துயரப்பட்டு, பெரும் சவால்களை சந்தித்து, சஜித் பிரேமதாசவுக்கு துணை நின்று, கூட்டணியை அமைக்கும் வரை வெளியே நின்றுவிட்டு, எங்களுக்கு எதிராக எதிரிக்கு துணை நின்று விட்டு, எவரும் எங்களை மீறி, இங்கே நுழைவது நியாயம் இல்லையல்லவா?

கேள்வி:- வடக்கு கிழக்குக்கு வெளியே என்று கூறுவதன் அர்த்தம் என்ன?

பதில்:- வட, கிழக்கு என்பது தமிழர் பெரும்பான்மையாக வாழும் ஒரு தளம். தென்னிலங்கை என்பது தமிழர் சிறுபான்மையாக வாழும் இன்னொரு தளம். பொதுவாகவே எங்களுக்கும், வடகிழக்கின் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் இவை பற்றிய அரசியல் புரிந்துணர்வு உண்டு. நாம் ஒருவரை ஒருவர் பலவீனமாக்க முனையவே மாட்டோம்.

கேள்வி:- தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா நாட்சம்பளம் கிடைத்தருப்பதை எப்படி பார்க்கின்றீர்கள்?

1000_upcontry.jpg

 

பதில்:- சிகிச்சை வெற்றி. நோயாளி மரணம். கணக்கு சரி. ஆனால், கிடைக்கவில்லை தானே. சம்பளத்துடன் இரண்டு உத்தரவாதங்கள் இருந்தே ஆகவேண்டும். இல்லா விட்டால் எதுவும் நியாயமான சம்பளமாக அமையாது. ஏனென்றால், இது நாட் சம்பளமாகும்.

முதாலாவது உத்தரவாதமாக, வருடத்துக்கு 300 நாள், அதாவது ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ‘25 நாள்’ வேலை வேண்டும். இரண்டாவது உத்தரவாதமாக, ஒவ்வொரு நாளும் தொழிலாளி கொண்டுவரும் தேயிலை கொழுந்து, இறப்பர் பால் ‘நிறை’ தொடர்பில் உடன்பாடு இருக்க வேண்டும்.

‘25 நாள்’ வேலை வழங்கப்பட்டால்தான், மாதம் குறைந்தபட்சம் 25,000 ரூபா சம்பளம் கிடைக்கும். அடுத்து, ஒவ்வொரு நாளும் கொண்டு வரவேண்டிய தேயிலை நிறை 15 கிலோ (இறப்பருக்கும் அப்படிதான்) என்பது திடீரென அதிகரிக்கப்பட்டு 20 கிலோவாக மாறுகின்றபோது தொழிலாளி ஒரு கிலோ குறைவாக கொண்டுவந்தால்கூட, முழு நாள் சம்பளம், அரை நாள் சம்பளமாகி விடும். 

8.jpg

ஆகவே, சம்பள நிர்ணய சபையின் முடிவின்பின் தோட்ட நிறுவனங்களை நாம் கண்காணித்து கொண்டுள்ளோம். அடுத்த 14 நாட்களுக்குள் அவர்களுக்கு தம் நிலைப்பாட்டை வெளிப்படுத்த அவகாசம் உள்ளது. அதையடுத்து எமது நடவடிக்கையும் நிலைப்பாடும் வெளிப்படும். 

கேள்வி:- பொத்துவில்-பொலிகண்டி பேரணி, சிறுபான்மை தரப்புகள் மத்தியில் இணைவை உருவாக வழி சமைக்குமா?

பதில்:- வழிசமைக்க வேண்டும். தமிழ் பேசும் இலங்கையர்களின் தேசிய இருப்பை அழித்தொழிக்கும், ஒடுக்குமுறையை ராஜபக்ஷ அரசு, தமிழ் மொழியை பேசுகின்ற, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை கடைபிடிக்கின்ற தமிழ், முஸ்லிம் மக்களை ஜனநாயக போராட்டங்களை நோக்கி தள்ளி விட்டுள்ளது.

porattam1.jpg

 இந்த இணைவு, சாதாரண சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல என்ற செய்தி உரக்க சொல்லப்பட வேண்டும். இந்த பேரணியில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் என்ற முறையில் நான் எனது கட்சி முக்கியஸ்தர்களுடன் சென்று கலந்துக்கொண்டேன்.\

கேள்வி:- இந்தப் பேரணியின் பின்னர் தமிழ் பேசும் மக்களின் பொது வேலைத்திட்டம் உருவாகுமா?

பதில்:- உண்மையில் நானும், நண்பர் சுமந்திரனும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நண்பர்களும், குறைந்தபட்ச பொது வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க, இந்த பேரணிக்கு முன்பே இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளோம். விரைவில் அது முடிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட எல்லா கட்சிகளுக்கும் வழங்கப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டு, நாட்டின் பொது அரங்கில் வைக்கப்படும் என்று நம்புகிறேன்.

9.jpg

வடகிழக்கு சிவில் சமூகம், அரசியல் சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட இந்த பேரணி, காலத்தின் தேவை. இத்தகைய ஒரு பேரணி என்னும்போது, சிறு, சிறு முரண்கள் ஆங்காங்கே தோன்றலாம். அவற்றை களைத்து விட்டு, பெரிய சித்திரத்தை மனதில் கொண்டு நாம் முன்னேறுவோம். சிவில் சமூகமும், அரசியல் சமூகமும் தமக்குரிய பங்கினை சிறப்பாக செய்தார்கள். இளையோர் மத்தியில் எழுச்சியை இப்பேரணி ஏற்படுத்தி விட்டது. 

கேள்வி: கிழக்கு முனைய விடயத்தில் இலங்கை, இந்திய அரசுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இந்தியாவுடனான இடைவெளி கிழக்கு முனைய சிக்கலுடன் ஆரம்பிக்கவில்லை. கடந்த முறை இந்த ராஜபக்ஷ அரசு ஆட்சியில் இருக்கும்போது, கொழும்பு துறைமுகத்தில், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் (சி.ஐ.சி.டி) 85சதவீத பங்குகளை இலங்கை அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியபோது அதுபற்றி எவரும் வாய்திறக்கவில்லை. 

10.jpg

தற்போது இலங்கைக்கு 51சதவீத பங்குகளும் இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் சேர்த்து 49 சதவீத பங்குகளும் வழங்கப்படும்போது போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு வட எல்லையில் சீனா, பாகிஸ்தானுடன் முரண்பாட்டுச் சண்டை எப்போதும் இருக்கிறது. ஆனால், தெற்கில் நிம்மதி இருந்தது. இப்போது கொழும்பு துறைமுகத்தில் சீனா அமர்ந்தவுடன் அந்த நிம்மதி போய்விட்டது. இந்தியா போன்ற ஒரு பெரும் பிராந்திய வல்லரசுக்கு தனது தேசிய பாதுகாப்பில் அக்கறை இருப்பது இயல்பானது. ஆகவேதான் அவர்கள் விடாப்பிடியாக, கிழக்கு முனையத்தை கோருகிறார்கள். இதுவே இந்திய இலங்கை இடைவெளியின் தோற்றுவாய். ஆகவே இந்தியாவின் கோபம் நியாமானதாகவே தெரிகிறது.

11.jpg

இலங்கை அரசு சீனா, இந்தியா எவருக்கும் எதுவும் தரமாட்டேன் என்று சொல்லலாம். ஆனால், இரண்டு பகை நாடுகளில் ஒரு நாட்டுக்கு மாத்திரம் கொடுத்து விட்டு, மற்ற நாட்டுக்கு முடியாது என்றால், அதுவும் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என்றால், அது முறையாகாது.  

கேள்வி:- அப்படியானால், இலங்கை தொடர்பான இந்திய வெளியுறவு கொள்கை தோல்வியுற்று விட்டதல்லவா?

பதில்:- ஆம், உண்மையில், இலங்கையின் இந்திய கொள்கை, இந்தியாவின் இலங்கை கொள்கையை வென்றுவிட்டது. இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள இந்தியாவின் 70 ஆண்டுக்கால “இலவு காத்த கிளியாகும் வெளிநாட்டு கொள்கை” தான் தோல்வியடைந்து விட்டது எனக் கூறவேண்டும்.

புதிய இலங்கையையே தம் கடும் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா, இலங்கையை சந்தோசப்படுத்தும் ஒரே காரணத்துக்காக இணங்கியது. 

12.jpg

இது இலங்கை வாழ் மலையக தமிழருக்கு இந்திய மத்திய அரசு செய்த பெரும் வரலாற்று துரோகமாகும். இதனால், இலங்கையில் தமிழரின், மலையக தமிழரின் அரசியல் பலம் குன்றியது. நாடு கடத்தல் இல்லாவிட்டால் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 25 மலையக உறுப்பினர்கள் இருந்திருப்பார்கள். அதைத் தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.

இலங்கையை திருப்திபடுத்த பாரதம் இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மையான நட்பைக் கொள்ளவில்லை. இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களையும் சந்தோசமாக வைத்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் எதிரி நாடுகளுடனேயே இலங்கை நட்பு கொள்கிறது. ஆகவே இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டு கொள்கை வெற்றி பெறவில்லை என்றுதானே கொள்ளவேண்டியிருக்கின்றது.

கேள்வி:- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? அவ்வாறாயின் 13ஆவது திருத்தம் அகற்றப்படுமா?

13.jpg

பதில்:- “வரும். ஆனால், வராது” போலத்தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இது பற்றி உரக்க பேசிய அரசு தரப்புகள், இப்போது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள். 13ஆம் திருத்தத்தை அகற்றி வேண்டுமானால், இந்தியாவை இன்னமும் கோபத்துக்கு உள்ளாக்கலாம். 

 

https://www.virakesari.lk/article/100421

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.